மெல்லத்தமிழினி சாகும்??

'Emirates only தமிழ் radio station' இப்படியான அறிமுகத்தோடு ஆரம்பிக்கப்படுகிறது ஹலோ 89.5 FM. இதையே ‘அமீரகத்தின் ஒரே தமிழ் வானொலி’ என்று அறிமுகப்படுத்தினால் என்ன குறைந்துவிடப் போகிறார்களா? அல்லது தமிழர்களுக்குத்தான் பிடிக்காமல் போய்விடுமா? சரி, முழுவதுமாகத் தமிழிலேயே பேசுவது FM-ன் கலாசாரமில்லையென்றால் ‘அமீரகத்தின் முதல் தமிழ் radio station' என்றாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே. தமிழுக்காகவென்று ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு ஊடகமும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் ’தமிழைப் பருக தரவே கூடாது’ என்ற முடிவோடு. ஏன் இப்படி? [...]

ரஜினி ‘ஸ்கீ துபாய்’ வந்தால்?

துபாய்க்கு வந்த புதுசுல எந்த பொருளைப் பார்த்தாலும் எனக்காக வாங்கிக்கணும்னு தோணவே தோணாது. தம்பிக்கு வாங்கலாம், அக்காவிற்கு, அப்பாவிற்கு அம்மாவிற்குன்னுதான் தோணுமே தவிர, ரொம்ப அத்தியாவசியப்பட்டால் தான் எனக்குன்னு ஏதாவது வாங்க தோணும். ஆனா இப்பல்லாம் அப்படியில்ல. அதுக்கு இரண்டு காரணம், ஒரு பொருள வாங்கி ஆசையா ஊருக்கு அனுப்பி வைச்சா ஒண்ணு 'ஏற்கெனவே என்கிட்டே இதே இருக்கு'ன்னு பதில் வரும் இல்லாட்டி 'இங்கதான் இது கெடைக்குதே, இத அங்கிருந்து அனுப்பினியாக்கும்?'ன்னு கேள்வி வரும். அதனால ஊரிலிருந்து [...]

ஊர் சுற்றலாம் வாங்க!

ஊருல விடுமுறை விட்டாலும் விட்டாங்க எங்க வீட்டுக்கு சின்ன கூட்டமே விடுமுறைக்கு வந்திட்டாங்க. எல்லாம் நம்ம நெருங்கிய பந்தங்கள்தான் அவங்களை வாரா வாரம் ஒவ்வொரு இடத்திற்கு அழைச்சிக்கிட்டு சுத்திச் சுத்தி, போன வாரம் அவங்கெல்லாம் ஊருக்கு திரும்பியதும் வீடே 'வெறிச்'சுன்னு போயிடுச்சு, நானும் சுகவீனமாகிட்டேன். சுகவீனமாப் போனதற்கு காரணம் பிரிவா இல்ல வாரா வாரம் சுத்தித் திரிஞ்ச அலைச்சலான்னு தெரியலை. சரி அது முக்கியமில்ல இப்போ. நாங்க போன இடங்களையெல்லாம் பத்தி பதியலாம்னு நெனைக்கிறேன் ஆனா பார்த்தத, [...]

துபாய் நல்ல துபாய்

துபாய்க்கு வந்து இந்த அக்டோபரோட பத்து வருஷமாகுது. பத்து வருஷத்துல என்ன கிழிச்ச என்ன சாதிச்சன்னு கேட்டிடாதீங்க அப்புறம் நிறைய சாதிச்சேன்னு பொய் சொல்ல வேண்டி வரும். என்ன நம்ப முடியலையா? என்னாலயே நம்ப முடியல அப்புறம் நீங்க நம்பனும்னு எதிர்பார்ப்பேனா? ஆனா மறக்க முடியாத சில நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யுது. அக்கா துபாய்ல இருந்த தைரியத்துல நான் ஒரு தப்பித்தலுக்காக போறேன்னு அடம்பிடிச்சதும் வீட்டுல அனுப்பி வச்சாங்க. ஒரு பெண்ணை, அதுவும் எங்க சமூகத்துல- தனியா [...]

