தீயாக திருநாளில் சதாம் பலி(ழி)

சதாமின் கடைசி காட்சிகள்:

http://www.youtube.com/watch?v=Gf1R_m31KpE&mode=related&search=



1982-ம் ஆண்டு துஜைல் என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்கள் 148 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின்

தீர்ப்பாக இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு (அமீரக நேரம் 7 மணிக்கு) தூக்கிலிடப்பட்டார்.

148 பேரை படுகொலை செய்ததற்கு சதாமுக்கு தூக்கு தண்டனை என்று தீர்ப்பு. ஆனால் சதாமை பிடிக்க பல

ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களுக்கு யார் தண்டனை தருவது?

இஸ்லாமியப் பெருநாளில், ஆட்டை பலி கொடுக்கும் தியாகத் திருநாளில், சதாமுக்கு மரண தண்டனை கொடுத்து கொண்டாடுகிறார்கள் காட்டுமிராண்டிகள்.

சதாமின் அழிவு முடிவா? இல்லை ஆரம்பமா? காலம்தான் பதில் சொல்லும்.

By | 2006-12-30T11:08:00+00:00 December 30th, 2006|செய்திவிமர்சனம்|18 Comments

18 Comments

  1. Mohamed Ismail December 30, 2006 at 12:11 pm - Reply

    சதாம் செய்த தவறு அவரது ஆட்சி காலத்தில் 148 பேரை படுகொலை செய்தது அல்ல.புஷ்ஷின் தந்தையுடன் மல்லுக்கு நின்றது தான் குற்றம், ஒரு அமெரிக்க நிறுவனம் கூட ஈராக்கில் நுழைய விடாமல் தடுத்தது தான் குற்றம், அதற்கு தான் இந்த தண்டனை என்றே தோன்றுகிறது,

    ஈராக்கில் வேலை செய்த இந்திய நண்பர் ஒருவர் நேரில் ஒரு முறை சதாமை கண்டாராம், வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று நிறுத்தி இறங்கி தெருவில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமிக்கு தங்க சங்கிலியை பரிசாக அணிவித்து விட்டு சென்றாராம், தனது நாட்டு மக்களை மிகவும் நேசித்தவர் என்று எனது நண்பர் ஒருவர் சதாமுக்கு புகழாரம் சூட்டியது நினைவிற்கு வருகிறது.

    புஷ்ஷை பற்றிய சகோதரர் ஒருவரின் பதிவில், நல்ல நாளில் மன்னித்து விடுங்கள், சதாமிற்கு தூக்கு நியாயம் தான், இந்தியாவில் குண்டு வைத்து எதிர்ப்பை தெரிவியுங்கள் என்றெல்லாம் மகிழ்ச்சியிலும் எரிச்சலிலும் எழுதுகிறார்கள், புஷ்ஷை மட்டும் அல்ல இவர்களையும் மன்னிக்க கூட்டாது, மன்னிக்க முடியாது – நாகூர் இஸ்மாயில்

  2. Anonymous December 30, 2006 at 2:13 pm - Reply

    காலம் இன்னும் பேரழிவுகளைச் சந்திக்கப்போகிறது.
    நல்ல பதிவு.

  3. இறையடியான் December 30, 2006 at 2:13 pm - Reply

    அவன் சதாமை மட்டும் தூக்கில் போடவில்லை அனைத்து அனெரிக்கர்களின் நிம்மதியையௌம் சேர்த்தே போட்டு விட்டான்

  4. நாகு December 30, 2006 at 2:14 pm - Reply

    தீர்க்க அப்பாவி ஈராக் மக்கள் கொ ல்லப்பட்டுள்ளனர். மன்னிக்க முடியாத குற்றத்தினை அமெரிக்க அரசு செய்துள்ளது. ஆனாலும் சதாமிடம் கொஞ்சம் கருணைக் காட்டியி ருக்கலாம்.

  5. ஜெஸிலா December 30, 2006 at 2:24 pm - Reply

    நமக்கெல்லாம் இருக்கும் மனிதாபிமானத்தில் ஒரு விழுகாடு ‘அவர்களுக்கு’ இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.

    //அவன் சதாமை மட்டும் தூக்கில் போடவில்லை அனைத்து அனெரிக்கர்களின் நிம்மதியையௌம் சேர்த்தே போட்டு விட்டான்//

    வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த வேலை இது. இஸ்லாமியர்கள் நிம்மதியாக பண்டிகை கூட கொண்டாடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக செயல்பட்டுள்ளனர்.

  6. Anonymous December 30, 2006 at 6:36 pm - Reply

    சதாம் செய்தது பிழை, தண்டிக்கப்பட வேண்டியவர். உண்மைதான். ஆனால் அவர் மீதான விசாரணையை நியாயமாக நடத்தியிருக்கலாமே. ஏன் இவ்வளவு அவசரம்?

