மிளிரும் நட்சத்திரம்

என்னை நட்சத்திரமாக்கி, தினமும் எழுத செய்து ஊக்கமளித்த தமிழ் மணத்திற்கு மிக்க நன்றி.

பின்னூட்டமிட்டு பதிவை உயிர் வாழ வைத்த அனைத்து நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள். பதிவை படித்து விட்டு பின்னூட்டமிட ஒன்றுமில்லை என்று பார்வையிட்டு மட்டும் சென்றவர்களுக்கு எண்ணற்ற நன்றி. அபி அப்பாவுக்கு ‘பிரத்தியேக’ நன்றி, காரணம் சிங்கம், புலி என்று ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அழைத்து வந்து என் பதிவை படிக்க செய்தமைக்கு.

‘உங்கள் கவனத்திற்கு’ பகுதியில் ‘நட்சத்திரப் போட்டி’யை போட்டு ஆதரவு தந்த தேன்கூடுக்கும் மிக்க நன்றி.

என் செல்பேசியில் நானே எடுத்தப் படத்தை வைத்து தந்த போட்டியின் சரியான விடை சென்னையில் உள்ள ‘கூவம் ஆறு’. சரி எழுதி பரிசை தட்டி செல்பவர் ‘ஃபாஸ்ட் பவுளர்’. வாழ்த்துக்கள் பாஸ்ட் உங்களை தனி மடலில் நாளை தொடர்புக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் நன்றிகள். நட்சத்திர வாரம் நிறைவாகிறது.

By | 2007-04-08T18:06:00+00:00 April 8th, 2007|நட்சத்திரம்|12 Comments

12 Comments

  1. அபி அப்பா April 9, 2007 at 7:45 am - Reply

    ஆஹா, நம்ம ஊர் பாஸ்ட் பவுலர்க்குதான் பரிசா? ஹய்யா! மிக்க நன்றி மிக்க நன்றி!!

    நல்ல ஸ்டார் வாரம்! வாழ்த்துக்கள்:-))))

  2. நல்லதொரு நம்பிக்கை நட்சத்திரமாக
    ஜொலித்துவிட்டீர்கள் ஜெஸிலா. வாழ்த்துக்கள்.

  3. சேதுக்கரசி April 9, 2007 at 7:47 am - Reply

    சென்ற மாதம் வெளியூர் சென்றது முதல் நேரமின்மையாலும் அன்புடன் கவிதைப் போட்டி வேலையாக இருந்ததாலும் தமிழ்மண நட்சத்திரத்தை விட்டுவிட்டோமே என்று இன்று தான் கவனித்தேன் 🙁 தாமதமான வாழ்த்துக்கள்.

  4. gulf-tamilan April 9, 2007 at 7:47 am - Reply

    விடை சென்னையில் உள்ள ‘கூவம் ஆறு !!!
    :))!!

  5. Fast Bowler April 9, 2007 at 7:47 am - Reply

    //என் செல்பேசியில் நானே எடுத்தப் படத்தை வைத்து தந்த போட்டியின் சரியான விடை சென்னையில் உள்ள ‘கூவம் ஆறு’. சரி எழுதி பரிசை தட்டி செல்பவர் ‘ஃபாஸ்ட் பவுளர்’. வாழ்த்துக்கள் பாஸ்ட் உங்களை தனி மடலில் நாளை தொடர்புக் கொள்கிறேன்.
    //

    ஆகா! மெய்யாலுமா? மிக்க நன்றி.

  6. ஜெஸிலா April 9, 2007 at 7:58 am - Reply

    நன்றி வல்லி, சேது, அபி அப்பா.

    என்ன வளைகுடா தமிழன் நம்ப முடியவில்லையா? நம்ம சென்னைவாசிகளுக்கே தெரியவில்லை பாருங்க.

    ஆமா ஃபாஸ்ட், எப்படி கண்டுபிடிச்சீங்க? வெறும் யூகமா அல்லது ஆராய்ச்சியா? 😉

  7. அய்யனார் April 9, 2007 at 8:36 am - Reply

    ஜெஸிலா

    வாழ்த்துக்கள்.

  8. Fast Bowler April 9, 2007 at 8:56 am - Reply

    //ஆமா ஃபாஸ்ட், எப்படி கண்டுபிடிச்சீங்க? வெறும் யூகமா அல்லது ஆராய்ச்சியா? 😉
    //

    எல்லாம் ஒரு ஆராய்ச்சி தான்.
    # இணைக்கப்பட்டிருந்த படங்களின் File name ‘aaru.jpg’ . எனவே இது ஒரு ஆற்றின் படமாகவே இருக்க வேண்டும்.

    # அமீரகத்தில் உள்ள படத்தை நிச்சயம் இங்கு பொதுவில் போட்டிக்கு வைக்க மாட்டீர்கள். காரணம் பங்கெடுப்பவர்கள் குறைவார்கள். எனவே எல்லாருக்கும் பெரும்பாலும் தெரிந்த இடமாகவே போட்டி நடத்துபவர் விரும்புவார்.

    # ஆக, பெரும்பாலும் தமிழர்கள் தெரிந்திருக்கும் ஊர் நம்ம சென்னை.

    # மேலும், இத்தனை அழகான ஆறு வேறேது?

  9. ஜெஸிலா April 9, 2007 at 8:59 am - Reply

    நன்றி அய்யனார்.

    ஃபாஸ்ட், நல்லதொரு ஆராய்ச்சி. 😉

    ஆறு என்று போட்டியிலேயே குறிப்பிடிருந்தேனே? //# மேலும், இத்தனை அழகான ஆறு வேறேது? // 😉

    ‘ப்ளு கிராஸுக்கு ஒரு கேள்வி’ பதிவில் படங்கள் தெரிகிறதா? தெரியவில்லை என்றால் – ஏன் தெரியவில்லை. கொஞ்சம் யாராவது பார்த்து சொல்லுங்களேன். பதியும் போது படங்கள் இருந்தது. இப்போ பார்த்தா காணோம் ;-(

  10. Fast Bowler April 9, 2007 at 10:27 am - Reply

    //’ப்ளு கிராஸுக்கு ஒரு கேள்வி’ பதிவில் படங்கள் தெரிகிறதா? தெரியவில்லை என்றால் – ஏன் தெரியவில்லை. கொஞ்சம் யாராவது பார்த்து சொல்லுங்களேன். பதியும் போது படங்கள் இருந்தது. இப்போ பார்த்தா காணோம் ;-(
    //
    படங்கள் இப்போதும் தெரியவில்லை. ஒருவேளை ப்ளூ க்ராஸ் ஆட்கள் ‘hack’ பண்ணிட்டாங்க போல.

  11. C.M.HANIFF April 11, 2007 at 5:33 am - Reply

    Congrats, neengallum oru super star taan 😉

  12. G Gowtham April 13, 2007 at 10:35 am - Reply

    வணக்கம், வாழ்த்துக்கள்!

Leave A Comment