ரஜினி ‘ஸ்கீ துபாய்’ வந்தால்?

துபாய்க்கு வந்த புதுசுல எந்த பொருளைப் பார்த்தாலும் எனக்காக வாங்கிக்கணும்னு தோணவே தோணாது. தம்பிக்கு வாங்கலாம், அக்காவிற்கு, அப்பாவிற்கு அம்மாவிற்குன்னுதான் தோணுமே தவிர, ரொம்ப அத்தியாவசியப்பட்டால் தான் எனக்குன்னு ஏதாவது வாங்க தோணும். ஆனா இப்பல்லாம் அப்படியில்ல. அதுக்கு இரண்டு காரணம், ஒரு பொருள வாங்கி ஆசையா ஊருக்கு அனுப்பி வைச்சா ஒண்ணு ‘ஏற்கெனவே என்கிட்டே இதே இருக்கு’ன்னு பதில் வரும் இல்லாட்டி ‘இங்கதான் இது கெடைக்குதே, இத அங்கிருந்து அனுப்பினியாக்கும்?’ன்னு கேள்வி வரும். அதனால ஊரிலிருந்து ‘இத வாங்கி அனுப்பு’ன்னு சொல்லாம எதையுமே நானா வாங்கி அனுப்புறதில்ல.

அந்த மாதிரி எந்த சுற்றுலா தளம் புதுசா வந்தாலும் போய் பார்க்க வேண்டுமென பெரிசா ஆர்வமே இருக்காது. அந்த மாதிரிதான் ‘ஸ்கீ துபாயும்’ வந்து இரண்டு வருடமானாலும் போனதேயில்ல. இந்த முறை ஊரிலிருந்து வந்தவங்களை ஒவ்வொரு இடமா சுத்திக்காட்டிக்கிருந்த போது உலகின் மிகப் பெரிய வணிக வளாகத்தில் ஒன்றான ‘மால் ஆப் எமிரேட்ஸுக்கு’ (Mall of Emirates) போனோம். அதுக்குள்ள தான் உலகத்தின் மிகப் பெரிய ‘ஸ்கீ’ வாசஸ்தலமான (Ski resort) 22,500 சதுர அடி பரப்பளவு கொண்ட ‘ஸ்கீ துபாய்’ அமைந்திருக்கு. அதாவது மூன்று கால்பந்து மைதானத்தின் அளவுன்னா பார்த்துக்கிடுங்க. ஒரே நேரத்தில் 1500 மக்கள் கூடி களிக்கலாமாம்.

‘ஸ்கீ துபாய்’ ஒரு அதிசய உலகம். உறைபனி மூடிய தரைல சறுக்கிக்கிட்டு போகிற அதிசயத்திற்காக அமைச்சது. இந்த அரங்கில் காலையில் -1 டிகிரியும் இரவு நேரங்களில் -6 டிகிரியுமிருக்கிறா மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. எப்படின்னு கேட்கிறீங்களா விமானத்தில் உபயோகிக்கும் அதே மாதிரியான தொழில்நுட்பம் தான் இங்கேயும். 33000 அடி உயரத்தில் பறக்கும் போது, வெளில -30 டிகிரியும் உள்ள 22 டிகிரியும் வச்சிருப்பாங்க, அந்த மாதிரிதான் இதுவும். வெளியில 40 டிகிரியா இருக்கும், உறைபனி உள்ளரங்கில் -4 டிகிரியா இருக்கும், கிட்டத்தட்ட 50 டிகிரி வித்தியாசம் தாங்குற மாதிரி மிகவும் சக்தி வாய்ந்த இன்சுலேசன் அமைப்பு கொண்டதாம். கண்ட்ரோல்டு டெம்பரேச்சர் – கட்டுப்பாடான வெப்பநிலை என்பது இந்த பனிச்சறுக்கு மைதானதுக்கு மிகவும் அவசியமாம். பனிக்கட்டி (ஐஸ்) உருகாமல் இருக்க வெப்பநிலை எப்போதும் 0 வுக்கு கீழே இருக்கணுமாம். உள்ளறை வெப்பம் கட்டுப்பாட்டிலிருக்க தனியான வெப்ப தடுப்பான்களுக்கும் வகை செஞ்சிருக்காங்க. அப்புறம் முழுக்க பனிக்கட்டி என்பதால் கட்டிடத்தின் மேல் வரும் பளு அதிகமாக இருக்குமென்பதால் தூண்கள் வடிவமைப்பு இதற்காக பிரத்யேகமானதாகவும் கூரை வடிவமைப்பை கொள்ளளவு தாங்குமாறும் அமைச்சிருக்காங்க.

