நட்பு

தேர்வில் எட்டிப் பார்த்துஎழுதும் போதும்ஆபாச படத்தைபார்க்க கூடாத வயதில்பார்க்கத் துணிந்த போதும்கல்லூரி மறந்து ஊர் சுற்றும் போதும்சுருட்டு, மது, மாதுஎன்ற போதும்காதலியுடன்ஓடிப் போக நினைக்கையிலும்தடுத்து நிறுத்திஎடுத்துரைக்காமலிருக்கமுடியவில்லை என்னால்உளியாகத்தான் எனைநினைத்திருந்தேன்உடைப்பேன் நட்பையென்றுஅறியாமல்

By | 2006-12-17T09:08:00+00:00 December 17th, 2006|கவிதை|0 Comments

சுதந்திர தினம்

வலைப்பூ பக்கம் வந்து நாளாச்சே அதான் எட்டிப்பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். எட்டிப்பார்த்துட்டு பதிவுப் போடாம சும்மா போனா எப்பட,ி அதான் ஏற்கெனவே 'திசைகள்' மின்னிதழில் வந்த கவிதையை இடுகிறேன்.மாதம் முழுவதும்சிறை பிடித்துசாகும் நிலையில்ஆலிவ் இலை தந்துதிறந்து விட்டுபறக்க செய்துகைத்தட்டிஇனிப்பு வழங்கிகொண்டாடினர்சுதந்திர தினம்

By | 2006-10-15T14:30:00+00:00 October 15th, 2006|கவிதை|3 Comments

உறவில்லாத உறவு

பிறந்தவுடன்பெற்ற உறவில்லைபின்னாளில்உற்ற உறவும் இல்லைஉன் சந்திப்பேஎன் சந்தோஷமானதுமலிவாக மகிழ்ச்சி என்றால்அதன் மறுபெயர் நீ என்பேன்என் பிரச்சனைகளுக்குயோசனை கிடங்கானாய்பாதிப்பில் பாசி படிந்தால்பூசி தேற்றுபவன் நீ தானேஎன் அறிவு வறுமையிலும்ஆதரவாய் நீ நின்றாய்நீயே என்இன்பத்தின் ஆரம்பம்தவிப்பின் துணைதனிமையின் தீர்வுதுன்பத்தின் தேடல்என் உளறல்களையும்காது கொடுத்து கேட்டாய்பதிலாக கனிவாய் மொழி பேசினாய்கருணை பார்வை வீசினாய்தேவைக்கு தோள் கொடுத்தாய்என் ஐம்புலனையும் ஆட்சி செய்யும்புதிய பிரதிநிதியேநீ என்சாதியோ, மதமோ, மொழியோ, ஊரோ,காதலோ, உடன்பிறப்போ, இரத்த பந்தமோஇல்லாதபோதுஉணர்வால் உணர்த்தியஉறவில்லாத உறவாகஎங்ஙனம் முளைத்தாய்?

By | 2006-08-07T09:58:00+00:00 August 7th, 2006|கவிதை|17 Comments

நெஞ்சு பொறுக்குதில்லையே…

போடும் பருக்கைகளைபகிர்ந்து உண்டு பழகிவிட்டதுபறவை இனம்நாய் பூனையும் கூடசேர்ந்து உண்ணகற்றுக் கொண்டதுமனிதர்களாகிய நாம்தாம்தவித்தாலும் தாகத்தைதொலைக்க தவிர்க்கிறோம்நதிநீரை

By | 2006-07-31T08:13:00+00:00 July 31st, 2006|கவிதை|9 Comments

லேசா லேசா…

பூக்களின்வேர்வைபனித்துளிகள்**அலை அடித்துகலைந்த கற்பனைமணல் வீடு**விலைப்போகாதவேதனைக்குரிய விளைச்சல்முதிர்க்கன்னி**காக்கை பயந்ததோ இல்லையோகுழந்தையின் வயிறு நிறைந்ததுசோலைக்காட்டு பொம்மை**என் பெயர்கரைந்ததுஅவள் நாக்கில்**இந்த அனாதையுடன்விளையாட வந்துவிடுதாயில்லா பறவையே!**குஞ்சு பறவையேபறந்து போய்விடுபூனை வரும் நேரம்**உயரத்திலிருந்து விழும்உனக்கு வலிக்கவில்லையோஅருவி**

By | 2006-07-26T05:47:00+00:00 July 26th, 2006|கவிதை|16 Comments

ஆதங்கம்!

