மறைவின் நிஜங்கள்

ஆசையோடுநீ வாங்கி வந்தபென்ஸ் கார்கொளுத்தும் வெயிலில்காத்திருக்கிறதுநீ வந்தமர்ந்துகுளிர வைப்பாயென.அதனிடம் நான் சொல்லவில்லை நீ விமான விபத்தில் மறைந்து என் எண்ணங்களை வியாபித்திருக்கிறாயெனநீ இல்லாமலிருப்பது தெரிந்தால் சுட்டெரிக்கும் வெப்பத்தை சாதகமாக்கிக் கொண்டு அது பொசுங்கிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

மெல்லத்தமிழினி சாகும்??

'Emirates only தமிழ் radio station' இப்படியான அறிமுகத்தோடு ஆரம்பிக்கப்படுகிறது ஹலோ 89.5 FM. இதையே ‘அமீரகத்தின் ஒரே தமிழ் வானொலி’ என்று அறிமுகப்படுத்தினால் என்ன குறைந்துவிடப் போகிறார்களா? அல்லது தமிழர்களுக்குத்தான் பிடிக்காமல் போய்விடுமா? சரி, முழுவதுமாகத் தமிழிலேயே பேசுவது FM-ன் கலாசாரமில்லையென்றால் ‘அமீரகத்தின் முதல் தமிழ் radio station' என்றாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே. தமிழுக்காகவென்று ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு ஊடகமும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் ’தமிழைப் பருக தரவே கூடாது’ என்ற முடிவோடு. ஏன் இப்படி? [...]

ஒரு வெற்றி விழாவும் சில பின்னணிகளும்..

அமீரகத் தமிழ் மன்றத்தின் விழாக்களைப் பற்றி எழுத வேண்டுமென்றாலே நான் மட்டுமல்ல எங்கள் அமைப்பின் தலைவர் ஆசிப்பும் கூட நம் குழந்தையைப் பற்றி நாமே கூறிக் கொள்வது சரியல்ல என்று எண்ணியே பதியப்பட வேண்டிய பகிரப்பட வேண்டிய விஷயங்கள் பல விட்டுப்போயுள்ளது. வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் வரிசையில் விழாக்களை நடத்திப்பார் என்பதையும் சேர்க்க வேண்டிய கட்டாயத்தின் அவசியத்தை உணர்ந்தேயிருப்பார்கள் அமீரகத்தின் தமிழ் அமைப்புகள். அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பும் அமீரகத் தமிழ் மன்றமும் இணைந்து [...]

நம்மைப் போல் ஒருவன்

இந்தியாவில் பல வகையான தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தே உள்ளன ஆனால் நம்மில் பலர் அதனை அந்தக் காலகட்டத்தின் சூடான செய்தியாக மட்டுமே பார்க்கின்றோம். அதன் பிறகு யாரும் அந்தச் செய்தியைப் பின் தொடர்ந்து செல்வதில்லை. அவ்வகையான குற்றங்களைப் பல வருடங்களாக சல்லடைப் போட்டு அலசி வடிகட்டி தீர்ப்பு வரும் போது செத்தவர்களைப் புதைத்த இடத்தில் புல்லும் முளைத்து அதனை மாடும் தின்று சாணியும் போட்டு அள்ளியிருப்பார்கள்.1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தகாருக்குக் கடத்தப்பட்ட நிகழ்வு, நம் [...]

By | 2009-09-23T14:05:00+00:00 September 23rd, 2009|திரைவிமர்சனம்|43 Comments

விளையாட்டாக விவசாயம்

முகப்புத்தகத்தில் ஹாஜா மன்சூர் என்பவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என் நண்பர் அவருக்கும் நண்பரென்பதால் சேர்த்துக் கொண்டேன். தினம் தினம் ஒரு ஆப்பிள் மரம், ஒரு ஆரஞ்சு மரம் என்று பரிசு வந்த வண்ணமிருந்தது. நானும் பரிசை வாங்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தேன் அது என்ன ஏது என்று தெரியாமலேயே. அதன் பிறகு தோழி சுவாதியும் பரிசு அனுப்பினார்கள். கோ மாதாவை அனுப்பியிருக்கிறேன் மங்களகரமா தொடங்குங்க என்றார்கள். என்னடா இதுன்னு ஒரே குழப்பமா இருந்தது. வரும் பரிசுகளையெல்லாம் கல்லாவில் [...]