    அமெரிக்கா தனது ஜனனாயக செயட்பாடுகளை ஏன் சிலியின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரிடம் காட்டவில்லை. தொடர்ந்து ராணுவ ஆட்சி நடக்கும் மியன்மாரில் (பர்மா) உள்ள ஜனங்களுக்கு ஏன் இவர்கள் விடுதலை வாங்கித் தரவில்லை.

    உலகில் இது போல் நிறைய பிரச்சினைகள் உள்ளது, ஆனால் அங்கெல்லாம் எண்ணை இல்லை.

    ஆகையால் அமெரிக்கா தனது ஜனனாயக! செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.

    புஷ் விதைத்திருக்கிறார்…….பாவம் அமெரிக்க மக்கள்தான் அதை அறுவடை செய்யப் போகிறார்கள்.

  7. SK December 30, 2006 at 6:37 pm - Reply

    உணர்வுகளுக்கு டாட்டா சொல்லிவிட்டு, கொஞ்சம் மரித்த அந்த அப்பாவி மக்களை நினைத்தால், இந்த தண்டனையின் பின்னணி புரியவரும்.

    ஏதோ 148 பேரைக் கொன்றதற்காக இது என எண்ணாமல், அது ஒரு சாம்பிள்தான், இவர் செய்த பல்லாண்டுக் கொலைகளுக்கு என்பதையும் புரிந்து கொள்ளணும்.

    இப்போது தன் இன மக்களையே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டிருப்பது அங்கே இராக்கில், அமெரிக்கப்படைகள் அல்ல; சொந்த தற்கொலைப்படைகளே!

    இவருக்கு ஒரு தீர்ப்பு கிடைத்தது போல, அமெரிக்கருக்கும் கிடைக்கவே கூடும்.

    இவருக்கே 33 ஆண்டுகளுக்குப் பிந்தானே கிடைத்தது.

    ஆண்டவன் சபையில் அனைவருக்கும் ஒருநாள் தீர்ப்பு உண்டு.

  8. SK December 31, 2006 at 4:58 am - Reply

    //
    உலகில் இது போல் நிறைய பிரச்சினைகள் உள்ளது, ஆனால் அங்கெல்லாம் எண்ணை இல்லை.//

    எண்ணை ஏதோ இராக்கில் மட்டும்தான் இருப்பது போலவும், மற்ற இடங்களில் இருந்து எண்ணை கிடைக்காதது போலவும் ஒரு தவறான கருத்தைக் காட்டி எவரை ஏமாற்றுவது?

    //அமெரிக்க மக்கள்தான் அதை அறுவடை செய்யப் போகிறார்கள்.//

    அமெரிக்கர்கள் தங்களை நன்றாகவே காப்பாற்றி வருகின்றனர்.
    நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள முயலுவோம்!
    தீவிரவாதத்தை ஒழிக்க 2007ல் உறுதி கொள்ளுவோம்!

    புத்தாண்டு வாழ்த்துகள்!

  9. சல்மான் December 31, 2006 at 4:59 am - Reply

    நீதிமன்றம் பேரில் நிறைவேற்றப்பட்ட சதாமுடைய கொலை பற்றி இங்கு எழுதும் பலரும்
    முஸ்லிம், இடதுசாரி, ஜன்ரஞ்சக, ஏழை, ஈழ, உட்பட மிகிதமானோர்
    அவருடைய குற்றங்கள் பற்றி மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.

    தனிநிலை பாதுகாக்கப்பட்ட, ஏகாதிபத்திய பின்புலன் இல்லாத, இறையான்மை கொள்கைகளை தாங்கிகளாக கொண்டியங்கும் மன்றத்தால் விசாரிக்கப்பட்டு
    தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதே மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் கொண்டோர்களின் விருப்பம்.

    எழுப்படும் கேள்வி என்னவென்றால், இந்த ‘விருப்பத்தை’ ஒரு noble appeal ஐ
    தன்னுடைய தனிப்பெரும் சுயநலத்துக்காக – ஒரு ஏகாதிபத்திய சக்தி – சர்வதேச பிரச்சினைகளில் சுயநல அடிப்படையில் பலநிலைப்பாடுகள் கொண்ட சுயநலதேச சக்தி – பகடைக்காயாக பயன்படுத்தி,
    தன்னுடைய கோரமுகத்தை இதன் பின்னால் ஒளித்துக்கொண்டு வன்முறை அடக்குமுறை கொள்ளை ஆணவம் போன்ற கொள்கைகளை சத்தமில்லாமல் பரப்புகிறதே…
    இதனை அனுமதிக்கலாமா? என்பதே.