வெளியில 40-45c ன்னு வெய்யில் கொளுத்தினாலும், குளிர்காலத்த பெரிய திடல்ல அடக்கி வச்சா மாதிரி உள்ளே போனதும் குளு குளுன்னு இருந்தது. இதற்குள்ள போவதற்காக அவர்களே பிரத்யேக உடைகளும் தராங்க. ‘ஸ்கீ பனிச்சறுக்கம் தெரிஞ்சவங்க மட்டும்தான் இதற்குள் போக வேணும்னில்ல, பழகிய திறமைசாலிகளுக்குன்னு ஒரு இடம். அனுமதி சீட்டு வாங்கிற இடத்திலேயே தெளிவாப் போட்டிருக்காங்க. ‘ஸ்கீ ஸ்லோப்பா’ (Ski slope) அல்லது ‘ஸ்னோ பார்க்கா’ (Snow park). ‘ஸ்கீ ஸ்லோப்பில்’ போவதற்கு குறைந்தபட்ச திறமையாவது இருக்க வேண்டும். அதாவது தன்னால் நிறுத்த தெரியணும், chair lift உபயோகிக்க தெரியணும், தன்னாலேயே மேற்பார்வை செய்து கொள்ளும் அளவுக்கு இருந்தால்தான்..
இல்லாட்டி என்னைப் போன்றவர்கள் ‘ஸ்னோ பார்க்’ போய் பனியில் சும்மா சறுக்கி விளையாட வித விதமான சறுக்கு மரமிருக்கு. ஸ்விட்சர்லாந்துக்கு போனா மாதிரி பனிக்கட்டிய கையிலெடுத்து ஒருவர் மீது ஒருவர் அடிச்சி விளையாடலாம். பொதுவா ஐரோப்பியர்கள் மட்டுமே இங்க வருவாங்கன்னு இல்ல பலதரப்பட்ட மக்களும் வராங்க. குளிரைத் தாங்க கூடிய எல்லோரும் போகலாம்.

அவங்களே தரக்கூடிய பிரத்யேக உடை அணிஞ்சிருந்தும் என் கூட வந்த மக்கள் ‘குளிருதுப்பா உறைஞ்சு போறேன் போலாமா?’ன்னு கேட்டு உயிரை எடுத்துட்டாங்க. ரொம்ப நேரம் உள்ளே இருக்க அவங்களால முடியவில்லை. என் மகள் குளிரின் காரணமாக உள்ளேயே வரமாட்டேன்னு அடம்பிடிச்சதால் என் கணவர் அவளோடு வெளியில் உட்கார்ந்து கொண்டு கண்ணாடி வழியாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு உள்ளேயே அழகான சின்ன ‘இக்ளூ’ இருக்கிறது.. அதன் உள்ளே மட்டும் ரொம்ப இதமான வெப்பமாக இருப்பதால் அங்கேயே என்னுடன் வந்த மக்கள் குளிர் காய்ந்தார்கள். ‘மற்றவர்களும் ‘இக்ளூ’வுக்குள்ளே போக வேணாமா?’ன்னு வெளியே இழுத்துவந்தேன். இப்படியே கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஓடிடுச்சு.

