இதென்ன கப்பிங் கலாட்டா?

'கப்பிங்' பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘கப்பிங்’ என்ற பதத்தைக் கேட்டவுடன் டிக்கிலோனா, ஸ்பூனிங், கப்லிங் என்ற வரிசையில் `ஜெண்டில்மேன்` படத்தில் வரும் விளையாட்டு போல ஏதோ ஒண்ணுன்னு நினைச்சீங்கன்னா நான் பொறுப்பல்ல. ’கப்பிங்’ என்பது ஒரு பழங்காலத்து மருத்துவமுறை. நோய்களுக்கு மருந்து சாப்பிட்டால் கசக்கும், ஊசி குத்தினால் வலிக்கும் ஆனால் இந்த கப்பிங் மருத்துவம் வலியில்லாத நிவாரணியாம். மனிதன் தோன்றிய ஆதி காலத்திலிருந்தே மருத்துவமும் தோன்றிவிட்டது என்று நமக்குத் தெரியும். ஆனால் வெவ்வேறு முறைகள், வகைகள், நம்பிக்கைகள் [...]

பாரனாய்ட் – Paranoid

'பாரனாய்ட்' என்றால் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது? 'பாரனாய்ட்' ஆல்பமா இல்லை வியட்நாம் போரா? என்ன சுத்த பைத்தியக்கார கேள்வின்னு கிரேக்கம் தெரிஞ்சவங்க சட்டுன்னு கேட்டிடுவாங்க. காரணம் 'பாரனோயா'னாலே 'பைத்தியக்காரத்தனம்'னு பொருள். ஆங்கிலம், ஹிந்தி படங்கள அதிகம் பார்க்கிறவங்களுக்கும் இது புது வார்த்தையில்ல, ஏன்னா தமிழ்ல பைத்தியக்காரின்னு சாதாரணமா திட்டுறா மாதிரி அவங்க ரொம்ப சுலபமா உபயோகிக்கிற வார்த்த அது. ஆனா அந்த அளவுக்கு 'பாரனாய்ட்' சுலபமா குணப்படுத்திடக் கூடிய நோயான்னா இல்லன்னுதான் சொல்லனும்.நீங்க தன்னம்பிக்கை மிக்கவரா? [...]

வெர்டிகோ – Vertigo

நீங்க நினைக்கிற மாதிரி 1958-ல் வெளிவந்த ஆஸ்கர் விருது பெற்ற ஆல்பிரெட் ஹிச்காக்கின் வெர்டிகோ பற்றியதல்ல. சுழற்சி - 'வெர்டிகோ' பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? 'வெர்டிகோ' என்றது தலை சுற்றுவதை அறிகுறியாகக் கொண்ட ஒரு சாதாரண பிரச்சனயே தவிர பயங்கர நோயெல்லாமில்ல. தலை சுற்றல் எந்தெந்த காரணத்திற்காக வருதுன்னு கொஞ்சம் யோசிப்போமா? ஒரு பெண்ணுக்கு தல சுத்துன்னா வாந்தி வராப் போல இருக்குன்னா, 'நல்ல மருத்துவரா பாரு 'நீ முழுகாம இருக்கன்'னு கேலி செய்வோம். ஒரு சின்ன பையனுக்கு [...]

உங்களுக்கு இருக்கா மன உளைச்சல்?

காலம் மாறமாறப் புதுசுப் புதுசா ஏதேதோ கண்டுபிடிக்கிறாங்க. கூடவே நெறய வாயிலேயே நுழையாத நோய்களும் வந்துக்கிட்டே இருக்கு. அப்படின்னா அந்தந்த கால கட்டங்கள்ல இந்த மாதிரியான நோய்களெல்லாம் இல்லாமலா இருந்திருக்கும்? கண்டிப்பா இருந்திருக்கும் ஆனா, ஏன் எதுக்குன்னு ரொம்ப யோசிக்காம, பெருசா எடுத்துக்காம, காரணமே புரியாம போயும் சேர்ந்திருப்பாங்க. இப்பல்லாம் நாம சர்வசாதாரணமா அன்றாடம் கேக்குற ஒரு வார்த்தை என்ன தெரியுமா? 'மனவுளைச்சல்' (depression). பள்ளிக்கூடம் போற குழந்தைக்கு வீட்டுப்பாடத்துல தொடங்கி, வேலைக்குப் போறவங்களோட அன்றாட அலுவல்கள் [...]