தீயாக திருநாளில் சதாம் பலி(ழி)

சதாமின் கடைசி காட்சிகள்: http://www.youtube.com/watch?v=Gf1R_m31KpE&mode=related&search=1982-ம் ஆண்டு துஜைல் என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்கள் 148 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பாக இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு (அமீரக நேரம் 7 மணிக்கு) தூக்கிலிடப்பட்டார். 148 பேரை படுகொலை செய்ததற்கு சதாமுக்கு தூக்கு தண்டனை என்று தீர்ப்பு. ஆனால் சதாமை பிடிக்க பல ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களுக்கு யார் தண்டனை தருவது?இஸ்லாமியப் பெருநாளில், ஆட்டை பலி கொடுக்கும் தியாகத் திருநாளில், சதாமுக்கு மரண [...]

By | 2006-12-30T11:08:00+00:00 December 30th, 2006|செய்திவிமர்சனம்|18 Comments

சிம்ரனுக்கொரு நியாயம் ரஜினிக்கொரு நியாயமா?

சந்திரமுகியில் வாய்ப்பு புட்டுக்கிச்சு, அப்போ சிம்ரன் கர்ப்பமா இருந்தது காரணம். வயிற்றில் புள்ளய வச்சிக்கிட்டு 'ரா.. ரா..' ஆடியிருந்தால் ஜோதிகா ஆடின 'அந்த' ஆட்டம் வந்திருக்குமா? இப்ப சிம்ரனுக்கு குழந்தை பிறந்து ஒன்றரை வருஷமாகிறதாம், மீண்டும் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. ருசி கண்ட பூனையாச்சே அவ்வளவு லேசில் திரைத்துறையை விட்டு போக முடியுமா? அதனால்தான் மீண்டும் திரைதுறைக்கு வந்துவிட்டார். விளம்பரங்களில் வலம் வருபவரை இயக்குநர்கள் அணுகி தாரளமாக அக்கா, அண்ணி, அம்மாவாக நடிக்க நிறைய வாய்ப்புக்கள் [...]

By | 2006-12-29T09:45:00+00:00 December 29th, 2006|பெண்ணியம்|27 Comments

ஐஸ்வர்யா ராயின் முதல் கணவர்…

முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் சல்மான் கான், விவேக் ஓப்ராய், அபிஷேக் பச்சன் என்று பலருடன் இணைத்து பேசப்பட்டாலும், அவருடைய முதல் கணவர் யார் என்பதை அறிந்து திடுக்கிட்டேன்.வாரனாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்/ சங்கட் மோச்சன் (Sankat Mochan) கோவிலில் மாங்கல்ய தோஷத்துக்கு பரிகார பூஜை நடத்தி, யாகம் வளர்த்து (யாஷ் -கிர்த்தியானா) வாழை மரத்தை திருமணம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.மங்களூர் அருகில் உள்ள மங்கல்பாடியை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகர் சுவாமியின் அறிவுரையின் பேரில்தான் [...]

By | 2006-12-27T17:26:00+00:00 December 27th, 2006|அக்கறை|34 Comments

தினத்தந்தியில் சவுதி அரேபியாவில் துபாய்?

பெரிய பத்திரிக்கை, பிரபல பத்திரிக்கை ஆனால் பூகோளம் தெரியாத பத்திரிக்கை. தினத்தந்தியில் ஒரு செய்தி. கீழே உள்ள சுட்டியை சுடக்கி படிக்கவும். http://www.dailythanthi.com/article.asp?NewsID=305233&disdate=12/24/2006சவுதி அரேபியா ஒரு தனி நாடு அதில் ரியாத், ஜித்தா, தமாம், அல் கோபர் என்று பல இடங்கள் உள்ளன. ஆனால் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குயின், ராஸ் அல் கைமா, புஜைரா என்ற ஏழு மாநிலங்கள் (Emirates) அடங்கியதுதான் ஐக்கிய அரபு நாடு. இதை அறியாத பிரபல தின [...]

By | 2006-12-24T18:06:00+00:00 December 24th, 2006|செய்திவிமர்சனம்|43 Comments

கங்கை அமரன் அரசியலில் குதிக்கிறார்!