அங்க ஒவ்வொருத்தரும் சறுக்குவதப் பார்த்தா நமக்கே ஆசையா இருக்கும். கவலையில்லை அதையும் கத்துத்தரோம்னு சொல்றாங்க. சறுக்கிப் பழகுவதை சொல்லித்தர திறமையான பயற்சியாளர்களும் இருக்காங்க. அதற்கு தனி நேரமும் தனிக் கட்டணமுமிருக்கு. எதையும் படிச்சிக்கிறதுக்கு வயசு தேவையில்லதான் ஆனா நேரம் வேணுமே அது இல்லாததால நீங்க துபாய் வந்தாலும் ‘ஸ்கீ பார்க்’ பக்கம் மட்டும் போயிருந்து நீங்க ‘ஸ்லோப்பில் ஸ்கீ’ செய்தால் என்னால் வேடிக்கை பார்க்க முடியும் அவ்வளவுதான். திடீரென என் அக்காவின் மகள் கேட்டாள் “ஸ்கீ துபாய்க்கு’ ரஜினி வந்தால் என்ன சொல்வார்” என்று. அவள் ஒரு ரஜினி ரசிகை. “என்ன சொல்வார்? குளிரில் பல்செட்டு ஆடுதுன்னு சொல்வாரா?”ன்னு கேட்டேன். இல்ல “Cool என்பார்” என்று அந்த குளிரிலும் என் வயிரெறியச் செய்தாள். அங்கு வந்திருந்தவர்கள் வாயிலெல்லாம் இதே வார்த்தைதான் ஒலித்தது. ‘தாங்க முடியலடா சாமி’ன்னு வெளியில ஓடி வந்துட்டேன்.

துபாய் சுற்றுலா போனா மறந்துவிடக் கூடாத முக்கியமான இடம் இது. அட! கட்டணம் விவரம் சொல்ல மறந்துட்டேனே? நாங்க போன ஸ்கீ பார்க்குக்கு ஒருவருக்கு திர்ஹம்ஸ் 70 (ரூபாய் 840/-) – (3 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் அனுமதி) குழந்தையானாலும் 70 திர்ஹம்ஸ்தான். பிரத்யேக உடைகளாக ஜாக்கெட் (Jacket), கால்சட்டை (Trouser), சாக்ஸ் (Socks) (சாக்ஸை மட்டும் உபயோகித்து தூக்கிப் போட்டிடலாம் அல்லது எடுத்துட்டு போய்விடலாம்). தொப்பி மற்றும் கைகவசம் அதான் gloves நாம எடுத்துட்டுப் போய்ட்டா குளிர்தாங்க வசதியா இருக்கும். இல்லாட்டி அதை வாங்க தனி கட்டணம். நல்லவேளை நாங்க கொண்டு போயிருந்தோம். அப்புறம் ‘ஸ்கீ ஸ்லோப்’க்கு 2 மணி நேரத்திற்கு 150 திர்ஹம்ஸ் (ரூ. 1800), இன்னும் 1 மணி நேரத்திற்கு தொடர இன்னொரு 40 திர்ஹம்ஸ் (ரூ. 480) வைக்கணும். அப்புறம் நான் ரொம்ப இரசிச்ச விஷயம் அந்த லாக்கர்தான் 10 திர்ஹம் கொடுத்து சாவி/ கார்ட் வாங்கி நாம்ம பொருட்களை வைத்து பூட்டிட்டு, திரும்ப வந்த பிறகு ரிமோட் மாதிரி வச்சி திறந்து அப்புறம் அந்த கார்டை ஒரு பெட்டியில் செலுத்தினா 10 திர்ஹம் திருப்பி துப்பிடுதுப்பா. பட்டிக்காட்டான் மொட்டாய் கடையை பார்த்தா மாதிரிதான் பார்த்தேன்.

