கல்லூரி – நிழலும் நிஜமும்

சமீபத்துல வந்த படங்களில் சில படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு பலர் சொல்லி கேட்கும் போது பார்த்தே தீர வேணும்னு ஆச வருது. எங்க ஊருல பெரிய பிரபலங்கள் நடிச்சாத்தான் படமே திரைக்கு வருது. இந்த வாரம் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ வரும்னு எதிர்பார்த்து ஏமார்ந்தோம். ‘எவனோ ஒருவன்’, ‘கல்லூரி’ன்னு சில நல்ல படங்கள் திரைக்கு வரும் வரை காத்திருக்க முடியாம குறுந்தகடுக்கு வேட்டையாடி ‘கல்லூரி’ கிடைச்சுது.


‘கல்லூரி’ படத்துல யாரு நடிச்சிருக்காங்கன்னு கேட்டுறாதீங்க சத்தியமா எனக்கு தெரியாது (தமானா, கதின்னு படிச்சி நினனவு). ஒரு முகம் கூட தெரிஞ்ச முகம் கிடையாது. இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு அசாத்திய தைரியம்தான் சொல்லலாம். அதுவும் பார்க்குறா மாதிரியான ‘பாய்ஸ்’ படத்துல வர மாதிரியான அழகழகான மூஞ்சிங்கக்கூட கிடையாது ஆனா யார் நடிப்புக்கும் பஞ்சமே இல்ல. கதாநாயகன் கதாநாயகி மட்டுமல்ல எல்லா கதாபாத்திரங்களும் நம்ம நட்பு வட்டத்துக்குள்ள வந்த உணர்வை ஏற்படுத்திடுறாங்க. படத்தை பார்க்கும் போது ‘ஞாபகம் வருதே’ன்னு பாட தோணுது. கதாநாயகன் பாவம் கொஞ்சம் நடிக்க சிரமப்பட்டிருப்பார் போல தெரியுது. இயக்குனருக்கு பெண்ட் கழண்டிருக்கும். கயல் கதாபாத்திரம் தான் கதாநாயகியவிட மனசுல நிற்கிறாப்புல இருக்கு. ரொம்ப யதார்த்தமான காட்சியமைப்புகள் இருந்தாலும் நிறைய தேவையில்லாத சொருகுதலும், கூடவே சில ஓட்டைகளும். ஏதோ நிறைய சொல்லவந்ததை அப்படியே விட்டுட்டா மாதிரி இருக்கு படம். ஒவ்வொரும் மாணவருடைய நிலைப்பாடையும் ஆழமா காட்டாம லேசா கொண்டு போயிருக்காங்க. ஒரு மாணவி சலீமாவின் அப்பாவுக்கு நெஞ்சுவலின்னு சொன்னதும் மொத்த மாணவர்களும் தம் தகப்பனுக்கு நேர்ந்தது போல முகத்தை வைச்சுக்கிறவங்க, அதே அப்பா இறந்த காட்சிய கனமில்லாம காட்டியிருக்காங்க. அப்பா இறந்தாலும் பரீட்சை எழுத போகிறாள் சரி, அந்த மனநிலையில் பரீட்சை எழுதுவதை சர்வசாதாரண விஷயமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கு, அதக்கூட விட்டுடலாம் ஆனா அந்த காட்சிக்கு அடுத்த காட்சியே பரீட்சை அறையிலிருந்து வெளியில் வந்த பிறகு கதாநாயகிக்கு வந்த வாழ்த்து அட்டையை பார்த்து சிரிப்பது போல காட்சியமைப்பு. அப்பா இறந்தது மறுநாளே சொந்த மகள் உட்பட அடுத்த நாளே கல்லூரியில் சிரித்துக் கொண்டிருப்பது ஏதோ நாடகம் போல ஒட்டாம இருக்கு. மெல்லிய நகைச்சுவைக்கு குறைவே இல்லை. ‘டாடி’ன்னு ஒவ்வொருத்தர் வீட்டிலையும் அழைப்பதா நினைத்து பார்க்கும் காட்சி அருமை. நகைச்சுவைக்காக இரண்டு மாணவர்கள் தோன்றும் போதெல்லாம் சிரிப்பு தன்னால வந்திடுது. மத்தப்படங்கள் மாதிரி ‘டூயட்’ கண்றாவியெல்லாமில்ல இசை ஜோஷ்வா ஸ்ரீதர்தான் இந்த படத்துல. பின்னணியோசையில் சில பாடல்கள், காதல் காட்சிகளில் பழகிய இளையராஜாவின் ஒலி கீதங்கள். அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் வரும் ‘உன் பார்வையில் ஓராயிரம்’ நல்லவேளையாக ‘ரீமிக்ஸ்’ சமாச்சாரமெல்லாமில்லாமல் தப்பித்து அப்படியே ஒலிப்பது நேர்த்தியா இருக்கு. கல்லூரியை பின்னணியா வைச்சு நிறைய படங்கள் வந்திருக்கு ஆனா அதையெல்லாம்விட்டு தனித்துக் காட்டவோ அல்லது பாலாஜி சக்திவேலென்றாலே ஒரு உண்மை சம்பவம் படத்தில் ஒளிந்து கிடக்கும் என்று பெயர் வாங்கவோ அந்த கடைசிக் காட்சி தர்மபுரி தீ விபத்து அமைந்திருப்பதாக எனக்கு தோன்றியது. சர்ச்சைக்குரிய படமாக்கினாலும், அரசியல் வாசனையிருந்தாலும் படத்தை ஓட்டிவிடலாம் என்பதற்கான யுக்தியாயென தெரியவில்லை ஆனா ஏதோ அவசரகதியா மனசை சஞ்சலப்படுத்தாமல் ‘டபக்கென்று’ முடிந்து விடுகிறது கடைசிக் காட்சி. அழுத்தமாக பதிய வேண்டிய படம், இன்னும் நல்ல வந்திருக்க வேண்டிய படம் என்றெல்லாம் இங்க உட்கார்ந்துக் கொண்டு எழுதுவது சுலபம்தான் ஆனா படம் எடுப்பவர்களுக்குத்தானே தெரியும் கஷ்டம். அதனால விட்டுடலாம். மொத்ததுல நல்ல படம்ப்பா பார்க்காம விட்டுடாதீங்க.

