கடவுளின் கை – சாயிரா பானு

பொங்கி வரும் பாலை பாய்ந்து அனைக்கும் சாயிரா பானுவின் சம்பாஷனையோடு காலையில் நம் வீட்டில் நடக்கும் அதே வகையான பரபரப்புடன் தொடங்குகிறது படம். சாயிரா பேசுவது ஜோஷுவாவிடம். படத்தின் ஆரம்பத்தில் சாயிரா – ஜோ என்ன உறவு என்ற குழப்பம் எழுகிறது. ஜோஷுவா சாயிராவை எந்தக் கட்டத்திலும் ‘அம்மா’ என்று அழைக்கவில்லை. ஒருவேளை நண்பர்களா அல்லது சகோதர சகோதரியா என்பதற்கான விடையை நேரடியாகத் தராமல் மிக நேர்த்தியாகக் கதை வழியாகவே அவர்களின் உறவை விளக்கியுள்ளார் இப்படத்தின் கதையாசிரியர் [...]

பறந்தெழு – டேக் ஆஃப்

எடிட்டராகக் கத்தரித்துத் தேவையானவற்றையும், சரியானவற்றையையும் மட்டுமே வெட்டி விளையாடியவர் இயக்குநரானால் என்னவாகும் - 'டேக் ஆஃப்' ஆகும் என்று சொல்லும் அளவிற்கு மஹேஷ் நாராயணன் தேர்ந்த இயக்குநராக இப்படத்தின் கலை மற்றும் கதை அம்சங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். பிரியாணி சாப்பிடப் போகிறோம் ஆனால் அதன் சுவை எப்படி இருக்கப் போகிறதோ என்பதைப் போல் உலகறிந்த 2014-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை எப்படிப் படைத்து விருந்து வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை முழுமைப்படுத்தியுள்ளார். திக்ரித்தில், ஈராக்கின் உள்நாட்டுப் [...]

By | 2017-05-07T12:27:44+00:00 April 12th, 2017|திரைவிமர்சனம்|0 Comments

Pink & Parched – இரண்டு படங்களும் சுட்டெரிக்கும் நிஜங்களும்

இரண்டு படங்களுமே இச்சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தைரியமாக முன்னிறுத்துகின்றன. படம் பார்த்த பிறகு மனதில் திரும்பத் திரும்ப எழும் காட்சிகளும், நடைமுறையில் இன்னும் இப்படியான நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே என்ற அவலமும் நம்மைத் தின்று தீர்க்கிறது. ‘பிங்க்’ - நமது சமூகத்தில் நிலவும் ‘கறுப்பு’ எண்ணத்தையும், பெண்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்ட எழுதப்படாத சட்டங்களைப் பற்றியும் பேசும் அற்புதமான படம். இயக்குநர் அனிருத் ராய் சவுத்ரிக்கு இது முதல் ஹிந்திப் படமாம். ஆனால் அவர் இப்படத்திற்காக [...]

மண(ன) முறிவு – Gett: The Trial of Viviane Amsalem

"மனைவியைக் கணவன் அடித்து அல்லது வன்முறைக்கு உள்ளாக்கினானா?" "வன்முறையென்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் உடல் வன்முறை பற்றிக் கேட்கிறீர்கள் என்றால் தீங்கு இல்லை." "மனைவியின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாரா?" "இது விவாதத்திற்குரியது" "என் கேள்வியானது கணவர் பணம், உணவு அளிக்கிறாரா?" "இவள் கடந்த மூன்று வருடங்களாகக் கணவரோடு இல்லை, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தேவையானதை அவரே பார்த்துக் கொள்கிறார்." "கணவர் விபசாரம் அல்லது தான்தோன்றியாக சுற்றித் திரிவது, ஏமாற்று வேலை என்று [...]

அறிவின் ஆரம்ப எழுத்து – அலிஃப்

நான்கு தலைமுறை பெண்களின் இன்னல்களை ஃபாத்திமாவாக வரும் லேனாவின் மூச்சு திணறலோடு ஆரம்பிக்கிறது 'அலீஃப்' திரைப்படம். நம் வாழ்வில் முதலில் மிகவும் மதிக்கப்படவேண்டிய ஒருவர் யாரென்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது "உன் தாய்" என்றார்கள். ஒரு முறையல்ல மூன்று முறை கேட்கப்பட்ட போதும் முதல் மூன்று ஸ்தானங்களும் தாய்க்கே என்றார்கள், நான்காவதாகத் தந்தை என்றார்கள். அப்படியான தாய்மார்களை இஸ்லாத்தின் பெயரில் வதைப்பதைச் சித்தரிக்கும் படம். கண்டிப்பாக இது மூச்சுத் திணறல்தான். நியாயமான கேள்விகளைப் பெண்கள் எழுப்பும் [...]

