‘தாரே ஜமீன் பர்’ – ஒரு விதிவிலக்கு

'தாரே ஜமீன் பர்' படம் பார்த்த பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமலிருக்கிறேன். அய்யனார், குசும்பர், பெனாத்தலார், ஆசிப் என்று பலரும் எழுதிவிட்ட பிறகும், அந்த படத்தை பற்றி எழுதுவதற்கு நிறைய இருந்தாலும் விமர்சிக்க வார்த்தையில்லை என்றுதான் சொல்ல வேண்டும், குறிப்பாக தர்ஷீலின் நடிப்பு குறித்து சொல்லும் போது. என்னைக் கேட்டால் கண்டிப்பாக தர்ஷீல் நடிக்கவில்லை அந்த கதாபார்த்திரமாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்லுவேன். கான்களையும் கப்பூர்களையும் பச்சன்களையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுட்டித்தனம், பிடிவாதம், மகிழ்ச்சி, பயம், அழுகை, [...]

By | 2007-12-28T11:54:00+00:00 December 28th, 2007|Personal|24 Comments

எம்.ஓ.பி. வைஷ்ணவாவின் மறுபக்கம்

கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் என்னுடைய 'கல்லூரி - நிஜமும் நிழலும்'- பதிவுக்கு வந்தவை. அரசாங்க விடுமுறையை கல்லூரிகள் தர மறுக்கிறது என்று நான் எழுதப் போக, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அதிர்ச்சி தரும் பின்னூட்டங்கள். இது உண்மைதானா என்ற கேள்வியை எழுப்புகிறது. hi jaseela,even i'm a student of MOP. forget abt govt holidays atleast v can adjust. bt i want to tel an important worst thing [...]

By | 2007-12-25T12:07:00+00:00 December 25th, 2007|அக்கறை, விமர்சனம்|38 Comments

கல்லூரி – நிழலும் நிஜமும்

சமீபத்துல வந்த படங்களில் சில படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு பலர் சொல்லி கேட்கும் போது பார்த்தே தீர வேணும்னு ஆச வருது. எங்க ஊருல பெரிய பிரபலங்கள் நடிச்சாத்தான் படமே திரைக்கு வருது. இந்த வாரம் 'ஒன்பது ரூபாய் நோட்டு' வரும்னு எதிர்பார்த்து ஏமார்ந்தோம். 'எவனோ ஒருவன்', 'கல்லூரி'ன்னு சில நல்ல படங்கள் திரைக்கு வரும் வரை காத்திருக்க முடியாம குறுந்தகடுக்கு வேட்டையாடி 'கல்லூரி' கிடைச்சுது. 'கல்லூரி' படத்துல யாரு நடிச்சிருக்காங்கன்னு கேட்டுறாதீங்க சத்தியமா எனக்கு தெரியாது [...]

மறுபடியும் வந்துட்டோம்ல

கொஞ்ச நாட்கள் வலைப்பக்கம் வராததால் நான் என்னவோ என் கடைசி பதிவுக்கு மிரட்டல் வந்து நான் பயந்து ஒளிந்துக் கொண்டதா வதந்தியப் பரப்பிக்கிட்டு திரியுறாங்கோ. அப்படியெல்லாம் ஒண்ணுமேயில்ல சாமி, நிஜமாவே அப்படி ஏதாவது மிரட்டல் வந்திருந்தா அதுக்காகவே வம்படியா தொடர்ந்து எழுதியிருப்பேன் 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே'. எழுத நினைத்த ஒரு புதிய பெண் வலைப்பதிவரையும் 'ஜெஸிலாவுக்கு என்ன கதியாச்சு பாத்தியா, அத மனசுல வச்சுக்கிட்டு சும்மா பின்னூட்டம் போடுவதோடு நிறுத்திக்கோன்னு' அந்த பெண் பதிவருடைய கணவர் [...]

By | 2007-12-15T11:59:00+00:00 December 15th, 2007|விமர்சனம்|23 Comments

பெண்கள் போகப் பொருளா?

இந்த விஷயத்தைப் பற்றி பல தடவை எழுதணும்னு நினைச்சு சரி வேண்டாம் திருந்தாத ஜென்மங்கள் சொல்லி என்ன ஆகப் போகுதுன்னே தள்ளிப் போட்டிருக்கேன். நேற்று உள்ளுக்குள் புதைந்து கிடந்த எரிச்சல் கை வரைக்கும் வந்ததாலும், எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதாலும் எழுதியே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு ஒரே மூச்சா கொட்டித் தீர்த்திருக்கேன். நான் ரொம்ப காலமா தொலைக்காட்சியே பார்க்காம இருந்தேன். தொலைக்காட்சியில் எது பார்க்கிறேனோ இல்லையோ சின்ன வயசிலிருந்தே விளம்பரம்னா ரொம்பப் பிடிக்கும். [...]

