வாடகை வீடு – வில்லா 72
வீடு தேடினோம் பாலைவனத்தில்விரைந்து நடந்தோம் பாதசாலையில்வின்னை முட்டும் கட்டிடங்கள் இடையில்வீதி வீதியாய் வரிசை வீடுகள்விசால வராண்டா வேண்டாம்டா எனக்குநிம்மதி குடியிருக்கும் வீட்டை காட்டுடாவில்லை வில்லையாய் குட்டி வீடுகள்கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத இல்லங்கள்வெளிச்சம் நிறைந்த திறந்த வெளிவில்லாவானாலும் பாலையிலே பூத்த சோலைவயல்காடு போல் புற்கள் அளவாய்வேப்பம் ஒன்று முருங்கை இரண்டாய் [...]
விச்சித்திர பிறவி
விரும்பாத வேதனை வந்தால்விரும்ப கூடியவர்கள் நினைவில் வரும்.வலியால் துடிக்கும் போதுவழிவகுக்கும் துணையை தேடி.வினோதமானவனே, உனக்கோ...வந்தது வந்தது வேதனை வந்ததுவேதனையோடு கூடிய வலியும் வந்ததுவலியிலும் ஞானம் வந்ததுவெற்றி பெற்றது போல் உயரம் தெரிந்ததுவிதிவிளக்கு போல் ஒளி தெரிந்ததுவெற்றிலைக்காட்டையும் இரசிக்க தோன்றியதுவெற்று மனலையும் விரும்ப செய்ததுவெறித்த கண்ணால் செதுக்க முடிந்ததுவற்றாத ஊற்றாக [...]
காதல் கடிதம்
பெயரில்லாததால்பெரிதுப்படுத்தவில்லைஅறிவுறுத்தியிருந்ததால்அலட்சியப்படுத்தவில்லைகவரும் காகித அட்டையால்கவிழ்ந்துவிடவுமில்லைஇதுவரை யாரென்று தெரியவில்லைஇருப்பினும் சந்திக்க விருப்பம்விருப்பத்தை சொல்லவல்லவிபரீதம் காதல் எனவே.
பாதுகாப்பு!
துபாய் நிலா வெளிச்சத்தில்நள்ளிரவில்துணையின்றிபூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவேமூடிய கடைகளை பார்த்தபடிஎங்கோ கேட்கும்வாகன சத்தத்தை உணர்ந்தபடிதெரு விளக்கின்பிரகாசத்தை இரசித்தப்படிசுத்தமான அகல தெருவில்நிமிர்ந்த நடையுடனும்நேர் கொண்ட பார்வையுடனும்காசு நிறைந்த கைப்பையுடனும்விலைமதிப்புள்ள பொருட்களுடனும்விலைமதிப்பில்லா கற்புடனும்சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்சிக்காமல் வீடு திரும்பும்போதுஆதங்கம் தொட்டதுஎப்போது விடியும்என் தேசம் இப்படியென்று!www.thisaigal.com/jan06/jazeelakavi.htm
வாழ்வே உனக்காக
கால காலமாக இயற்கையோடுவளர்ந்த நான்அதை இரசிக்க மறந்ததேனோ?உன்னுடன் காலம் கடந்த போதுஎல்லாம் புது உலகமாக மாறியதேனோ?புல் நுனியில் பனிதுளியில் இருந்துபூத்து குலுங்கும் பூக்கள் வரைபுதிதாக தோன்றியது ஏனோ?புத்தம் புது பூமியாகஉன்னுடன் மட்டும் தோன்றுவதேனோ?பிரிவென்றால் புரியாது இருந்தேன்பெற்றோரை விட்டு பிரிந்துஉன்னிடம் ஒப்படைக்கும் போது கூடஎனக்கு அது பிரிவாக வலிக்காததேனோ?உன்னை பிரிந்த [...]
பெட்டிக்குள் அடங்காதது
ஆண்கள் இயல்பு கொண்டஆண் வண்டுகள்மலர் விட்டு மலர் தாவிமூங்கில்களுக்கு அருகே வளர்ந்திருக்கும்காட்டு பூக்களின்தேனை மட்டும் உண்ணாமல்துளைக்கவும் துடங்கியதுமூங்கிலை.தூது போன தென்றல்புல்லாங்குழலென எண்ணிமூங்கில் துளையில் நுழைந்துராகம் எழுப்பியது.மரங்கொத்தி ராகத்திற்கேற்பமரத்தை தட்டி தாளம் துவங்கியது.குயில் சூழலுக்கேற்பபாடி மகிழ்ந்ததுமர பொந்துக்கள் ஒலிப்பெறுக்கியாக மாறபுல்வெளி மேடையாக இருக்கநேற்று பெய்த மழையின் சாரல் துளிகள்புல்நுனியின் ஓரம் [...]