படம் காட்டுறோம் படம்!

சிக்குபுக்கு இரயிலு 1895நோயாளிய நோயாளியாக்கும் வாகனம், அதாங்க ஆம்புலன்ஸ் - சென்னை 1940 சீருந்து காட்சியகம் - சென்னை 1913ஃபோர்ட் நிறுவனம் 1917கொல்கத்தா 1915அந்தமான் 1917மத்ராஸ் வங்கி 1935கராச்சி பல்சுவை அங்காடி 1917கராச்சி திரையரங்கம் 1917நம்மூரு கொத்தவாச்சாவடி 1939லாஹூர் 1864சென்னை நூலகம் 1913 - கல்லூரி கதாநாயகர்களை கவனியுங்க!சென்னை மெரினா கடற்கரை 1913 - கடலப் போட ஆளில்லாமயிருக்குபரப்பரப்பில்லாத மும்பாய் 1894விக்டோரியா டெர்மினஸ், பம்பாய் 1894மாமிகள் இல்லாத மைலாப்பூர், சென்னை 1939உறவில்லாத உதகை 1905மின்சார உற்பத்தி தொழிற்சாலை [...]

By | 2007-06-07T08:50:00+00:00 June 7th, 2007|நிழற்படம்|10 Comments

வேற்று திசை – சிறுகதை

நான் முன்பு எழுதி 'திசைகளில்' வெளிவந்த சிறுகதையை இங்கே இடுகிறேன். அப்போ படிக்காம தப்பிச்சிருந்தாலும் இப்போ மாட்டிக்கிட்டீங்க.இரண்டு ஆட்கள் கூட சேர்ந்து நடந்து போக முடியாத அந்த ஒடுக்கமான சந்தில் இரண்டு இருசக்கர மிதி வண்டி சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தன. அதன் சக்கரங்களை நிறைய ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடி பம்ப்பில் காற்றுக்கு பதில் அன்று அதிசயமாக ஒழுங்காக தண்ணீர் வந்து கொண்டிருந்தது, ஆகையால் அடி அடியென்று ஆளுக்காள் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தனர், வாயிருந்தாலும் அழுதுவிடும். ஒருவேளை [...]

By | 2007-06-05T09:05:00+00:00 June 5th, 2007|சிறுகதை|6 Comments

உங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்?

இல்லற வாழ்க்கையைப் பற்றிப் பெரியவர்கள் அறிவுறுத்தும்போது அன்பும், அறனும் சேர்ந்தால்தான் வாழ்க்கை பண்பும் பயனுமாக இருக்குமென்று சொல்வார்கள். பண்பும் பயனுமான இல்வாழ்க்கையில் இன்றைய காலத்தில் பொருளாதாரமும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவனோடு சேர்ந்து மனைவியும் பொருளீட்டுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட அளவுக்கு இன்றைக்கு வாழ்க்கைச் சூழல்கள் சிக்கலாக மாறி வருவதை கண்கூடாகக் காண்கிறோம். இந்தச் சூழலில் அன்றாட வாழ்வில் அவசியமாகிவிட்ட பொருளாதாரச் சுமையை ஒருவராகவே சமாளிப்பதென்பதும் சிரமமானதாகி வருகிறது. - எப்படி ஒரு கை ஓசை எழுப்பி [...]

பாரனாய்ட் – Paranoid

'பாரனாய்ட்' என்றால் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது? 'பாரனாய்ட்' ஆல்பமா இல்லை வியட்நாம் போரா? என்ன சுத்த பைத்தியக்கார கேள்வின்னு கிரேக்கம் தெரிஞ்சவங்க சட்டுன்னு கேட்டிடுவாங்க. காரணம் 'பாரனோயா'னாலே 'பைத்தியக்காரத்தனம்'னு பொருள். ஆங்கிலம், ஹிந்தி படங்கள அதிகம் பார்க்கிறவங்களுக்கும் இது புது வார்த்தையில்ல, ஏன்னா தமிழ்ல பைத்தியக்காரின்னு சாதாரணமா திட்டுறா மாதிரி அவங்க ரொம்ப சுலபமா உபயோகிக்கிற வார்த்த அது. ஆனா அந்த அளவுக்கு 'பாரனாய்ட்' சுலபமா குணப்படுத்திடக் கூடிய நோயான்னா இல்லன்னுதான் சொல்லனும்.நீங்க தன்னம்பிக்கை மிக்கவரா? [...]

நான் அவன் இல்லை – விமர்சனம்

எங்க வீட்டு சினிமா கொட்டகையில் நேற்று 'நான் அவன் இல்லை' பார்க்க நேர்ந்தது. எப்படி பழைய பாடல்களைப் புதுப்பித்து 'ரீமிக்ஸ்' என்ற பெயரில் தருகிறார்களோ அதே போன்ற ஒரு முயற்சிதான் இந்தப் படமும். இந்தப் படம் போலவே இன்னும் 'பில்லா', 'முரட்டுக்காளை' என்று வரிசையாக வரப்போகிறதாம். 'பில்லா', 'முரட்டுக்காளை'யெல்லாம் பரவாயில்லை வெற்றி மசாலாப் படங்கள், அதுவும் பிரபலமான கதாநாயகர்களை வைத்து எடுத்தால் ஓட வாய்ப்புள்ளது. ஆனால் முகவரியே இல்லாத ஓடாத அந்தக் காலத்து கே. பாலசந்தர் தந்த [...]

