எப்போது நுழைந்தாய் என்னுள்?

கல் தோன்றி மண் தோன்றா
காலத்தில் தோன்றியிருப்பினும்
வயதில்லாமல் திரிவதால்
வயதுப் பாராமல் பற்றிக் கொள்கிறாயோ?

மனதிற்கு அருகில் இருக்கும்
கருவறையில் கற்க தொடங்கியதால்
உள்ளத்தை மட்டுமே
விரும்பச் செய்தாயோ?

கண்டவுடன் வராததால்
நட்பாக விதைத்தாயோ?

வேற்று கருத்து வாக்குவாதத்தின்
வெற்றியில் வேருட்டாயோ?

மின்னஞ்சல்களை கண்டு
மின்னலடித்ததில் முளைத்தாயோ?

என்னைவிட அதிகம்
என்னை அறிந்திருந்ததில்
அடைப்பட்டேனோ?

என்னை எனக்கே
உணர்த்தி உயர்த்த நினைத்ததில்
உறைந்தேனோ?

தொலைவில் நீ சென்றால்
தவிப்பில் நான் தொலைந்தேன்!

அழையா விருந்தாளியாக
வந்துவிட்டதால்
மனதிற்கும் மூளைக்கும் போராட்டம்.

தோற்றது நானென்றாலும்
ஜெயித்தது காதல்தானே!

By | 2006-06-26T12:16:00+00:00 June 26th, 2006|கவிதை|5 Comments

5 Comments

  1. சொல்ல வந்த விசயம் நல்லா இருக்குங்க வார்த்தைகளை மாற்றி போட்டிருக்கலாமுன்னு தோன்றுகிறது. இதை சொல்ற அளவுக்கு எனக்கு விசயம் எல்லாம் தெரியாது, எதோ தோணிணதை சொன்னேன்.

  2. /தோற்றது நானென்றாலும்
    ஜெயித்தது காதல்தானே!/

    ம்ம்…காதலுக்காக விட்டுக் கொடுத்துவிட்டீர்களோ? 🙂

  3. Naveen Prakash June 26, 2006 at 1:33 pm - Reply

    //தொலைவில் நீ சென்றால்
    தவிப்பில் நான் தொலைந்தேன்!//

    🙂 அழகு !

  4. சேதுக்கரசி June 26, 2006 at 4:58 pm - Reply

    அட.. ஒலி FM வானொலியில் நீங்க காதலர் தினத்துக்கு வாசிச்ச கவிதை! நல்லா இருக்கு ஜெஸிலா.

  5. ஜெஸிலா June 27, 2006 at 11:44 am - Reply

    குமரன்: எப்படி எழுதனும்னு சொல்லி தந்தீங்கன்னா நல்லா இருக்கும்.

    அருட்பெருங்கோ: விட்டுக் கொடுப்பது நல்ல பழக்கமில்லையா? 😉

    நன்றி நவீன் பிரகாஷ்

    பரவாயில்லையே சேதுக்கரசி நல்லாவே ஞாபகம் வைத்திருக்கிறீங்களே! நன்றி.

Leave A Comment