யாஸ்மினுக்கு ஒரு கடிதம்

நீ இருக்கும் போதுக்கூட உனக்காக இப்படி ஒரு கடிதம் எழுத என்றுமே தோன்றியதில்லை எனக்கு. எல்லாமே 'ஃபார்வர்ட்' மடலாகத்தானே அனுப்பிவைத்தேன்?! ஆனால் அந்த மடல்களை அனுப்பும் போது உன்னை நான் நினைத்துக் கொள்கிறேன் என்பதை உணர்ந்தாயா? உன் மீது நான் வைத்திருக்கும் அடர்த்தியான அன்பை என்றுமே வாய்விட்டு சொன்னதில்லை இல்லை சொல்லியிருக்கிறேன் ஆனாலும் அதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்று நினைத்துவிட்டதால் எங்களை விட்டு சீக்கிரம் சென்றுவிட்டாயோ? பக்கத்திலேயே இருப்பவர்களுக்கு என்றுமே நாம் கடிதங்கள் எழுதுவதில்லையே யாஸ்மின். [...]

இரங்கல் செய்தி

நண்பர் ஆசிப் மீரானின் துணைவியார் யாஸ்மீன் பாத்திமா இன்று (01/08/07) புதன் இரவு சென்னையில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் ஜனாஸா 02-08-2007 வியாழன் அன்று நல்லடக்கம் செய்யப்படும்.அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்ய வழி செய்வோம்.அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அவர்களுடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இவண்ரியாஸ் அகமது & குடும்பத்தினர்

By | 2007-08-01T21:02:00+00:00 August 1st, 2007|Personal|61 Comments

சித்திரப்பிரதிமைப் போட்டிக்காக!

'தமிழில் புகைப்படக்கலை நடத்தும் இந்த மாதப் புகைப்படப் போட்டிக்காக:இரண்டு படங்கள் மட்டுமே அனுமதி அதனால் மூன்றாவது படம் பார்வைக்கு மட்டும் போட்டிக்கு அல்ல.படம் 1: தாய்மைக்கு வயதில்லை!படம் 2: அம்மா என்ன தூக்கு...படம் 3: ராணியை ஆட்டி வைக்கும் இளவரசி!

By | 2007-08-01T18:14:00+00:00 August 1st, 2007|நிழற்படம்|6 Comments

வலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில்

துபாய் வலைப்பதிவாளர்கள் சந்திப்பை பற்றி எழுத வேண்டாமென்று நினைத்திருந்தேன். எல்லோரும் இது பற்றி எழுதிவிட்ட போது நான் மட்டும் வித்தியாசமாக என்ன எழுதி கிழிக்கப் போகிறேன்? சொல்லி கொள்ளும்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லைதான். ஆனாலும் பதிவும் அந்த மாலையும் நீண்டுவிட்டது. இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தே போய் இருந்ததால் பெரிய ஏமாற்றம் ஒன்றுமில்லை. ஒரே அலைவரிசையில் உள்ள ஆட்களின் சந்திப்பு சுவாரஸ்யம்தானே? பழகிய நண்பர்களோடு வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட அனுபவம்.என் பார்வையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு:வெட்ட வெளியில் வெக்கையில் [...]

By | 2007-07-29T11:56:00+00:00 July 29th, 2007|பதிவர் வட்டம்|55 Comments

சித்திரம் பேசுதடி

ஆளாளுக்கு விதவிதமாப் போட்டி வைக்கிறாங்க. நாம போட்டி தான் வைக்கிறதில்ல போட்டில கலந்துக்கவாவது செய்யலாம்னு நினைச்சேன். செல்லா புகைப்படப் போட்டில கலந்துக்கலாம்னு பார்த்தா முதல் 30 படம்தான்னு சொல்லிட்டாரு. இந்நேரத்திற்கு அதற்கு மேலேயே வந்திருக்கும்னு விட்டுட்டேன். நம்ம சிந்தாநதி கணிணி ஓவியப் போட்டி அறிவிச்சிருக்காங்க. நல்ல மனுசர் ஜூலை 30 வரைக்கும் கெடு கொடுத்தது மட்டுமல்லாம ஒருவர் அதிக பட்சம் மூன்று படங்கள் அனுப்பலாம்னு சொல்லிட்டார். நல்ல மனுசன்.சரி நம்ம பங்குக்கு என் படங்கள் - நான் [...]

