விட்டு விலகி நின்று…

உன்னை முதல் முறை பார்த்த தருணத்தை நினைத்து பார்க்கையில் இன்றும் உறைந்துதான் போகிறேன். எனக்கு அப்போது பதினொன்றோ பன்னிரெண்டோ வயது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் குடியிருப்பே பரபரப்பாகத் தென்பட்டது. அரசல்பரசலாக யாரோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மட்டும் விளங்கியது. பள்ளிச் சீருடையை மாற்றிவிட்டு ஓடினேன் சம்பவ இடத்தை நோக்கி, எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அந்த இடமே சலனமில்லாமல் இருந்தது. அங்கேதான் நீ குவித்து வைத்திருந்த புது மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாய். உன் [...]

By | 2007-09-06T14:32:00+00:00 September 6th, 2007|சிறுகதை|36 Comments

ஆசிரியர் தின வாழ்த்து

தமிழ் எழுத்தைகற்றுத் தந்த நீங்கள்இன்று எங்கு இருக்கிறீர்கள்?தினமும் ஒரு திருக்குறளெனஇரு வரியை மனனம் செய்துஉரையை விவரித்த நீங்கள்இன்று எங்கே இருக்கிறீர்கள்?விதையை விதைத்துவிட்டுவிருட்சத்தின் வளர்ச்சியைகாணாமல்எங்கு சென்றுவிட்டீர்கள்?எங்களின்முதல் சொல்முதல் வாக்கியம்முதல் சிந்தனைமுதல் கற்பனைமுதல் உளறல்முதல் கவிதைமுதல் சந்தேகம்என்று எல்லாமேமுதலில் பிறந்தது உங்களிடம்தானே?முயற்சி, தன்னம்பிக்கைபோராட்டம், கடமை,ஒழுக்கம், திறமைஎன்று இல்லாதவற்றையும்தோண்டி ஊற்றைஎங்களுக்குள் எடுத்த நீங்கள்எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாகஇருந்த நீங்கள்இன்று எங்கு சென்றுவிட்டீர்கள்?உங்களுக்காக எழுதுகிறேன்என்றதும் சின்னபிள்ளையாகவேமாறிவிட்டேன்.இந்த எளியவளைஏணியாக நின்று உயர்த்திவிட்டுநீங்கள் மட்டும் அதே இடத்தில்இருப்பதுதான்ஆசிரிய தர்மமா?எங்கிருந்தாலும் என்ஆசிரியர் தின வாழ்த்தைபெற்றுக் கொள்ளுங்கள்

By | 2007-09-05T11:41:00+00:00 September 5th, 2007|கவிதை|7 Comments

உன் நினைவுகளோடு….

மெளனம் பேச்சாகும்தனிமையில்தூக்கம் எழுப்பும்இரவுகளில்வேட்கை நிரம்பிய வெறுமையில்கதகதப்பாய் அரவணைப்பதுஉன் நினைவுகள்மட்டும்தான்

By | 2007-09-05T05:49:00+00:00 September 5th, 2007|கவிதை|13 Comments

சுதந்திரம்

அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க வைத்துவிட்டானே? 'நானும் அவனைப் போல் இருந்துவிட முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்ற நினைப்பே பெரிய நிம்மதியையும் பிரமிப்பையும் தருகிறதே? இந்த எண்ணம் எனக்கு ஏன் தோன்றுகிறது? இப்போதுதான் தோன்றிய ஒன்றா அல்லது மனதில் ஒளிந்துக் கிடந்தது இப்போது அவன் சொன்னவுடன் விஸ்வரூபம் எடுக்கிறதா? எத்தனை ஆண்டுகள் கழித்துப் பேசுகிறேன் அவனுடன் அந்த சந்தோஷமெல்லாம் மறந்து [...]

