கங்கை அமரன் அரசியலில் குதிக்கிறார்!
போன மாசம் எங்க ஊரில அதாங்க துபாயில 'துபாய் தமிழ் சங்கம்' ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடினாங்க. அதில 'லியோனி' பட்டிமன்றம், அப்புறம் 'கங்கை அமரன்' பாட்டுக் கச்சேரி, குழந்தைகள் நடனம் அப்படி இப்படின்னு அமர்க்களப்படுத்திப்புட்டாங்க. கங்கை அமரன் தனியா வரல அவர் மகன் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. [...]
வெள்ளைக்காரருங்க முட்டாளா? சாமர்த்தியமா?
சிலருக்கு புது புது உணவை சாப்பிட்டு பார்ப்பதில் அலாதி பிரியம். அதனால்தானோ இந்த 'சாப்பாடு திருவிழா' (Food Festival) வருஷம் தோறும் இங்க அமீரகத்தில தவறாம நடக்குது. பதிவு அதப்பத்தி இல்ல பயந்துடாதீங்க.'துர்கிஷ் சாண்விட்ச்' வேணுமான்னு சாப்பாடு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே ரொம்ப பாசமா வலம் [...]
வலி
செப்டம்பர் 2006 மாத 'திசைகளில்' வெளிவந்த என் கவிதை:அடித்தே இன்புறுகிறாய்நல்ல விஷயமோகெட்ட விஷயமோவாழ்க்கையின் ஆரம்பமோவாழ்க்கையின் முடிவோஅடிக்காமல் அடங்காதாவிசேஷம்?இருக்கும் போதுதானென்றால்இறந்த பிறகுமா?
நட்பு
தேர்வில் எட்டிப் பார்த்துஎழுதும் போதும்ஆபாச படத்தைபார்க்க கூடாத வயதில்பார்க்கத் துணிந்த போதும்கல்லூரி மறந்து ஊர் சுற்றும் போதும்சுருட்டு, மது, மாதுஎன்ற போதும்காதலியுடன்ஓடிப் போக நினைக்கையிலும்தடுத்து நிறுத்திஎடுத்துரைக்காமலிருக்கமுடியவில்லை என்னால்உளியாகத்தான் எனைநினைத்திருந்தேன்உடைப்பேன் நட்பையென்றுஅறியாமல்
பிடிச்சிப் போச்சு ரொம்ப!
முன்பே வா என் அன்பே வா படம்: சில்லுன்னு ஒரு காதல்பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்வரிகள்: வாலிபடத்தின் பலம் பாடலும் என்று சொல்லும் அளவுக்கு இரண்டு நல்ல பாடல்கள் இந்த படத்தில். இரண்டுமே எனக்கு பிடித்தது. நியூயார்க் நகரம் பாடலில் ஏ.ஆர்.ஆரின் குரலையும் இசையையும் இரசித்த வேளையில் [...]
சுதந்திர தினம்
வலைப்பூ பக்கம் வந்து நாளாச்சே அதான் எட்டிப்பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். எட்டிப்பார்த்துட்டு பதிவுப் போடாம சும்மா போனா எப்பட,ி அதான் ஏற்கெனவே 'திசைகள்' மின்னிதழில் வந்த கவிதையை இடுகிறேன்.மாதம் முழுவதும்சிறை பிடித்துசாகும் நிலையில்ஆலிவ் இலை தந்துதிறந்து விட்டுபறக்க செய்துகைத்தட்டிஇனிப்பு வழங்கிகொண்டாடினர்சுதந்திர தினம்