அப்படியே இதை கிளிக்கிப் பாருங்க:

பிடித்த பெயரை பனிக்கட்டியில் எழுதிப் பாருங்க

38 Comments

  1. அபி அப்பா July 3, 2007 at 8:46 am - Reply

    பக்கத்திலேயே இருக்கேன்! நேத்து கூட மால் உள்ளே போனேன்! 1000/2000 திர்காம் இருக்குமோன்னு பயத்துல இது வரை போக நெனச்சதில்லை! கண்டிப்பா போகனும்! நல்ல விஷய பகிர்வு!

  2. அய்யனார் July 3, 2007 at 8:46 am - Reply

    எமிரேட்ஸ் மால் போணா நேரா சினிஸ்டார்தான் 🙂
    ஸ்கை போகனும் ஜெஸிலா..தகவல்கள் நல்லாருந்தது..நன்றி
    இந்த பெங்குயினுக்கு தமிழ் தெரியாதா? தமிழ்ல பேர் எழுதினா கேள்வி குறியில்ல போடுது 🙂

  3. koothanalluran July 3, 2007 at 8:47 am - Reply

    Me too had a chance to visit, I calculated the entrance fees and convered into our Indian money, simply returned and had a good dinner in KFC

  4. லொடுக்கு July 3, 2007 at 8:47 am - Reply

    //ரஜினி ‘ஸ்கீ துபாய்’ வந்தால்? //

    ச்ச்சும்மா அதிரும்ல!

    //’ஸ்கீ துபாய்’ ஒரு அதிசய உலகம். உறைபனி மூடிய தரைல சறுக்கிக்கிட்டு போகிற அதிசயத்திற்காக அமைச்சது. இந்த அரங்கில் காலையில் -1 டிகிரியும் இரவு நேரங்களில் -6 டிகிரியுமிருக்கிறா மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. எப்படின்னு கேட்கிறீங்களா விமானத்தில் உபயோகிக்கும் அதே மாதிரியான தொழில்நுட்பம் தான் இங்கேயும். 33000 அடி உயரத்தில் பறக்கும் போது, வெளில -30 டிகிரியும் உள்ள 22 டிகிரியும் வச்சிருப்பாங்க, அந்த மாதிரிதான் இதுவும். வெளியில 40 டிகிரியா இருக்கும், உறைபனி உள்ளரங்கில் -4 டிகிரியா இருக்கும், கிட்டத்தட்ட 50 டிகிரி வித்தியாசம் தாங்குற மாதிரி மிகவும் சக்தி வாய்ந்த இன்சுலேசன் அமைப்பு கொண்டதாம். கண்ட்ரோல்டு டெம்பரேச்சர் – கட்டுப்பாடான வெப்பநிலை என்பது இந்த பனிச்சறுக்கு மைதானதுக்கு மிகவும் அவசியமாம். பனிக்கட்டி (ஐஸ்) உருகாமல் இருக்க வெப்பநிலை எப்போதும் 0 வுக்கு கீழே இருக்கணுமாம். உள்ளறை வெப்பம் கட்டுப்பாட்டிலிருக்க தனியான வெப்ப தடுப்பான்களுக்கும் வகை செஞ்சிருக்காங்க. அப்புறம் முழுக்க பனிக்கட்டி என்பதால் கட்டிடத்தின் மேல் வரும் பளு அதிகமாக இருக்குமென்பதால் தூண்கள் வடிவமைப்பு இதற்காக பிரத்யேகமானதாகவும் கூரை வடிவமைப்பை கொள்ளளவு தாங்குமாறும் அமைச்சிருக்காங்க.
    //

    தொழில்நுட்ப விபரங்களுக்கு நன்றி!