By | 2007-07-28T09:59:00+00:00 July 28th, 2007|நிழற்படம்|18 Comments

பழக வருகிறார் உங்களுடன்

எல்லா மனிதர்களுக்குமே தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு தருபவர்களை பிடிக்கும். இதில் ஆண்- பெண் என்ற விதிவிலக்கெல்லாமில்லை. காதலிக்கும் போது காதலன் சொல்வதை அப்படியே காதலி கேட்டுவிட்டால் 'அடடா, இவ மனைவியாய் வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் மிதப்பர்கள். அதே போல காதலியும் தன் பேச்சை காதலன் கேட்டுவிட்டால் 'நான் போடுற கோடுக்குள்ள கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள, நான் கைக்கட்டி வாய்ப்பொத்தி நில்லுன்னா நிற்கணும் டோய்..'ன்னு பாட தொடங்கிவிடுவார்கள். கல்யாணத்திற்கு பிறகுதான் வண்டவாளம் தண்டவாளம் [...]

By | 2007-07-26T07:40:00+00:00 July 26th, 2007|பொதுவானவை|10 Comments

வலைப்பதிவாளர்கள் தயாரா?

அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும் முன்பு தமிழ்மணம் மேயும் வழக்கம். அப்படி உலாவி விட்டு வீட்டுக்குப் போகும் போது ஏதோ தோழிகளுடன் சிரித்து மகிழ்ந்துவிட்டு வீடு திரும்பும் உணர்வு மிஞ்சும். அப்படித்தான் நேற்றும் போகும் போது மிதக்கும் வெளி எழுதிய 'ஒரு பெண்ணைக் கொலை செய்தோமையும்' பத்ரி ஷேஷாத்ரி இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்களும்' படித்தேன். மிதக்கும் வெளியின் அந்த பதிவை படிக்கும் போது எனக்கு சுபா சுந்தரத்தின் [...]

By | 2007-07-18T11:16:00+00:00 July 18th, 2007|அக்கறை|44 Comments

சுகுணா என் காதலி

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை. (இப்படி ஏதாவது பில்டப் கொடுத்தாதான் ஒருநாளாவது இந்த படம் ஓடும்:-) )இப்படியாகும் என்று நினைக்கவேயில்லை நான். எதுதான் நான் நினைத்த படியெல்லாம் நடந்திருக்கிறது? இந்த பாஸ்கரும் அந்த பாஸ்கராக இருப்பான் என்று தோன்றக் கூட இல்லை எனக்கு. கல்லூரி முடிந்தவுடனேயே இங்கு வந்துவிட்டதால் ஊர் வாசனையே இல்லாமல் போய் விட்டது. பிடித்தது கிடைக்காது என்று தெரிந்த பிறகு கிடைத்ததை பிடிப்பதற்கு முயற்சி செய்துக் [...]

By | 2007-07-15T13:11:00+00:00 July 15th, 2007|சிறுகதை|18 Comments

அதிரத்தான் செய்கிறது ஆச்சரியத்தில்!

படம் சொல்லும் கதை:எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஒரு வகையான ஊனம்தான். ஆனால் ஆளுக்காள் ஊனத்தின் தன்மை வேறுபடும், சிலர் மனதளவில், சிலர் கல்வியில், சிலர் உடலில். ஆனால் தன்னம்பிக்கையென்ற மருந்திருந்தால் எவ்வகை ஊனத்தையும் பொருட்படுத்தத் தேவையில்லை என்பதற்கு அலிசன் லப்பர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பிறவியிலேயே கைகள் இல்லாததால் திருமணம் முடிக்கவும், தன்னைப் போலவே குழந்தையும் பிறந்துவிடுமோ என்ற அவநம்பிக்கையெல்லாம் இல்லாமல் துணிந்து பெற்றெடுத்து தாய்மையை தன்னுடைய 34ஆம் வயதில் உணரும் மனதிடம் மிக்கவர். தன் [...]