உளமாற நேசிக்கிறேன்

எதையாவது எழுதலாமென்றால் யோசிக்காமல் நினைத்ததை எழுதி வைக்கிறோம் அதுவே நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றி எழுத ஏனோ தயக்கம் வரத்தான் செய்கிறது. இப்படி, நான் ‘எழுதலாமா வேண்டாமா?’ என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் என் நண்பர் சொன்னார் “என்ன தயக்கம் நீ எழுதாம வேற யாரு எழுதப் போறாங்க” என்று கேட்டது ‘சுறுக்’கென்றது. சரிதான் என்று பட்டதும் எழுதலாமென்றால் எங்கே நேரம்?

நேரம் கிடைத்தால்தானே?! நேரம் இருந்த போது எழுதலாமா?ன்னு யோசிச்சேன், எழுதலான்னு நினைக்கும் போது நேரமே இல்ல. கல்லைக் கண்டா நாயக்காணோம், நாயக்கண்டா கல்லைக் காணோம்னு ஆகிப் போச்சு கத. எது நாய், எது கல் என்ற ஆராய்ச்சி வேண்டாம்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் புகைப்பட அமைப்பு தொடங்கி மூன்று மாதங்களாக செயல்பட்டுவந்தாலும், அமைப்பை முறைப்படி துவங்கி வைக்க முதலமைச்சர் கருணாநிதியை அழைத்த போது அவர் துவக்க விழாவிற்கு கொடுத்த தேதி செப்டம்பர் 7. கவர்னர் மாளிகையில் தர்பார் மண்டபத்தில் நேற்று காலை முதலமைச்சர் கருணாநிதி, கவர்னர் பர்னாலா தலைமையில் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் முன்னிலையில், ‘நக்கீரன்’ கோபால், ‘ஹிந்து’ ராம், ‘தினகரன்’ கதிர்வேல் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

அமைப்பின் தலைவர் ஜி. கிருஷ்ணன், துணை தலைவர் முருகராஜ், செயலாளர் ரகுநாதன் ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள். அமைப்பின் துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் புகைப்பட அமைப்பிற்கான வலைத்தளமும் துவங்கி வைக்கப்பட்டது. மற்றும் பத்திரிக்கை புகைப்பட நிபுணர்களின் தொலைபேசி மற்றும் பத்திரிக்கையாளர்களின் விவரங்கள் அனைத்தும் அடங்கிய புத்தகத்தை கவர்னர் வெளியிட
முதல் பிரதியை பரிதி இளம்வழுதி பெற்றுக்கொண்டார். முதலமைச்சருக்கு 1895ல் எடுக்கப்பட்ட சென்னை துறைமுகத்தின் படத்தையும், 1920ல் எடுக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் தொடரூர்தி நிலையத்தின் புகைப்படத்தை கவர்னருக்கும் நினைவுப் பரிசாக வழங்கினர்.

முன்னதாக பழம்பெரும் புகைப்பட கலைஞர்கள் தினமலரில் இருந்த கே.விஸ்வநாதன், மகாராஷ்டிரா நிலநடுக்கத்தின் போது எடுத்த சிறந்த படத்திற்காகவும், மாலைமுரசில் பணியாற்றிய அமீது முதலமைச்சர் கருணாநிதியின் தாய் இறந்த போது அவருக்கு அறிஞர் அண்ணா ஆறுதல் சொல்வதுபோல எடுத்த புகைப்படத்திற்காகவும், ஹிந்துவில் இருந்த நாராயணச்சாரி, விளையாட்டு சம்பந்தப்பட்ட புகைப்படத்திற்காகவும் முதலமைச்சர் கையால்
பொன்னாடை அணிவித்து, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

‘இந்த செய்திக்கும் இவளுக்கும் என்ன?’ என்று நீங்க மண்டையை உடைத்துக் கொள்ளும் முன்பே, கவுரவிக்கப்பட்ட அமீது என் தந்தையார் என்று சந்தோஷத்தோடு சொல்லிக் கொள்கிறேன். என் தந்தையின் பிறந்த தினமான செபடம்பர் ஏழாம் தேதியன்றே இந்த கவுரவ
விருது கிடைத்தது இன்னொரு மகிழ்ச்சி. உங்களை நினைத்தாலே பெருமையாயிருக்கிறது வாப்பா. உளமாற நேசிக்கிறேன் உங்களை அன்றைப் போல இன்றும்.

By | 2006-09-09T07:45:00+00:00 September 9th, 2006|பதிவர் வட்டம்|16 Comments

16 Comments

  1. ஏ.எம்.ரஹ்மான் September 9, 2006 at 1:39 pm - Reply

    மற்ற விசயங்களுக்கு நேரம் ஒதுக்குவதை விட தன் தந்தையை கவுரவப் படுத்த தனியாக நேரம் ஒதுக்கலாம் தப்பில்லை, அவர் உங்கள் தந்தையார் என்பதில் உங்கள் தோழன் என்ற முறையில் எனக்கு சந்தோசம்.

  2. ஜெஸிலா September 9, 2006 at 1:41 pm - Reply

    மிக்க நன்றி ரஹ்மான்.

