அதிரத்தான் செய்கிறது ஆச்சரியத்தில்!

படம் சொல்லும் கதை:எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஒரு வகையான ஊனம்தான். ஆனால் ஆளுக்காள் ஊனத்தின் தன்மை வேறுபடும், சிலர் மனதளவில், சிலர் கல்வியில், சிலர் உடலில். ஆனால் தன்னம்பிக்கையென்ற மருந்திருந்தால் எவ்வகை ஊனத்தையும் பொருட்படுத்தத் தேவையில்லை என்பதற்கு அலிசன் லப்பர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பிறவியிலேயே கைகள் இல்லாததால் திருமணம் முடிக்கவும், தன்னைப் போலவே குழந்தையும் பிறந்துவிடுமோ என்ற அவநம்பிக்கையெல்லாம் இல்லாமல் துணிந்து பெற்றெடுத்து தாய்மையை தன்னுடைய 34ஆம் வயதில் உணரும் மனதிடம் மிக்கவர். தன் [...]

தீயாக திருநாளில் சதாம் பலி(ழி)

சதாமின் கடைசி காட்சிகள்: http://www.youtube.com/watch?v=Gf1R_m31KpE&mode=related&search=1982-ம் ஆண்டு துஜைல் என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்கள் 148 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பாக இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு (அமீரக நேரம் 7 மணிக்கு) தூக்கிலிடப்பட்டார். 148 பேரை படுகொலை செய்ததற்கு சதாமுக்கு தூக்கு தண்டனை என்று தீர்ப்பு. ஆனால் சதாமை பிடிக்க பல ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களுக்கு யார் தண்டனை தருவது?இஸ்லாமியப் பெருநாளில், ஆட்டை பலி கொடுக்கும் தியாகத் திருநாளில், சதாமுக்கு மரண [...]

By | 2006-12-30T11:08:00+00:00 December 30th, 2006|செய்திவிமர்சனம்|18 Comments

தினத்தந்தியில் சவுதி அரேபியாவில் துபாய்?

பெரிய பத்திரிக்கை, பிரபல பத்திரிக்கை ஆனால் பூகோளம் தெரியாத பத்திரிக்கை. தினத்தந்தியில் ஒரு செய்தி. கீழே உள்ள சுட்டியை சுடக்கி படிக்கவும். http://www.dailythanthi.com/article.asp?NewsID=305233&disdate=12/24/2006சவுதி அரேபியா ஒரு தனி நாடு அதில் ரியாத், ஜித்தா, தமாம், அல் கோபர் என்று பல இடங்கள் உள்ளன. ஆனால் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குயின், ராஸ் அல் கைமா, புஜைரா என்ற ஏழு மாநிலங்கள் (Emirates) அடங்கியதுதான் ஐக்கிய அரபு நாடு. இதை அறியாத பிரபல தின [...]

By | 2006-12-24T18:06:00+00:00 December 24th, 2006|செய்திவிமர்சனம்|43 Comments