குறையேதுமில்லை

புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்புகையாத அடுப்பை புகைவதாக சொல்லிவீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லிமடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்றுஅணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்றுஉலுக்கி பெறுகின்றாய்உகந்ததை தரவே செய்கின்றேன்உள்ளம் ஒன்றாமல்எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும்பிடிக்காமல் போனாலும்சொல்லத்தான் செய்கிறோம்ஒன்றாய் வாழ்கிறோமென்று

By | 2009-08-31T11:31:00+00:00 August 31st, 2009|கவிதை|27 Comments

எல்லாம் யாருக்காக?

என் வயதொத்தபிள்ளைகள்கனவின் நடுவிலிருக்கநான் நித்திரை விட்டுகுளிர் நடுக்கத்தில்முக்காடில் நுழைந்துமதரஸா விரைந்தேன்புரியாத அரபி கற்கஅம்மம்மா மெச்சுதலுக்காக.அழைப்பு விடுத்தவுடன்கண்ணாமூச்சியில் கண்கட்டவும் மறந்துபுரியாமல் மனனம் செய்த பாடங்களை ஒப்பித்தபடிதொழுதேன்அன்புடன் அணைத்துக் கொள்ளும்அப்பாவுக்காகவிதவிதமான ஆடையில்தோழிகள்பள்ளி விழாவிற்குபவனி வரவெதும்பிய மனதைஹிஜாபில் ஒளித்தேன்பெருமையுடன் முகர்ந்து முத்தமிடும்அம்மாவுக்காகவிவரம் தெரியாத வயது ஓய்ந்து பொருள் புரியாத மொழிபுலப்பட்டதும்அறிந்து கொண்டேன்ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்நிலையில்லா உறவுக்காக அல்லஒழுக்கத்தை விரும்பும்இறைவா எல்லாம் உனக்காகவென்று.

By | 2009-08-24T07:20:00+00:00 August 24th, 2009|கவிதை|19 Comments

இதென்ன கப்பிங் கலாட்டா?

'கப்பிங்' பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘கப்பிங்’ என்ற பதத்தைக் கேட்டவுடன் டிக்கிலோனா, ஸ்பூனிங், கப்லிங் என்ற வரிசையில் `ஜெண்டில்மேன்` படத்தில் வரும் விளையாட்டு போல ஏதோ ஒண்ணுன்னு நினைச்சீங்கன்னா நான் பொறுப்பல்ல. ’கப்பிங்’ என்பது ஒரு பழங்காலத்து மருத்துவமுறை. நோய்களுக்கு மருந்து சாப்பிட்டால் கசக்கும், ஊசி குத்தினால் வலிக்கும் ஆனால் இந்த கப்பிங் மருத்துவம் வலியில்லாத நிவாரணியாம். மனிதன் தோன்றிய ஆதி காலத்திலிருந்தே மருத்துவமும் தோன்றிவிட்டது என்று நமக்குத் தெரியும். ஆனால் வெவ்வேறு முறைகள், வகைகள், நம்பிக்கைகள் [...]

உயரே பறக்கும் காற்றாடி….

"இந்த உலகத்தில் பாவம் என்பது ஒன்றே ஒன்றுதான் அது ’திருட்டு’ மட்டும்தான். திருட்டே வெவ்வேறு உருப்பெரும் போது அதுவும் பாவமாகிறது. எப்படியென்றால், ஒருவரைக் கொலை செய்யும் போது ஒரு உயிரை, ஒருவரின் வாழ்வைத் திருடுகிறோம், அதுவே கணவனிடம் மனைவிக்கான உரிமையை திருடுவதாகிறது, அதுவே தந்தையிடம் குழந்தைக்குண்டான உரிமையை திருடுவதாகிறது. நீ ஒரு பொய் சொல்லும் போது நீ ஒருவருக்கு சேரவேண்டிய உண்மையைத் திருடுகிறாய். அதனால் திருட்டை விட வேறு பெரிய பாவம் இருந்துவிட முடியாது" என்று வாழ்வியல் [...]

By | 2009-08-03T06:15:00+00:00 August 3rd, 2009|திரைவிமர்சனம்|17 Comments