குருதி வியர்வை

விவசாயின் காயம்
மருந்து
உழவு மண்
**

செத்தால்தான்
சோறு
சாவு கூத்தாடி
**

கடன்பட்டவனின்
இரத்த வாடை
வட்டிப்பணம்
**

பிணம் எரிந்தால்தான்
எரியும் வயிற்றுக்கு சோறு
வெட்டியான் வாழ்க்கை
**

நிலத்தில் வயிற்றை கழுவ
வானத்தை நோக்கினர்
விவசாயிகளின் வறுமை
**

உயர்ந்தது உன் கொள்கையென
கைத்தட்டி உயர்த்தி விட்டோம்
உயர்ந்தது விலைவாசியும்.
**

எச்சிலை சேர்த்து
தாகத்தை தொலைத்தனர்
தண்ணீர் பஞ்சம்
**

பழைய சன்னல் திரையில்
புது பாவாடை
ஏழை குடியாள்
**

By | 2006-07-13T07:25:00+00:00 July 13th, 2006|கவிதை|10 Comments

10 Comments

  1. //பழைய சன்னல் திரையில்
    புது பாவாடை
    ஏழை குடியாள்//
    நல்ல பதிவு.
    இன்னும் சிறப்பாக உங்களால் ஹைகூ எழுதிட முடியுமென்று நம்புகிறேன்.
    கூடுமான வரை சொந்த அனுபவங்களில் இருந்து எழுத முயலுங்கள்.

  2. ///
    பழைய சன்னல் திரையில்
    புது பாவாடை
    ஏழை குடியாள்
    ///
    ///
    பிணம் எரிந்தால்தான்
    எரியும் வயிற்றுக்கு சோறு
    வெட்டியான் வாழ்க்கை
    ///

    இது ரெண்டும் நல்லா இருக்குங்க….

    நிறைய ஹைக்கூதான் எழுதறீங்க ஹைக்கூதான் ஸ்பெசாலிட்டி போல…

    ஹைக்கூ தவிர மத்ததும் எழுதுங்க…

  3. ILA(a)இளா July 13, 2006 at 10:00 am - Reply

    விவசாயத்தைப்பற்றி குறல் குடுக்க இன்னொரு இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்

  4. நமது தமிழ் மண்ணை நினைவில் வைத்துள்ளீர்களே! நீயே உழவுப் பென்.
    என்றும்
    http://www.rashmiatamilnet.blogspot.com
    http://www.tntjbismiamr.blogspot.com

  5. காதலை பாடுபவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான குரல், இந்த குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

  6. தம்பி July 16, 2006 at 5:55 am - Reply

    ம்ம் கலக்குங்க

    “நிலத்திற்கு நீராதாரம்
    உழவனுக்கு நீராகரம்”

    ஹி ஹி ஹி எல்லாம் உங்களை பாத்துதான்

    அன்புடன்
    தம்பி

  7. ஜெஸிலா July 16, 2006 at 8:07 am - Reply

    குமரன் நீங்க சொன்னதற்காகவே வேறு எழுதியிருக்கிறேன் அய்கூவை தவிர.

    யாழிசைச்செல்வன்: கண்டிப்பாக இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.

    நன்றி இளா.

    மண்ணை மறக்க முடியுமா முஜீப்?

    வாழ்த்திய பாலசந்தர் கணேசனுக்கு நன்றி.

    நல்லா இருக்கே கதிர், நிறைய எழுதுங்க.

  8. //உயர்ந்தது உன் கொள்கையென
    கைத்தட்டி உயர்த்தி விட்டோம்
    உயர்ந்தது விலைவாசியும்.//
    ஜெஸி…
    உங்கள் கவிதைகள் எல்லா தளங்களையும் நன்றாக அலசுகிறது.

    கோவி.க, தளங்கள் அழுக்கா இருக்குதான்னு ? கேட்டு வைக்காதீங்க 🙂

  9. Anonymous July 23, 2006 at 1:29 pm - Reply

    naveena kavithai try pannungalen..

    Basho voda haiku padinga it’s very deep and beautiful …,,

    ayyanar.v@gmail.com

  10. ஜெஸிலா July 23, 2006 at 2:21 pm - Reply

    நவீன கவிதையா? அப்படின்னா 😉

    கொஞ்சம் சொல்லிதாங்க கத்துக்கிட்டு எழுதிப்பார்க்கிறேன். 😉

Leave A Comment