கங்கை அமரன் அரசியலில் குதிக்கிறார்!

போன மாசம் எங்க ஊரில அதாங்க துபாயில 'துபாய் தமிழ் சங்கம்' ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடினாங்க. அதில 'லியோனி' பட்டிமன்றம், அப்புறம் 'கங்கை அமரன்' பாட்டுக் கச்சேரி, குழந்தைகள் நடனம் அப்படி இப்படின்னு அமர்க்களப்படுத்திப்புட்டாங்க. கங்கை அமரன் தனியா வரல அவர் மகன் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண் அவங்க குழுவினரில் ஒருவரான நிர்மலா எல்லோரும்தான் வந்தாங்க. லியோனி பட்டிமன்றம் முடிஞ்சி பாட்டுக் கச்சேரிக்கு எல்லாம் தயாராச்சு, மேடைக்கு வந்த க.அமரன் 'நாலு நாற்காலி போடுங்கப்பா' [...]

By | 2006-12-21T10:21:00+00:00 December 21st, 2006|அமீரகம்|24 Comments

வெள்ளைக்காரருங்க முட்டாளா? சாமர்த்தியமா?

சிலருக்கு புது புது உணவை சாப்பிட்டு பார்ப்பதில் அலாதி பிரியம். அதனால்தானோ இந்த 'சாப்பாடு திருவிழா' (Food Festival) வருஷம் தோறும் இங்க அமீரகத்தில தவறாம நடக்குது. பதிவு அதப்பத்தி இல்ல பயந்துடாதீங்க.'துர்கிஷ் சாண்விட்ச்' வேணுமான்னு சாப்பாடு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே ரொம்ப பாசமா வலம் வந்தா 'ரோஸிலின்' என் சக ஊழியரில் ஒருத்தி. அவ எங்க நிறுவனருடைய மகள்தான் ஆனாலும் எங்களில் ஒருவராக சாதாரண சக ஊழியராகவே பணி செய்யுறா. நான் 'வேண்டாம்ப்பா! [...]

வலி

செப்டம்பர் 2006 மாத 'திசைகளில்' வெளிவந்த என் கவிதை:அடித்தே இன்புறுகிறாய்நல்ல விஷயமோகெட்ட விஷயமோவாழ்க்கையின் ஆரம்பமோவாழ்க்கையின் முடிவோஅடிக்காமல் அடங்காதாவிசேஷம்?இருக்கும் போதுதானென்றால்இறந்த பிறகுமா?

By | 2006-12-19T07:43:00+00:00 December 19th, 2006|கவிதை|0 Comments

நட்பு

தேர்வில் எட்டிப் பார்த்துஎழுதும் போதும்ஆபாச படத்தைபார்க்க கூடாத வயதில்பார்க்கத் துணிந்த போதும்கல்லூரி மறந்து ஊர் சுற்றும் போதும்சுருட்டு, மது, மாதுஎன்ற போதும்காதலியுடன்ஓடிப் போக நினைக்கையிலும்தடுத்து நிறுத்திஎடுத்துரைக்காமலிருக்கமுடியவில்லை என்னால்உளியாகத்தான் எனைநினைத்திருந்தேன்உடைப்பேன் நட்பையென்றுஅறியாமல்

By | 2006-12-17T09:08:00+00:00 December 17th, 2006|கவிதை|0 Comments

பிடிச்சிப் போச்சு ரொம்ப!

முன்பே வா என் அன்பே வா படம்: சில்லுன்னு ஒரு காதல்பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்வரிகள்: வாலிபடத்தின் பலம் பாடலும் என்று சொல்லும் அளவுக்கு இரண்டு நல்ல பாடல்கள் இந்த படத்தில். இரண்டுமே எனக்கு பிடித்தது. நியூயார்க் நகரம் பாடலில் ஏ.ஆர்.ஆரின் குரலையும் இசையையும் இரசித்த வேளையில் அதனை தொடர்ந்தது இந்த பாடலும். சில பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமல் தலையாட்டி இரசிப்போம், சில பாடலை கேட்கும் போது நமக்குள் நம்மை அறியாமல் ஒரு [...]