  5. jaseela July 3, 2007 at 8:47 am - Reply

    அடப்பாவிகளா!!ரஜினி…சிவாஜின்னு தலைப்பு போட்டே பதிவை படிக்க வைக்க எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க?…பென்குவின் பேரு எழுதுரது சூப்பர்……

  6. லொடுக்கு July 3, 2007 at 9:05 am - Reply

    //good dinner in KFC //

    ????

  7. குசும்பன் July 3, 2007 at 11:31 am - Reply

    அக்கா அருமையா சொல்லி இருக்கீங்க

    அபி அப்பா:::
    ABN Ambro கிரிடிட் கார்ட் நீங்க வைத்து இருந்தால் உங்களுக்கு மாதத்தின் கடைசி வெள்ளி கிழமை இலவசம்…

  8. C.M.HANIFF July 3, 2007 at 11:32 am - Reply

    Nice info, antha penguin eshutarathu “COOL” 😉

  9. //குளிரில் பல்செட்டு ஆடுதுன்னு சொல்வாரா?”ன்னு கேட்டேன். //

    இது:-)))))))))))))))))))

    எங்கூர்லே இது எல்லாமே இயற்கையாவே இருக்குதுப்பா.

  10. நட்டு July 3, 2007 at 11:33 am - Reply

    நானும் இத்தன வருசமா முட்டாப் பெட்டியக்(தொலைக் காட்சிப் பெட்டி) கட்டிகிட்டு இப்பத்தங்க இந்த மாதிரிப் படமெல்லாம் பார்க்கிறேனுங்க

  11. ஜெஸிலா July 3, 2007 at 11:48 am - Reply

    அபி அப்பா, பயப்படாம போயி பாருங்க. நம்ம கிடேசன் பார்க் ஆட்களையும் கூட்டு சேர்த்துக்கிட்டு போங்க. 🙂

    அய்யனார், நீங்களே ஒரு சினிஸ்டார் 😉 நீங்க ஏன் அதை தேடிப் போகணும்? ஸ்கை போக வேண்டாம் ஸ்கீ போங்க ;-). வெள்ளக்கார பென்குயினுக்கு தமிழ் தெரியாது.

    அட! சாபத்தா இந்த ஊர்ல இப்படி யோசிச்சா சாப்பாட்டிலயே கைய வைக்க முடியாதே?

  12. Dubukku July 3, 2007 at 12:24 pm - Reply

    அருமை.

    தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி.
    http://www.desipundit.com/2007/07/03/skidubai/

  13. ஜெஸிலா July 3, 2007 at 12:29 pm - Reply

    //ச்ச்சும்மா அதிரும்ல!// ஆமாம்மா அதிரும்தான் 😉 நன்றிக்கு நன்றி லொடுக்கு.

    //அடப்பாவிகளா!!ரஜினி…சிவாஜின்னு தலைப்பு போட்டே பதிவை படிக்க வைக்க எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க?// ஜெசிலா, அப்படி எழுதினாத்தானே இந்த பக்கம் நீங்களாம் எட்டிப் பார்க்குறீங்க ;-). சரி எப்ப நீங்க வலைப்பூ தொடங்க போறீங்கன்னு கேட்டிருந்தேனே சத்தமேயில்ல?

    லொடுக்கு, அந்த கேள்விக்குறி எதுக்கு? கேஎப்ஃசிய ‘குட்’ன்னு சொன்னதற்கா?

  14. ஜெஸிலா July 3, 2007 at 12:34 pm - Reply

    வாங்க குசும்பன், நீங்க நம்மூரு தானா ;-)? முக்கியமான அந்த தகவலை மறந்துட்டேன் பார்த்தீங்களா? நல்ல வேளை எழுதிட்டீங்க. ரொம்ப நன்றி.

    நன்றி ஹனீஃபா ஜி.

