பெண்ணே…

கொலை செய்தால் ஊரறியவலி அவளுக்குள்கருசிதைவு**பெண்கள் கேட்டால் -விபச்சாரம்ஆண்கள் கேட்டால்வரதட்சணை**நாளைய கல்பனாசாவ்லாவைஇரையாக்கினால் கள்ளிப்பாலுக்குபெண் சிசுக் கொலை**சாதி தீயினால்துணிந்து எரிந்தால்‘சத்தி’**தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்அம்பலத்தில் ஆடினால்அழகி போட்டி**

By | 2006-07-04T12:16:00+00:00 July 4th, 2006|கவிதை|12 Comments

துளிப்பா

எச்சிலை சேர்த்துதாகத்தை துளைத்தார்தண்ணீர் பஞ்சம்**உயிர்மேட்டுக்குடி பகற்டுடுப்பானதுபட்டு பூச்சி**முகத்தில்அழகிய வளைவுசிரிப்பு.**மனம் அறிந்து கூறினேன்மனம் அழுததுகாயப்படுத்திய பொய்**மாலை காற்றில்கலைந்தது வண்ணம்காலை பொழுது.**

By | 2006-07-04T06:38:00+00:00 July 4th, 2006|கவிதை|6 Comments

மறக்க முடியுமா?

நிலவை வான் மறக்குமாவான் உலகை மறக்குமாஉலகம் பூமியை மறக்குமாபூமி நிலத்தை மறக்குமாநிலம் பாதையை மறக்குமாபாதை கால்சுவடை மறக்குமாகால்சுவடு உரிய கால்களை மறக்குமாகால்கள் வழிகாட்டிய கண்களை மறக்குமாகண்கள் காக்கும் இமையை மறக்குமாஇமை உடலை மறக்குமாஉடல் உயிரை மறக்குமாஉயிர் எதுவும் மறக்குமாஎதுவும் எதையும் மறக்காத போதுஎன்னை மட்டும் நீ ஏன் மறந்தாய்?

By | 2006-07-03T07:06:00+00:00 July 3rd, 2006|கவிதை|2 Comments

அய்கூ வடிவம்

தொண்டையில் மேகம் கூடிகண்களில் மழை வந்ததுதேங்கி நின்றது பிரிவு.**இரு கைகளுக்கு நடுவேநகர்கிறது நாட்கள்குயவன்.**சூரியனுக்கு கீழ்எல்லாம் வெளிச்சம்கடற்கரை குளியல்**மயங்க வைத்ததும் அதுதான்காயப்படுத்தியதும் அதுதான்சுழறும் நாக்கு.**

By | 2006-07-02T13:36:00+00:00 July 2nd, 2006|கவிதை|3 Comments

போலி வார்த்தைகள்

உன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்நீ வீசும் பார்வையின் ஒளிஎன்னை வந்து கிள்ளுது.உன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்நீ விடும் மூச்சு காத்துஉன் ஏக்கம் சொல்லி கொல்லுதுஉன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்வெளிவரும் உன் வேயர்வை துளிகள் ஆவியாகிமேகமழையோடு என்னை தொட்டு செல்லுதுஉன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்என்னை நினைத்து தளையணைக்கு அளிக்கும் ஸ்பரிசம்என்னை அணைத்து என்னமோ பண்ணுதுமனதால் உணர்த்தும் காதல் போதும்வார்த்தைஜாலம் வேண்டாம் காதலா!

By | 2006-06-27T11:48:00+00:00 June 27th, 2006|கவிதை|8 Comments

எப்போது நுழைந்தாய் என்னுள்?

கல் தோன்றி மண் தோன்றாகாலத்தில் தோன்றியிருப்பினும்வயதில்லாமல் திரிவதால்வயதுப் பாராமல் பற்றிக் கொள்கிறாயோ?மனதிற்கு அருகில் இருக்கும்கருவறையில் கற்க தொடங்கியதால்உள்ளத்தை மட்டுமேவிரும்பச் செய்தாயோ?கண்டவுடன் வராததால்நட்பாக விதைத்தாயோ?வேற்று கருத்து வாக்குவாதத்தின்வெற்றியில் வேருட்டாயோ?மின்னஞ்சல்களை கண்டுமின்னலடித்ததில் முளைத்தாயோ?என்னைவிட அதிகம்என்னை அறிந்திருந்ததில்அடைப்பட்டேனோ?என்னை எனக்கேஉணர்த்தி உயர்த்த நினைத்ததில்உறைந்தேனோ?தொலைவில் நீ சென்றால்தவிப்பில் நான் தொலைந்தேன்!அழையா விருந்தாளியாகவந்துவிட்டதால்மனதிற்கும் மூளைக்கும் போராட்டம்.தோற்றது நானென்றாலும்ஜெயித்தது காதல்தானே!