By | 2006-11-30T09:27:00+00:00 November 30th, 2006|விமர்சனம்|4 Comments

சுதந்திர தினம்

வலைப்பூ பக்கம் வந்து நாளாச்சே அதான் எட்டிப்பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். எட்டிப்பார்த்துட்டு பதிவுப் போடாம சும்மா போனா எப்பட,ி அதான் ஏற்கெனவே 'திசைகள்' மின்னிதழில் வந்த கவிதையை இடுகிறேன்.மாதம் முழுவதும்சிறை பிடித்துசாகும் நிலையில்ஆலிவ் இலை தந்துதிறந்து விட்டுபறக்க செய்துகைத்தட்டிஇனிப்பு வழங்கிகொண்டாடினர்சுதந்திர தினம்

By | 2006-10-15T14:30:00+00:00 October 15th, 2006|கவிதை|3 Comments

உளமாற நேசிக்கிறேன்

எதையாவது எழுதலாமென்றால் யோசிக்காமல் நினைத்ததை எழுதி வைக்கிறோம் அதுவே நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றி எழுத ஏனோ தயக்கம் வரத்தான் செய்கிறது. இப்படி, நான் 'எழுதலாமா வேண்டாமா?' என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் என் நண்பர் சொன்னார் "என்ன தயக்கம் நீ எழுதாம வேற யாரு எழுதப் போறாங்க" என்று கேட்டது 'சுறுக்'கென்றது. சரிதான் என்று பட்டதும் எழுதலாமென்றால் எங்கே நேரம்?நேரம் கிடைத்தால்தானே?! நேரம் இருந்த போது எழுதலாமா?ன்னு யோசிச்சேன், எழுதலான்னு நினைக்கும் போது நேரமே இல்ல. கல்லைக் [...]

By | 2006-09-09T07:45:00+00:00 September 9th, 2006|பதிவர் வட்டம்|16 Comments

எதற்காக வலைப்பூ?

வலைப்பூன்னு ஒண்ணு ஆரம்பிக்கிறோம் அது எதுக்காக யாருக்காக? எல்லோரும் ஆளுக்கு ஒண்ணு வச்சிருக்காங்களே நானும் ஆரம்பிக்கிறேன்னு ஒரு வலைப்பூவாளர் கிட்ட கேட்டா அவங்க சொன்னாங்க "ஆரம்பிக்கலாம் யாருவேணாலும், ஆனா நீ எழுதுற எழுத்துக்கு பதிலடி வரும். தலையில குட்ட நெறைய பேர் காத்து கெடப்பாங்க. கன்னாபின்னான்னு திட்டி வரும் பெயருடனும் பெயரில்லாமலும். ஒரு பொது எடத்துல நின்னு உன் கருத்த சொல்றா மாதிரி வலைப்பூ. அதனால எழுதிற எல்லா கிறுக்கலையும் வலையேற்றாம உனக்கே 'ஆஹா நானா எழுதினேன்'னு [...]

By | 2006-09-02T06:35:00+00:00 September 2nd, 2006|பதிவர் வட்டம்|23 Comments

சின்ன சின்ன ஊடல் – குட்டிக்கதை

சின்ன சின்ன ஊடல்'எப்பதான் மணி 6 ஆகும் வீட்டுக்குக் கிளம்பலாம்' என்று காத்திருந்தாள் சுதா. அவள் காத்திருப்பிற்குப் பின்னால் நிறைய அர்த்தமிருந்தது. அன்று சுதந்திர தினம், புத்தம் புது ஆடை அணிந்துக் கொண்டாள், இனிப்பையும் எடுத்துக் கொண்டாள் வெள்ளைக்காரனிடம் வேலை பார்ப்பதால் சுதந்திர தினத்தை அவர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதில் அவளுக்கு பெரும் மகிழ்ச்சி. நிறுவனத்தில் நிறைய இந்தியர்கள் என்பதால் நிர்வாகமே சுதந்திர தினத்தன்று எல்லாருக்கு 'டோனட்' வழங்கியது. இந்தியர்கள் பேரைச் சொல்லி அனைத்து நாட்டினரும் உண்டு [...]

By | 2006-08-31T07:48:00+00:00 August 31st, 2006|சிறுகதை|8 Comments

‘வேட்டையாடு விளையாடு’

பொதுவாகவே மற்றவங்களைப் பற்றி புறம் பேசுவதோ, பின்னால் கிண்டல் செய்வதோ எனக்கு அறவே ஒவ்வாத விசயம். இந்த திரைவிமர்சனங்களும் அதுபோலத்தான் என்று எனக்கு நானே ஒரு வளையம் போட்டுக் கொண்டேன். கஷ்டப்பட்டு ஒரு படத்தை பெரிய குழு எடுத்து முடித்து வினியோகஸ்தர்கள் தலையில் கட்ட, நல்லதா கெட்டதா, ஓடுமா ஓடாதா, நல்ல குதிரையா நொண்டி குதிரையா என்று தெரியாமல் மக்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று யூகிக்க முடியாமல் வாங்கி வெளியிடுகிறார்கள். படம் பார்த்துவிட்டு மக்களும் 'சுமார்', 'போர்', [...]

By | 2006-08-26T10:17:00+00:00 August 26th, 2006|திரைவிமர்சனம்|18 Comments