துபாயில்…

துபாய் நகராட்சிக்கு ஒரு கோடி உடனே தரேன்னு சொல்லியும் வேணாம்னு சொல்லிட்டாங்க. ஒரு கோடி தரேன்னு சொன்னது நானில்ல. ஒரு பணக்கார வியாபாரி. ஒரு கோடி ரூபாய்ன்னா நம்ம ஊருபணமில்ல. ஒரு கோடி திர்ஹம்ஸ் அதாவது பதிமூணு கோடி ரூபா. எதுக்கு தரேன்னு சொன்னாரு தெரியுமா?

ஒரு அதிசய மீனுக்கு. அப்படி என்ன அதிசயம் தெரியுமா? அந்த மீன் உடம்பு மேல ‘அல்லாஹ்’ன்னு அரபி எழுத்துல எழுதிருப்பது அழகா துல்லியமா தெரியுது.

இறைவன் இல்லாத இடமும் உண்டோ? மனிதர்களிலிருந்து எல்லா உடைமைகளும் அவனுடையதுதானே? இதில் என்ன அதிசயம்?

அரபிக்கடலில் கிடைக்கும் சஃபி (Safi) என்ற மீன் மீதுதான் இந்த எழுத்துக்கள். விஞ்ஞான ரீதியான பெயர் சிகாரியஸ் கனாலிக்குலாட்டஸ் (Sigarius Cunaliculatus) இந்த மீன் தற்போது, தெய்ரா மீன் சந்தையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

By | 2006-08-22T10:21:00+00:00 August 22nd, 2006|அமீரகம்|16 Comments

16 Comments

  1. Anonymous August 22, 2006 at 1:10 pm - Reply

    மீன் மேலே இவ்வளவு அழகா எழுதுனது யாரு? அற்புதமான ஓவியர்

    தகவலுக்கு நன்றி!

    அ.ராவணன்

  2. அசரீரி August 22, 2006 at 1:10 pm - Reply

    //அரபிக்கடலில் கிடைக்கும் சஃபி (Safi) என்ற மீன் மீதுதான் இந்த எழுத்துக்கள்.//

    அரபிக்கடல்ல கிடைச்சதால அரபில இருக்கோ? இந்தியப்பெருங்கடல்ல கிடைச்சிருந்தா? 🙂

  3. ஜெஸிலா August 22, 2006 at 2:51 pm - Reply

    ராவணன் அற்புதமான ஓவியர் கடவுள்தான்.

    அசரீரி, இந்திய பெருங்கடல்ல கிடச்சிருந்தா இந்திய மொழியில் ‘அல்லாஹ்’ என்று இருந்திருக்கும்.

  4. பெயிண்டர் August 23, 2006 at 6:37 am - Reply

    ஜெசி…இந்த சாதியில எல்லா மீனும் இப்படித்தான் இருக்குமா, இல்லை இந்த மீண் மட்டும்தானா?

    எவனாவது பிடிச்சி ஷேவ் செய்துவிட்டு இருப்பானோ ?

    எனக்கு நாலு கோடுதான் தெரியுது..

  5. இதே போன்று அல்லாஹ் என்ற எழுத்துச் சுமந்த மீனொன்று (அண்ணாமலை பல்கலைக்குட்பட்ட) பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளதாக சில வருடங்களுக்கு முன் “ஹிந்து” உள்ளிட்ட பத்திரிகைகளிலும் செய்தி வந்ததாகக் கேள்வி. நான் சென்று பார்த்ததில்லை. ஆர்வமும் இல்லை.

  6. ஏ.எம்.ரஹ்மான் August 23, 2006 at 6:41 am - Reply

    //இறைவன் இல்லாத இடமும் உண்டோ?//

    முற்றிலும் உண்மை.

    சில கமென்ட்களை யோசித்து வெளியிடவும் நன்றி.

  7. ஜெஸிலா August 23, 2006 at 7:07 am - Reply

    என்ன பெயிண்டர் கேள்வி இது, எல்லா மீனும் அப்படி இருந்தா யாராவது ஒரு கோடி தர முன் வருவாங்களா இல்ல அது அதிசய மீனாகதான் ஆக முடியுமா? கேட்கனும்னு ஏதாவது கேட்டு வையுங்க.

    அவன் அதிசயங்கள் எங்கும் இருப்பதால் பார்க்க ஆர்வமில்லையா இப்னு?

    ஏன் ரஹ்மான் பின்னூட்டங்களை யோசித்து வெளியிட சொல்லி இருக்கீங்கன்னு புரியலை. யார் எப்படி எழுதினாலும் அதனை வெளியிட்டு பதில் தருவதுதானே சரி? பெயரில்லாமல் எழுதியிருந்தால் அது வேறு விஷயம்.

