மெல்லத்தமிழினி சாகும்??

'Emirates only தமிழ் radio station' இப்படியான அறிமுகத்தோடு ஆரம்பிக்கப்படுகிறது ஹலோ 89.5 FM. இதையே ‘அமீரகத்தின் ஒரே தமிழ் வானொலி’ என்று அறிமுகப்படுத்தினால் என்ன குறைந்துவிடப் போகிறார்களா? அல்லது தமிழர்களுக்குத்தான் பிடிக்காமல் போய்விடுமா? சரி, முழுவதுமாகத் தமிழிலேயே பேசுவது FM-ன் கலாசாரமில்லையென்றால் ‘அமீரகத்தின் முதல் தமிழ் radio station' என்றாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே. தமிழுக்காகவென்று ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு ஊடகமும் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் ’தமிழைப் பருக தரவே கூடாது’ என்ற முடிவோடு. ஏன் இப்படி? [...]

இட்லி வாங்கினால் நகம் இலவசம்??!!

சுத்தம் சுகாதாரம்னு நான் ரொம்பவே பார்ப்பேன். யாராவது எச்சில் செய்து தந்தப் பண்டத்தைக் கூட சாப்பிட மாட்டேன். அது எங்க அம்மாவானாலும் சரி தோழிகளானாலும் சரி. ஆனால் நான் அம்மாவாகிய பிறகு கொஞ்சம் மாறியிருக்கேன்னு வேணும்னா சொல்லலாம். இந்த காரணத்தினாலேயே நான் உணவகத்திற்கு சென்று சாப்பிட ரொம்பவே யோசிப்பேன். நல்ல உணவகமா, சுத்தமா வைத்திருக்கிறார்களா, பரிமாறுபவர்கள் சுத்தமா இருக்கிறார்களா, தட்டை ஒழுங்கா கழுவியிருக்காங்களான்னு முடிந்த வரைக்கும் கவனிப்பேன். என்னை வீட்டில் ‘ஒஸ்வாஸி’ன்னு சொல்வாங்க. இந்த ‘ஒஸ்வாஸி’ என்ற [...]

By | 2009-07-20T06:10:00+00:00 July 20th, 2009|அக்கறை|16 Comments

எம்.ஓ.பி. வைஷ்ணவாவின் மறுபக்கம்

கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் என்னுடைய 'கல்லூரி - நிஜமும் நிழலும்'- பதிவுக்கு வந்தவை. அரசாங்க விடுமுறையை கல்லூரிகள் தர மறுக்கிறது என்று நான் எழுதப் போக, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அதிர்ச்சி தரும் பின்னூட்டங்கள். இது உண்மைதானா என்ற கேள்வியை எழுப்புகிறது. hi jaseela,even i'm a student of MOP. forget abt govt holidays atleast v can adjust. bt i want to tel an important worst thing [...]

By | 2007-12-25T12:07:00+00:00 December 25th, 2007|அக்கறை, விமர்சனம்|38 Comments

கல்லூரி – நிழலும் நிஜமும்

சமீபத்துல வந்த படங்களில் சில படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு பலர் சொல்லி கேட்கும் போது பார்த்தே தீர வேணும்னு ஆச வருது. எங்க ஊருல பெரிய பிரபலங்கள் நடிச்சாத்தான் படமே திரைக்கு வருது. இந்த வாரம் 'ஒன்பது ரூபாய் நோட்டு' வரும்னு எதிர்பார்த்து ஏமார்ந்தோம். 'எவனோ ஒருவன்', 'கல்லூரி'ன்னு சில நல்ல படங்கள் திரைக்கு வரும் வரை காத்திருக்க முடியாம குறுந்தகடுக்கு வேட்டையாடி 'கல்லூரி' கிடைச்சுது. 'கல்லூரி' படத்துல யாரு நடிச்சிருக்காங்கன்னு கேட்டுறாதீங்க சத்தியமா எனக்கு தெரியாது [...]

வலைப்பதிவாளர்கள் தயாரா?

அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும் முன்பு தமிழ்மணம் மேயும் வழக்கம். அப்படி உலாவி விட்டு வீட்டுக்குப் போகும் போது ஏதோ தோழிகளுடன் சிரித்து மகிழ்ந்துவிட்டு வீடு திரும்பும் உணர்வு மிஞ்சும். அப்படித்தான் நேற்றும் போகும் போது மிதக்கும் வெளி எழுதிய 'ஒரு பெண்ணைக் கொலை செய்தோமையும்' பத்ரி ஷேஷாத்ரி இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்களும்' படித்தேன். மிதக்கும் வெளியின் அந்த பதிவை படிக்கும் போது எனக்கு சுபா சுந்தரத்தின் [...]