வெர்டிகோ – Vertigo

நீங்க நினைக்கிற மாதிரி 1958-ல் வெளிவந்த ஆஸ்கர் விருது பெற்ற ஆல்பிரெட் ஹிச்காக்கின் வெர்டிகோ பற்றியதல்ல. சுழற்சி - 'வெர்டிகோ' பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? 'வெர்டிகோ' என்றது தலை சுற்றுவதை அறிகுறியாகக் கொண்ட ஒரு சாதாரண பிரச்சனயே தவிர பயங்கர நோயெல்லாமில்ல. தலை சுற்றல் எந்தெந்த காரணத்திற்காக வருதுன்னு கொஞ்சம் யோசிப்போமா? ஒரு பெண்ணுக்கு தல சுத்துன்னா வாந்தி வராப் போல இருக்குன்னா, 'நல்ல மருத்துவரா பாரு 'நீ முழுகாம இருக்கன்'னு கேலி செய்வோம். ஒரு சின்ன பையனுக்கு [...]

பெண்கள் விழித்துக் கொள்வார்களா?

ஒரு ஏழப்பட்டப் பொண்ணு எங்க அலுவலகத்திற்கு நேர்முகத்திற்கு வந்திருந்தாங்க. தேவையான படிப்பு, அனுபவம், நல்ல மொழி வளம் எல்லாம் இருந்தது. அவங்க அழைப்புக்காக காத்திருந்தாங்க மேலாளர் அறைக்குப் போய் பொசுக்குன்னு ஒரு நிமிஷத்துல வெளியில வந்திட்டாங்க. வெளியில் வந்தவங்களை என்ன ஆச்சுன்னு கேட்டேன். 'இப்போதைக்கு ஆள் தேவையில்ல தேவைப்படும் போது அழைக்கிறோம்னு சொல்லிட்டாங்க'ன்னு சொன்னாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியவில்லை, ஆள் தேவைப்பட்டதால்தானே நேர்முகத்திற்கே அழைத்தோம். எல்லா தகுதிகளும் பொருந்தி வந்தவர்களை ஒன்றுமே விசாரிக்காமல் கூட அனுப்பிவிட்டதால் எனக்கு [...]

By | 2007-04-30T07:11:00+00:00 April 30th, 2007|பெண்ணியம்|17 Comments

உங்களுக்கு இருக்கா மன உளைச்சல்?

காலம் மாறமாறப் புதுசுப் புதுசா ஏதேதோ கண்டுபிடிக்கிறாங்க. கூடவே நெறய வாயிலேயே நுழையாத நோய்களும் வந்துக்கிட்டே இருக்கு. அப்படின்னா அந்தந்த கால கட்டங்கள்ல இந்த மாதிரியான நோய்களெல்லாம் இல்லாமலா இருந்திருக்கும்? கண்டிப்பா இருந்திருக்கும் ஆனா, ஏன் எதுக்குன்னு ரொம்ப யோசிக்காம, பெருசா எடுத்துக்காம, காரணமே புரியாம போயும் சேர்ந்திருப்பாங்க. இப்பல்லாம் நாம சர்வசாதாரணமா அன்றாடம் கேக்குற ஒரு வார்த்தை என்ன தெரியுமா? 'மனவுளைச்சல்' (depression). பள்ளிக்கூடம் போற குழந்தைக்கு வீட்டுப்பாடத்துல தொடங்கி, வேலைக்குப் போறவங்களோட அன்றாட அலுவல்கள் [...]

கன்னத்தில் முத்தமிட்டால்…

சின்ன வயதில் தாய்மை என்பது பெரிய புதிராக தோன்றும் எனக்கு. என் மூத்த அக்காவுக்கு குழந்தை பிறந்த போது அவள் இரசித்து குழந்தையை கொஞ்சுவதைப் பார்த்து எனக்குள்ளே பல கேள்விகள் அதில் ஒன்றே ஒன்றை அவளிடம் உதிர்த்தே விட்டேன் இப்படி "பெத்த குழந்தன்னா பாசம் பொத்துக்கிட்டு தன்னால வந்திடுமோ? நீ பாக்க நானும்தான் பொறந்து வளர்ந்தேன், என்ன இத்தன வருஷமா தெரியும் உனக்கு, ஆனாலும் என்ன விட இப்ப வந்த புள்ள மேலதான் உனக்கு பாசம் அதிகம்" [...]

By | 2007-04-13T11:29:00+00:00 April 13th, 2007|விமர்சனம்|18 Comments

மிளிரும் நட்சத்திரம்

என்னை நட்சத்திரமாக்கி, தினமும் எழுத செய்து ஊக்கமளித்த தமிழ் மணத்திற்கு மிக்க நன்றி. பின்னூட்டமிட்டு பதிவை உயிர் வாழ வைத்த அனைத்து நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள். பதிவை படித்து விட்டு பின்னூட்டமிட ஒன்றுமில்லை என்று பார்வையிட்டு மட்டும் சென்றவர்களுக்கு எண்ணற்ற நன்றி. அபி அப்பாவுக்கு 'பிரத்தியேக' நன்றி, காரணம் சிங்கம், புலி என்று ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அழைத்து வந்து என் பதிவை படிக்க செய்தமைக்கு. 'உங்கள் கவனத்திற்கு' பகுதியில் 'நட்சத்திரப் போட்டி'யை போட்டு ஆதரவு [...]

By | 2007-04-08T18:06:00+00:00 April 8th, 2007|நட்சத்திரம்|12 Comments