கற்கால மனிதர்கள்

இவ்வுலகில் கொத்துக்கொத்தான கொலைகளுக்குப் பிரதான காரணம் மதங்கள், பிரிவுகள், சாதிகள் என்று சொல்வதை விட ஒரே வார்த்தையில் 'இறைவன்' என்ற நம்பிக்கை எனலாம். நாம் பார்த்திராத, அறியாத, உணரும் அந்த இறைவனுக்காக மதவெறிகளும் பிரிவினைவாதங்களும் கொலைகளும் தண்டனைகளும் பல்வேறு இடங்களில் தலைவெறித்தாடுகிறது. அதுவும் இதற்கு முதல் பலியாள் பெண்தான். இதில் மட்டும் பாரபட்சமில்லாமல் எல்லா மதங்களும் பெண்களின் அடுக்குமுறைகளை வரைந்த பிறகுதான் அதன் மீது ஒரு மதத்தின் நாமத்தைத் தீட்டுவார்கள் போல. உண்மை சம்பவம், மிகவும் வலி [...]

மனம்தான் வயது | How old are you?

'இந்தப் படம் வந்தா நாம இருவரும் கண்டிப்பாக போகணும்' என்று என் தோழி கட்டளையிட, இந்தப் படம் வருவதற்காக காத்திருந்தோம். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் 'மஞ்சுவாரியார்'. அதற்காக அடித்துப் பிடித்து முதல் நாளோ அல்லது முதல் வாரமோ செல்லவில்லை. எல்லோரும் பார்த்து முடித்த திரையரங்கில் காலியான இருக்கைகளுடன் நாங்கள் இருவர் மட்டுமே பார்த்து ரசித்த படம். பின்ன அலுவலக நேரத்தில் 'கட்' அடித்துவிட்டு போக சாக்குப்போக்கு சொல்லணும்ல? 'How old are you?' கண்டிப்பா [...]

By | 2017-01-08T12:49:47+00:00 June 28th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

ஆனந்த யாழை மீட்டிய சாதனா

சாதனை படைத்த சாதனாவைப் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். 'தங்க மீன்கள்' திரைப்படத்திற்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற குழந்தை சாதனாவின் வசிப்பிடம் துபாய். இந்தத் திரைப்படம் திரையில் வருவதற்கு முன்பே அதன் முன்னோட்டத்தை 'அமீரகத் தமிழ் மன்றத்தின்' ஆண்டு விழாவில் அரங்கேற்றியிருந்தோம். 'தங்க மீன்களை'த் திரையில் காண ஆவலாக இருந்த துபாய் மக்களுக்குப் பெரிய ஏமாற்றம். காரணம் இப்படம் துபாய் திரையரங்கிற்கு வரவேயில்லை. தேசிய விருது அதுவும் மூன்று விருதுகள் என்றதும் அவளுடைய பெற்றோரைப் [...]

By | 2017-01-08T12:58:37+00:00 May 13th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

Queen: மனதை ஆளும் “ராணி”

வேற்று மொழியில் நல்ல படங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'ம்ஹும் தமிழுக்கு இது சரிப்படாது' என்றே தோன்றுகிறது. ஏனெனில் கலாச்சாரம், பண்பாடு என்ற கட்டுக்குள் அடைபடுவது போல் தான் நமது படங்களையும் காட்சிப்படுத்த வேண்டிய அவசியமென்ற ஒரு பொய் முகத்தை அணிந்து கொள்கின்றனர் அல்லது மக்களுக்கு இப்படியானதுதான் பிடிக்குமென்று நினைத்துக் கொள்கின்றனரா? குறிப்பாக ஒரு பெண் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் போது அதுவும் அவள் கதாநாயகியென்றால் 'ஒழுக்கம்' என்ற வளையத்திற்குள் அவளை அடைத்து விடுகின்றனர். அதில் மிகுந்த சோகம் என்னவென்றால் [...]

By | 2016-12-20T18:18:21+00:00 March 27th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

விடைகாகக் காத்திருக்கும் கேள்விகள் | 101 சோதியங்கள்

அறிவியல், விஞ்ஞான, தொழிற்நுட்பமென்று எல்லாம் வளர்ந்திருந்தாலும் விடையில்லாத கேள்விகள் நம்முன் நிறைந்தே நிற்கின்றன. அப்படியான கேள்விகளில் ஒன்றுதான் '101 சோதியங்களின்' 101-வது கேள்வி. ஒருவரி கதையை மிக நுட்பமான கவிதையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த்த சிவா. குழப்பங்களோ, திருப்பங்களோ, அதிர்வுகளோ இல்லாத மிக சாதாரணப்படம் கதை சொல்லலில் சிறந்து நிற்கிறது. தனித்தன்மை என்ற பாசாங்கேதுமில்லாமல் தனது வலுவான கதாபாத்திரத்தை வைத்து படத்தைத் திறமையாக ஈர்ப்புடன் நகர்த்தியுள்ளார்.குழந்தையை கதாநாயகனாக்கி அழகு பார்த்த படம். குழந்தைகள் நமக்குத் தெரியாத விஷயத்தை [...]

By | 2016-12-20T18:18:22+00:00 February 17th, 2014|திரைவிமர்சனம்|0 Comments