பெண்கள் தினம்

பூக்கள் தப்பித்துச் சென்றுவிடுமென்று வேலி கட்டுவதில்லை மதில் சுவர்கள் வீட்டிலுள்ளவர்கள் தாண்டிச் செல்வதை முறியடிக்க எழுப்புவதில்லை எம் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு வரையறை வகுப்பது அவர் தம் மீதான நம்பிக்கையின்மையல்ல கேள்விப்படும் சமூக சங்கடங்கள் வீட்டில் நுழையாமல் இருக்கவே கட்டுப்பாடுகள் என் போன்ற தாய்மார்கள் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பீதியிலிருந்து விடு்படும் பாதுகாப்பான நாளே பெண்கள் தினம்

By | 2017-03-08T06:52:42+00:00 March 8th, 2017|கவிதை, பெண்ணியம்|0 Comments

மறைவின் நிஜங்கள்

ஆசையோடுநீ வாங்கி வந்தபென்ஸ் கார்கொளுத்தும் வெயிலில்காத்திருக்கிறதுநீ வந்தமர்ந்துகுளிர வைப்பாயென.அதனிடம் நான் சொல்லவில்லை நீ விமான விபத்தில் மறைந்து என் எண்ணங்களை வியாபித்திருக்கிறாயெனநீ இல்லாமலிருப்பது தெரிந்தால் சுட்டெரிக்கும் வெப்பத்தை சாதகமாக்கிக் கொண்டு அது பொசுங்கிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

குறையேதுமில்லை

புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்புகையாத அடுப்பை புகைவதாக சொல்லிவீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லிமடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்றுஅணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்றுஉலுக்கி பெறுகின்றாய்உகந்ததை தரவே செய்கின்றேன்உள்ளம் ஒன்றாமல்எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும்பிடிக்காமல் போனாலும்சொல்லத்தான் செய்கிறோம்ஒன்றாய் வாழ்கிறோமென்று

By | 2009-08-31T11:31:00+00:00 August 31st, 2009|கவிதை|27 Comments

எல்லாம் யாருக்காக?

என் வயதொத்தபிள்ளைகள்கனவின் நடுவிலிருக்கநான் நித்திரை விட்டுகுளிர் நடுக்கத்தில்முக்காடில் நுழைந்துமதரஸா விரைந்தேன்புரியாத அரபி கற்கஅம்மம்மா மெச்சுதலுக்காக.அழைப்பு விடுத்தவுடன்கண்ணாமூச்சியில் கண்கட்டவும் மறந்துபுரியாமல் மனனம் செய்த பாடங்களை ஒப்பித்தபடிதொழுதேன்அன்புடன் அணைத்துக் கொள்ளும்அப்பாவுக்காகவிதவிதமான ஆடையில்தோழிகள்பள்ளி விழாவிற்குபவனி வரவெதும்பிய மனதைஹிஜாபில் ஒளித்தேன்பெருமையுடன் முகர்ந்து முத்தமிடும்அம்மாவுக்காகவிவரம் தெரியாத வயது ஓய்ந்து பொருள் புரியாத மொழிபுலப்பட்டதும்அறிந்து கொண்டேன்ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்நிலையில்லா உறவுக்காக அல்லஒழுக்கத்தை விரும்பும்இறைவா எல்லாம் உனக்காகவென்று.

By | 2009-08-24T07:20:00+00:00 August 24th, 2009|கவிதை|19 Comments

ஆசிரியர் தின வாழ்த்து

தமிழ் எழுத்தைகற்றுத் தந்த நீங்கள்இன்று எங்கு இருக்கிறீர்கள்?தினமும் ஒரு திருக்குறளெனஇரு வரியை மனனம் செய்துஉரையை விவரித்த நீங்கள்இன்று எங்கே இருக்கிறீர்கள்?விதையை விதைத்துவிட்டுவிருட்சத்தின் வளர்ச்சியைகாணாமல்எங்கு சென்றுவிட்டீர்கள்?எங்களின்முதல் சொல்முதல் வாக்கியம்முதல் சிந்தனைமுதல் கற்பனைமுதல் உளறல்முதல் கவிதைமுதல் சந்தேகம்என்று எல்லாமேமுதலில் பிறந்தது உங்களிடம்தானே?முயற்சி, தன்னம்பிக்கைபோராட்டம், கடமை,ஒழுக்கம், திறமைஎன்று இல்லாதவற்றையும்தோண்டி ஊற்றைஎங்களுக்குள் எடுத்த நீங்கள்எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாகஇருந்த நீங்கள்இன்று எங்கு சென்றுவிட்டீர்கள்?உங்களுக்காக எழுதுகிறேன்என்றதும் சின்னபிள்ளையாகவேமாறிவிட்டேன்.இந்த எளியவளைஏணியாக நின்று உயர்த்திவிட்டுநீங்கள் மட்டும் அதே இடத்தில்இருப்பதுதான்ஆசிரிய தர்மமா?எங்கிருந்தாலும் என்ஆசிரியர் தின வாழ்த்தைபெற்றுக் கொள்ளுங்கள்

