பெண்கள் தினம்

பூக்கள் தப்பித்துச் சென்றுவிடுமென்று வேலி கட்டுவதில்லை மதில் சுவர்கள் வீட்டிலுள்ளவர்கள் தாண்டிச் செல்வதை முறியடிக்க எழுப்புவதில்லை எம் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு வரையறை வகுப்பது அவர் தம் மீதான நம்பிக்கையின்மையல்ல கேள்விப்படும் சமூக சங்கடங்கள் வீட்டில் நுழையாமல் இருக்கவே கட்டுப்பாடுகள் என் போன்ற தாய்மார்கள் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பீதியிலிருந்து விடு்படும் பாதுகாப்பான நாளே பெண்கள் தினம்

By | 2017-03-08T06:52:42+00:00 March 8th, 2017|கவிதை, பெண்ணியம்|0 Comments

Pink & Parched – இரண்டு படங்களும் சுட்டெரிக்கும் நிஜங்களும்

இரண்டு படங்களுமே இச்சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தைரியமாக முன்னிறுத்துகின்றன. படம் பார்த்த பிறகு மனதில் திரும்பத் திரும்ப எழும் காட்சிகளும், நடைமுறையில் இன்னும் இப்படியான நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே என்ற அவலமும் நம்மைத் தின்று தீர்க்கிறது. ‘பிங்க்’ - நமது சமூகத்தில் நிலவும் ‘கறுப்பு’ எண்ணத்தையும், பெண்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்ட எழுதப்படாத சட்டங்களைப் பற்றியும் பேசும் அற்புதமான படம். இயக்குநர் அனிருத் ராய் சவுத்ரிக்கு இது முதல் ஹிந்திப் படமாம். ஆனால் அவர் இப்படத்திற்காக [...]

மண(ன) முறிவு – Gett: The Trial of Viviane Amsalem

"மனைவியைக் கணவன் அடித்து அல்லது வன்முறைக்கு உள்ளாக்கினானா?" "வன்முறையென்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் உடல் வன்முறை பற்றிக் கேட்கிறீர்கள் என்றால் தீங்கு இல்லை." "மனைவியின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாரா?" "இது விவாதத்திற்குரியது" "என் கேள்வியானது கணவர் பணம், உணவு அளிக்கிறாரா?" "இவள் கடந்த மூன்று வருடங்களாகக் கணவரோடு இல்லை, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தேவையானதை அவரே பார்த்துக் கொள்கிறார்." "கணவர் விபசாரம் அல்லது தான்தோன்றியாக சுற்றித் திரிவது, ஏமாற்று வேலை என்று [...]

அறிவின் ஆரம்ப எழுத்து – அலிஃப்

நான்கு தலைமுறை பெண்களின் இன்னல்களை ஃபாத்திமாவாக வரும் லேனாவின் மூச்சு திணறலோடு ஆரம்பிக்கிறது 'அலீஃப்' திரைப்படம். நம் வாழ்வில் முதலில் மிகவும் மதிக்கப்படவேண்டிய ஒருவர் யாரென்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது "உன் தாய்" என்றார்கள். ஒரு முறையல்ல மூன்று முறை கேட்கப்பட்ட போதும் முதல் மூன்று ஸ்தானங்களும் தாய்க்கே என்றார்கள், நான்காவதாகத் தந்தை என்றார்கள். அப்படியான தாய்மார்களை இஸ்லாத்தின் பெயரில் வதைப்பதைச் சித்தரிக்கும் படம். கண்டிப்பாக இது மூச்சுத் திணறல்தான். நியாயமான கேள்விகளைப் பெண்கள் எழுப்பும் [...]

கற்கால மனிதர்கள்

இவ்வுலகில் கொத்துக்கொத்தான கொலைகளுக்குப் பிரதான காரணம் மதங்கள், பிரிவுகள், சாதிகள் என்று சொல்வதை விட ஒரே வார்த்தையில் 'இறைவன்' என்ற நம்பிக்கை எனலாம். நாம் பார்த்திராத, அறியாத, உணரும் அந்த இறைவனுக்காக மதவெறிகளும் பிரிவினைவாதங்களும் கொலைகளும் தண்டனைகளும் பல்வேறு இடங்களில் தலைவெறித்தாடுகிறது. அதுவும் இதற்கு முதல் பலியாள் பெண்தான். இதில் மட்டும் பாரபட்சமில்லாமல் எல்லா மதங்களும் பெண்களின் அடுக்குமுறைகளை வரைந்த பிறகுதான் அதன் மீது ஒரு மதத்தின் நாமத்தைத் தீட்டுவார்கள் போல. உண்மை சம்பவம், மிகவும் வலி [...]

பெண்கள் போகப் பொருளா?

இந்த விஷயத்தைப் பற்றி பல தடவை எழுதணும்னு நினைச்சு சரி வேண்டாம் திருந்தாத ஜென்மங்கள் சொல்லி என்ன ஆகப் போகுதுன்னே தள்ளிப் போட்டிருக்கேன். நேற்று உள்ளுக்குள் புதைந்து கிடந்த எரிச்சல் கை வரைக்கும் வந்ததாலும், எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதாலும் எழுதியே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு ஒரே மூச்சா கொட்டித் தீர்த்திருக்கேன். நான் ரொம்ப காலமா தொலைக்காட்சியே பார்க்காம இருந்தேன். தொலைக்காட்சியில் எது பார்க்கிறேனோ இல்லையோ சின்ன வயசிலிருந்தே விளம்பரம்னா ரொம்பப் பிடிக்கும். [...]