By | 2007-07-18T11:16:00+00:00 July 18th, 2007|அக்கறை|44 Comments

மூட(ர்) நம்பிக்கை

இந்த முறை நான் சென்னையில் இருந்த போது திடீரென்று புளியந்தோப்பே கோலாகலமாகக் காட்சியளித்தது. போன வாரம் பார்த்த புளியந்தோப்பு போல் இல்லையே! என்ன ஊர்வலம் என்ற ஆர்வமாக நோட்டமிட்டேன். திருவிழாவா? திருமணமா? அரசியல் கூட்டமா என்று யூகிக்க முடியாத கோலாகலம். கவனிக்க ஆரம்பித்தேன் - பல குதிரைகள் பவனிவருகிறது, எங்கு திரும்பினாலும் விவசாயிகள் கண்டால் வயிறெரியும் அளவிற்கு ஆடம்பர பிரகாச வண்ண விளக்குகள். மல்லிகைப்பூவே கிடைக்காத அந்தத் தருணத்தில் மல்லி மணக்க ஊரில் உள்ள எல்லா பூக்களையும் [...]

தமிழ் சாகடிக்கப்படுகிறது!?

என்னதான் பல்வேறு வகையான ஊடகங்கள் இருந்தாலும் வான் அலைகள் மூலம் கேட்கப்படும் விஷயங்கள் அப்படியே மனதில் பதியத்தான் செய்கின்றன. தொலைக்காட்சிக்கும், பத்திரிகைகளுக்கும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் ஆனால் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும். ஏழைகளுக்கும் எளிமையாகக் கிடைக்கக் கூடியது இந்த வானொலி சேவைதான். இலங்கையின் முதல்தர வானொலி சக்தி எப்.எம். அமீரகத்தில் தொடங்குகிறார்கள் என்றதும் மிகவும் சந்தோஷப்பட்டேன். தரமான நிகழ்ச்சிகளை தரமான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மூலம் கிடைக்கும் என்று [...]

By | 2007-03-20T14:02:00+00:00 March 20th, 2007|அக்கறை|21 Comments

திருந்துங்க பெண்களே!

காதலர்கள் தினத்தன்று அலுவலகத்தில் எல்லாப் பெண்களும் சிகப்பு சட்டை அணிந்து வரத் திட்டமிட்டு, என்னையும் அணிந்து வரச் சொன்னார்கள். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் ரவிக்கை போடாத ஊரில் ரவிக்கை போட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்களே அப்படிப் பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில், 'ஒன்றுபட்டால் குறைந்து விடமாட்டோம்' என்று மனசை தேற்றிக் கொண்டு சரியென்றேன். என் சக ஊழியரிடம் "என்னிடம் அழகான சிகப்பு சுரிதார் இருக்கு. ஆனால் இந்த நிறுவனத்தில் சுரிதார் போட்டால் 'மம்னு'வாச்சே (விலக்கப்பட்டது)" என்றேன் வருத்தமாக. "சுரிதார் [...]

By | 2007-02-21T11:28:00+00:00 February 21st, 2007|அக்கறை, பெண்ணியம்|26 Comments

அன்பர்கள் தினம்

எல்லா வலைப் பதிவர்களுக்கும் பூங்கொத்தும், இனிப்பும் அனுப்புவதாகத் திட்டம்*. தங்களுடைய புகைப்படத்தையும் முகவரியையும் தனிமடலில் அனுப்பினால் குலுக்கல் முறையில் இல்லை இல்லை சிறந்த முகங்களை ஒரு சுமாரான முகம் தேர்வு செய்து 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்தப் பரிசு அனுப்பிவைக்கப்படும்.* சொந்த படமாக இருக்க வேண்டும்.* உங்க படத்தை நீங்களே எடுத்ததாக இருக்க வேண்டும்.* படத்தின் அளவு 4 x 6 ஆக இருக்க வேண்டும்.* படத்தின் கோப்பு 256KB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.* அனுப்ப வேண்டிய [...]

By | 2007-02-14T10:57:00+00:00 February 14th, 2007|அக்கறை|2 Comments

அம்மாவுக்கும் வள்ளுவருக்கும் ஆகாதோ!?

பள்ளி பருவத்தில் வள்ளுவர் கோட்டம் போகலாம் என்று தோழிகளெல்லாம் திட்டம் போட்டால் அது காதலர்கள் சந்திக்கும் இடமென்று ஆளாளுக்கு தமது காதலனையும் அங்கு வரவைக்க திட்டம் போட்டார்கள். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 'டாஷ்' என்று அர்த்தம் என்று அந்த வார்த்தையையே கெட்ட வார்த்தை என்று நினைத்திருந்த காலத்தில் காதல் செய்யும் தோழிகளை கெட்ட பெண்கள் பட்டியலில் சேர்த்துவிட்டு வள்ளுவர் கோட்டம் போகாமல் ஜகா வாங்கிவிட்டேன்.ஆறு வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் [...]

By | 2007-02-10T11:01:00+00:00 February 10th, 2007|அக்கறை|9 Comments