பாதுகாப்பு!

துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி
எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி
சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்
விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல் வீடு திரும்பும்போது
ஆதங்கம் தொட்டது

எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!

www.thisaigal.com/jan06/jazeelakavi.htm

By | 2006-06-12T10:08:00+00:00 June 12th, 2006|கவிதை|6 Comments

6 Comments

  1. தம்பி June 18, 2006 at 9:51 pm - Reply

    கவிதை நல்லா இருக்கு. நம்ம தேசத்தில் மட்டுமல்ல எல்லா தேசத்திலும்
    பெண்களுக்கு பாதுகாப்பு தேவைதான். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான் இதற்கு
    ஓரளவுக்கு தீர்வு காண முடியும்.

    தம்பி

  2. ஜெஸிலா June 19, 2006 at 6:45 am - Reply

    சரியா சொன்னீங்க தம்பி. ஆண்கள் ஒழுங்கா இருந்தாலே பெண்களுக்கு பெரிய பாதுகாப்புதான் 😉

  3. தம்பி June 20, 2006 at 11:25 am - Reply

    \சரியா சொன்னீங்க தம்பி. ஆண்கள் ஒழுங்கா இருந்தாலே பெண்களுக்கு பெரிய பாதுகாப்புதான் ;-)\

    இப்படி ஒட்டுமொத்தமா எல்லா ஆண்களை தாக்கிட்டிங்களேக்கா

  4. மஞ்சை மைந்தன் June 21, 2006 at 5:20 am - Reply

    மன்னர் ஆட்சிகள் நடக்கும் அரபு நாடுகளில் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியவில்லை என்று விலா வலிக்க பேசும் நம் ஊர் வாய் பேச்சு வீரர்கள் இதை அனுபவ பூர்வமாக உணர்ந்தாக வேண்டும்.

    நன்றி மஞ்சை மைந்தன்

  5. ஜெஸிலா June 25, 2006 at 10:54 am - Reply

    விலா வலிக்க பேசுகிறவர்களை வலிக்காமல் ஊருக்கு அனுப்பிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் 😉

  6. G Gowtham August 9, 2006 at 10:22 am - Reply

    நியாயமான ஏக்கம்தான்.
    உங்கள் ஏக்கம் தீரும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

Leave A Comment