சித்திரம் பேசுதடி

ஆளாளுக்கு விதவிதமாப் போட்டி வைக்கிறாங்க. நாம போட்டி தான் வைக்கிறதில்ல போட்டில கலந்துக்கவாவது செய்யலாம்னு நினைச்சேன். செல்லா புகைப்படப் போட்டில கலந்துக்கலாம்னு பார்த்தா முதல் 30 படம்தான்னு சொல்லிட்டாரு. இந்நேரத்திற்கு அதற்கு மேலேயே வந்திருக்கும்னு விட்டுட்டேன். நம்ம சிந்தாநதி கணிணி ஓவியப் போட்டி அறிவிச்சிருக்காங்க. நல்ல மனுசர் ஜூலை 30 வரைக்கும் கெடு கொடுத்தது மட்டுமல்லாம ஒருவர் அதிக பட்சம் மூன்று படங்கள் அனுப்பலாம்னு சொல்லிட்டார். நல்ல மனுசன்.

சரி நம்ம பங்குக்கு என் படங்கள் – நான் வரைந்த படங்கள்னு சொல்ல வந்தேன்.

Mr.பீனின் புலம்பல்

தேவதாசியின் மனமில்லா அபிநயம்

வாய்ப்புக்கு நன்றி.

By | 2007-07-28T09:59:00+00:00 July 28th, 2007|நிழற்படம்|18 Comments

18 Comments

  1. லொடுக்கு July 28, 2007 at 1:53 pm - Reply

    நல்லாயிருக்குதுங்கோ. பரிசு கிடைச்சாலும் கிடைக்கும் 🙂

  2. குசும்பன் July 28, 2007 at 1:54 pm - Reply

    ஆஹா உங்களுக்குள் ஒரு ஓவியியும் சைலண்டா தூங்கிகிட்டு இருக்காங்க போல… நன்றாக இருக்கிறது.

  3. அபி அப்பா July 28, 2007 at 1:54 pm - Reply

    நல்ல விஷய ஞானம் உள்ள பதிவு!

  4. அபி அப்பா July 28, 2007 at 1:54 pm - Reply

    (அவசரப்பட்டுட்டனோ, ஆஹா அசிங்கமா போச்சே! பரவாயில்ல வந்ததுக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு போவோம்!)

    வாழ்த்துக்கள்! கண்டிப்பா உங்களுக்கு தான் பரிசு!:-)

  5. போட்டி முடிஞ்சி பரிசு எனக்கு கொடுத்தாச்சி இப்ப பதிவு போடுரீங்க..:)

  6. கோபிநாத் July 28, 2007 at 1:55 pm - Reply

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;-))

    முதல் படம் சூப்பர்.

  7. ஜெஸிலா July 28, 2007 at 2:04 pm - Reply

    லொடுக்கு அந்த சிப்பானுக்கு என்ன அர்த்தம்? 😉

    அபி அப்பா இனி இந்த சரித்திரத்தை அப்பப்ப திரும்பி பாத்துக்கிறேன் 😉 ச்சே சின்ன பதிவுக்கும் இதே நிலைதானா? ம்ம் வேற யாருடைய பின்னூட்டத்தையாவது போட்டிருந்தா அப்படியே கட்-பேஸ்ட் சமாச்சாரம் பண்ணிருப்பீங்க. உங்கள மாதிரி ஆளுங்களுக்காகத்தான் நான் மொத்தமா பின்னூட்டத்தை வெளியிடுறேன் 🙂 பிழைச்சிப் போங்க இந்த முறை.

    குசும்பன் சைலண்டா தூங்கல நல்லாவே குறட்டைவிட்டு தூங்குது 🙂

    மிமி யானைக்கு சின்ன பூனைப் போட்டியா 😉 ?

    ஏன் கோபி இரண்டாவது படம் பிடிக்கலை? என் மகள் சொல்றா அந்த படத்தில் ஆண்ட்டி பப்பிஷேம் காட்டுறாங்களாம் அதான் பிடிக்கலையாம் – அந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது..? 😉

  8. கண்மணி July 29, 2007 at 6:27 am - Reply

    //ஏன் கோபி இரண்டாவது படம் பிடிக்கலை? என் மகள் சொல்றா அந்த படத்தில் ஆண்ட்டி பப்பிஷேம் காட்டுறாங்களாம் அதான் பிடிக்கலையாம் //

    ஜெஸி நல்ல ‘அறிவாளிக் குழந்தைம்மா ‘ உன்னுது.கரீட்டா பப்பி ஷேம் சொல்லுது
    என்னையக் குரங்குன்ன மாதிரி….அவ்வ்வ்வ்வ்வ்

    பை த பை நோ ஹார்ஷ் ஃபீலிங்க்ஸ்…சென்ஷி கோச்சுக்கிட்டதும் நீங்க வருத்தப் பட்டதும் அறிந்தேன்.ஆல் இன் த கேம்..ஜஸ்ட் ஃபன்

  9. லொடுக்கு July 29, 2007 at 6:28 am - Reply

    //மிமி யானைக்கு சின்ன பூனைப் போட்டியா 😉 ? //

    இதுல யாரு யானை? யாரு பூனை?

