Slumdog Millionaire – என் பார்வையில்

இறைவனின் மிகச் சிறந்த படைப்பில் ஒன்றுதான் நம்முடைய மூளை. எந்த ஒரு நிகழ்வையும் பார்க்கும் போது, கேட்கும் போது, இரசிக்கும் போது, உணரும் போது அது தொடர்புடைய எல்லா விஷயங்களும் பதிந்துவிடுகிறது – மனித மூளையில். அந்தப் பதிவின் பிரதிபலிப்பே நம் நினைவுகள்.

அப்படிப்பட்ட நினைவுகளில் தங்கிவிட்ட விஷயங்களிலிருந்து தனக்குத் தேவைப்படும் பதில்களை தேடியெடுத்து கேட்ட கேள்விகளுக்கு, படிக்காத கீழ்மட்டத்திலிருக்கும் இளைஞன் சரியான பதில்களைத் தந்து அசத்தியதை ஒப்புக் கொள்ள முடியாத ‘மில்லியனர்’ நிகழ்ச்சி நடத்துனர்
அந்த இளைஞனை காவலாளிகளிடம் ஒப்படைத்து அவர்கள் உலுக்கி எடுக்கும் போது அந்த சந்தேக முடிச்சுகள் வலியுடன் அவிழ்வதாக விரிகிறது ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம்.

பத்தே பத்து கேள்வியில் தலையெழுத்தே தலைகீழாக மாறிப்போகும், பணம் சம்பாதிக்கக் குறுக்கு வழியென்றெல்லாம் இல்லாமல். தன் காதலி இரசித்து பார்க்கும் நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள வேண்டும் அவளை நரகத்திலிருந்து வெளிக்கொணர வேண்டுமென்ற காரணங்களுக்காக மட்டும் வாய்ப்பெடுத்து கொள்கிறான் நாயகன்.

மனதிற்குப் பிடித்த நடிகரை காண மலத்தில் குதித்தவனுக்கு அவர் குறித்தான முதல்கேள்வியைக் கேட்கும் போது சிரமமில்லாமல் பதில் சொல்கிறான் முஸ்லிமாக இருந்தாலும் இராமன் கையிலிருப்பது வில்லும் அம்பும் என்று தனக்கு எப்படித் தெரியும் என்பதை, ரத்த வெறியும் மதமும் பிடித்த மனித மிருகங்கள் தன் தாயைக் கொன்ற வலியிலிருந்து வெளிப்படுத்துகிறான். அநீதியே வெற்றி கொள்ளும் வேலைகளாகப் பார்த்துப் பழகியவனுக்கு ‘சத்தியமே வெல்லும்’ என்ற சொற்றொடர் மீது நம்பிக்கை வராமல் அதனை ஊர்ஜிதப்படுத்த அவையோர்கள் பதில் அவசியமாகிறது. ‘தர்ஷன் தோ கன்ஷ்யாம்’ வரிகளுக்கு சுர்தாஸ் சொந்தக்காரர் என்பதை தன் கண்ணை இழக்க நேரிட்டிருக்கும் தருணத்திலிருந்து உயிருக்குத் தப்பியோடிய தருணம் சொல்லித் தந்திருக்கிறது. அமெரிக்க டாலர் 100இல் இருப்பது பெஞ்சமின் ப்ராங்களின் என்று தனக்கு தன் குருட்டு நண்பன் சொன்னது எப்படி மறந்து போயிருக்கும்??!!.

இப்படி ஒவ்வொரு கேள்விக்கான பதிலுக்கும் அவனது வாழ்க்கையோடு ஒட்டிய ஒவ்வொரு பின்னணி. அதுவும் எந்த ஆங்கில படத்திலும் ஒலிக்காத புதுமை நம் ஏ.ஆர்.ஆர். கைவண்ணத்தில் அருமையான உணர்வுப்பூர்வமான இசையலை.