    //எங்கூர்லே இது எல்லாமே இயற்கையாவே இருக்குதுப்பா.// யப்பா எப்பவுமே அந்த ‘கூல்’ல இருப்பது நமக்கு சிரமமப்பா 😉 சீ சீ இந்த பழம் புளிக்கும் 😉

    //நானும் இத்தன வருசமா முட்டாப் பெட்டியக்(தொலைக் காட்சிப் பெட்டி) கட்டிகிட்டு இப்பத்தங்க இந்த மாதிரிப் படமெல்லாம் பார்க்கிறேனுங்க// நட்டு, போல்ட்டோட நம்ம ஊரு பக்கம் வாங்க பெட்டில பார்க்காதெல்லாம் பார்க்கலாம் 😉

    ரொம்ப நன்றிங்க டுபுக்கு. அப்பப்ப இந்த பக்கம் வந்து படிச்சி, அந்த பக்கம் போடுங்க 😉

  15. சுல்தான் July 3, 2007 at 2:46 pm - Reply

    லாக்கருக்காக 20 திர்ஹம் கொடுத்து விட்டு, லாக்கரை பயன்படுத்தி விட்டு, கார்டை திரும்ப பெட்டியில் போட்டால் 10 திர்ஹம் மட்டும் துப்பும். சமீபத்தில் குடும்பத்தோடு போய் வந்தது.

    இருந்தாலும், இந்த சூட்டிலே இத்தனை குளிரை எத்தனை அழகாய் வடிவமைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. என் குடும்பத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோரும் அனுபவித்து மகிழ்ந்தார்கள். இரண்டு மணி நேரத்துக்குப் பின் கூட, ‘சளி புடிச்சிரும் வந்திருங்கள்’ என்று இழுக்க வேண்டியிருந்தது.

  16. ஜெஸிலா July 3, 2007 at 6:40 pm - Reply

    //லாக்கருக்காக 20 திர்ஹம் கொடுத்து விட்டு, லாக்கரை பயன்படுத்தி விட்டு, கார்டை திரும்ப பெட்டியில் போட்டால் 10 திர்ஹம் மட்டும் துப்பும். சமீபத்தில் குடும்பத்தோடு போய் வந்தது.// சுல்தான் பாய் உங்கள ஏமாத்திட்டாங்க போலிருக்கே 😉 நாங்க பத்துதான் கொடுத்தோம். திரும்பவும் நான் ஸ்கீ துபாய் வலைத்தளத்திலும் பார்த்தேனே 10 ன்னுதான் போட்டிருக்கு.

  17. கண்டிப்பா நானும் போகனும்னு ஆசை பிளான் ரெடி பண்ணிகிட்டு இருக்கேன் ரொம்ப நாளா போகலாம்.

    பதிவுக்கு (உசுப்பிவுட்டதுக்கு)வாழ்த்துக்கள்

  18. ஜெஸிலா July 4, 2007 at 9:17 am - Reply

    //கண்டிப்பா நானும் போகனும்னு ஆசை பிளான் ரெடி பண்ணிகிட்டு இருக்கேன் ரொம்ப நாளா போகலாம்.// மின்னல் நீங்களும் இதே ஊருதானா? அன்று அய்யனார், தம்பி கோஷ்டியோடு உங்களை பார்க்கலையே? //ரொம்ப நாளா போகலாம்??// அப்படின்னா?

  19. முபாரக் July 4, 2007 at 11:41 am - Reply

    ஸ்ரேயா ஸ்கீ துபாய் வந்தால் – னு தலைப்பு வச்சிருந்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் கூட்டம் அதிகமா வந்திருக்கும், நானும் அதனாலதான் லேட்டு ஹி..ஹி..

    இங்க அடிக்கிற வெயிலுக்கு நல்லா வயித்தெரிச்சல கெளப்புற மாதிரி இருந்திச்சிங்க உங்க பதிவு

    அந்த பெங்குயின் வெளையாட்ட ரொம்ப நேரம் வெளையாண்டேன். சூப்பருங்க

  20. செல்லி July 4, 2007 at 11:41 am - Reply

    நல்ல தகவல்கள். தந்தமைக்கு நன்றி ஜெஸீலா.

