வெர்டிகோ – Vertigo

நீங்க நினைக்கிற மாதிரி 1958-ல் வெளிவந்த ஆஸ்கர் விருது பெற்ற ஆல்பிரெட் ஹிச்காக்கின் வெர்டிகோ பற்றியதல்ல. சுழற்சி – ‘வெர்டிகோ’ பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? ‘வெர்டிகோ’ என்றது தலை சுற்றுவதை அறிகுறியாகக் கொண்ட ஒரு சாதாரண பிரச்சனயே தவிர பயங்கர நோயெல்லாமில்ல. தலை சுற்றல் எந்தெந்த காரணத்திற்காக வருதுன்னு கொஞ்சம் யோசிப்போமா? ஒரு பெண்ணுக்கு தல சுத்துன்னா வாந்தி வராப் போல இருக்குன்னா, ‘நல்ல மருத்துவரா பாரு ‘நீ முழுகாம இருக்கன்’னு கேலி செய்வோம். ஒரு சின்ன பையனுக்கு மயக்கமா வருதுன்னா, ‘ரொம்ப ‘அனிமிக்கா’ இருக்க ஒழுங்கா சாப்பிடறதில்ல’ன்னு திட்டுவோம். மெலிஞ்ச ஒருத்தர் கடுமையா உழைச்சுக்கிட்டுருக்கிறப்போ தடுமாறினா ‘பசி மயக்கம் சாப்பிட்டு வந்து தெம்பா வேலய பாரு’ என்போம். அதனால மயக்கத்திற்கு பல வகையான காரணமிருக்கலாம் ஆனா இந்த ‘சுழற்சி’க்கு (வெர்டிகோவிற்கு) ஒரே காரணம்தான் இருக்க முடியும்.

நம்முடை vestibular system ஆட்டம் கண்டுடுச்சுன்னா நாமும் ஆட்டம் கண்டிடுவோம். அதாவது காதின் உட்பகுதியில மூணு அரைவட்ட வளையமா வெட்டு கால்வா மாதிரி ஒருவகை திரவத்தால் சூழ்ந்திருக்குமே அதுக்கு பேருதான் ‘லபிரிந்த்’ (labyrinth). இதுக்குள்ள இரண்டு நுண்ணிய உறுப்பு இருக்கு 1. மகுல்லா 2. கிரிஸ்டா. இதுல மகுல்லா (maculae) தான் நாம நடக்கும் போது தடுமாறாம புவி ஈர்ப்பு சக்திக்கு ஈடுகொடுத்து நம்மள நடக்கச் செய்யுது. குடிகாரங்கள பார்த்தீங்கன்னா ஒழுங்கா நிற்க முடியாம தள்ளாடுவாங்க காரணம் மகுல்லாவுடைய செயல்பாட்டை உணர முடியாம போறதுதான். அதே மாதிரி சினிமால கதாநாயகி மேல பூ தூவும் போது அப்படியே சுத்துவாளே, சில நடனத்திலும் சில காட்சி அப்படி வருமே, அதே மாதிரி வேகமா நீங்களும் சுத்திப் பாருங்க கால் நின்ற பிறகும் அப்படி ‘கிர்’ருன்னு சுத்திக்கிட்டே இருக்கிறா மாதிரி இருக்கும் அந்த மாதிரி நாம வேகமா நடக்கும் போது ஆச்சுன்னா என்ன செய்றது? அப்படி ஆகாம இருக்கத்தான் கிரிஸ்டா (cristae) உதவுது. மீன் தொட்டீல மீன் ஓடுறத பார்த்தீங்கன்னா இங்கேயும் அங்கேயும் வேகமா ஓடும், டக் டக்குன்னு திரும்பும் ஆனா இதுக்கு தல சுத்தாது காரணம் உடம்புலேயே நிறைய கிரிஸ்டா இருக்காம் அதுக்கு. இந்த இரண்டு நுண்ணிய உறுப்பாலான ‘லபிரிந்த்’ நாம தலைய அசைக்கும் போதோ கண் அசைக்கும் போதோ அந்த செய்திய vestibular நரம்பு மூலமா மூளைத்தண்டுக்கு (brainstem) கொடுத்து அப்புறம் சிறு மூளைக்கு (cerebellum) அனுப்புது. இப்படி ஒழுங்காக நடக்காமல் ஒரு காதும் இன்னொரு காதும் ஒரே மாதிரியான வேலயச் செய்யாம இரண்டுக்கும் சண்டைங்குற மாதிரி நடந்துக்கிட்டு சமநிலைய சமாளிக்க முடியாமப் போகும்போதுதான் இந்த சுழற்சி ஆரம்பமாயிடுது.