  8. //அவன் அதிசயங்கள் எங்கும் இருப்பதால் பார்க்க ஆர்வமில்லையா இப்னு?//

    உண்மை தான் மேடம்.
    பொரித்துத் தின்னும் மீனில் தன் பெயர் பொறித்து அவன் பெருமிதப்படவேண்டியதில்லை. சிந்தித்துப் பார்ப்பவருக்கு அவனுடைய அத்தாட்சிகள் நிரம்பியேயிருக்கின்றன-உள்ளும் புறமும்.

  9. asalamone August 23, 2006 at 7:51 am - Reply

    இப்னு ஹம்தூன் என்ன அர்தத்தில் சொன்னார்? புரியவில்லையா? இறைவன் நாமம் சம்பந்தமாக
    பின்னூட்டம் போடுபவர்கள், கிண்டலாகவும் போட எத்தனிப்பார்கள் அல்லவா? அதனால்தானோ
    என்னவோ எச்சரிக்கையாக இருக்க அவர் சொல்லி இருக்கார் என்று நான் நம்புகிறேன்.

    இந்த செய்திகள் நான் படித்து இருக்கிறேன். நன்றி

    அசலம்

  10. ஏ.எம்.ரஹ்மான் August 24, 2006 at 10:06 am - Reply

    ஜெஸிலா
    பெயருடன் வந்தாலும் அல்லாஹ் பெயரைப் பற்றியள்ளவா சொல்கிறார்கள், இது மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கும் பெயரல்ல, சிந்திக்கவும்

  11. அசரீரி August 26, 2006 at 11:27 am - Reply

    //பொரித்துத் தின்னும் மீனில் தன் பெயர் பொறித்து அவன் பெருமிதப்படவேண்டியதில்லை//

    🙂 நல்ல சிந்தனை இப்னுஹம்துன்

    ஜெஸீலா,
    புதுமைப்பெண்ணாக தன்னை எண்ணியிருக்கும் நீங்கள் இப்படி மீனில் இறைவனின் பெயர் எழுதியிருக்கிறது என்பதற்க்காகவா இறைவனின் வல்லமையை நம்புகிறீர்கள்? இதேபோல் எத்தனையோ புகைப்படங்கள், நிலக்காட்சிகள் சிலுவை போலவும், ராம் என்றும், ஓம் என்றும் மின்னஞ்சலில் வலம் வருகின்றன. அதையும் ஒப்புக்கொள்வீர்களா?

  12. ஜெஸிலா August 26, 2006 at 11:32 am - Reply

    //மீனில் இறைவனின் பெயர் எழுதியிருக்கிறது என்பதற்க்காகவா இறைவனின் வல்லமையை நம்புகிறீர்கள்? இதேபோல் எத்தனையோ புகைப்படங்கள், நிலக்காட்சிகள் சிலுவை போலவும், ராம் என்றும், ஓம் என்றும் மின்னஞ்சலில் வலம் வருகின்றன. அதையும் ஒப்புக்கொள்வீர்களா? //

    மீனில் இறைவனின் பெயர் வந்துதான் அவன் வல்லமை எனக்கு தெரியவேண்டும் என்பதில்லை. பல காட்சிகள் மடலில் வலம் வரலாம் ஆனால் இதனை நேரில் கண்டமையால் எழுத தூண்டியது.

  13. லொடுக்கு August 26, 2006 at 11:55 am - Reply

    //இறைவன் இல்லாத இடமும் உண்டோ? மனிதர்களிலிருந்து எல்லா உடைமைகளும் அவனுடையதுதானே? இதில் என்ன அதிசயம்?
    // என்று பதிவின் உரிமையாளர் கூறிவிட்டதால் எனக்கு இது ஒரு வெறும் செய்தி அறிவிப்பாகவே படுகிறது. பதிவு குறித்து கூடுதல் வம்பிழுக்க யாருக்கும் தேவையில்லை என்பது என் எண்ணம்.

  14. அறிஞன் September 7, 2006 at 5:56 am - Reply

    ஏற்கனவே பிள்ளையார் பற்றிய தகவல், மேரிமாதாவின் கண்கள் திறந்தன என்ற தகவல் போன்று நாளை இன்னப்பிற கடவுள் நம்பிக்கையாளர்கள் வேறு எதையாவது காட்டுவார்கள். எனவே இது போன்றவற்றை வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்வதை தவிர்க்கலாம்

  15. Anonymous March 5, 2009 at 6:44 pm - Reply

    சாரி என் பெயர் ஜலால் அல அய்ன்

  16. Anonymous March 5, 2009 at 6:44 pm - Reply

    தாங்கள் க்கு இறை நம்பிக்கை இறுக்கா இல்லை யா

Leave A Comment