வித்தியாசமான கதை தான் ஆனால் வழக்கம் போல் ஆயிரம் ஓட்டைகளும். படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ஆஸ்கர் வரை கொண்டாடப்படுவதன் காரணம்தான் புலப்படவேயில்லை. ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ கிடைத்தது பெரிய ஆறுதல் என்றாலும் படத்தை வணிகமயமாக்கியதோடு நம் நாட்டின் மானத்தையும் விற்றுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளில் உண்மையில்லாமல் இல்லை.

படத்தில் பெரிய குறையே மொழிதான்.

ஹிந்தி படமாகவே வெளிவந்திருக்கலாம். இந்திய அதிகாரி எழுதிய புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படமானாலும் இயக்கம் டானி பொயில் திரைக்கதை சைமன் பியூஃபோய் என்றெல்லாம் ஆங்கிலேயர் என்பதால் ஆங்கிலப் படமாகிப் போனது போலும். படிப்பறிவில்லாத ஜமாலும் சலீமும் சிறுவயதில் ஹிந்தி பேசுபவனாகக் காட்டிவிட்டு பதின்ம வயதில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பிளந்துக் கட்டுவதையாவது பொறுத்துக் கொள்ள முடிகிறது, அவன் வளரும் சூழல் அப்படியோ என்று. ஆனால் குழந்தைகளைப் பிச்சையெடுக்க தயார் செய்பவன் ஆரம்பத்தில் ஹிந்தியே பேசிக் கொண்டிருந்தவன், வளர்ந்த குழந்தைகளைப் பார்த்தவுடன் ஆங்கிலத்தில் மாறிய காரணம் என்னவென்றே புரியவில்லை. திருடனை முஸ்லீம்களாகக் காட்டி அவன் தொழுவதையும் ஒரு காட்சியாக வைத்து ‘நான் பாவம் செய்பவன், என்னை மன்னித்துவிடு இறைவா’ என்று இறையும் காட்சிகள் தேவையில்லாமல் புகுத்தப்பட்டதாகவே உணர்கிறேன். இதில் என்ன அற்ப திருப்தியோ இவர்களுக்கு?!.

நம் நாட்டில் நடக்கும் ஏமாற்றுவேலைகள், குழந்தைகளைக் கடத்தி கண்களை பிடுங்கி பிச்சையெடுக்க வைப்பது, ஜாதிக் கலவரங்கள், சேரியென்றால் நடத்தும் எகத்தாளங்கள்,
பிராத்தல் – சிகப்பு விளக்கு, ரவுடியிஸம் – குண்டாஸ், திரை ஊடகத்தில் வரும் போலி முகங்கள் என்று எல்லா அவலங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அதை மட்டுமே
சார்பாகக் காட்டி இந்தியா இப்படித்தான் என்ற போலி முத்திரை பதியவைக்கும் ஒரு முயற்சி. இப்படியெல்லாம் வந்து விட்டால் மட்டும் நம் நாட்டின் பெருமைகளும் வளர்ச்சிகளும்
தடைப்பட்டுவிடுமா என்ன? கையை வைத்து சூரியனை மறைக்கும் சமாச்சாரம் எடுப்படாதுதானே?

நான் எழுதியது சொல்ல வந்தது சொல்லியிருப்பது எல்லாமே புரிய ‘Slumdog Millionaire’ரை ஒரு முறையாவது பார்த்துவிடுங்களேன் என்னோடு ஒத்துப் போவீர்கள்.

By | 2009-02-02T12:49:00+00:00 February 2nd, 2009|திரைவிமர்சனம்|21 Comments

21 Comments

  1. இன்னும் படம் பாக்கலை பாத்துட்டு சொல்லலாம்தானே..

  2. Yaro February 2, 2009 at 2:02 pm - Reply

    பொருப்பு இல்லாத(சுய நலமே உருவான) அரசியல்வதிகளால்
    எப்படி ஒரு

    1. திருடன்
    2. தீவிரவதி உருவகிறான்
    3. ரவுடி

    உருவாகிறான் என்பதை உனர முடிகிறது.