    ஆனா இதுக்குப் போய் ரஜனி.(….சிவாஜில சொல்ற கூல் ) விளம்பரம் படு சூப்பருங்க!:-)))))

    எழுதுங்க எழுதுங்க துபாய் பற்றி நிறைய தகவல்கள் தாங்க.

  21. ? //ரொம்ப நாளா போகலாம்??// அப்படின்னா?
    ///

    தப்புதான்

    மின்னுது மின்னல் said…
    கண்டிப்பா நானும் போகனும்னு ஆசை பிளான் ரெடி பண்ணிகிட்டு இருக்கேன் ரொம்ப நாளா…….

    (will be) போகலாம்.

    இப்படி இருக்கனும்

  22. ஜெஸிலா July 4, 2007 at 5:00 pm - Reply

    வாங்க முபாரக். உங்கள மாதிரி ஆளுங்களாம் வரதுக்குக்காகவே இந்த தலைப்பு. நீங்க சொன்னா மாதிரி ஸ்ரேயான்னு கூட எழுதியிருக்கலாம் ஆனா ‘கூலோடு’ இணைச்சிருக்க முடியாது பாருங்க 😉

    செல்லி, சிவாஜியை பார்த்து ஆளாளுக்கு தன் பங்குக்கு ஏதாவது எழுதுறாங்க. நமக்கு அரைச்ச மாவையே அரைக்க விருப்பமில்ல, அதான் இப்படி தலைப்பு வச்சி ஆசைய தீர்த்துக்குறேன். அது மட்டுமில்லாம இதுதான் சூடான தலைப்பு அப்பதானே உங்கள மாதிரி புது ஆளுங்களும் தலையக் காட்டுறீங்க 😉

    மின்னல் விளக்கியதற்கு ரொம்ப நன்றிப்பா. சீக்கிரமா கோஷ்டி சேர்த்துட்டு போய் பாருங்க. இலவச விளம்பரம் கொடுத்து ஆள் சேர்த்தேன்னு ‘ஸ்கீ துபாயில்’ ஒரு கமிஷன் வெட்ட சொல்ல வேண்டியது தான் 😉

  23. கோபிநாத் July 5, 2007 at 5:45 am - Reply

    யப்பா…குளிருதுப்பா ;)))

  24. கோபிநாத் July 5, 2007 at 5:45 am - Reply

    \அபி அப்பா said…
    பக்கத்திலேயே இருக்கேன்! நேத்து கூட மால் உள்ளே போனேன்! 1000/2000 திர்காம் இருக்குமோன்னு பயத்துல இது வரை போக நெனச்சதில்லை! கண்டிப்பா போகனும்! நல்ல விஷய பகிர்வு! \

    அபி அப்பா…அப்போ அடுத்த மீட்டிங் இங்கே தானா? 😉

  25. உங்கூருக்கு வந்து இதைப் பார்க்காம வந்திட்டேனே.அடுத்த தடவை பார்க்கலாம். நல்ல தகவல்கள் கொடுத்திருக்கீங்கப்பா. நன்றி.

  26. ஜெஸிலா July 5, 2007 at 5:52 am - Reply

    //உங்கூருக்கு வந்து இதைப் பார்க்காம வந்திட்டேனே.// ஏமாத்திட்டீங்க பார்த்தீங்களா வல்லி? வந்தீங்கன்னா எங்களை மாதிரி ஆட்களை தொடர்பு கொள்ளணும் அப்பதான் எதையுமே விட்டுடாம பார்த்திடலாம், எங்களையும் சேர்த்து 😉 அடுத்த முறை கண்டிப்பா வரணும் சரியா?