By | 2007-08-15T05:44:00+00:00 August 15th, 2007|சிறுகதை|13 Comments

யாஸ்மினுக்கு ஒரு கடிதம்

நீ இருக்கும் போதுக்கூட உனக்காக இப்படி ஒரு கடிதம் எழுத என்றுமே தோன்றியதில்லை எனக்கு. எல்லாமே 'ஃபார்வர்ட்' மடலாகத்தானே அனுப்பிவைத்தேன்?! ஆனால் அந்த மடல்களை அனுப்பும் போது உன்னை நான் நினைத்துக் கொள்கிறேன் என்பதை உணர்ந்தாயா? உன் மீது நான் வைத்திருக்கும் அடர்த்தியான அன்பை என்றுமே வாய்விட்டு சொன்னதில்லை இல்லை சொல்லியிருக்கிறேன் ஆனாலும் அதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்று நினைத்துவிட்டதால் எங்களை விட்டு சீக்கிரம் சென்றுவிட்டாயோ? பக்கத்திலேயே இருப்பவர்களுக்கு என்றுமே நாம் கடிதங்கள் எழுதுவதில்லையே யாஸ்மின். [...]

இரங்கல் செய்தி

நண்பர் ஆசிப் மீரானின் துணைவியார் யாஸ்மீன் பாத்திமா இன்று (01/08/07) புதன் இரவு சென்னையில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் ஜனாஸா 02-08-2007 வியாழன் அன்று நல்லடக்கம் செய்யப்படும்.அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்ய வழி செய்வோம்.அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அவர்களுடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இவண்ரியாஸ் அகமது & குடும்பத்தினர்

By | 2007-08-01T21:02:00+00:00 August 1st, 2007|Personal|61 Comments

சித்திரப்பிரதிமைப் போட்டிக்காக!

'தமிழில் புகைப்படக்கலை நடத்தும் இந்த மாதப் புகைப்படப் போட்டிக்காக:இரண்டு படங்கள் மட்டுமே அனுமதி அதனால் மூன்றாவது படம் பார்வைக்கு மட்டும் போட்டிக்கு அல்ல.படம் 1: தாய்மைக்கு வயதில்லை!படம் 2: அம்மா என்ன தூக்கு...படம் 3: ராணியை ஆட்டி வைக்கும் இளவரசி!

By | 2007-08-01T18:14:00+00:00 August 1st, 2007|நிழற்படம்|6 Comments

வலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில்

துபாய் வலைப்பதிவாளர்கள் சந்திப்பை பற்றி எழுத வேண்டாமென்று நினைத்திருந்தேன். எல்லோரும் இது பற்றி எழுதிவிட்ட போது நான் மட்டும் வித்தியாசமாக என்ன எழுதி கிழிக்கப் போகிறேன்? சொல்லி கொள்ளும்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லைதான். ஆனாலும் பதிவும் அந்த மாலையும் நீண்டுவிட்டது. இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தே போய் இருந்ததால் பெரிய ஏமாற்றம் ஒன்றுமில்லை. ஒரே அலைவரிசையில் உள்ள ஆட்களின் சந்திப்பு சுவாரஸ்யம்தானே? பழகிய நண்பர்களோடு வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட அனுபவம்.என் பார்வையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு:வெட்ட வெளியில் வெக்கையில் [...]

By | 2007-07-29T11:56:00+00:00 July 29th, 2007|பதிவர் வட்டம்|55 Comments

சித்திரம் பேசுதடி

ஆளாளுக்கு விதவிதமாப் போட்டி வைக்கிறாங்க. நாம போட்டி தான் வைக்கிறதில்ல போட்டில கலந்துக்கவாவது செய்யலாம்னு நினைச்சேன். செல்லா புகைப்படப் போட்டில கலந்துக்கலாம்னு பார்த்தா முதல் 30 படம்தான்னு சொல்லிட்டாரு. இந்நேரத்திற்கு அதற்கு மேலேயே வந்திருக்கும்னு விட்டுட்டேன். நம்ம சிந்தாநதி கணிணி ஓவியப் போட்டி அறிவிச்சிருக்காங்க. நல்ல மனுசர் ஜூலை 30 வரைக்கும் கெடு கொடுத்தது மட்டுமல்லாம ஒருவர் அதிக பட்சம் மூன்று படங்கள் அனுப்பலாம்னு சொல்லிட்டார். நல்ல மனுசன்.சரி நம்ம பங்குக்கு என் படங்கள் - நான் [...]

By | 2007-07-28T09:59:00+00:00 July 28th, 2007|நிழற்படம்|18 Comments