புது வண்டியில்முதல் விபத்துஎலுமிச்சை**பால் அபிஷேகம்பட்டினியில் அழுததுபச்சிளங்குழந்தை**உடையாமல் இருக்கஉடைத்தார்கள்பூசனிக்காய்**நீ தூங்கினாலும்சிணுங்கி எழுப்பியதுகொலுசு**மழையில் நனையாதபூமுழுநிலா**மழையில் நனையாமல் இருக்கநான் நனைந்தேன்குடை**உபசரித்து விரித்ததுமுடிந்த பின்எச்சில் இலை**காலி பணப்பைவெதும்பும் திருடன்கடன் அட்டை**உச்சரிப்பு சிதைவுஇந்திப் பாடகர்பிரபலமானது தமிழ்பாட்டு**நூறுநாள் ஓட்டம்தமிழ்படம்ஆங்கிலத்தில் தலைப்பு**

By | 2006-07-18T07:50:00+00:00 July 18th, 2006|கவிதை|13 Comments

குருதி வியர்வை

விவசாயின் காயம்மருந்துஉழவு மண்**செத்தால்தான்சோறுசாவு கூத்தாடி**கடன்பட்டவனின்இரத்த வாடைவட்டிப்பணம்**பிணம் எரிந்தால்தான்எரியும் வயிற்றுக்கு சோறுவெட்டியான் வாழ்க்கை**நிலத்தில் வயிற்றை கழுவவானத்தை நோக்கினர்விவசாயிகளின் வறுமை**உயர்ந்தது உன் கொள்கையெனகைத்தட்டி உயர்த்தி விட்டோம்உயர்ந்தது விலைவாசியும்.**எச்சிலை சேர்த்துதாகத்தை தொலைத்தனர்தண்ணீர் பஞ்சம்**பழைய சன்னல் திரையில்புது பாவாடைஏழை குடியாள்**

By | 2006-07-13T07:25:00+00:00 July 13th, 2006|கவிதை|10 Comments

மரணப் போட்டி

அடக்கம் செய்தனர் எனைஆடம்பரமில்லை, கூட்டமில்லைகண்ணீருமில்லை, கவலையும் தென்படவில்லைநான் நிழலாக சுவற்றில் மட்டும்நிசப்தத்திலும் நித்திரையில்லைஇறந்த பின்பும் நிம்மதியில்லைசெத்தும் சாகடித்திருந்தேன்குழந்தையை, அவள் தகப்பனுடன்குடித்து வண்டி செலுத்தினேன்இடித்து மரணித்தோம்யார் முந்தி, அதிலும் போட்டிஎன்னால் இரண்டு விதவைகள்நேற்று இருந்த நண்பர்கள்இன்று இருக்கவில்லைசந்தோஷத்தில் ஊற்றி திளைத்தனர்சடங்கில் எங்கோ தொலைந்தனர்நிறுவனம் நிரப்பியிருந்ததுஎன் இடத்தைகுடும்பத்தில் ஈடுகட்டமுடியுமாஎன் இடத்தை?இறந்த இதயமும்வெட்கத்தில் அழுதது‘அப்பா’ என்று அழுபவனைஅணைத்துக் கொள்ள துடித்ததுஇறப்பில் தெளிந்ததுஎன் போதை மட்டுமல்லஎன் பேதமையும்தான்கடந்த பின் விடிந்து பயன்?மணமற்ற மலர் படத்திற்குமீண்டும் பிறக்க பிடிக்கவில்லைவாழ பிடிக்காமலல்லமீண்டும் மரிக்க பிடிக்காமல்.

By | 2006-07-12T05:52:00+00:00 July 12th, 2006|கவிதை|9 Comments

உயிரினமே

குடத்தை கீழே வைக்காமல்நகர்ந்தது தண்ணீரை தேடிநத்தை**வண்ணங்களின் கலவையைகளவாடினேன் இறையிடமிருந்துபட்டாம்பூச்சி**வீட்டுக்குள்ளேவீட்டைக்கட்டியதுஎறும்புகள்**சேமிப்பை கற்றுக்கொண்டேன்ஒழுகினத்தை கற்றுக்கொண்டேன்எறும்புகளிடமிருந்து.**பூமியில்பிணைந்த வாழ்க்கைமண் புழுக்கள்**நிர்வாண குளியலைஒழிந்து பார்த்து ரசித்ததுசுவற்று பல்லி**கண்ணீரால்தான்கடல் கசந்ததோமீன்கள்**கனவில்லை காரணம் தூக்கமில்லைஓசை காதை பிளந்ததுகொசுக்கடி**ரங்கோலிஏமாற்றம்பசியுடன் எறும்புகள்**

By | 2006-07-11T06:38:00+00:00 July 11th, 2006|கவிதை|7 Comments

தாயின் தவிப்பு

(காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாட்டின் மெட்டுக்கேற்ப எழுதப்பட்டது)uyirin uyirae...uyirin uyiraenadhiyin madiyil kaathu kidaikindreaneera alaigaL neerai vaari mughathil iraithummuzhudhum vaerkindreanகண்ணின் மணியே கண்ணின் மணியேஉலகில் உதிக்க பார்த்து இருந்தேனேகருவில் துடித்தும் உதைத்தும் மிதித்தும் கடினம் கொடுத்தும்உணர்வில் ரசித்தேனேnagarum neruppai kozhundhu vetterindean...aNaindha pinbhum...analin maelirundeankaalaipaniyaaga yeNNai vaarikondaaynaeram kooda yedhiri aagivida...yughaNgaL aaga vaedam maarivida...aNaththu kondaayae...pinbhu yaenoa sendraayஅசையும் தேராய் மெல்ல நடந்திருந்தேன்பார்த்தும் பூத்தும் ... காத்துக் கொண்டிருந்தேன்சிப்பி முத்தாக [...]

By | 2006-07-09T06:12:00+00:00 July 9th, 2006|கவிதை|3 Comments