By | 2007-09-18T07:09:00+00:00 September 18th, 2007|பெண்ணியம்|59 Comments

பெண்கள் விழித்துக் கொள்வார்களா?

ஒரு ஏழப்பட்டப் பொண்ணு எங்க அலுவலகத்திற்கு நேர்முகத்திற்கு வந்திருந்தாங்க. தேவையான படிப்பு, அனுபவம், நல்ல மொழி வளம் எல்லாம் இருந்தது. அவங்க அழைப்புக்காக காத்திருந்தாங்க மேலாளர் அறைக்குப் போய் பொசுக்குன்னு ஒரு நிமிஷத்துல வெளியில வந்திட்டாங்க. வெளியில் வந்தவங்களை என்ன ஆச்சுன்னு கேட்டேன். 'இப்போதைக்கு ஆள் தேவையில்ல தேவைப்படும் போது அழைக்கிறோம்னு சொல்லிட்டாங்க'ன்னு சொன்னாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியவில்லை, ஆள் தேவைப்பட்டதால்தானே நேர்முகத்திற்கே அழைத்தோம். எல்லா தகுதிகளும் பொருந்தி வந்தவர்களை ஒன்றுமே விசாரிக்காமல் கூட அனுப்பிவிட்டதால் எனக்கு [...]

By | 2007-04-30T07:11:00+00:00 April 30th, 2007|பெண்ணியம்|17 Comments

தலையெழுத்தை மாற்ற முடியுமா?

எது எதில்தான் பெண்ணுக்குப் பெருமை என்று ஒரு விவஸ்தையில்லாமல் போச்சு. பெண் என்று நான் குறிப்பிடுவது பொதுப்படையாத்தாங்க அப்புறம் என்னைத்தான் குறிப்பிட்டாய் என்று கிளம்பிடாதீங்க தாய்க்குலங்களே. ஒரு பெண் எப்போதுமே ஒரு ஆணை எல்லாக் காலங்களிலும் சார்ந்தவளாகிறாள். சார்ந்தவளாகிறாளா அல்லது சார்ந்தவளாக்கப்படுகிறாளா என்பது புதிராகவே உள்ளது. இதில் எந்த நாட்டுப் பெண்களும் விதிவிலக்கல்ல. பிறந்தவுடன் தந்தையை, தந்தையில்லாமல் போனால் குடும்பத்தில் உள்ள ஆண்களை அதாவது அண்ணன்- தம்பி / மாமன் -மச்சான் என்று யாராவது, திருமணத்திற்குப் பிறகு [...]

மகளிர் தினம் அவசியமா?

பெண்கள் தினமென்று ஊரெல்லாம் கொண்டாடுறாங்களே அது எப்படி வந்தது தெரியுமா? உழைக்கும் மகளிர் தினமாக இருந்ததுதான் இப்ப வெறும் 'பெண்கள் தினம்' என்ற பெயரில் தொலைக்காட்சியில் அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளும், வானொலியில் பெண்கள் சம்பந்தப்பட்ட பாடல்களுமாகச் சுருங்கி விட்டது.. பெண் சம்பந்தப்பட்ட பாடலென்றால் பெண் ஒரு தாயாக, மனைவியாக, மகளாக, சகோதரியாக இருக்கும் பாடல்களை 'பெண்கள் தின'த்திற்கான சிறப்பு நிகழ்ச்சியாக தருகிறார்கள். அது போதாதென்று பத்திரிகைகளும் 'சிறப்பு மலர்கள்' அனுமதிக்கிறார்கள். இப்படிச் செய்வதால் பெண்கள் தினம் முழுமையடைந்து [...]

By | 2007-03-08T05:25:00+00:00 March 8th, 2007|பெண்ணியம்|14 Comments

திருந்துங்க பெண்களே!

காதலர்கள் தினத்தன்று அலுவலகத்தில் எல்லாப் பெண்களும் சிகப்பு சட்டை அணிந்து வரத் திட்டமிட்டு, என்னையும் அணிந்து வரச் சொன்னார்கள். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் ரவிக்கை போடாத ஊரில் ரவிக்கை போட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்களே அப்படிப் பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில், 'ஒன்றுபட்டால் குறைந்து விடமாட்டோம்' என்று மனசை தேற்றிக் கொண்டு சரியென்றேன். என் சக ஊழியரிடம் "என்னிடம் அழகான சிகப்பு சுரிதார் இருக்கு. ஆனால் இந்த நிறுவனத்தில் சுரிதார் போட்டால் 'மம்னு'வாச்சே (விலக்கப்பட்டது)" என்றேன் வருத்தமாக. "சுரிதார் [...]

By | 2007-02-21T11:28:00+00:00 February 21st, 2007|அக்கறை, பெண்ணியம்|26 Comments