
அடக்கம் செய்தனர் எனை
ஆடம்பரமில்லை, கூட்டமில்லை
கண்ணீருமில்லை, கவலையும் தென்படவில்லை
நான் நிழலாக சுவற்றில் மட்டும்
நிசப்தத்திலும் நித்திரையில்லை
இறந்த பின்பும் நிம்மதியில்லை
செத்தும் சாகடித்திருந்தேன்
குழந்தையை, அவள் தகப்பனுடன்
குடித்து வண்டி செலுத்தினேன்
இடித்து மரணித்தோம்
யார் முந்தி, அதிலும் போட்டி
என்னால் இரண்டு விதவைகள்
நேற்று இருந்த நண்பர்கள்
இன்று இருக்கவில்லை
சந்தோஷத்தில் ஊற்றி திளைத்தனர்
சடங்கில் எங்கோ தொலைந்தனர்
நிறுவனம் நிரப்பியிருந்தது
என் இடத்தை
குடும்பத்தில் ஈடுகட்டமுடியுமா
என் இடத்தை?
இறந்த இதயமும்
வெட்கத்தில் அழுதது
‘அப்பா’ என்று அழுபவனை
அணைத்துக் கொள்ள துடித்தது
இறப்பில் தெளிந்தது
என் போதை மட்டுமல்ல
என் பேதமையும்தான்
கடந்த பின் விடிந்து பயன்?
மணமற்ற மலர் படத்திற்கு
மீண்டும் பிறக்க பிடிக்கவில்லை
வாழ பிடிக்காமலல்ல
மீண்டும் மரிக்க பிடிக்காமல்.
Nalla irukku jesila.. mukiyama yezhuthup pizhai illama irukku.
Selvi
// நிறுவனம் நிரப்பியிருந்தது
என் இடத்தை
குடும்பத்தில் ஈடுகட்டமுடியுமா
என் இடத்தை? //
நிறுவனம் மட்டுமில்லை யாராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி..
// இறப்பில் தெளிந்தது
என் போதை மட்டுமல்ல
என் பேதமையும்தான்
கடந்த பின் விடிந்து பயன்? //
குடித்து வண்டி ஓட்டும் ஆசாமிகளும், வண்டி ஓட்டாட்டியும் குடித்தே குடும்பத்தை காலி சேய்யும் ராமசாமி(எங்க அப்பா தான்) போன்ற ஆட்களும் குடியின் கொடுமையை உணர்வார்களா…
நல்ல கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்….
//அடக்கம் செய்தனர் எனை
ஆடம்பரமில்லை, கூட்டமில்லை
கண்ணீருமில்லை, கவலையும் தென்படவில்லை
நான் நிழலாக சுவற்றில் மட்டும்//
முழு உருவம் தான் ஒருவனை அடையாளம் காட்டுகிறது , அந்த உருவம் கூட இல்லையே அடக்கம் செய்ய, நீங்கள் சொல்வது போல் நிழலா௧ தான் மறைந்து விட்டான் குடும்பத்தை விட்டு.
உங்கள் டெம்ப்ளேட் சூப்பர்…
கவிதையும் நல்லா இருக்கே…
பரிசு…
அதுதான் கிடைச்சிடுச்சே…
நல்லா இருக்குங்க இது போட்டிக்கு வாழ்த்துக்கள்…
ஜெஸிலா,
“நிசப்தத்திலும் நித்திரையில்லை
இறந்த பின்பும் நிம்மதியில்லை”
சத்தியமான வரிகள். நிம்மதியா இறப்பவர்கள் யாராவது இருக்காங்களா
ஒவ்வொருவரும் இதை செய்யாம விட்டோமெ அதை செய்யாம விட்டோமே என்ற பதைப்போட தான்
போய்சேருகிறார்கள்.
போட்டி கடுமையா இருக்கும் போல
வாழ்த்துக்கள்
நல்ல கவிதை. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதின் விளைவை அழகாக சித்தரித்து விட்டீர்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்திய, பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். பரிசு கிடைக்குமா என்று தெரியாது ஆனால் உங்கள் அனைவரின் வாழ்த்துகளே போதுமானது.
கவிதை அருமை.! ரொம்ப உருக்கமா இருந்தது.
வாழ்த்துக்கள்.