அப்புறம், கல்லூரின்னாலே கலகலப்புன்னு படங்களை காட்டி காட்டியே பசங்களை உசுப்பேத்தி விடுறாங்க ஆனா இன்னும் நிறைய கல்லூரி பள்ளிக்கூடத்தை விட மோசமாத்தான்ப்பா நடத்துறாங்க. இங்க துபாயில் 19ம் தேதி ஈத் (தியாகத் திருநாள்) – இங்க ஒரு பெருநாள் வாழ்த்தை சொல்லிக்கிறேன் எல்லாத்துக்கும், சென்னையில 21ந் தேதித்தான் ஈத். அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் ஒன்றரை மணி நேரம்தான் வித்தியாசம் ஆனா என்ன மாயமோ தெரியல பண்டிகைகள் மட்டும் இரண்டு நாள் வித்தியாசத்துல வருது. வார விடுமுறைய கணக்கிட்டு வருதோ என்னவோ. மழைக் காரணம பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறைன்னு அரசு அறிவிச்சாலும் எம்.ஓ.பி. வைஷ்னவா மகளிர் கல்லூரி (MOP Vaishnava College for Women -Autonomous) மட்டும் அடம்பிடிச்சி கல்லூரிய திறந்து வைக்கிற மர்மம்தான் என்னவோ? அதுவாவது பரவால ஈத் பெருநாளுக்கு அரசு விடுமுறை ஆனா அன்றைக்குதான் பரீட்சை வைப்பேன்னு அடம்பிடிச்சு விடுமுறை தராம பரீட்சை வேற. பாவம் பிள்ளைகளின் கோரிக்கையெல்லாம் நிராகரிச்சிட்டு அப்புறம் போனாப் போகுதுன்னு முஸ்லிம் பிள்ளைகளுக்கு மட்டும் ஈத்துக்கு விடுமுற, அன்றைக்குள்ள பரீட்சைய ஜனவரி 2ந் தேதி தனியா எழுதிக்கிடுங்கன்னு சொல்லிட்டாங்களாம். என்ன கிறுக்குத்தனம் இது? நானும் கேட்டு வைச்சேன் “எல்லாரும் சேர்ந்து அரசு விடுமுறை அதனால பரீச்டைக்கு வராம ‘பங்க்’ அடிப்போம்ன்னு சொன்னா என்ன”ன்னு. “அடிச்சா எங்க மதிப்பெண்கள்தானே போகும்”னு பாவம் புலம்புறாங்க பசங்க. “சிறுபான்மையினர்னாலே எளக்காரம்தான்”னு நான் சொல்ல “ம்ஹும் முஸ்லிம்கள்னா மட்டும்தான், ஏன்னா கிருஸ்துமஸ்ஸுக்கு விடுமுறைதானே”ன்னு சொல்றாங்க. “அப்ப இது எளக்காரமில்ல ஏதோ வெறுப்பு, பகைமை”ன்னு நான் சிரிச்சேன். அதுக்கு “பார்ப்பனீயம்”னு முணுமுணுப்பு. ‘இதுல பார்ப்பனத்தனம் ஒளிஞ்சுக்கிட்டிருக்கிறதா இல்ல சில பார்ப்பனத்தலைகள் ஒளிஞ்சிருக்கிறதான்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஜாலியா இருக்கிற பசங்க வயித்தெறிச்சலையெல்லாம் கொட்டிக்கிறது நல்லதுக்கில்ல.