  3. ஜெஸிலா February 2, 2009 at 2:04 pm - Reply

    யாரோ, யாருக்கோ எழுத வேண்டியதை தவறுதலா எனக்கு எழுதிட்டீங்களோன்னு சந்தேகமா இருக்கு 🙂

    தமிழன் கறுப்பி, படம் பார்த்த பிறகு என் பதிவும் நினைவில் இருந்தால் வந்து சொல்லுங்களேன்.

  4. இந்தியாவின் குறைகளை மட்டுமே சொல்கிறதாய் நீங்க சொல்கிற மாதிரியும் ஒரு கோணம் இருக்கத்தான் செய்கிறது ஆனால்…

  5. அடிக்கடி எழுதுங்க அக்கா இல்லைன்னா மூத்த பதிவர்னு சொல்லிடுவாங்க…

  6. Anonymous February 2, 2009 at 6:34 pm - Reply

    சர்வதேச அளவில் கொண்டுசென்றுள்ள இப்படத்தில், இந்தியாவையும், இந்தியர்களையும் இவ்வளவு கேவலமாக சித்தரித்திருக்கவேண்டாம். இந்திய ரசிகர்களை பற்றிய பார்வைக்கு மலத்திலிருந்து எழுந்துவரும் சிறுவன், மும்பையில் உள்ள சேரியை இந்தியபடங்களில் கூட இவ்வளவு மட்டமாக காட்டியிருக்கமாட்டார்கள். குழந்தை திருடர்கள், அதேபோல இந்திய காவல்துறை என எல்லாவற்றிலும் இந்தியாவைப் பற்றிய தவறான எண்ணத்தை மேற்கத்தியர்களுக்கு காட்டும் இந்த படத்திற்கு துணைபோன ஏ ஆர் ரஹ்மான் உட்பட அணைவரையும் கண்டிக்கிறேன்.

  7. சுல்தான் February 3, 2009 at 5:57 am - Reply

    இன்று பிபிசி ல் இது பற்றிய ஒரு உரையாடலைக் கேட்டேன். ஒரு மும்பை பெண்ணிடமே கேட்டிருந்தார்கள். அவர்களும் நீங்கள் சொல்லி இருப்பதையே சொன்னார்கள். “மும்பை சேரிகளில் இதுவும் நடக்கிறது இதற்கு மேலும் நடக்கிறது. ஆனால் இதுதான் இந்தியா என்று காட்டுவதை ஒப்ப முடியாது” என்பதாக சொன்னார்கள். படம் பார்க்க வேண்டும்.

  8. Nilofer Anbarasu February 3, 2009 at 6:00 am - Reply

    இது ஒரு சூப்பர் படம், தேவையில்லாத பாலிடிக்ஸ்ல சிக்கித்தவிக்குது. என்னை பொறுத்தவரை இந்தியாவின் ஒரு பகுதியை காட்டியிருக்கிறார்கள். மொத்த இந்தியாவும் அப்படின்னு எங்கேயும் சொல்லல.

    ஜெஸிலா, நான்கு வாரங்கள் முன்பு எழுதிய ஒரு பதிவை தொடர்வதற்கு உங்களை அழைத்திருந்தேன், சொல்ல மறந்துவிட்டேன். விருப்பமிருந்து, நேரமிருப்பின் தொடரவும்.

  9. ஜெஸிலா February 3, 2009 at 8:02 am - Reply

    ஆனால்…// ஆனால் என்னவென்று சொல்லியிருக்கலாமே தமிழன் கறுப்பி.
    //மூத்த பதிவர்னு சொல்லிடுவாங்க..// என்னப்பா இப்படியெல்லாம் பயமுறுத்துறீங்க 🙂

    அனானி, நீங்க சொல்ற கருத்தை பெயரிட்டு சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும். ஏன் இப்படி பயந்த் ஒளியுறீங்க?