ப்ளூ கிராஸுக்கு ஒரு கேள்வி

ஈத் பெருநாளுக்கு வழக்கமாக 3-4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அந்த நாட்களில் பெரும்பாலும் நாங்கள் எல்லோரும் தொலைதூரப் பிரயாணம் செய்ய பிரியப்படுவோம். பத்து பதினைந்து பேர் சேர்ந்து இந்த முறை ஹத்தாவுக்கு போனோம். எத்தனை முறை போனாலும் மீண்டும் போக தூண்டும் ஹத்தா! அந்த நெடுபயணமே எனக்கு பிரியமானது. ஆறு வருடங்களுக்கு முன்பு செல்லும் போது அரட்டத்தில் ஓடும் பைக்கில் 1/2 மணி நேரத்திற்கு 25 திர்ஹம்தான். அரை மணிக்கு என்று எடுத்து விட்டு கைமாற்றி [...]

கைக்கு எட்டியது

அக்கம் பக்கத்து பசங்களுடன் மலிவான மட்டைகள் வாங்கி அதில் கோழியிறகு பூ வைத்து பிரமாதமாக விளையாடுவதாக நினைத்துக் கொள்வேன். அதுதான் டென்னிஸ் என்பதுபோல் பிரம்மையுடன் அது மிக சுலபமான விளையாட்டு என்றும் நினைத்துக் கொள்வேன். என் அக்காவின் கணவர் ஒரு டென்னிஸ் கோச்சர். அவர்களிடம் எனக்கும் விளையாட ஆர்வம், உங்க மாணவிகளைவிட நல்ல விளையாடுவேன் என்று புருடா விட்டு, அவர்கள் கற்றுக் கொடுக்கும் இடத்திற்கு என்னையும் அழைத்து செல்ல செய்தேன். அங்கு போய் பார்த்தால் பந்தை வைத்து [...]

By | 2007-02-19T15:34:00+00:00 February 19th, 2007|அமீரகம்|4 Comments

கங்கை அமரன் அரசியலில் குதிக்கிறார்!

போன மாசம் எங்க ஊரில அதாங்க துபாயில 'துபாய் தமிழ் சங்கம்' ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடினாங்க. அதில 'லியோனி' பட்டிமன்றம், அப்புறம் 'கங்கை அமரன்' பாட்டுக் கச்சேரி, குழந்தைகள் நடனம் அப்படி இப்படின்னு அமர்க்களப்படுத்திப்புட்டாங்க. கங்கை அமரன் தனியா வரல அவர் மகன் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண் அவங்க குழுவினரில் ஒருவரான நிர்மலா எல்லோரும்தான் வந்தாங்க. லியோனி பட்டிமன்றம் முடிஞ்சி பாட்டுக் கச்சேரிக்கு எல்லாம் தயாராச்சு, மேடைக்கு வந்த க.அமரன் 'நாலு நாற்காலி போடுங்கப்பா' [...]

By | 2006-12-21T10:21:00+00:00 December 21st, 2006|அமீரகம்|24 Comments

துபாயில்…

துபாய் நகராட்சிக்கு ஒரு கோடி உடனே தரேன்னு சொல்லியும் வேணாம்னு சொல்லிட்டாங்க. ஒரு கோடி தரேன்னு சொன்னது நானில்ல. ஒரு பணக்கார வியாபாரி. ஒரு கோடி ரூபாய்ன்னா நம்ம ஊருபணமில்ல. ஒரு கோடி திர்ஹம்ஸ் அதாவது பதிமூணு கோடி ரூபா. எதுக்கு தரேன்னு சொன்னாரு தெரியுமா?ஒரு அதிசய மீனுக்கு. அப்படி என்ன அதிசயம் தெரியுமா? அந்த மீன் உடம்பு மேல 'அல்லாஹ்'ன்னு அரபி எழுத்துல எழுதிருப்பது அழகா துல்லியமா தெரியுது.இறைவன் இல்லாத இடமும் உண்டோ? மனிதர்களிலிருந்து எல்லா [...]

By | 2006-08-22T10:21:00+00:00 August 22nd, 2006|அமீரகம்|16 Comments