By | 2007-12-23T05:16:00+00:00 December 23rd, 2007|அக்கறை, திரைவிமர்சனம்|17 Comments

17 Comments

  1. அரசாங்கத் துறையான சுங்கத்துறை கூட வேலை செய்தது இந்த வருடம்.

    தீபாவளி அன்று எந்த ஒரு பள்ளிக்கூடமோ அல்லது அரசுத் துறைகளோ வேலை செய்து நான் பார்த்ததில்லை.

    இது வெறுப்பு / பகைமை இல்லாமல் வேறென்ன.

    இன்னமும் கல்லூரி பார்க்கவில்லை. ஜமாலனின் விமர்சனம் பார்த்தீர்களா – சில முக்கியமான புள்ளிகளைத் தொட்டிருக்கிறார்.

  2. குசும்பன் December 23, 2007 at 7:28 am - Reply

    ///’ஒன்பது ரூபாய் நோட்டு’ வரும்னு எதிர்பார்த்து ஏமார்ந்தோம்.///

    வரபோகிறது கலேரியாவில்! வந்ததும் சொல்கிறேன்.

    திருட்டு சீடிதான் கிடைப்பதால் இன்னும் படம் பார்க்கவில்லை சில நாட்கள் முன்பு யூ டுயுபில் ஒரு சில காட்சிகளை பார்த்தபொழுது ரொம்ப இழுவையாக தெரிந்தது.

    நண்பன் ஒருவன் பார்த்துவிட்டு முடிவு சரி இல்லை கேனதனமாக இருக்கு என்றான்.

  3. koothanalluran December 23, 2007 at 8:13 am - Reply

    //இங்க துபாயில் 19ம் தேதி ஈத் (தியாகத் திருநாள்) – இங்க ஒரு பெருநாள் வாழ்த்தை சொல்லிக்கிறேன் எல்லாத்துக்கும், சென்னையில 21ந் தேதித்தான் ஈத். அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் ஒன்றரை மணி நேரம்தான் வித்தியாசம் ஆனா என்ன மாயமோ தெரியல பண்டிகைகள் மட்டும் இரண்டு நாள் வித்தியாசத்துல வருது.//

    யக்கோவ் தவ்ஹீத் ஜமாத்தில் எப்போ உறுப்பினர் அட்டை வாங்கினீஹ ?