போன மாசம் எங்க ஊரில அதாங்க துபாயில 'துபாய் தமிழ் சங்கம்' ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடினாங்க. அதில 'லியோனி' பட்டிமன்றம், அப்புறம் 'கங்கை அமரன்' பாட்டுக் கச்சேரி, குழந்தைகள் நடனம் அப்படி இப்படின்னு அமர்க்களப்படுத்திப்புட்டாங்க. கங்கை அமரன் தனியா வரல அவர் மகன் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண் அவங்க குழுவினரில் ஒருவரான நிர்மலா எல்லோரும்தான் வந்தாங்க. லியோனி பட்டிமன்றம் முடிஞ்சி பாட்டுக் கச்சேரிக்கு எல்லாம் தயாராச்சு, மேடைக்கு வந்த க.அமரன் 'நாலு நாற்காலி போடுங்கப்பா' [...]

By | 2006-12-21T10:21:00+00:00 December 21st, 2006|அமீரகம்|24 Comments

வெள்ளைக்காரருங்க முட்டாளா? சாமர்த்தியமா?

சிலருக்கு புது புது உணவை சாப்பிட்டு பார்ப்பதில் அலாதி பிரியம். அதனால்தானோ இந்த 'சாப்பாடு திருவிழா' (Food Festival) வருஷம் தோறும் இங்க அமீரகத்தில தவறாம நடக்குது. பதிவு அதப்பத்தி இல்ல பயந்துடாதீங்க.'துர்கிஷ் சாண்விட்ச்' வேணுமான்னு சாப்பாடு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே ரொம்ப பாசமா வலம் வந்தா 'ரோஸிலின்' என் சக ஊழியரில் ஒருத்தி. அவ எங்க நிறுவனருடைய மகள்தான் ஆனாலும் எங்களில் ஒருவராக சாதாரண சக ஊழியராகவே பணி செய்யுறா. நான் 'வேண்டாம்ப்பா! [...]

வலி

செப்டம்பர் 2006 மாத 'திசைகளில்' வெளிவந்த என் கவிதை:அடித்தே இன்புறுகிறாய்நல்ல விஷயமோகெட்ட விஷயமோவாழ்க்கையின் ஆரம்பமோவாழ்க்கையின் முடிவோஅடிக்காமல் அடங்காதாவிசேஷம்?இருக்கும் போதுதானென்றால்இறந்த பிறகுமா?

By | 2006-12-19T07:43:00+00:00 December 19th, 2006|கவிதை|0 Comments

நட்பு

தேர்வில் எட்டிப் பார்த்துஎழுதும் போதும்ஆபாச படத்தைபார்க்க கூடாத வயதில்பார்க்கத் துணிந்த போதும்கல்லூரி மறந்து ஊர் சுற்றும் போதும்சுருட்டு, மது, மாதுஎன்ற போதும்காதலியுடன்ஓடிப் போக நினைக்கையிலும்தடுத்து நிறுத்திஎடுத்துரைக்காமலிருக்கமுடியவில்லை என்னால்உளியாகத்தான் எனைநினைத்திருந்தேன்உடைப்பேன் நட்பையென்றுஅறியாமல்

By | 2006-12-17T09:08:00+00:00 December 17th, 2006|கவிதை|0 Comments

பிடிச்சிப் போச்சு ரொம்ப!

முன்பே வா என் அன்பே வா படம்: சில்லுன்னு ஒரு காதல்பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்வரிகள்: வாலிபடத்தின் பலம் பாடலும் என்று சொல்லும் அளவுக்கு இரண்டு நல்ல பாடல்கள் இந்த படத்தில். இரண்டுமே எனக்கு பிடித்தது. நியூயார்க் நகரம் பாடலில் ஏ.ஆர்.ஆரின் குரலையும் இசையையும் இரசித்த வேளையில் அதனை தொடர்ந்தது இந்த பாடலும். சில பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமல் தலையாட்டி இரசிப்போம், சில பாடலை கேட்கும் போது நமக்குள் நம்மை அறியாமல் ஒரு [...]

By | 2006-11-30T09:27:00+00:00 November 30th, 2006|விமர்சனம்|4 Comments

சுதந்திர தினம்

வலைப்பூ பக்கம் வந்து நாளாச்சே அதான் எட்டிப்பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். எட்டிப்பார்த்துட்டு பதிவுப் போடாம சும்மா போனா எப்பட,ி அதான் ஏற்கெனவே 'திசைகள்' மின்னிதழில் வந்த கவிதையை இடுகிறேன்.மாதம் முழுவதும்சிறை பிடித்துசாகும் நிலையில்ஆலிவ் இலை தந்துதிறந்து விட்டுபறக்க செய்துகைத்தட்டிஇனிப்பு வழங்கிகொண்டாடினர்சுதந்திர தினம்

By | 2006-10-15T14:30:00+00:00 October 15th, 2006|கவிதை|3 Comments