    வாங்க சுல்தான்பாய், எப்படி இருக்கீங்க? ரொம்ப காலமா பார்க்கவே முடியலையே? அமீரகத் தமிழ் மன்ற ஆண்டு விழாவிற்கு கூட நீங்க வரலையே? சரி, இந்த படம் பார்த்துட்டு சொல்லுங்க.

    மொத்த இந்தியாவும் அப்படின்னு சொன்னாத்தானா நிலூஃபர்? இந்தியாவை தெரியாத பலர் இருக்கிறார்கள் இவ்வுலகத்தில், அவர்களுக்கு இதுதான் இந்தியா என்று சித்தரிப்பதாகிவிடாதா?

  10. ஷாஜி February 3, 2009 at 9:25 am - Reply

    நல்ல பார்வை.. எனக்கும் இவ்விதம் தான் தோன்றியது..

    அதேபோல் படத்தின் சில காட்சிகளில் தேவையில்லாத திணிப்புகள் இருப்பதை கூட தவிர்த்திருக்கலாம்

    குப்பை நாய் கோடீஸ்வரன் என்ற தலைப்பே சரியில்லை.. ஒரு சீப்பான விளம்பரமாகவே தோன்றுகிறது..

  11. SPIDEY February 8, 2009 at 10:00 am - Reply

    //நம் நாட்டில் நடக்கும் ஏமாற்றுவேலைகள், குழந்தைகளைக் கடத்தி கண்களை பிடுங்கி பிச்சையெடுக்க வைப்பது, ஜாதிக் கலவரங்கள், சேரியென்றால் நடத்தும் எகத்தாளங்கள்,
    பிராத்தல் – சிகப்பு விளக்கு, ரவுடியிஸம் – குண்டாஸ், திரை ஊடகத்தில் வரும் போலி முகங்கள் என்று எல்லா அவலங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அதை மட்டுமே
    சார்பாகக் காட்டி இந்தியா இப்படித்தான் என்ற போலி முத்திரை பதியவைக்கும் ஒரு முயற்சி. இப்படியெல்லாம் வந்து விட்டால் மட்டும் நம் நாட்டின் பெருமைகளும் வளர்ச்சிகளும்
    தடைப்பட்டுவிடுமா என்ன? கையை வைத்து சூரியனை மறைக்கும் சமாச்சாரம் எடுப்படாதுதானே?//

    சரியா சொன்னிங்க!

  12. பாலு February 9, 2009 at 1:10 pm - Reply

    முன்பு தாரே ஜமீன் பர். இப்பொழுது ஸ்லம் டாக். படம் பார்த்து உங்கள் எண்ணங்களையும் படிப்பது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. என் பையனுக்கு தாJ மாஹாலில் ஜமால் “னிஜமான இந்தியாவை காண்பிக்கிறேன்” என்று சொல்லும் கட்டத்தில் மிகவும் கோபம் வந்து விட்டது.

  13. ஜெஸி நலமா..?? ரொம்ப நாட்களாக பதிவே இல்லையே..??? வந்து வந்து பார்த்துட்டு பறந்துட்டேன்..

    நல்ல அலசல் ஜெஸி.

    SLM இன்னும் பார்க்கவில்லை.

    உலக மொழி படங்கள் லிஸ்ட் கூடிகிட்டே போகுது..

    வலைக்கு வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி..

    SLM Producers are very powerful.

    Wait and see more & more awards awaiting..

  14. sy February 13, 2009 at 8:36 am - Reply

    I could understand your Love towards our country, but at the same time we cannot the deny truth. It is the right way to show what India has inside its mask of traditional privileges.

    What has show in the film is absolutely correct and i am happy that it has reached all over the world. We have the responsibility to correct our country from these kind of things and everyone must understand this.