  4. Benu December 23, 2007 at 8:14 am - Reply

    Hi jazeela,
    nalla vimarsanam. naanum indha cinemala kaamikira maadhiri college-na kalakalappunu ninachu madrasla irukkum MOPla sernthaen. college-na kalakalappu illa kalutharappu-nu theliva puriya vechitaanga.

    kottra mazhailayum college vachu athumattumilla naanga college-ku call pannaa calls ethaiyum attend pannama, ella ma’mum mobiles-a switch off pannivachu, naanga college irukka illayanu theriyuma, padikkalama venamanu puriyama thindadinathu romba kashtama irundhadhu.

    Govt schools mela mattum thaan action edukuma. college pasanga mattum entha vidhathil koranjittanga. athuvum eid andru 2 exam ore naalil theriyuma…

    Enna koduma sir ithu????

  5. TBCD December 23, 2007 at 10:39 am - Reply

    இதை உங்களிடம் எதிர்ப்பார்க்கவில்லை. 🙁

    //பார்க்குறா மாதிரியான ‘பாய்ஸ்’ படத்துல வர மாதிரியான அழகழகான மூஞ்சிங்கக்கூட கிடையாது//

  6. கோபிநாத் December 23, 2007 at 10:39 am - Reply

    கல்லூரி இன்னும் பார்க்கல….”‘எவனோ ஒருவன்'” பாருங்கள்..;))

    ஆமா என்ன ஒரே சினிமா பதிவா போட்டு தாக்குறிங்க!? 😉

  7. ஜமாலன் December 23, 2007 at 10:40 am - Reply

    கல்லூரி பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். ஆனால் உங்கள் கருத்துக்களில் சில முக்கிய தொழில்நுட்ப ஓட்டைகளை சுட்டியுள்ளீர்கள்.

    ஈத் விடுமுறை குறித்த கருத்து புதிதாக உள்ளது. தொலைக்காட்சிகள்கூட ஒரு ஈத் வாழ்த்தோ சிறப்பு நிகழ்ச்சியோ செய்வதில்லை என்றும் தமிழக ஈத் அன்று பகுத்தறிவு பகலவன் கலைஞர் தொ.க. திருவருள் என்கிற பக்தி படத்தை போட்டதும் ரஜனி பிறந்தநாளை கோலகலமாக நிகழ்ச்சிகளை நீக்கிவிட்டு 2 மணி நேரங்களாக கொண்டாடி ரஜனியை வருடிவிட்டதும் என்ன அரசியல் என்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

  8. Anonymous December 23, 2007 at 10:41 am - Reply

    yes pa we r not getting any proper response from college. its very bad keepin 2 exams in same day. athuvum subject konjam easy irrunda paravaellai 2 subjectsum romba kashtama irundichu.Athenna ellathukum schoolsku mattum leave vedrathu, college pasanga enna summa va.

    enna nan solrathu

  9. Anonymous December 23, 2007 at 10:41 am - Reply

    yes pa we are not getting response from our college.Keeping two exams in one day is very bad, if is easy its ok we can prepare both the sublects are very hard. enna college oru one day trip kuda arrange panna mudiyale, nangla bunk panitu ponnathan irruku. yeravadu kottra mazhaila vara solli exam illanu solluvangala? kirukutahnama irruku. athu phone panam pode sollamatangala?

    Rmoba kodumeya irruku.

  10. குட்டிபிசாசு December 23, 2007 at 10:53 am - Reply

    //அழுத்தமாக பதிய வேண்டிய படம், இன்னும் நல்ல வந்திருக்க வேண்டிய படம் என்றெல்லாம் இங்க உட்கார்ந்துக் கொண்டு எழுதுவது சுலபம்தான் ஆனா படம் எடுப்பவர்களுக்குத்தானே தெரியும் கஷ்டம். அதனால விட்டுடலாம். மொத்ததுல நல்ல படம்ப்பா பார்க்காம விட்டுடாதீங்க.//

    நல்ல விமர்சனம்!!