    கோபி, படிச்சிட்டே குளிருதுன்னா எப்படி? ஒரு எட்டுப் போய் பாருங்க. அதான் அபி அப்பா அங்க மாநாடு போடுகிறாராமே, அவர் செலவிலேயே போய்ட்டு வந்திடுங்க 😉

  27. முபாரக் July 5, 2007 at 10:16 am - Reply

    //வாங்க முபாரக். உங்கள மாதிரி ஆளுங்களாம் வரதுக்குக்காகவே இந்த தலைப்பு//

    ஆஹா தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க போல, நாங்கல்லாம் ரெகுலரா வாசிக்கிறவங்க. தலைப்பை பாத்து சிக்குற ஆள் இல்ல 🙂

    //நீங்க சொன்னா மாதிரி ஸ்ரேயான்னு கூட எழுதியிருக்கலாம் ஆனா ‘கூலோடு’ இணைச்சிருக்க முடியாது பாருங்க ;-)//

    கூல்!!!

  28. ஜெஸிலா July 5, 2007 at 10:18 am - Reply

    //ஆஹா தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க போல, நாங்கல்லாம் ரெகுலரா வாசிக்கிறவங்க. தலைப்பை பாத்து சிக்குற ஆள் இல்ல :)// மெய்யாலுமா? நம்பிட்டேன் 😉

  29. கூல்.!!

  30. கானா பிரபா July 5, 2007 at 11:48 am - Reply

    உங்க பாட்டு போட்டாச்சு,

    itune மூலம் தரவிறக்கலாம்

    http://radiospathy.blogspot.com/2007/07/12.html

  31. ஜெஸிலா July 5, 2007 at 11:49 am - Reply

    முத்துலெட்சுமி நீங்களுமா ? 😉

    நன்றி பிரபா.

  32. என்ன நானுமா வா..
    பொண்ணாப்பொறந்ததால ரசிகர் மன்றத்துல சேரல அவ்வளவு தான்..
    தலைவர் என்ன ஸ்டைலா கூல் சொல்றார்…கூல். 🙂

    (லாஜிக்க் வாழ்க்கையில் பார்க்கலாம்படத்தில் எதுக்குன்னு விட்டுட்டேன்)

  33. லொடுக்கு July 5, 2007 at 2:28 pm - Reply

    //(லாஜிக்க் வாழ்க்கையில் பார்க்கலாம்படத்தில் எதுக்குன்னு விட்டுட்டேன்)//

    Dhoool!!!

  34. ஜெஸிலா July 5, 2007 at 8:29 pm - Reply

    //(லாஜிக்க் வாழ்க்கையில் பார்க்கலாம்படத்தில் எதுக்குன்னு விட்டுட்டேன்)// உங்கள மாதிரி ஆட்களும் அந்த மாதிரி கோஷ்டின்னு நம்பவே முடியலை 😉 இதுக்கு தூள் வேற.

  35. குசும்பன் July 9, 2007 at 6:22 am - Reply

    ஜெஸிலா said…
    வாங்க குசும்பன், நீங்க நம்மூரு தானா ;-)?

    ஆமாம் அக்கா நானும் இங்கதான் குப்ப கொட்டுகிறேன். 🙁

  36. ஜெஸிலா July 9, 2007 at 6:24 am - Reply

    //ஆமாம் அக்கா நானும் இங்கதான் குப்ப கொட்டுகிறேன். :(// குப்ப கொட்டுறீங்களா – அப்ப துபாய் நகராட்சியிலா வேலை? 😉

  37. Benu August 9, 2007 at 5:57 am - Reply

    Hey,
    singam singulathaan varum. so rajini nichayama singulathaan varuvar. anaa avarukkaga naamellam mela thaalathoda veliya wait pannalam, okva???

  38. ஜெஸிலா August 9, 2007 at 6:38 am - Reply

    //avarukkaga naamellam mela thaalathoda veliya wait pannalam, okva???// ஓகே பெனு. கொட்டடிச்சிதான் சிங்கத்தை விரட்ட முடியும்.

Leave A Comment