வரப்போகும் வசந்தத்தின் நாட்கள்!

அமீரகத்தில் மற்றும் வளைகுடா நாடுகளில் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொது இடங்களில் சாப்பிடவோ பருகவோ கூடாது, அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் சாப்பிட பருகக் கூடாது. எட்டு மணி நேர வேலைக்குப் பதிலாக ஆறு மணி நேர வேலை மட்டுமே. இதையெல்லாம் பார்க்கும் போது உலகின் இந்தப் பகுதியில் நோன்பு நோற்பது அவ்வளவு பெரிய விஷயமாகப் படவில்லை. நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ரமலான் நோன்பு நாட்களில் நான் நோன்பு நோற்பதை சக நண்பர்கள் [...]

தொலைபேசியில் வந்த ஆபத்து: ‘Phone Booth’

நம்முடைய செயல்களில் மலிந்து கிடக்கும் பொய்களும் குற்றங்களும் யார் கண்களுக்கும் தெரியப் போவதில்லை என்ற அலட்சியப் போக்கினாலேயே தவறுகள் தொடர்கின்றன. ஆனால் திடீரென ஒருவர் நம்மை நிறுத்தி நீ செய்யும் தவறுகளும் திருட்டுத்தனங்களும் எனக்குத் தெரியும், ஒரு வாய்ப்பு தருகிறேன் அதனை நீயே ஒப்புக்கொள் என்று துப்பாக்கி முனையில் மிரட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எதையாவது எதிர்பார்த்து மிரட்டுபவர்க்கு தேவையானதைத் தந்து வாயடைத்துவிடலாம், எதிர்பார்ப்பேயில்லாத ஒருவருக்கு? நம் இரகசியத்தைத் தெரிந்தவர், கண்ணுக்குத் தெரியாதவர், தண்டிக்க நினைப்பவர் இந்த [...]

By | 2009-07-27T07:28:00+00:00 July 27th, 2009|திரைவிமர்சனம்|21 Comments

இட்லி வாங்கினால் நகம் இலவசம்??!!

சுத்தம் சுகாதாரம்னு நான் ரொம்பவே பார்ப்பேன். யாராவது எச்சில் செய்து தந்தப் பண்டத்தைக் கூட சாப்பிட மாட்டேன். அது எங்க அம்மாவானாலும் சரி தோழிகளானாலும் சரி. ஆனால் நான் அம்மாவாகிய பிறகு கொஞ்சம் மாறியிருக்கேன்னு வேணும்னா சொல்லலாம். இந்த காரணத்தினாலேயே நான் உணவகத்திற்கு சென்று சாப்பிட ரொம்பவே யோசிப்பேன். நல்ல உணவகமா, சுத்தமா வைத்திருக்கிறார்களா, பரிமாறுபவர்கள் சுத்தமா இருக்கிறார்களா, தட்டை ஒழுங்கா கழுவியிருக்காங்களான்னு முடிந்த வரைக்கும் கவனிப்பேன். என்னை வீட்டில் ‘ஒஸ்வாஸி’ன்னு சொல்வாங்க. இந்த ‘ஒஸ்வாஸி’ என்ற [...]

By | 2009-07-20T06:10:00+00:00 July 20th, 2009|அக்கறை|16 Comments

அழகான ‘கையெழுத்து’

They are providing us with the last mealThey would kill when the night is about to endWe shouldn't be there to die with pain when the sun risesMy dear love let's kill each other in this darkஅவசரமாக கடைசி உணவை பரிமாறினார்கள்அந்த இரவு முடியும் முன் நம் உயிரை பறிக்கவலியால் துடித்து சாக நாம் இருக்க கூடாது சூரியன் எழும்பும் முன்என் பிரியமானவளே [...]

By | 2009-07-13T09:40:00+00:00 July 13th, 2009|திரைவிமர்சனம்|20 Comments

Slumdog Millionaire – என் பார்வையில்

இறைவனின் மிகச் சிறந்த படைப்பில் ஒன்றுதான் நம்முடைய மூளை. எந்த ஒரு நிகழ்வையும் பார்க்கும் போது, கேட்கும் போது, இரசிக்கும் போது, உணரும் போது அது தொடர்புடைய எல்லா விஷயங்களும் பதிந்துவிடுகிறது - மனித மூளையில். அந்தப் பதிவின் பிரதிபலிப்பே நம் நினைவுகள். அப்படிப்பட்ட நினைவுகளில் தங்கிவிட்ட விஷயங்களிலிருந்து தனக்குத் தேவைப்படும் பதில்களை தேடியெடுத்து கேட்ட கேள்விகளுக்கு, படிக்காத கீழ்மட்டத்திலிருக்கும் இளைஞன் சரியான பதில்களைத் தந்து அசத்தியதை ஒப்புக் கொள்ள முடியாத 'மில்லியனர்' நிகழ்ச்சி நடத்துனர்அந்த இளைஞனை [...]