    இந்த நிகழ்வில் தமிழ்மணம் ஊடாக மேலும் எழும் கேள்விகள்:

    1. இதே ஏகாதிபத்திய சக்தி, கொடூர கொலை கற்பழிப்புகளை நடத்தியதன் காரணம் காட்டி, இனப்படுகொலைகாரன் நரேந்திரமோடிக்கு நுழைவு மறுத்த போது – இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் ‘ஒரு வர்க்கம்’, அன்றைக்கு, சார்பு ஊடகங்கள் மூலம், இந்தியா அவமானப்படுத்தப்பட்டதாக பிரச்சாரம் செய்தார்கள்.
    இதுதான் பேச நா இரண்டுடையார் போற்றி என்பதா?

    2. எத்தனையோ செய்திகள் மூலம், உலகின் பல்வேறு கொடூரங்களுக்கு மூலகுசும்பன் ‘பெரியரக்கன்’ (காட் ப்லெஸ் பெரியரக்கன்) என காண்பித்தும், – இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் ‘ஒரு வர்க்கம்’, அதை பற்றி பகல் நோன்பு வைத்திருக்கிறார்கள். ஒருவேளை ‘உயிர்களை கொல்வது பாவம் – அவை சிறியளவில் இருக்கும் வரை’ என்ற புதுக் கருத்தை தாங்கள் நம்பும் இறைக் கொள்கைகள் புதிதாக சுவீரகரித்து கொண்டதாலா?

    3. கார்டூன் மூலம் குசும்பு செய்து பின் எழுந்த ஆர்ப்பாட்ட நிலைக்கு ஆத்திரச் சாயம் பூசிய – நாகரீகமிக்க அடுத்தவர் நாகரீகம் மதிக்கும், அப்பாவியுமான ‘உலக சமாதான தூதுவன்’ (பொதுவாக, இவர் புகுந்த இடம் உருப்படாது) – ஈராக்கிய மக்கள் ‘தியாகத் திருநாளில்’ எழும்போது அதை ‘வன்முறைத் திருநாளாக’ வாழ்நாலெல்லாம் நினைக்கும்படி ஒரு ஏற்பாட்டை கார்டூன் கணக்காக செய்திருக்கிறது.
    இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் ‘ஒரு வர்க்கம்’, இதையும் கார்டுனிற்கு பல்லை காமிப்பதுதான் நாகரீகம் என்று அன்று பாடம் சொன்னது போல, இன்று இந்த சம்பவத்தை ‘வந்து எங்களை காத்தாய் வடிவேலா!!’ என இருகரம் சேவித்துக் கொண்டாடவேண்டுமென பாடம் சொல்வது ஏன்?

    ஒருவேளை, மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் என்பது பேசும் விஷயத்தை பொருத்ததா?

    சல்மான்

    this will show up in other related posts too.

  10. Anonymous December 31, 2006 at 5:04 pm - Reply

    தனது நாட்டுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும், அதற்காக தனது நாட்டு மக்களையே விசவாயு அடித்து கொன்ற ஒரு கொடூரனுக்காக குரல் கொடுப்பது மடமைத்தனம், அந்த குழந்தைகளும் சதாமுக்கு எதிராக சதி செய்தார்கள் என்பது மடமையிலும் மடமை. எந்த ஒரு இனத்தை அழிக்கும் சர்வாதிகாரிக்கும் இதுதான் முடிவு. முஸ்லீம்களுக்காக இந்தியா குரல்கொடுக்கப்போய் சொந்த செலவில் சூனியம் வங்கிக்கொள்ளாது என நம்புவோம். ஏனெனில் முஸ்லீம் சமூகம் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கபோவதில்லை. அவர்களுக்கு இந்தியாவை விட பாகிஸ்தானும் ,ஆப்கானிஸ்தானும்,பங்களாதேசும் முக்கியமானவை

    விசவாயு அடித்துகொல்லப்பட்டது திரிபு என்பது, மனிதாபிமானமற்ற செயல், ஏனெனில் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் என்னுடன் சேர்ந்து வேலை செய்கிறான். சதாமின் சமுதாயத்தை சேர்த ஒருவனும் என்னுடன் வேலை செய்கிறான், அவனும் சதாம் செய்தது பிழை என்றுதான் கூறுகிறான், ஆனால் அமெரிக்கா நீதி கொடுத்தைத்தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனப்பற்று காரனமாக சதாமை ஆதரிக்கிறான், பொதுவான முஸ்லீம்களும் இதேபோக்கு உடையவர்கள்தான். அவர்கள் ஏனோ உன்மையை உராய்ந்து பார்க்கமறுக்கிறார்கள்.

  11. Anonymous December 31, 2006 at 5:10 pm - Reply

    சதாமோ, புஷ்சோ, நேர்மையாளர்களில்லை தான். தண்டனையிலிருந்து விலக்குப் பெறவேண்டியவர்களில்லை தான்.
    ஆனால் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட விசாரணை+தண்டனையின் ‘உள்நோக்கம்’ உள்ளங்கை நெல்லிக்கனி.