ஏன் அப்படி திடீருன்னு பிரச்சன வருதுன்னு நீங்க கேட்கலாம். நம்ம குடும்பத்துல யாருக்காவது இருந்தா நமக்கு வரலாம், மன அழுத்தத்தால இருக்கலாம், வேற நோய்க்கு மருத்துவரே கொடுத்த மாத்திரையோட பக்கவிளைவா வரலாம், திடீர் அதிர்ச்சியால நேரலாம், ரத்த அழுத்தம் சீராயில்லாம இருந்தாலும் ஒட்டிக்கலாம். பொதுவா வயசானவங்களுக்கு இந்த பிரச்சனை வருவது தவிர்க்க முடியாது இது அப்படியே கூடி ஞாபக மறதில கொண்டுபோய் விட்டுடும். வயசானவங்களுக்கு வந்தா ரொம்ப கவனமா இருக்கணும், கழிப்பறைக்குத் தனியாவெல்லாம் போனா கொஞ்சம் பார்த்துக்கணும் காரணம் அங்க வழுக்கி விழுந்துட்டா மண்டையில் அடிப்பட்டுட்டா அப்புறம் நேரா ‘கோமா’தான்.

சுழற்சியினால (வெர்டிகோவினால) லேசான தலைவலி, கிறுகிறுப்பு, உடல் சோர்வு எல்லாமும் சேர்ந்து வரும். பூமி அதிர்ச்சி அங்கங்க கேள்விப்படும் போது இந்த சுழற்சி உங்களுக்கு இருந்தா ‘அட பூமி அதிர்ச்சியோ’ன்னு யோசிக்கிற அளவுக்கு தடுமாற்றம் வரும், தல சுத்தும். இப்படி பார்த்துட்டு யாராவது கூப்பிடுவதக் கேட்டு, அப்படி திரும்புன்னா போச்சு அப்படியே தள்ளுற மாதிரி இருக்கும். உலகம் நிஜமாவே சுத்துதுன்னு ஒத்துக்குவோம். யாரோ ஏதோ செய்வினை வச்சிட்டாங்களான்னு சிலர் பயப்படவும் செய்வாங்க அப்படி ஒரு மாயை நிறஞ்சதுதான் இந்த சுழற்சி.

ஆரம்பத்திலேயே இப்படி பிரச்சன இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டா ஸ்டூஜெரான் (Stugeron) அப்படின்னு ஒரு மாத்திர தருவாங்க அதிலயே சரியாப் போயிடும். முதல் வாரத்துல சாப்பிட்டும் சரியாகலன்னா ஒரு சோதனையெடுப்பாங்க ‘ENG’ன்னு (electronystagmography), அப்புறம் தல சுத்துதா இன்னும்னு சோதிப்பாங்க அப்புறம் CDP எடுப்பாங்க (Computerized Dynamic Posturography). தலைக்காக சில பயிற்சியும் தருவாங்க. ஒழுங்கா பிரச்சனைய மருத்துவர் கிட்ட சொல்லணும், ரொம்ப மன அழுத்ததால ஆரம்பமாச்சா, தல சுத்து மட்டும்தானா இல்ல வாந்தி, காதடைப்பு, காதுல ‘கூ’ன்னு கேட்டுக்கிட்டே இருக்கா, இல்ல காது கேட்காத மாதிரி ஒரு உணர்வுன்னு ஏதாவது மத்த விளைவுமிருக்கான்னு. ஆனா அலட்சியமா இந்த பிரச்சனைய விட்டுட்டா தல சுத்து அதிகமாகி எங்கேயாவது விழுந்து மண்டையில் அடிப்பட்டு நெலம இன்னும் மோசமாயிடும். கீழ விழாம தப்பிச்சாலும் இந்த பிரச்சன ரொம்ப முத்திப் போச்சுன்னா பக்கவாதம், ‘டியூமர்’ எல்லாம் வரும்.

