மகளிர் தினம் அவசியமா?
பெண்கள் தினமென்று ஊரெல்லாம் கொண்டாடுறாங்களே அது எப்படி வந்தது தெரியுமா? உழைக்கும் மகளிர் தினமாக இருந்ததுதான் இப்ப வெறும் 'பெண்கள் தினம்' என்ற பெயரில் தொலைக்காட்சியில் அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளும், வானொலியில் பெண்கள் சம்பந்தப்பட்ட பாடல்களுமாகச் சுருங்கி விட்டது.. பெண் சம்பந்தப்பட்ட பாடலென்றால் பெண் ஒரு தாயாக, மனைவியாக, [...]
காதல் வாகனம்
காதலுக்கு ஏற்ற வண்டி, உலகில எந்த வண்டி, இப்போதே சொல்லுங்க வலைஞர்களே எவ்வண்டி நல்ல வண்டி?1. ரெக்கை கட்டி பறக்கும் சைக்கிள் பிடிக்குமா?2. மோட்டார் பைக் பிடிக்குமா?3. மோட்டார் கார் பிடிக்குமா?4. பேருந்து பிடிக்குமா?வண்டில்லாம் எதுக்குங்க? என்னவளு(னு)டைய கையக்கோர்த்துக்கிட்டு பொடி நடையா நடக்கத்தான் பிடிக்கும்ன்னும் சொல்றவங்களும் இருப்பாங்க. எது [...]
திருந்துங்க பெண்களே!
காதலர்கள் தினத்தன்று அலுவலகத்தில் எல்லாப் பெண்களும் சிகப்பு சட்டை அணிந்து வரத் திட்டமிட்டு, என்னையும் அணிந்து வரச் சொன்னார்கள். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் ரவிக்கை போடாத ஊரில் ரவிக்கை போட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்களே அப்படிப் பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில், 'ஒன்றுபட்டால் குறைந்து விடமாட்டோம்' என்று மனசை தேற்றிக் [...]
கைக்கு எட்டியது
அக்கம் பக்கத்து பசங்களுடன் மலிவான மட்டைகள் வாங்கி அதில் கோழியிறகு பூ வைத்து பிரமாதமாக விளையாடுவதாக நினைத்துக் கொள்வேன். அதுதான் டென்னிஸ் என்பதுபோல் பிரம்மையுடன் அது மிக சுலபமான விளையாட்டு என்றும் நினைத்துக் கொள்வேன். என் அக்காவின் கணவர் ஒரு டென்னிஸ் கோச்சர். அவர்களிடம் எனக்கும் விளையாட ஆர்வம், [...]
அன்பர்கள் தினம்
எல்லா வலைப் பதிவர்களுக்கும் பூங்கொத்தும், இனிப்பும் அனுப்புவதாகத் திட்டம்*. தங்களுடைய புகைப்படத்தையும் முகவரியையும் தனிமடலில் அனுப்பினால் குலுக்கல் முறையில் இல்லை இல்லை சிறந்த முகங்களை ஒரு சுமாரான முகம் தேர்வு செய்து 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்தப் பரிசு அனுப்பிவைக்கப்படும்.* சொந்த படமாக இருக்க வேண்டும்.* உங்க படத்தை நீங்களே [...]
அம்மாவுக்கும் வள்ளுவருக்கும் ஆகாதோ!?
பள்ளி பருவத்தில் வள்ளுவர் கோட்டம் போகலாம் என்று தோழிகளெல்லாம் திட்டம் போட்டால் அது காதலர்கள் சந்திக்கும் இடமென்று ஆளாளுக்கு தமது காதலனையும் அங்கு வரவைக்க திட்டம் போட்டார்கள். காதல் என்றாலே காத தூரம் ஓடும் நான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 'டாஷ்' என்று அர்த்தம் என்று அந்த வார்த்தையையே [...]