    ‘உலகமே மகிழும் நேரமிது’ என்று சொல்லி உள்மனதின் இருட்டை வெளிப்படுத்துபவர்கள் ‘நல்லா இருக்கட்டும்’.

    சு.வி

  12. ஜெஸிலா December 31, 2006 at 5:28 pm - Reply

    //மடமைத்தனம// உங்க பதிலில்தான்.

    /ஏனெனில் முஸ்லீம் சமூகம் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கபோவதில்லை. அவர்களுக்கு இந்தியாவை விட பாகிஸ்தானும் ,ஆப்கானிஸ்தானும்,பங்களாதேசும் முக்கியமானவை// அது உங்கள் கண்ணோட்டம் மட்டும். எந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தில்லை? இந்திய வரலாற்றை முழுவதுமாக படித்து பார்த்தால் தெரியும் சுதந்திர போராட்டத்திற்காக உயிர் தந்தவர்களில் அதிக இஸ்லாமியர்களும் அடங்குவர். உங்க நண்பரோ அல்லது கூட வேலைப் பார்ப்பவர் மட்டுமே இஸ்லாமிய சமூகம் இல்லை என்பதை மனதில் கொள்க.
    //ஆனால் அமெரிக்கா நீதி கொடுத்தைத்தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. // நீதி என்றால் உங்க அகராதியில் என்ன? எதற்காகவோ நாடு புகுந்து அரக்க வெறியர்களாக அப்பாவி மக்களை கொன்று குவித்தது எந்த கணக்கில் வரும்? அதுதான் உங்களுக்கு நீதியோ? அவசர அவசரமாக நல்ல நாளில் ஒரு சமூகத்தின் நிம்மதியை தொலைத்தவர்களை எத்தனை முறை தூக்கில் போட்டால் தகும்? மற்றவர்கள் துயரத்தில் கொண்டாட்டம் எங்களுக்கு ஜீரணிக்காது.

  13. Anonymous January 1, 2007 at 10:50 am - Reply

    அதான் வைகுண்ட ஏகாசியா பாத்து தூக்குல போட்டாங்கல்ல, கண்டிப்ப சதாமுக்கு பரமபத வாசல் வழியா சொர்க்கம்தான்!

  14. ஜெஸிலா January 1, 2007 at 2:49 pm - Reply

    //அதான் வைகுண்ட ஏகாசியா பாத்து தூக்குல போட்டாங்கல்ல, கண்டிப்ப சதாமுக்கு பரமபத வாசல் வழியா சொர்க்கம்தான்!// அப்ப அடுத்த ஏகாதாசியில் உங்களுக்காக சொர்க்க வாசல் தொறந்தா சந்தோஷமா இல்ல துக்கமா?

  15. லொடுக்கு January 2, 2007 at 12:18 pm - Reply

    வன்முறைக்கு எறியூட்டியிருக்கிறார்கள். 🙁

  16. Parama Pitha January 3, 2007 at 5:54 am - Reply

    இருப்பதில் இசைவான திருடன் கருணாநிதி என கஞ்ஜிரா அடிக்க தெரிந்த புருடர்களுக்கு, சக்தி மிகுந்த நாடுகளில் கொஞம் நியாமாய் ஜனநாயகம் பேணும் அமெரிக்காவை கசப்பது ஏன். ஊழல், உபத்திரவம் மிக்க இந்திய மனிதர்களில், இன்னும் தெயவம், வேதம் என் நல்வாழ்க்கை வாழும் ஒரு குலத்துடன் பகைமை பாராட்டுவது ஏன்?

    திருந்தட்டும் எல்லோரும். பிறகு பார்க்கலாம் அடுத்தவர் முதுகை.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  17. Anonymous January 4, 2007 at 5:59 am - Reply

    எழுதியவர்: வாசகன்

    சம்மனில்லாமலே வெறுப்பு துப்ப ஆஜராகும் பரமபிதா அவர்களே,
    சம்பந்தமில்லாம கருணாநிதிய ஏன் இங்கன இசுத்துக்கினு வர்றீங்க?

    சதாம் மேட்டர்ல அமெரிக்க புஷ் செஞ்சது சரியா தப்பான்னு சொல்றதுக்கு சரக்கு இருந்தா சொல்லிட்டுப் போங்க!!

    அதே, புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  18. Anonymous January 4, 2007 at 5:59 am - Reply

    //அப்ப அடுத்த ஏகாதாசியில் உங்களுக்காக சொர்க்க வாசல் தொறந்தா சந்தோஷமா இல்ல துக்கமா?//

    தெரியாம சொல்லிட்டேன், மன்னிச்சிடுங்க 🙁

Leave A Comment