About Jazeela Banu

This author has not yet filled in any details.
So far Jazeela Banu has created 164 blog entries.

கடவுளின் கை – சாயிரா பானு

பொங்கி வரும் பாலை பாய்ந்து அனைக்கும் சாயிரா பானுவின் சம்பாஷனையோடு காலையில் நம் வீட்டில் நடக்கும் அதே வகையான பரபரப்புடன் தொடங்குகிறது படம். சாயிரா பேசுவது ஜோஷுவாவிடம். படத்தின் ஆரம்பத்தில் சாயிரா – ஜோ என்ன உறவு என்ற குழப்பம் எழுகிறது. ஜோஷுவா சாயிராவை எந்தக் கட்டத்திலும் ‘அம்மா’ என்று அழைக்கவில்லை. ஒருவேளை நண்பர்களா அல்லது சகோதர சகோதரியா என்பதற்கான விடையை நேரடியாகத் தராமல் மிக நேர்த்தியாகக் கதை வழியாகவே அவர்களின் உறவை விளக்கியுள்ளார் இப்படத்தின் கதையாசிரியர் [...]

பறந்தெழு – டேக் ஆஃப்

எடிட்டராகக் கத்தரித்துத் தேவையானவற்றையும், சரியானவற்றையையும் மட்டுமே வெட்டி விளையாடியவர் இயக்குநரானால் என்னவாகும் - 'டேக் ஆஃப்' ஆகும் என்று சொல்லும் அளவிற்கு மஹேஷ் நாராயணன் தேர்ந்த இயக்குநராக இப்படத்தின் கலை மற்றும் கதை அம்சங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். பிரியாணி சாப்பிடப் போகிறோம் ஆனால் அதன் சுவை எப்படி இருக்கப் போகிறதோ என்பதைப் போல் உலகறிந்த 2014-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை எப்படிப் படைத்து விருந்து வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை முழுமைப்படுத்தியுள்ளார். திக்ரித்தில், ஈராக்கின் உள்நாட்டுப் [...]

By | 2017-05-07T12:27:44+00:00 April 12th, 2017|திரைவிமர்சனம்|0 Comments

பெண்கள் தினம்

பூக்கள் தப்பித்துச் சென்றுவிடுமென்று வேலி கட்டுவதில்லை மதில் சுவர்கள் வீட்டிலுள்ளவர்கள் தாண்டிச் செல்வதை முறியடிக்க எழுப்புவதில்லை எம் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு வரையறை வகுப்பது அவர் தம் மீதான நம்பிக்கையின்மையல்ல கேள்விப்படும் சமூக சங்கடங்கள் வீட்டில் நுழையாமல் இருக்கவே கட்டுப்பாடுகள் என் போன்ற தாய்மார்கள் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பீதியிலிருந்து விடு்படும் பாதுகாப்பான நாளே பெண்கள் தினம்

By | 2017-03-08T06:52:42+00:00 March 8th, 2017|கவிதை, பெண்ணியம்|0 Comments

இறைச்செய்தியின் ஆரம்பம்

5. அவரசப்பட்டு உங்கள் நாவை அசைக்காதீர்கள்' (திருக்குர்ஆன் 75:16) என்ற திருக்குர்ஆன் வசனத்தை இப்னு அப்பாஸ்(ரலி) விளக்கும்போது, 'நபி(ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி அருளப்படும்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இது அவர்களின் உதடுகளை அவர்கள் அசைப்பதன் மூலம் புலனாயிற்று. 'வஹீ (இறைச்செய்தி)யை (மனனம் செய்ய) அவசரப்பட்டு உங்களுடைய நாவை அசைக்காதீர்கள். ஏனெனில் அதனை (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நாவின் மூலம்) ஓத வைப்பதும் நம்முடைய பொறுப்பாகும். எனவே நாம் அதனைச் [...]

Pink & Parched – இரண்டு படங்களும் சுட்டெரிக்கும் நிஜங்களும்

இரண்டு படங்களுமே இச்சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தைரியமாக முன்னிறுத்துகின்றன. படம் பார்த்த பிறகு மனதில் திரும்பத் திரும்ப எழும் காட்சிகளும், நடைமுறையில் இன்னும் இப்படியான நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே என்ற அவலமும் நம்மைத் தின்று தீர்க்கிறது. ‘பிங்க்’ - நமது சமூகத்தில் நிலவும் ‘கறுப்பு’ எண்ணத்தையும், பெண்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்ட எழுதப்படாத சட்டங்களைப் பற்றியும் பேசும் அற்புதமான படம். இயக்குநர் அனிருத் ராய் சவுத்ரிக்கு இது முதல் ஹிந்திப் படமாம். ஆனால் அவர் இப்படத்திற்காக [...]

மண(ன) முறிவு – Gett: The Trial of Viviane Amsalem

"மனைவியைக் கணவன் அடித்து அல்லது வன்முறைக்கு உள்ளாக்கினானா?" "வன்முறையென்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் உடல் வன்முறை பற்றிக் கேட்கிறீர்கள் என்றால் தீங்கு இல்லை." "மனைவியின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாரா?" "இது விவாதத்திற்குரியது" "என் கேள்வியானது கணவர் பணம், உணவு அளிக்கிறாரா?" "இவள் கடந்த மூன்று வருடங்களாகக் கணவரோடு இல்லை, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தேவையானதை அவரே பார்த்துக் கொள்கிறார்." "கணவர் விபசாரம் அல்லது தான்தோன்றியாக சுற்றித் திரிவது, ஏமாற்று வேலை என்று [...]