ஒரு விமான ஓட்டுனருக்கு இந்த மாதிரி பிரச்சன இருந்தா என்னாகும்னு யோசிச்சு பாருங்க. ஆனா அவங்களுக்கு இந்த பிரச்சன வரவும் அதிக வாய்ப்பிருக்காம். கடல் மட்டத்துக்கு மேல போய்கிட்டு இருக்கிறப்போ வலது பக்கம் திரும்புறா மாதிரி மாயை தெரியும் நேரா போய்க்கிட்டு இருந்தாலும். அப்படி இருந்தா அவருக்கு மட்டும் பிரச்சனையில்ல அந்த விமானத்துல நாம பிராயாணம் செஞ்சுக்கிட்டு இருந்தா நமக்கும்தான். கவலைப்படாதீங்க அவங்களுக்கு பரிபூர்ண மருத்துவ பரிசோதனையெல்லாம் செஞ்ச பிறகுதான் ஓட்ட அனுமதிப்பாங்க. ஆனா நம்ம நல்ல நேரம் அவசரத்திற்கு இப்படி ஒரு பிரச்சனையுள்ளவர் மாட்டுனா அவரோடு சேர்ந்து நாமும் கதிகலங்க வேண்டியதுதான்.

என்ன படிச்சிட்டு தலச்சுத்துதா? அப்ப ஒரு நல்ல மருத்துவரா பாருங்க.

By | 2007-05-08T06:52:00+00:00 May 8th, 2007|அறிவியல்/நுட்பம்|21 Comments

21 Comments

  1. அபிஅப்பா May 8, 2007 at 7:59 am - Reply

    தலைசுத்துதே!

    யோவ் பாஸ்ட், இங்கிட்டு வந்து என்னய கலாய்ச்ச அழுதிடுவேன்:-))

  2. Fast Bowler May 8, 2007 at 8:29 am - Reply

    //யோவ் பாஸ்ட், இங்கிட்டு வந்து என்னய கலாய்ச்ச அழுதிடுவேன்:-)) //

    யோவ்… நீ வேற.. நான் அந்த நிலமையில இல்லய்யா… நானே தலை சுத்தி விழுந்து கிடக்கேன்…

  3. அய்யனார் May 8, 2007 at 8:30 am - Reply

    /குடிகாரங்கள பார்த்தீங்கன்னா ஒழுங்கா நிற்க முடியாம தள்ளாடுவாங்க/

    கிடேசன் பார்க் மெம்பர்ஸ் எப்பவும் இப்படித்தாங்க..ரொம்ப மோசம்

    அபி அப்பா வயசு கேட்டாலும் எனக்கு தல சுத்துதே இதுக்கென்ன காரணம்?