  11. ஜெஸிலா December 23, 2007 at 12:01 pm - Reply

    நன்றி சுந்தர். ஜமாலனின் பக்கத்திற்கு சென்றேன் பதிவு பெரிதாக இருந்ததால் ஆற வைத்துதான் படிக்க வேண்டும்.

    ம்ம் அந்த வீனாப்போன பில்லாத்தான் இன்னும் ‘full’ஆ ஓடிக்கிட்டு இருக்கு. அடுத்த வாரம் 9பது ரூபாய் வருமாம். குசும்பரே ந்ம்ம மக்களுக்கு சுபமான முடிவு இருந்தாத்தான் பிடிக்கும் அதனால் அவர் பேச்சையெல்லாம் கேட்காமல் நீங்க படத்தை பாருங்க.

    தவ்ஹீத்ல வாங்கினாத்தான் அப்படி எழுதணுமா என்ன? சாபு அத்தா பெருநாள் வாழ்த்து வீட்டுல எல்லாத்துக்கும் சொல்லிடுங்க.

    கொடுமைதான் பெனு. என்ன செய்வது பல்லைக் கடிச்சுக்கிட்டு படிச்சு முடியுங்க. உங்க பெயரை போட்டு எழுதுறதால் கல்லூரியில உங்களுக்கு பிரச்சனை ஏதும் வராமலிருந்தால் சரி.

    எல்லா ஊடகங்களுமே அரசியல் சம்பந்தப்பட்டதாப் போச்சு என்னத்த சொல்றது. ஜமாலன், இந்த வலைப்பூவாவது அப்படியாகாமல் யாருக்கும் முதுகு சொறியாமல் இருந்தால் சரிதான்.

    டிபிசிபி, தவறா எடுத்துக்காதீங்க, அழகு முக்கியமில்ல படத்துக்கு நல்ல நடிப்பு முக்கியம் என்பதை நிரூபிச்சிருக்காங்க அதை தூக்கிக்காட்டத்தான் அப்படியொரு வாக்கியமைப்புங்க. மத்தப்படி முகத்திற்காக படத்தை பார்க்கிறவளா நான் இருந்தா ஏன் தேடிப்பிடித்து படத்தை பார்க்கணும் சொல்லுங்க.

    ஆமா கோபி, சினிமா பதிவு போடணும்னு போடலை ஏதோ தானா வருது. 🙂 எவனோ ஒருவன் பார்த்திட்டு அடுத்ததா போடுறேன்.

    நீங்க சொல்றது சரிதான் அனானி, 2 பரீட்சையா. அய்யோ பாவம். இதெல்லாம் அடாவடித்தனம் தவிர வேறில்லை.

    இதை தான் கல்லூரி கொடுமைன்னு சொல்றாங்களோ அனானி. சரி ஏதோ நம்மளால முடிஞ்சது எழுதியிருக்கேன். இதை படிமம் எடுத்து உங்க நோட்டீஸ் போர்ட்ல ஒட்டுங்க திருந்திறாங்களான்னு பார்ப்போம்.

    நன்றி குட்டிபிசாசு.

  12. Veerasundar December 24, 2007 at 6:29 am - Reply

    உங்க பதிவ படிச்சிட்டு கல்லூரி படம் பார்த்தேன். நல்ல படம். அந்த நண்பர்களோட நட்பு படத்த காப்பாத்திடுது .

  13. Anonymous December 24, 2007 at 8:30 am - Reply

    hi jaseela,
    even i’m a student of MOP. forget abt govt holidays atleast v can adjust. bt i want to tel an important worst thing our coll did last year.

    everybody outside thinks tht our coll is gr8 and it has campus placements n all. bt the rule for the placement is tht every student who are selected in placements must give their first month salary to the coll tht too b4 receiving the salary. if they don giv the offer letters frm the company wont b given to that student.

    idhu kodumailayum kodumaila…

  14. ஜெஸிலா December 24, 2007 at 8:58 am - Reply

    சரியா சொன்னீங்க வீரசுந்தர். உங்க பெயர் ரொம்ப கம்பீரமா இருக்கு 🙂

    வணக்கம் அனானி, உங்க பின்னூட்டம் எவ்வளவு உண்மையென்று தெரியவில்லை ஆனால் ரொம்பவே அதிர்ச்சியாக உள்ளது. இதை ஒரு பதிவாகவே போடுகிறேன். கண்டிப்பாக வெளிச்சத்திற்கு வர வேண்டிய விஷயம்.