By | 2007-09-18T07:09:00+00:00 September 18th, 2007|பெண்ணியம்|59 Comments

ஆவியில் வந்த கிறுக்கல்கள்

ஆனந்த விகடன் வரவேற்பறையல நம்ம வலைப்பூ பத்தி வந்தாலும் வந்துச்சு ஆளாளுக்கு 'யாரப் புடிச்ச? எவ்வளவு கொடுத்த? இந்த இலவச விளம்பரத்துக்கு'ன்னு ரொம்பவே கொச்சப்படுத்துறாங்கப்பா. சில வலைப்பதிவர்களை கடந்து போனாலே கரிஞ்ச வாட வருது, 'நான் வருஷக் கணக்கா எழுதுறேன் என்னுது வரலை உன்னுது எப்படி வந்துச்சு?'ன்னு வயித்தெரிச்சப்படுறாங்க. காதுல புகைக் கூட கவனிச்சேன். எங்க வீட்டுல கூட 'எப்படி ஜெஸி?'ன்னு கேட்டாங்க, 'என் கடன் பணி செய்துக்கிடப்பதே'ன்னு சொன்னேன். 'பார்த்து, யாராவது பொறாமைல அடிச்சி ரோட்டுல [...]

By | 2007-09-13T07:44:00+00:00 September 13th, 2007|பதிவர் வட்டம்|33 Comments

விட்டு விலகி நின்று…

உன்னை முதல் முறை பார்த்த தருணத்தை நினைத்து பார்க்கையில் இன்றும் உறைந்துதான் போகிறேன். எனக்கு அப்போது பதினொன்றோ பன்னிரெண்டோ வயது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் குடியிருப்பே பரபரப்பாகத் தென்பட்டது. அரசல்பரசலாக யாரோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மட்டும் விளங்கியது. பள்ளிச் சீருடையை மாற்றிவிட்டு ஓடினேன் சம்பவ இடத்தை நோக்கி, எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அந்த இடமே சலனமில்லாமல் இருந்தது. அங்கேதான் நீ குவித்து வைத்திருந்த புது மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாய். உன் [...]

By | 2007-09-06T14:32:00+00:00 September 6th, 2007|சிறுகதை|36 Comments

ஆசிரியர் தின வாழ்த்து

தமிழ் எழுத்தைகற்றுத் தந்த நீங்கள்இன்று எங்கு இருக்கிறீர்கள்?தினமும் ஒரு திருக்குறளெனஇரு வரியை மனனம் செய்துஉரையை விவரித்த நீங்கள்இன்று எங்கே இருக்கிறீர்கள்?விதையை விதைத்துவிட்டுவிருட்சத்தின் வளர்ச்சியைகாணாமல்எங்கு சென்றுவிட்டீர்கள்?எங்களின்முதல் சொல்முதல் வாக்கியம்முதல் சிந்தனைமுதல் கற்பனைமுதல் உளறல்முதல் கவிதைமுதல் சந்தேகம்என்று எல்லாமேமுதலில் பிறந்தது உங்களிடம்தானே?முயற்சி, தன்னம்பிக்கைபோராட்டம், கடமை,ஒழுக்கம், திறமைஎன்று இல்லாதவற்றையும்தோண்டி ஊற்றைஎங்களுக்குள் எடுத்த நீங்கள்எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாகஇருந்த நீங்கள்இன்று எங்கு சென்றுவிட்டீர்கள்?உங்களுக்காக எழுதுகிறேன்என்றதும் சின்னபிள்ளையாகவேமாறிவிட்டேன்.இந்த எளியவளைஏணியாக நின்று உயர்த்திவிட்டுநீங்கள் மட்டும் அதே இடத்தில்இருப்பதுதான்ஆசிரிய தர்மமா?எங்கிருந்தாலும் என்ஆசிரியர் தின வாழ்த்தைபெற்றுக் கொள்ளுங்கள்

By | 2007-09-05T11:41:00+00:00 September 5th, 2007|கவிதை|7 Comments

உன் நினைவுகளோடு….

மெளனம் பேச்சாகும்தனிமையில்தூக்கம் எழுப்பும்இரவுகளில்வேட்கை நிரம்பிய வெறுமையில்கதகதப்பாய் அரவணைப்பதுஉன் நினைவுகள்மட்டும்தான்

By | 2007-09-05T05:49:00+00:00 September 5th, 2007|கவிதை|13 Comments

சுதந்திரம்

அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க வைத்துவிட்டானே? 'நானும் அவனைப் போல் இருந்துவிட முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்ற நினைப்பே பெரிய நிம்மதியையும் பிரமிப்பையும் தருகிறதே? இந்த எண்ணம் எனக்கு ஏன் தோன்றுகிறது? இப்போதுதான் தோன்றிய ஒன்றா அல்லது மனதில் ஒளிந்துக் கிடந்தது இப்போது அவன் சொன்னவுடன் விஸ்வரூபம் எடுக்கிறதா? எத்தனை ஆண்டுகள் கழித்துப் பேசுகிறேன் அவனுடன் அந்த சந்தோஷமெல்லாம் மறந்து [...]

By | 2007-08-15T05:44:00+00:00 August 15th, 2007|சிறுகதை|13 Comments