    புதுமை ஜெஸிலா இப்பல்லாம் ஆரோக்ய ஜெஸிலா வா மறிட்டாங்களே என்ன காரணம்?
    🙂

  4. ஜெஸிலா May 8, 2007 at 8:40 am - Reply

    அமீரகத்துல எல்லாத்துக்கும் தலசுத்து பிரச்சன இருக்கா என்ன? அபி அப்பா ஏன் உங்களுக்கு தல சுத்துது உங்க பொண்டாட்டிதானே முழுகாம இருக்காங்க 😉

    ஃபாஸ்ட், வேகமா கதாநாயகி மாதிரி சுத்திப்பார்த்தீங்களா என்ன விழுந்து கிடக்கீங்க? 😉

    //அபி அப்பா வயசு கேட்டாலும் எனக்கு தல சுத்துதே இதுக்கென்ன காரணம்?// திடீர் அதிர்ச்சியிலும் இவ்வகை பிரச்சனை பாதிக்கலாம். 😉

    //புதுமை ஜெஸிலா இப்பல்லாம் ஆரோக்ய ஜெஸிலா வா மறிட்டாங்களே என்ன காரணம்?// இப்பல்லாம்னா அப்ப இதுக்கு முன்னாடி ஆரோக்கியமில்லாம நோயாளியா கிடந்தேன்னு யாரு சொன்னா ? 😉

  5. சுல்தான் May 8, 2007 at 9:18 am - Reply

    சிறப்பான எழுத்துகளை கிறுக்கல்களென கிறுக்குகிறீர்களே?

    இந்த வெர்டிகோ பிரச்னை என் சகோதரருக்கு இருக்கிறது. மருந்து சாப்பிட்டும், காதின் பின்புறம் அறுவை சிகிச்சை செய்த பின்னும் சரியான பாடில்லை. இதற்கு சரியான மருத்துவர் யாரென அறிய இயலுமா?

  6. ஜெஸிலா May 8, 2007 at 9:29 am - Reply

    //இந்த வெர்டிகோ பிரச்னை என் சகோதரருக்கு இருக்கிறது. மருந்து சாப்பிட்டும், காதின் பின்புறம் அறுவை சிகிச்சை செய்த பின்னும் சரியான பாடில்லை. இதற்கு சரியான மருத்துவர் யாரென அறிய இயலுமா?
    // வயதானவரென்றால் குணப்படுத்துவது கொஞ்சம் கடினம்தான். வாலிபர்தானென்றால் பிரச்சனை வருவதற்கான காரணத்தை அறிந்துக் கொள்ள வேண்டும். மன அழுத்ததினால் பிரச்சனை வரலாம் அல்லது இந்த பிரச்சனை வந்துவிட்டதே என்று மன அழுத்தம் வரலாம். அதை சரிப்படுத்தி விட்டாலே சரியாகிவிடும். நல்ல ENT Specialistஐ அனுகவும், Dubai Prime Medical Centerல் நல்ல மருத்துவர்களும் அதற்கான சிறப்பு கருவிகளும் இருக்கின்றன.

  7. சுல்தான் May 8, 2007 at 9:58 am - Reply

    தகவலுக்கு நன்றி ஜெஸிலா

  8. வெர்டிகொ அப்படிங்கறது எல்லாவகை சுழற்சிக்கும் பொது.. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. சில சமயம் காதை சம்பந்தம் இல்லாமலே மூளை சம்பந்தமா, ஏதேனும் ஆடோஇமூன் நோய் இர்ந்தாலோ வரும். சில பேருக்கு காதுக்குள்ள தண்ணீ சேர்ந்து சரியா வெளியே வராவிட்டா வரும். ரொம்ப பயனுள்ள அருமையான கட்டுரை

  9. ஜெஸிலா May 8, 2007 at 10:15 am - Reply

    நன்றி பத்மா.
    //சில சமயம் காதை சம்பந்தம் இல்லாமலே மூளை சம்பந்தமா, ஏதேனும் ஆடோஇமூன் நோய் இர்ந்தாலோ வரும். சில பேருக்கு காதுக்குள்ள தண்ணீ சேர்ந்து சரியா வெளியே வராவிட்டா வரும். // தெரியாத புதிய செய்திகளையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றி.

  10. KVR May 8, 2007 at 12:43 pm - Reply

    என் நண்பனின் வீட்டுக்காரம்மாவுக்கு சமீபத்திலே இந்தப் பிரச்சனை வந்துச்சு. இப்போ கொஞ்சம் சரி ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். காதுல ரொம்ப பட்ஸ் வச்சி நோண்டினாலும் இந்தப் பிரச்சனை வர வாய்ப்பிருக்காமே, அப்படியா?