By | 2006-06-26T12:16:00+00:00 June 26th, 2006|கவிதை|5 Comments

வாடகை வீடு – வில்லா 72

வீடு தேடினோம் பாலைவனத்தில்விரைந்து நடந்தோம் பாதசாலையில்வின்னை முட்டும் கட்டிடங்கள் இடையில்வீதி வீதியாய் வரிசை வீடுகள்விசால வராண்டா வேண்டாம்டா எனக்குநிம்மதி குடியிருக்கும் வீட்டை காட்டுடாவில்லை வில்லையாய் குட்டி வீடுகள்கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத இல்லங்கள்வெளிச்சம் நிறைந்த திறந்த வெளிவில்லாவானாலும் பாலையிலே பூத்த சோலைவயல்காடு போல் புற்கள் அளவாய்வேப்பம் ஒன்று முருங்கை இரண்டாய் வளர்ந்து நிற்கவெட்கத்தில் வெக்கிய மல்லி கொடி கவிழ்ந்து படறவிக்கி விக்கி என்று பூனை பெயரை விளிக்கும் கிளிவிடிந்ததும் சூரியனை கண்டு கூவ சேவல்விட்டு விடாமல் பட்டென்று குடியேறினோம் [...]

By | 2006-06-26T11:41:00+00:00 June 26th, 2006|கவிதை|4 Comments

விச்சித்திர பிறவி

விரும்பாத வேதனை வந்தால்விரும்ப கூடியவர்கள் நினைவில் வரும்.வலியால் துடிக்கும் போதுவழிவகுக்கும் துணையை தேடி.வினோதமானவனே, உனக்கோ...வந்தது வந்தது வேதனை வந்ததுவேதனையோடு கூடிய வலியும் வந்ததுவலியிலும் ஞானம் வந்ததுவெற்றி பெற்றது போல் உயரம் தெரிந்ததுவிதிவிளக்கு போல் ஒளி தெரிந்ததுவெற்றிலைக்காட்டையும் இரசிக்க தோன்றியதுவெற்று மனலையும் விரும்ப செய்ததுவெறித்த கண்ணால் செதுக்க முடிந்ததுவற்றாத ஊற்றாக கற்பனை பிறந்ததுவர்ணித்தபடியே வேதனையும் குறைந்தது.தன்னை மறக்க எழுதும் கவிஞனுக்குதன்னை மறந்து கவிதை பிறந்தது.

By | 2006-06-25T13:12:00+00:00 June 25th, 2006|கவிதை|0 Comments

காதல் கடிதம்

பெயரில்லாததால்பெரிதுப்படுத்தவில்லைஅறிவுறுத்தியிருந்ததால்அலட்சியப்படுத்தவில்லைகவரும் காகித அட்டையால்கவிழ்ந்துவிடவுமில்லைஇதுவரை யாரென்று தெரியவில்லைஇருப்பினும் சந்திக்க விருப்பம்விருப்பத்தை சொல்லவல்லவிபரீதம் காதல் எனவே.

By | 2006-06-19T15:46:00+00:00 June 19th, 2006|கவிதை|8 Comments

பாதுகாப்பு!

துபாய் நிலா வெளிச்சத்தில்நள்ளிரவில்துணையின்றிபூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவேமூடிய கடைகளை பார்த்தபடிஎங்கோ கேட்கும்வாகன சத்தத்தை உணர்ந்தபடிதெரு விளக்கின்பிரகாசத்தை இரசித்தப்படிசுத்தமான அகல தெருவில்நிமிர்ந்த நடையுடனும்நேர் கொண்ட பார்வையுடனும்காசு நிறைந்த கைப்பையுடனும்விலைமதிப்புள்ள பொருட்களுடனும்விலைமதிப்பில்லா கற்புடனும்சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்சிக்காமல் வீடு திரும்பும்போதுஆதங்கம் தொட்டதுஎப்போது விடியும்என் தேசம் இப்படியென்று!www.thisaigal.com/jan06/jazeelakavi.htm

By | 2006-06-12T10:08:00+00:00 June 12th, 2006|கவிதை|6 Comments