  3. வாப்பாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  4. ஜெஸிலா September 9, 2006 at 2:22 pm - Reply

    நன்றி அலெக்ஸ். உங்க வாழ்த்தை சென்னைக்கு வாப்பாவுக்கு அனுப்பி வச்சிட்டேன் 😉

  5. பழூர் கார்த்தி September 10, 2006 at 5:00 am - Reply

    வாப்பாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் :-))))))

    ****

    மற்ற விசயங்களுக்கு நேரம் ஒதுக்குவதை விட தன் தந்தையை கவுரவப் படுத்த தனியாக நேரம் ஒதுக்கலாம் தப்பில்லை

  6. மதுமிதா September 10, 2006 at 11:05 am - Reply

    ///
    “என்ன தயக்கம் நீ எழுதாம வேற யாரு எழுதப் போறாங்க”
    ///

    நல்ல நண்பர் ஜெஸிலா

    மனமார்ந்த வாழ்த்துகள்மா உங்களுக்கும்,வாப்பாவுக்கும்

  7. Boston Bala September 10, 2006 at 11:05 am - Reply

    தங்களின் தந்தை கௌரவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

    தற்போதும் பணியில் உள்ளாரா? அவர் எடுத்த படங்களை அவ்வப்போது பகிர தனி பதிவு தொடங்குங்களேன்.

  8. லொடுக்கு September 10, 2006 at 11:06 am - Reply

    வாழ்த்துக்கள்!

  9. ஜெஸிலா September 11, 2006 at 5:40 am - Reply

    சோம்பேறி பையன் என்பதை வெட்டி ஒட்டியே நிரூபித்து விட்டீர்கள், நன்றி.

    ரொம்ப நன்றி மதுமிதா.

    பாலா, என் தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாகிறது. படங்களை பகிர பதிவெல்லாம் போதாது 😉

    நன்றி பாண்டி லொடுக்கு 😉

  10. G Gowtham September 11, 2006 at 12:25 pm - Reply

    ஜெஸிலா,
    எனக்குக் கிடைத்த கௌரவம் போல எண்ணி மகிழ்கிறேன்.
    தமிழ் பத்திரிகைகளில், குறிப்பாக தினசரிப் பத்திரிகைகளில் புகைப்படக்காரர்களின் நிலை எனக்குத் திரியும்.
    எவ்வளவு போராட்டங்களோடு வாழ்கிறார்கள், தங்கள் குடும்பத்தை வாழ வைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
    நல்ல வாப்பாவும் நல்ல மகளும் பாராட்டுக்குரியவர்கள்.

  11. Thirumozhian September 12, 2006 at 5:51 am - Reply

    யாராவது உதவி பண்ணுங்கப்பா!

    நான் திருமொழியான்-னு ஒரு ப்ளாக் ஸ்பாட்ட தொடங்கிட்டேன். எப்படியோ கஷ்டப்பட்டு 3 பதிவுகளையும் எழுதி தமிழ்மணத்துல லிஸ்ட்டுல சேத்துட்டேன். ஆனா என்னோட பேருக்கு நேரா மறுமொழி திரட்டப்படுவதில்லை அப்படின்னு வருது.

    என்னோட புது பதிவு ஏதையாவது தமிழ்மணத்துல சேர்க்குறதுக்கு என்னோட ப்ளாக்ஸ்பாட் முகவரிய தந்தா ஏற்கனவே கொடுக்கப்பட்ட யூ.ஆர்.எல் அப்படின்னு நிராகரிச்சுறுது.

    என்னோட ப்ளாக்ஸ்பாட் முகவரிக்கு பதிலா ஏதாவது ஒரு பதிவோட முகவரிய கொடுத்தா, அதுக்கப்புறமா நியூஸ் ஃபீட்ன்னு எதையோ கேக்குது. அங்க எதைக்கொடுக்கிறதுன்னு தெரியல.

    டெம்ப்லேட்ட மாத்துறதுக்கான குறிப்புகள படிச்சி அதுபடியும் செஞ்சிட்டேன். தமிழ்மண ஹைப்பர்லின்க் வருது ஆனா ஒரு புது இடுகைய தமிழ்மணத்துல சேர்க்கறதுக்கான கமாண்ட் பட்டன் வரவே மாட்டேங்குது.

    யாராவது உதவி பண்ணுங்கப்பா!
    நான் யூஸ் பண்ணுறது லினக்ஸ் ஃபெடோரா கோர் 4 – மோஸில்லா.

    முன்கூட்டிய நன்றிகள்.

    திருமொழியான்.

  12. உங்கள் வாப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

  13. saahul September 12, 2006 at 5:58 am - Reply

    வாப்பாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    Dubai Sahul.(Mobile shop)

  14. ஜெஸிலா September 13, 2006 at 9:26 am - Reply

    நன்றி கெளதம்.

    திருமொழியான் மன்னிக்கனும் நேரமில்லை, இல்லையென்றால் எனக்கு பல நண்பர்கள் உதவியது போல் உதவி இருப்பேன். ;-(

    குமரனுக்கும், சாகுலுக்கும் நன்றிகள்.

  15. நிலவு நண்பன் September 14, 2006 at 9:43 am - Reply

    வாப்பாவுக்கு என்னுடைய ஸலாத்தை சொல்லிவிடுங்கள்.

  16. அப்பாவுக்கு என் வாழ்த்தைச் சொல்லிவிடுங்கள்.

    அப்பா எடுத்த புகைப்படங்களுக்கென ஒரு தனி வலைப்பதிவு தொடங்கலாமே? பல முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்திருப்பார். அதைத்தவிர, அவர் எடுத்த ஏனைய படங்களையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

    -மதி

Leave A Comment