நெஞ்சு பொறுக்குதில்லையே…

போடும் பருக்கைகளைபகிர்ந்து உண்டு பழகிவிட்டதுபறவை இனம்நாய் பூனையும் கூடசேர்ந்து உண்ணகற்றுக் கொண்டதுமனிதர்களாகிய நாம்தாம்தவித்தாலும் தாகத்தைதொலைக்க தவிர்க்கிறோம்நதிநீரை

By | 2006-07-31T08:13:00+00:00 July 31st, 2006|கவிதை|9 Comments

லேசா லேசா…

பூக்களின்வேர்வைபனித்துளிகள்**அலை அடித்துகலைந்த கற்பனைமணல் வீடு**விலைப்போகாதவேதனைக்குரிய விளைச்சல்முதிர்க்கன்னி**காக்கை பயந்ததோ இல்லையோகுழந்தையின் வயிறு நிறைந்ததுசோலைக்காட்டு பொம்மை**என் பெயர்கரைந்ததுஅவள் நாக்கில்**இந்த அனாதையுடன்விளையாட வந்துவிடுதாயில்லா பறவையே!**குஞ்சு பறவையேபறந்து போய்விடுபூனை வரும் நேரம்**உயரத்திலிருந்து விழும்உனக்கு வலிக்கவில்லையோஅருவி**

By | 2006-07-26T05:47:00+00:00 July 26th, 2006|கவிதை|16 Comments

இல்லாமை இல்லை!?

தானத்தில் சிறந்த தானம் எது?சமாதானம், நிதானம், பிரதானம் என்று ஆரம்பித்து விடாதீர்கள்.வரவில்லாத சேவை நிறுவனங்கள் (Non-profit organisation) பற்றியோ அல்லது உடல் உறுப்பு தானம், இரத்த தானம் என்ற விஷயங்கள் பற்றியது என்று எதிர்பார்த்து விடாதீர்கள்.நான் சொல்ல இல்ல இல்ல எழுத வருவது நம்மால முடிந்த செய்ய கூடிய சின்ன தரும சிந்தனைகள் பற்றியது.தானம் என்கிற இந்த மூன்று எழுத்துக்குள் எவ்வளவு பெரிய விஷயங்களெல்லாம் அடங்கி இருக்கின்றன். ஆனால் தானத்தின் அடிப்படையென்று பார்த்தால் அன்பு செலுத்துவதிலிருந்து ஆரம்பமாகுகிறது.ம்ருதுவாக்ய [...]

By | 2006-07-23T05:20:00+00:00 July 23rd, 2006|அக்கறை|7 Comments

தனி மரம்

பரபரப்பான சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகக் கட்டிடம். பத்து வருடங்களுக்கு மேலாகியும் புதிதாகவே இருந்தது. சாளரத்தின் கண்ணாடிகள் கூட தினம் துடைப்பதால் பளிச்சென்று இருந்தன.காலையில் தினமும் வாசனைத் திரவம் இங்கும் அங்கும் தெளித்திருந்ததால் உள்ளே நுழைந்ததுமே அந்த இடமே கமகமக்கச் செய்திருந்தது. கதவின் இரு பக்கமும் செடிகள் தொட்டியில் வளர்ந்திருந்தன. வெளியில் இருந்து வருபவர்கள் உட்காருவதற்கு சொகுசான இருக்கைகளும், அவர்கள் காத்திருக்கும் நேரம் தெரியாமலிருக்க படிப்பதற்கு நிறைய நாளிதழ்களும், மாத இதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.உள்ளே நுழைந்ததும் உடலே [...]

By | 2006-07-20T05:35:00+00:00 July 20th, 2006|சிறுகதை|2 Comments

ஆதங்கம்!

புது வண்டியில்முதல் விபத்துஎலுமிச்சை**பால் அபிஷேகம்பட்டினியில் அழுததுபச்சிளங்குழந்தை**உடையாமல் இருக்கஉடைத்தார்கள்பூசனிக்காய்**நீ தூங்கினாலும்சிணுங்கி எழுப்பியதுகொலுசு**மழையில் நனையாதபூமுழுநிலா**மழையில் நனையாமல் இருக்கநான் நனைந்தேன்குடை**உபசரித்து விரித்ததுமுடிந்த பின்எச்சில் இலை**காலி பணப்பைவெதும்பும் திருடன்கடன் அட்டை**உச்சரிப்பு சிதைவுஇந்திப் பாடகர்பிரபலமானது தமிழ்பாட்டு**நூறுநாள் ஓட்டம்தமிழ்படம்ஆங்கிலத்தில் தலைப்பு**

By | 2006-07-18T07:50:00+00:00 July 18th, 2006|கவிதை|13 Comments

திருமணம் – வாழ்வின் மாற்றம்

திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு வாழ்வின் அர்த்தமுள்ள அவசியமான திருப்புமுனை என்று சொல்வதைவிட வாழ்விற்கே புது உருவம் தரும் தருணம் எனலாம்.திருமணத்தின் போது புகைப்பட நிபுணர் நகைச்சுவைக்காக சொல்வது, ‘கடைசியாக ஒருமுறை சிரிச்சுடுங்க பார்க்கலாம்’ என்று. அது கடைசி சிரிப்பா அல்லது வாழ்வின் ஆரம்பமா என்று நாம் வாழ்வதை பொறுத்தே அமையும்.திருமணம் வாழ்வின் தரம் மாறுவது, மேம்படுவது மட்டுமல்லாமல் வாழ்வையே மொத்தமாக மாற்றிவிடுவது பலப்பேருடைய அனுபவமாக இருக்கலாம். இரு மனம் கொண்ட வாழ்வில் பல [...]