  15. Anonymous February 15, 2009 at 8:19 am - Reply

    சகோதரி ஜெஸிலாவிற்கு இந்தப் பதிவையும் பாருங்களேன்! உங்கள் கிறுக்கலுக்கும் இந்த விமர்சனத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
    http://neetheinkural.blogspot.com/

  16. Anonymous February 15, 2009 at 8:34 am - Reply

    நிலோபர் மற்றும் இந்த வலையில் குழுமியிருக்கும் அன்பர்களுக்கு இந்தப் படம் நல்ல ஒரு திறமைசாலி டைரக்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதே ஆனால் அவன் ஒவ்வொறு பிரேமிலும் இந்தியா என்ற மாபெரும் வல்லரசு நாட்டை (அப்படித்தான் ஒவ்வொறு இந்தியனும் கனவு காண்கிறான்) எந்த அளவுக்கு அசிங்கப்படுத்த முடிமோ அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தியிருக்கிறான். பிளட்டி பாஸ்ட்டர்ட். இதுக்கு மேல பெரிய வார்த்தை எனக்கு தெரியலை ஸாரி…. கொஞ்சம் டென்சனாயிட்டேன்..
    முடிந்தால் இங்கே விஜயம் செய்து கொஞ்சம் பாருங்கள்… ஜெசி அக்கா கருத்தும் இல்லை அதை விட அதிகமா உள்ளது http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10603&Itemid=52

    கோபத்துடன் – இந்தியத் தமிழன்.

  17. Mayflower March 5, 2009 at 6:44 pm - Reply

    can anyone claim such things dont happen in India? India is not just the polish society which we see and move everyday..majority of India is still in utter poverty, but as they say ‘truth is always bitter’ ..we find such things difficult to digest and we prefer to close our eyes to such ugly things and pretend they dont exist. Its actually good that occasionally someone is opening our eyes and jolt us back to such harsh realities of life. (Jazeela..I want your email id if u dont mind..I’ve started working now and believe its heartbreaking to leave my son in babysitting now…Its just 1 week since I started working and just wanted ur thoughts on this)

  18. ஜெஸிலா March 5, 2009 at 6:55 pm - Reply

    //Jazeela..I want your email id if u dont mind..I’ve started working now and believe its heartbreaking to leave my son in babysitting now…Its just 1 week since I started working and just wanted ur thoughts on this)// hai how r u? I would appreciate if you could please write your email in the comment box so that I can write back to your email. I assure you that I will not publish the comment. I can very well understand what you are going through leaving your child in baby sitting… I will write you in detail in email.

  19. பிரபு . எம் March 10, 2009 at 12:43 pm - Reply

    Hi Jesila..

    Just today I posted my views on the same movie in my blog….
    If you are interested kindly have a look at it too…

    We too coincide and also contradict in our points of view about this Oscar winner….
    http://vasagarthevai.blogspot.com
    Nice to read you friend… 🙂

    PS: Sorry for posting the comment in English…pretty lazy to open my Unicode software!!

  20. பிரபு . எம் March 11, 2009 at 9:43 am - Reply

    மிக்க நன்றி ஜெஸிலா!
    அநேகமாக எண்ணங்கள் வேறுபட்டாலும் எதிர்பார்ப்பு நம் இருவரின் விமர்சனத்திலும் கிட்டத்தட்ட ஒருமைப்பட்டதைப் போல உணர்கிறேன்…. ரொம்ப நன்றி உங்கள் பதிலுக்கு!!

  21. Farzan.ar May 9, 2009 at 2:07 pm - Reply

    இது உங்களின் பதிவுடன் தொடர்புடையது அல்ல. என்றாலும்.. இந்த blogger sites விஜயம் செய்யுங்கள்.

    http://www.farzankavithaikal.blogspot.com
    http://www.zanfarchild.blogspot.com
    http://www.peruveli.blogspot.com
    http://www.zanfarkathaithal.blogspot.com

Leave A Comment