காதல் வாகனம்

காதலுக்கு ஏற்ற வண்டி, உலகில எந்த வண்டி, இப்போதே சொல்லுங்க வலைஞர்களே எவ்வண்டி நல்ல வண்டி?

1. ரெக்கை கட்டி பறக்கும் சைக்கிள் பிடிக்குமா?
2. மோட்டார் பைக் பிடிக்குமா?
3. மோட்டார் கார் பிடிக்குமா?
4. பேருந்து பிடிக்குமா?

வண்டில்லாம் எதுக்குங்க? என்னவளு(னு)டைய கையக்கோர்த்துக்கிட்டு பொடி நடையா நடக்கத்தான் பிடிக்கும்ன்னும் சொல்றவங்களும் இருப்பாங்க. எது யாருக்கு பிடிக்குதோ தெரியாது, எனக்கு பைக்குன்னா ரொம்ப பிடிக்கும். இங்க பைக்ல சுத்த முடியாததாலயோ, கைக்கெட்டாததாலயோ ரொம்பப் பிடிச்சுப் போச்சோ என்னவோ??

ஆனா பைக்ல போகும் போதெல்லாம் நெனைப்பேன் வெயிலடிக்காம இருக்கணும், மண்புழுதி தாக்காமலிருக்கணும், புகை மூச்சடைக்காமல் இருக்கணும்னு. நானே ஒரு விதமான பைக்கை மனசுல கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். அது ஒரு விதமான பைக்- கார் இனக்கலப்பு வாகனம். அதாவது பைக் மாதிரி நுழைஞ்சு, போக்குவரத்து நெரிசல்ல மாட்டாம, வேகமா பறக்கணும் ஆனா கார் மாதிரி மூடி இருக்கனும். ஏன்னா, அப்பதான் உள்ளே பாதுகாப்பா இருக்கலாம். முகமூடி போடத் தேவையில்ல, ஹெல்மெட் தேவையில்ல, பாட்டு கேட்கலாம், செல்பேசியையும் ஒலிபெருக்கியில் பொருத்தி சத்தமா பேசலாம். ‘வண்டி ஓட்டும் போது பேசவே கூடாது இதுல இதெல்லாம் தேவையா? உன்ன மாதிரி ஆளுங்களாலதான் விபத்து நடக்குது’ன்னு சொல்வீங்க.. தெரியும். ஆனா ஒழுங்கா கவனமா விதிமுறையோட ஓட்டுனா ஒண்ணுமாகாது. இப்படி பல நல்ல சாராம்சங்கள் இருக்குது என் காதல் வாகனத்திற்கு. கிட்டத்தட்ட என் கற்பனை வாகனம் மாதிரியே நிஜமாவே வந்தாச்சு வந்தாச்சு…

660 சி.சி. கொண்ட கார்வெரா 40000 யூரோ ஆகுமாம் (ரொம்பக் கம்மிதாங்க. இந்திய ரூபாயில் சுமார் இருப்பத்து மூன்றரை லட்சம்தான் ). புதிய கண்டுபிடிப்புன்னு இவ்வளவு விலை. போக போகக் குறையாதா என்ன? அமீரகத்தில் வந்தா 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்ல மாட்டாம தப்பிக்க இவ்வளவு விலைக் கொடுக்கணுமா? ஆனா ஒரு சந்தேகம், இதுக்கு கார் உரிமம் போதுமா? இல்ல பைக் உரிமம் தனியா எடுக்கணுமான்னு தெரியல. இதெல்லாம் ரொம்ப அதிகம்னு சொல்றீங்களா? சரி விட்டுடலாம்.



உங்களுக்கு பிடிச்ச வண்டி எதுன்னு கொஞ்சம் சொல்லுங்க.

6 Comments

  1. அய்யனார் March 1, 2007 at 1:26 pm - Reply

    நமக்கு புடிச்சது bike தாங்க அது எந்த bike ஆ இருந்தாலும் பரவாயில்லை ஓடுர கண்டிஷன்ல இருந்தா போதும்..நம்ம
    கண்டிஷன்லாம் ஒண்னெ ஒண்ணு தாங்க கூட உக்காந்து வர ஒரு பொண்ணு வேணும் முகத்த துப்பாட்டா வால் cover பண்ணி அப்படியே ECR road ல போற சுகம் இருக்கு……

    Hellow பதிவு போட சொன்னா ஏங்க நீங்க வேற…………….

  2. தம்பி March 2, 2007 at 2:03 am - Reply

    சைக்கிள்ல போனா மிதிக்கணுமே :((
    பைக்ல போனா பெட்ரோல் போடணுமே :((
    கார்ல போகற அளவுக்கு பெரிய ஆள் இல்லிங்க.
    பஸ்ல போகறதுக்கு சும்மாவே இருக்கலாம்.

    இப்படில்லாம் நெனச்சதால, சாரி எனக்கு இந்த அனுபவமெல்லாம் இல்லிங்க. :))

  3. ஜெஸிலா March 2, 2007 at 2:39 am - Reply

    அய்யனார் ரொம்ப அனுபவிச்சி எழுதுனாப்புல இருக்கு 😉

    //சைக்கிள்ல போனா மிதிக்கணுமே :((//
    பின்ன தன்னாலயா ஓடும். ஒன்னு செய்யுங்க உங்க துணைய மிதிக்க சொல்லிட்டு நீங்க துணையா உட்கார்ந்துகிடுங்க. (உங்கள ஏறி மிதிச்சா நான் பொறுப்பல்ல) 😉

    //பைக்ல போனா பெட்ரோல் போடணுமே :((//
    ஏன் குடித்தண்ணீர் ஊத்தி முயற்சி செய்ததில்லையாக்கும், நம்ம ஊர்லதான் குடித்தண்ணீர் பெட்ரோல் இரண்டுமே கஷ்டம் நீங்க துபாய்ல தானே இருக்கீங்க பின்ன என்ன இரண்டுமே சுலபமா ரொம்ப செலவாகாம கிடைக்குமே? 😉

    //கார்ல போகற அளவுக்கு பெரிய ஆள் இல்லிங்க.//
    கார்ல போறவங்களாம் பெரிய ஆளுன்னு யாருப்பா சொன்னது. பெரிய ஆளும் இந்த போ.நெ. சின்ன மனுசனா போறது தெரியாதாக்கும் ;-(

    //பஸ்ல போகறதுக்கு சும்மாவே இருக்கலாம். //
    கதிர் நிஜமாவே நீங்க துபாய்லதான் இருக்கீங்களான்னு சந்தேகமா இருக்கு. இந்த ஊரு பேருந்து ரொம்ப பிடிக்கும். சொகுசு வண்டில.

  4. லொடுக்கு March 3, 2007 at 7:37 pm - Reply

    நமக்கு எப்பவுமே மாட்டு வண்டிதாங்கோ!!

  5. ஜெஸிலா March 4, 2007 at 6:52 am - Reply

    லொடுக்கு ரொம்ப வித்தியாசமான ஆளாத்தான் தெரியுது. மாட்டு வண்டி சரி, எந்த ஊர்ல ஓட்டுவீக?

  6. லொடுக்கு March 7, 2007 at 11:56 am - Reply

    அப்படியே காட்டு வழிலதான். Awir-ல மணல் காடை புடிச்சா Hatta போயி சேந்துரலாம்ல. 🙂

Leave A Comment