குருதி வியர்வை

விவசாயின் காயம்மருந்துஉழவு மண்**செத்தால்தான்சோறுசாவு கூத்தாடி**கடன்பட்டவனின்இரத்த வாடைவட்டிப்பணம்**பிணம் எரிந்தால்தான்எரியும் வயிற்றுக்கு சோறுவெட்டியான் வாழ்க்கை**நிலத்தில் வயிற்றை கழுவவானத்தை நோக்கினர்விவசாயிகளின் வறுமை**உயர்ந்தது உன் கொள்கையெனகைத்தட்டி உயர்த்தி விட்டோம்உயர்ந்தது விலைவாசியும்.**எச்சிலை சேர்த்துதாகத்தை தொலைத்தனர்தண்ணீர் பஞ்சம்**பழைய சன்னல் திரையில்புது பாவாடைஏழை குடியாள்**

By | 2006-07-13T07:25:00+00:00 July 13th, 2006|கவிதை|10 Comments

மரணப் போட்டி

அடக்கம் செய்தனர் எனைஆடம்பரமில்லை, கூட்டமில்லைகண்ணீருமில்லை, கவலையும் தென்படவில்லைநான் நிழலாக சுவற்றில் மட்டும்நிசப்தத்திலும் நித்திரையில்லைஇறந்த பின்பும் நிம்மதியில்லைசெத்தும் சாகடித்திருந்தேன்குழந்தையை, அவள் தகப்பனுடன்குடித்து வண்டி செலுத்தினேன்இடித்து மரணித்தோம்யார் முந்தி, அதிலும் போட்டிஎன்னால் இரண்டு விதவைகள்நேற்று இருந்த நண்பர்கள்இன்று இருக்கவில்லைசந்தோஷத்தில் ஊற்றி திளைத்தனர்சடங்கில் எங்கோ தொலைந்தனர்நிறுவனம் நிரப்பியிருந்ததுஎன் இடத்தைகுடும்பத்தில் ஈடுகட்டமுடியுமாஎன் இடத்தை?இறந்த இதயமும்வெட்கத்தில் அழுதது‘அப்பா’ என்று அழுபவனைஅணைத்துக் கொள்ள துடித்ததுஇறப்பில் தெளிந்ததுஎன் போதை மட்டுமல்லஎன் பேதமையும்தான்கடந்த பின் விடிந்து பயன்?மணமற்ற மலர் படத்திற்குமீண்டும் பிறக்க பிடிக்கவில்லைவாழ பிடிக்காமலல்லமீண்டும் மரிக்க பிடிக்காமல்.

By | 2006-07-12T05:52:00+00:00 July 12th, 2006|கவிதை|9 Comments

உயிரினமே

குடத்தை கீழே வைக்காமல்நகர்ந்தது தண்ணீரை தேடிநத்தை**வண்ணங்களின் கலவையைகளவாடினேன் இறையிடமிருந்துபட்டாம்பூச்சி**வீட்டுக்குள்ளேவீட்டைக்கட்டியதுஎறும்புகள்**சேமிப்பை கற்றுக்கொண்டேன்ஒழுகினத்தை கற்றுக்கொண்டேன்எறும்புகளிடமிருந்து.**பூமியில்பிணைந்த வாழ்க்கைமண் புழுக்கள்**நிர்வாண குளியலைஒழிந்து பார்த்து ரசித்ததுசுவற்று பல்லி**கண்ணீரால்தான்கடல் கசந்ததோமீன்கள்**கனவில்லை காரணம் தூக்கமில்லைஓசை காதை பிளந்ததுகொசுக்கடி**ரங்கோலிஏமாற்றம்பசியுடன் எறும்புகள்**

By | 2006-07-11T06:38:00+00:00 July 11th, 2006|கவிதை|7 Comments

ஆறாவது அறிவு

செந்தில் குமரனின் அழைப்பிற்கிணங்க ஆறு சேர வந்தேன்.ஆறு அறிவு கொண்ட மனிதன் வலைப்பூவில் ஆறு பதிப்பதால் அவன் காயங்கள் ஆறிவிடபோவதுமில்லை, வடுக்களையும் ஆற்றிவிட போவதுமில்லை.என்ன ரொம்ப சீரியஸா போகுதேனு பயந்திடுடாதீங்க..எப்பவுமே இப்படிதான் நாம் ஒரு புத்தகம் படிக்கும் போது அந்த புத்தகத்திகிணங்க நம் மனநிலையும் மாறிவிடும். அதே போல் ஒரு படம் பார்க்கும் போதும். என்ன ஒப்புக் கொள்ள முடியவில்லையா? ஒரு அறையில் இருவர் சண்டைப்போட்டுக் கொண்டு காரசாரமாக விவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். [...]