  11. ஆகக்கூடி எல்லாருக்கும் தலை சுத்தல்:-)

    பிபி இருக்கிறவங்களுக்கும் தலை சுத்தல், சர்க்கரை இருக்கிறவங்களுக்கும் தலை சுத்தல். வெர்டிகோ சினிமா பார்த்தவங்களுக்கும் புதிசா தலை சுத்தல் வந்த மாதிரி இருக்கும்:-0)

    ஒண்ணுத்துக்கும் சர்ஜரி செய்து சரியாப் போன மாதிரி யெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

  12. ஜெஸிலா May 8, 2007 at 12:59 pm - Reply

    //காதுல ரொம்ப பட்ஸ் வச்சி நோண்டினாலும் இந்தப் பிரச்சனை வர வாய்ப்பிருக்காமே, அப்படியா? // கேவிஆர், பட்ஸ் வச்சி நோண்டினால் இந்த பிரச்சனை வராது ஆனால் நோண்டாமல் பலமாக குத்தியிருந்தால் வாய்ப்பிருக்கிறது.

    //ஆகக்கூடி எல்லாருக்கும் தலை சுத்தல்:-) // வாங்க வாங்க அப்ப துபாயுக்கு வர தயாராகிட்டீங்க போலருக்கு.

  13. mayakunar May 8, 2007 at 2:44 pm - Reply

    The common cause of vertigo is a syndrome known as MENIERE’S . It has a triad of symptoms viz i) tinnitus ii) deafness iii) vertigo.
    When a person becoms totally deaf in a ear vertigo disappears. there are good homeopathic medicines available for long lasting cure.

  14. C.M.HANIFF May 9, 2007 at 12:31 pm - Reply

    Arumaiyaana pathivu,enakku talai sutra villai 😉

  15. களத்துமேடு May 12, 2007 at 7:20 am - Reply

    அருமையான பதிவு, நன்றி

  16. ஜெஸிலா May 12, 2007 at 7:45 am - Reply

    நன்றி ஹனீப்பா & களத்துமேடு. மாயா, நீங்கள் எழுதியது சரி. ஆங்கிலத்தில் தெரிந்துக் கொள்ளத்தான் ஆயிரத்தெட்டு வலைத்தளமுள்ளதே அதையே நீங்கள் தமிழில் தந்திருந்தால் இன்னும் திருப்தியாக இருந்திருக்கும். நன்றி.

  17. டிசே தமிழன் May 17, 2007 at 1:42 pm - Reply

    நிறையத் தகவல்களை உள்ளடக்கிய அருமையான பதிவு. நன்றி.

  18. ஜெஸிலா May 17, 2007 at 1:46 pm - Reply

    நன்றி டிசே

  19. கண்மணி May 18, 2007 at 8:32 am - Reply

    ஜெஸி எனக்கும் இது லேச இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு.வெர்டின் மாத்திரை சாப்பிட்டேன்.வெர்டினா?வெர்டிகோ வா?இதுக்கு டாக்டர் எக்ஸர் சைஸ் பண்ணச் சொன்னாரே.
    [அப்புறம் இந்த பாசக்கார குடும்பம் அடிக்கிற லூட்டியாலயும் கிர்ருன்னு சுத்துது]

  20. Anonymous December 18, 2012 at 9:15 am - Reply

    Excellent post. I was checking continuously this blog and I'm impressed! Very helpful info specially the last part 🙂 I care for such info a lot. I was looking for this particular info for a very long time. Thank you and good luck.
    Here is my web page : Here

  21. Jazeela Banu December 18, 2012 at 9:26 am - Reply

    @Anonymous, I checked ur website and surprised to know that you follow a Tamil Blog. Hope that Tinnitus Miracle Review will help many. Thanks for visiting my blog.

Leave A Comment