  15. Anonymous December 24, 2007 at 11:22 am - Reply

    Hello jazeela,
    someone from my college has written about that campus placement. i appreciate her guts and that rule is true. so u dont have to worry about its authenticity. But she forgot to include an idiotic incident that happend last year.

    A student from our college was selected from the company google. The college asked her to pay Rs.20000 (i.e) half the amount of her gross salary. She was from a middle class family and so she didnt have that amount at hand. So her father said he’ll pay when she receives her first salary. The management insulted her father and asked him to get out of the office and the pathetic thing is that the girl was barred from writing her end semester exam.

    How cheap it is????

  16. C.M.HANIFF December 24, 2007 at 12:16 pm - Reply

    Padam naan paarthen, nalla padam, ungal vimarsanam correct 🙂

  17. அன்பின் ஜெஸிலா,
    ஹஜ் பெருநாள் தினம் வித்தியாசப்படுவதற்கு நேரவித்தியாசமும்,பிறை தென்பட்ட கணக்குமே காரணமாகின்றன.இது தனிப்பட்ட முடிவல்ல.அத்தோடு அத் தினத்தில் கொண்டாடப்பட்டது இந்தியாவில் மட்டுமல்ல.
    விரிவாகத் தந்திருக்கிறேன்.தமிழ்ப்படுத்த நேரம் அமையவில்லை.மன்னிக்கவும் ஜெஸிலா.

    OFFICIAL Day of Eid-al-Adha in Different Countries http://www.moonsigh ting.com/ 1428zhj.html

    The Astronomical New Moon is on Sunday December 9, 2007 at 17:40 Universal Time (i.e., 12:40 pm EST, and 9:40 am PST ). This crescent moon is impossible to be seen anywhere in the world on Sunday, December 9. On Monday, December 10, 2007, it is sightable in Australia, Part of Africa, and Americas (e.g., in San Diego, CA at sunset, the age is 31 hours, and moon is setting 44 minutes after sunset). Accordingly, 10th of Dhul-Hijjah (Eidul-Adha) in North America is expected to be on Thursday, December 20, 2007, Insha-Allah.

    December 19, 2007 (Wednesday):

    Australia (Arab Community)
    Albania (Follow Saudi Arabia)
    Bahrain (Follow Saudi Arabia)
    Denmark (Follow Saudi Arabia)
    Egypt (Follow Saudi Arabia)
    Kosovo (Follow Saudi Arabia)
    Kuwait (Follow Saudi Arabia)
    Libya (Follow Saudi Arabia)
    Luxembourg
    Qatar (Follow Saudi Arabia)
    Saudi Arabia (Claim of sighting)
    UAE (Follow Saudi Arabia)
    UK (also on Dec 20)
    USA and Canada (Arab Community, and Islamic Society of North America)

    December 20, 2007 (Thursday):

    Australia (Turkish Community)
    Barbados
    Belgium
    Canada (Toronto Hilal Committee)
    Guyana
    Indonesia
    Malaysia
    Mauritius
    Singapore
    South Africa
    Tanzania
    Trinidad & Tobago
    Turkey
    UK (also on Dec 19)
    USA (also on Dec 19, and Dec 20)

    December 21, 2007 (Friday):

    Australia (also on Dec 19, and 20)
    Bangladesh
    Fiji Islannds
    India
    Iran
    Morocco
    Pakistan
    Senegal
    USA (Islamic Circle of North America & Chicago Hilal Committee)

Leave A Comment