பெண்ணே…
கொலை செய்தால் ஊரறியவலி அவளுக்குள்கருசிதைவு**பெண்கள் கேட்டால் -விபச்சாரம்ஆண்கள் கேட்டால்வரதட்சணை**நாளைய கல்பனாசாவ்லாவைஇரையாக்கினால் கள்ளிப்பாலுக்குபெண் சிசுக் கொலை**சாதி தீயினால்துணிந்து எரிந்தால்‘சத்தி’**தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்அம்பலத்தில் ஆடினால்அழகி போட்டி**
துளிப்பா
எச்சிலை சேர்த்துதாகத்தை துளைத்தார்தண்ணீர் பஞ்சம்**உயிர்மேட்டுக்குடி பகற்டுடுப்பானதுபட்டு பூச்சி**முகத்தில்அழகிய வளைவுசிரிப்பு.**மனம் அறிந்து கூறினேன்மனம் அழுததுகாயப்படுத்திய பொய்**மாலை காற்றில்கலைந்தது வண்ணம்காலை பொழுது.**
மறக்க முடியுமா?
நிலவை வான் மறக்குமாவான் உலகை மறக்குமாஉலகம் பூமியை மறக்குமாபூமி நிலத்தை மறக்குமாநிலம் பாதையை மறக்குமாபாதை கால்சுவடை மறக்குமாகால்சுவடு உரிய கால்களை மறக்குமாகால்கள் வழிகாட்டிய கண்களை மறக்குமாகண்கள் காக்கும் இமையை மறக்குமாஇமை உடலை மறக்குமாஉடல் உயிரை மறக்குமாஉயிர் எதுவும் மறக்குமாஎதுவும் எதையும் மறக்காத போதுஎன்னை மட்டும் நீ ஏன் மறந்தாய்?
அய்கூ வடிவம்
தொண்டையில் மேகம் கூடிகண்களில் மழை வந்ததுதேங்கி நின்றது பிரிவு.**இரு கைகளுக்கு நடுவேநகர்கிறது நாட்கள்குயவன்.**சூரியனுக்கு கீழ்எல்லாம் வெளிச்சம்கடற்கரை குளியல்**மயங்க வைத்ததும் அதுதான்காயப்படுத்தியதும் அதுதான்சுழறும் நாக்கு.**
போலி வார்த்தைகள்
உன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்நீ வீசும் பார்வையின் ஒளிஎன்னை வந்து கிள்ளுது.உன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்நீ விடும் மூச்சு காத்துஉன் ஏக்கம் சொல்லி கொல்லுதுஉன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்வெளிவரும் உன் வேயர்வை துளிகள் ஆவியாகிமேகமழையோடு என்னை தொட்டு செல்லுதுஉன் உதடுகள் என்னைஅழைக்காமல் இருக்கலாம்என்னை நினைத்து தளையணைக்கு அளிக்கும் ஸ்பரிசம்என்னை [...]
எப்போது நுழைந்தாய் என்னுள்?
கல் தோன்றி மண் தோன்றாகாலத்தில் தோன்றியிருப்பினும்வயதில்லாமல் திரிவதால்வயதுப் பாராமல் பற்றிக் கொள்கிறாயோ?மனதிற்கு அருகில் இருக்கும்கருவறையில் கற்க தொடங்கியதால்உள்ளத்தை மட்டுமேவிரும்பச் செய்தாயோ?கண்டவுடன் வராததால்நட்பாக விதைத்தாயோ?வேற்று கருத்து வாக்குவாதத்தின்வெற்றியில் வேருட்டாயோ?மின்னஞ்சல்களை கண்டுமின்னலடித்ததில் முளைத்தாயோ?என்னைவிட அதிகம்என்னை அறிந்திருந்ததில்அடைப்பட்டேனோ?என்னை எனக்கேஉணர்த்தி உயர்த்த நினைத்ததில்உறைந்தேனோ?தொலைவில் நீ சென்றால்தவிப்பில் நான் தொலைந்தேன்!அழையா விருந்தாளியாகவந்துவிட்டதால்மனதிற்கும் மூளைக்கும் போராட்டம்.தோற்றது நானென்றாலும்ஜெயித்தது [...]