  10. ஜெஸிலா July 29, 2007 at 6:41 am - Reply

    //பை த பை நோ ஹார்ஷ் ஃபீலிங்க்ஸ்…சென்ஷி கோச்சுக்கிட்டதும் நீங்க வருத்தப் பட்டதும் அறிந்தேன்.ஆல் இன் த கேம்..ஜஸ்ட் ஃபன்// என்ன இது புதுக் கதை? என்னலாம் சுலபமா கோபிக்க வைக்க முடியாது 🙂

    //இதுல யாரு யானை? யாரு பூனை?// லொடுக்கு வம்ப எடுத்துக் கொடுக்கிறாப்புல இருக்கு? உருவத்துல சொல்லலப்பா.

  11. ramachandranusha July 29, 2007 at 11:53 am - Reply

    ஜெஸி, கிறுக்கலில் சித்திரமா? நிஜமாகவே நல்லா இருக்கு. ஆனா இன்னும் மற்றவர்களின் கிறுக்கல்ஸ் பார்க்கவில்லை 🙂

  12. சுல்தான் July 29, 2007 at 11:54 am - Reply

    அழகாய் உடுத்துபவர்கள் கூட அசிங்கமாய் உடுத்தி -காண்பிப்பதை-அங்கீகரிக்கிற மாதிரி இருக்கேன்னு எழுதலாம்னு நினைச்சேன். வருத்தப்படுவீங்களோன்னு விட்டுட்டேன்.
    எனக்கும் உங்க குழந்தை மனசுதாங்கோ!

  13. துளசி கோபால் July 29, 2007 at 11:54 am - Reply

    படங்கள் நல்லா இருக்குங்க.

  14. சென்ஷி July 29, 2007 at 11:54 am - Reply

    // ஜெஸிலா said…
    //பை த பை நோ ஹார்ஷ் ஃபீலிங்க்ஸ்…சென்ஷி கோச்சுக்கிட்டதும் நீங்க வருத்தப் பட்டதும் அறிந்தேன்.ஆல் இன் த கேம்..ஜஸ்ட் ஃபன்// என்ன இது புதுக் கதை? என்னலாம் சுலபமா கோபிக்க வைக்க முடியாது :-)//

    அது சரி. கண்மனி அக்கா நீங்க வருத்தப்பட்டதால்ல சொல்லியிருக்காங்க. கோச்சுக்கிட்டதுன்னு சொல்லியிருக்கறது என்னை. :))

    என்ன கொடும சார் இது…

    அப்புறம், கண்மனி அக்கா அது என்ன புதுசா என்னன்னமோ சொல்றீங்க..
    யார் அந்த கோட்டான்? செய்திகளை தப்பாம தப்பா தர்றவரா.!

    ஷார்ஜாவிலிருந்து

    சென்ஷி

    பி.கு: ஒரே ஒரு பின்னூட்டம் போட நெட்க்கு வந்தது இன்னிக்குத்தான்… 🙂

  15. கோபிநாத் July 29, 2007 at 11:55 am - Reply

    \கண்மணி said…
    //ஏன் கோபி இரண்டாவது படம் பிடிக்கலை? என் மகள் சொல்றா அந்த படத்தில் ஆண்ட்டி பப்பிஷேம் காட்டுறாங்களாம் அதான் பிடிக்கலையாம் //

    ஜெஸி நல்ல ‘அறிவாளிக் குழந்தைம்மா ‘ உன்னுது.கரீட்டா பப்பி ஷேம் சொல்லுது
    என்னையக் குரங்குன்ன மாதிரி….அவ்வ்வ்வ்வ்வ\

    கண்மணி சொல்லிட்ட பிறகு அதுக்கு மறுபேச்சே கிடையாது ;-))

  16. ஜெஸிலா July 29, 2007 at 12:49 pm - Reply

    மெய்யாலுமா? நன்றி உஷா.

    சுல்தான் பாய், ‘மனமில்லா அபிநயத்தில் தேவதாசி’ என்று தலைப்பு போட இருந்தேன். விட்டுப் போச்சு 🙁

    நன்றி துளசி.

    அட சென்ஷி! ஓ, பின்னூட்டம் படிக்க வந்தீங்களா? :-)))

    அபிஅப்பா பதிவை படிக்காமல் பின்னூட்டம் போடுவார், கோபி நீங்க பின்னூட்டம் படிக்காமல் பின்னூட்டம் போடுறீங்க போல ;-)) எதுக்கு மறுபேச்சு கிடையாது கண்மணியை குரங்குன்னு சொன்னதையா? :-))

  17. Sowmya July 31, 2007 at 5:57 am - Reply

    Ega patta sarakku irukke unga kitta.Wonderful pictures.:)

  18. ஜெஸிலா July 31, 2007 at 8:12 am - Reply

    நன்றி செளமியா. அந்த மூன்றாவது படத்தை பார்த்தீர்களா? கணினி ஓவியப் போட்டி என்ற தலைப்பில்?

Leave A Comment