By | 2009-02-02T12:49:00+00:00 February 2nd, 2009|திரைவிமர்சனம்|21 Comments

அவன் அப்படித்தான்

இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் கூறியது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னுள். அன்று ஏற்பட்ட வலியும் வடுவும் இன்னும் இரணமாகத்தான் இருக்கிறது. கையாலாகாதவளாக அப்போது இருந்துவிட்டேன் இந்த முறை அப்படியாகாது. நான் எடுப்பதே முடிவாக இருக்கும். பல வருட மனவுளைச்சல் இத்தனைக் காலங்களுக்கு பின்பு தணிவது எனக்கு ஆத்ம திருப்தியைத்தான் தருகிறதே தவிர சமுதாயத்தில் எங்கள் எதிர்காலத்தின் கேள்விக்குறிகளைப் பற்றி துளியும் கவலைக் கொள்ளாதவளாக இருக்கத் துணிகிறேன்.எனது முதல் கருவின் சிதைவே என்னை இன்றும் [...]

By | 2008-12-21T06:15:00+00:00 December 21st, 2008|சிறுகதை|22 Comments

கேள்விகளால் ஒரு வேள்வி

துபாயில் ஆயிரத்தெட்டு சங்கமும் அமைப்பும் இருந்தாலும் அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை தான் இன்னும் இலக்கிய விழாக்களை நடத்தி வருகிறார்கள். இந்த வெள்ளிக்கிழமை மாலை ’கவிதை கூடல்’ தலைமை கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்றதும் அவர்கள் உரையை கேட்டே ஆகவேண்டுமென்று வீட்டில் உத்தரவு வாங்கிவிட்டு குழந்தைகளுடன் கிளம்பிவிட்டேன்.இஷாவிற்கு பிறகு கிளம்பி சென்றதால் விழா ஆரம்பித்துவிடும் என்று தெரிந்திருந்தாலும் பலர் பேசிய பிறகு கடைசியில் தான் கவிக்கோ பேசுவார் என்ற எண்ணத்தில் சற்று தாமதமாகச் சென்று விட்டேன். உள்நுழைந்ததும்தான் [...]

வாரணம் ஆயிரம் – வானிறம் ஆயிரம்

நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது, நேரமில்லாதது ஒரு காரணமென்றாலும் எதையும் பதியும் படியில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். தசாவதாரத்திற்கு பிறகு திரையரங்கில் பார்க்க வேண்டுமென காத்துக் கொண்டிருந்த படம். அதுவும் எங்க ஊரில் எந்தத் தமிழ்ப்படமும் ஒரே வாரம்தான் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளிவரும் நாளை எதிர்பார்த்திருந்தேன். திரையரங்கில் நுழையும் போதே ஆசிப் இனிப்பு வழங்கி 'படம் குப்பையாம்; வாழ்த்துகள்!' என்று வரவேற்றார். கொஞ்சம் கல்வரமாக இருந்தது - ஆனாலும் காத்திருந்த. நம்பிக்கை வீண் போகவில்லை.பொதுவாகவே [...]

By | 2008-11-17T05:49:00+00:00 November 17th, 2008|திரைவிமர்சனம்|26 Comments

இரங்கல் செய்தி

இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், கண்ணதாசன், எம்.ஜி.ஆர், கலைஞர் மூவரிடமும் ஏழு ஆண்டுகளுக்கு மேல் உதவியாளராக பணியாற்றியவர் கற்பூர நாயகியே (L.R. ஈஸ்வரி அம்மன் பாடல்) காலத்தை வென்றவன் (அடிமைப்பெண் படத்தில்) போன்ற பெருமை மிகு பாடல்களை எழுதிய கலைமாமணி கவிஞர் அவினாசிமணி இன்று 24 ஆகஸ்டு 2008 சென்னையில் காலமாகி விட்டார்கள். இவர் இயக்குனரும் நடிகருமான ஆர். பாண்டியராஜன் அவர்களின் மாமனார் ஆவார்.அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அவர்களுடைய நினைவிற்கு [...]

By | 2008-08-24T13:50:00+00:00 August 24th, 2008|Personal|1 Comment

அதிரடிக்காரன் ஏ.ஆர்.ஆர்.

மயங்க வைத்த மாலை பொழுதென்று ஒரு வாக்கியத்தில் அடக்கிவிட முடியாத அளவிற்கு இசை விருந்து படைத்தனர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் குழுவினர். 'ஷார்ஜா வரை போக வேண்டும்', 'பார்க்கிங் கிடைக்காது', 'உன்னை நடக்க வைக்க வேண்டும்', 'இரவு நேரமாகிவிடும்' என்றெல்லாம் அடுக்கடுக்கான காரணம் சொல்லி என்னை அழைத்து செல்லாமல் கழட்டிவிட நினைத்தவருடன் தொற்றிக் கொண்டு சென்றுவிட்டேன் - தொற்றிக் கொண்டது கணவருடன் தாங்க. என்னவென்றாலும் இந்த மாதிரியான நிகழ்ச்சியை ஒரு நண்பர்கள் கூட்டத்துடன் சென்று விசிலடித்து பார்த்த [...]