By | 2007-09-05T11:41:00+00:00 September 5th, 2007|கவிதை|7 Comments

உன் நினைவுகளோடு….

மெளனம் பேச்சாகும்தனிமையில்தூக்கம் எழுப்பும்இரவுகளில்வேட்கை நிரம்பிய வெறுமையில்கதகதப்பாய் அரவணைப்பதுஉன் நினைவுகள்மட்டும்தான்

By | 2007-09-05T05:49:00+00:00 September 5th, 2007|கவிதை|13 Comments

சக பயணிகள்

எப்பா இதெல்லாம் கவிதையான்னு கேட்டுடாதீங்க. மேடைக்கு வாசிக்கப்படும் கவிதைகள் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமென்பதற்காக உரைநடையாக எழுதப்பட்டது. பகிர்ந்துக் கொள்ள பதிக்கிறேன். [** கவியரங்கில் பாடிய கவிதைக்காக ஜெஸிலாவுக்கு 10,000 ரூபாய் பணமுடிப்பும், மேத்தா விருதும் வழங்கப்படும் என சென்னை குளத்தூரில் பெண்கள் கல்லூரி நடத்தும் சேது குமணன் அறிவித்தார். 'விருதிற்காக மகிழ்வதாகவும் பணத்தை கவிஞர்கள் பேரவைக்கே அன்பளிப்பாக வழங்குவதாகவும்' மேடையில் ஜெஸிலா அறிவித்தார். - அப்படின்னு ஆசிப் வலைப்பதிவில் படித்திருப்பீர்கள்] இதுதான் அந்த பரிசுப் பெற்ற கவிதை. [...]

By | 2007-06-19T10:25:00+00:00 June 19th, 2007|கவிதை|26 Comments

கிறுக்கல்கள்

கவிப் பகைவர்களுக்காக அடக்கி வைத்திருந்தாலும் எனக்குள் இருக்கும் ஆர்வம் அவ்வப்போது துளிர்விடத்தான் செய்கிறது. வெளிவரும் அத்தனையும் குறும்பாக்கள், துளிப்பாக்கள், கவிதைகள் என்று பெயரிட முடியாததால் கிறுக்கலாக...மர நிழலில் ஒதுங்கினேன்மர அசைவில்நேற்று சேகரித்ததிலிருந்துஎனக்கு மட்டும் மழை***வானத்தின் ஜன்னலில்எட்டிப்பார்க்கும் சூரியன்நட்சத்திரம்***செத்தும்முகத்தில் எச்சில்சிலை***எதிர்பாராமல்எதிர்கொண்டு முடிந்ததுகூச்சம்***ஒட்டக நிழலில்தொழுகைபாலைவனம்***வெளிநாட்டு வேலைதள்ளிப்போடப்பட்டதுதாம்பத்யம்***நாட்டின் மானம்பந்தயத்தில் அடமானம்கிரிக்கெட்***நாய்களுடன் போட்டிஎச்சில் இலைக்குமனிதன்***என்னையே தொடர்ந்தாலும்நெருங்கி வர முடியாதநிழல்***வீசிவிட்டுஅழுதது குழந்தைசாமி ஊர்வலத்தில்திடீர் ஜாதி கலவரம்பலர் காயம்சிலர் மரணம்வீசப்பட்டஅப்பாவின் ஒற்றைச்செருப்புஒன்றுமறியாமல் வீதியில்.***

வலி

செப்டம்பர் 2006 மாத 'திசைகளில்' வெளிவந்த என் கவிதை:அடித்தே இன்புறுகிறாய்நல்ல விஷயமோகெட்ட விஷயமோவாழ்க்கையின் ஆரம்பமோவாழ்க்கையின் முடிவோஅடிக்காமல் அடங்காதாவிசேஷம்?இருக்கும் போதுதானென்றால்இறந்த பிறகுமா?

By | 2006-12-19T07:43:00+00:00 December 19th, 2006|கவிதை|0 Comments