வாடகை வீடு – வில்லா 72

வீடு தேடினோம் பாலைவனத்தில்விரைந்து நடந்தோம் பாதசாலையில்வின்னை முட்டும் கட்டிடங்கள் இடையில்வீதி வீதியாய் வரிசை வீடுகள்விசால வராண்டா வேண்டாம்டா எனக்குநிம்மதி குடியிருக்கும் வீட்டை காட்டுடாவில்லை வில்லையாய் குட்டி வீடுகள்கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத இல்லங்கள்வெளிச்சம் நிறைந்த திறந்த வெளிவில்லாவானாலும் பாலையிலே பூத்த சோலைவயல்காடு போல் புற்கள் அளவாய்வேப்பம் ஒன்று முருங்கை இரண்டாய் வளர்ந்து நிற்கவெட்கத்தில் வெக்கிய மல்லி கொடி கவிழ்ந்து படறவிக்கி விக்கி என்று பூனை பெயரை விளிக்கும் கிளிவிடிந்ததும் சூரியனை கண்டு கூவ சேவல்விட்டு விடாமல் பட்டென்று குடியேறினோம் [...]

By | 2006-06-26T11:41:00+00:00 June 26th, 2006|கவிதை|4 Comments

விச்சித்திர பிறவி

விரும்பாத வேதனை வந்தால்விரும்ப கூடியவர்கள் நினைவில் வரும்.வலியால் துடிக்கும் போதுவழிவகுக்கும் துணையை தேடி.வினோதமானவனே, உனக்கோ...வந்தது வந்தது வேதனை வந்ததுவேதனையோடு கூடிய வலியும் வந்ததுவலியிலும் ஞானம் வந்ததுவெற்றி பெற்றது போல் உயரம் தெரிந்ததுவிதிவிளக்கு போல் ஒளி தெரிந்ததுவெற்றிலைக்காட்டையும் இரசிக்க தோன்றியதுவெற்று மனலையும் விரும்ப செய்ததுவெறித்த கண்ணால் செதுக்க முடிந்ததுவற்றாத ஊற்றாக கற்பனை பிறந்ததுவர்ணித்தபடியே வேதனையும் குறைந்தது.தன்னை மறக்க எழுதும் கவிஞனுக்குதன்னை மறந்து கவிதை பிறந்தது.

By | 2006-06-25T13:12:00+00:00 June 25th, 2006|கவிதை|0 Comments

காதல் கடிதம்

பெயரில்லாததால்பெரிதுப்படுத்தவில்லைஅறிவுறுத்தியிருந்ததால்அலட்சியப்படுத்தவில்லைகவரும் காகித அட்டையால்கவிழ்ந்துவிடவுமில்லைஇதுவரை யாரென்று தெரியவில்லைஇருப்பினும் சந்திக்க விருப்பம்விருப்பத்தை சொல்லவல்லவிபரீதம் காதல் எனவே.

By | 2006-06-19T15:46:00+00:00 June 19th, 2006|கவிதை|8 Comments

பாதுகாப்பு!

துபாய் நிலா வெளிச்சத்தில்நள்ளிரவில்துணையின்றிபூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவேமூடிய கடைகளை பார்த்தபடிஎங்கோ கேட்கும்வாகன சத்தத்தை உணர்ந்தபடிதெரு விளக்கின்பிரகாசத்தை இரசித்தப்படிசுத்தமான அகல தெருவில்நிமிர்ந்த நடையுடனும்நேர் கொண்ட பார்வையுடனும்காசு நிறைந்த கைப்பையுடனும்விலைமதிப்புள்ள பொருட்களுடனும்விலைமதிப்பில்லா கற்புடனும்சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்சிக்காமல் வீடு திரும்பும்போதுஆதங்கம் தொட்டதுஎப்போது விடியும்என் தேசம் இப்படியென்று!www.thisaigal.com/jan06/jazeelakavi.htm

By | 2006-06-12T10:08:00+00:00 June 12th, 2006|கவிதை|6 Comments

வாழ்வே உனக்காக

கால காலமாக இயற்கையோடுவளர்ந்த நான்அதை இரசிக்க மறந்ததேனோ?உன்னுடன் காலம் கடந்த போதுஎல்லாம் புது உலகமாக மாறியதேனோ?புல் நுனியில் பனிதுளியில் இருந்துபூத்து குலுங்கும் பூக்கள் வரைபுதிதாக தோன்றியது ஏனோ?புத்தம் புது பூமியாகஉன்னுடன் மட்டும் தோன்றுவதேனோ?பிரிவென்றால் புரியாது இருந்தேன்பெற்றோரை விட்டு பிரிந்துஉன்னிடம் ஒப்படைக்கும் போது கூடஎனக்கு அது பிரிவாக வலிக்காததேனோ?உன்னை பிரிந்த நாள் முதல்என்னைவிட்டு எல்லாம்தூரம் சென்றதாகஉணரும் உணர்வுதான் ஏனோ?உன்னுடன் வாழ்ந்த சில நாட்கள்பல சந்ததியை கடந்ததாகபிறவிகள் பல கழித்தவளாகபல நாட்கள் பழகிய சிநேகிதமாகபலநூறு ஜென்மம் பேசியதாகநூற்றாண்டுகள் மகிழ்ந்து வாழ்ந்ததாகபிரியாத [...]

By | 2006-06-04T10:52:00+00:00 June 4th, 2006|கவிதை|7 Comments

பெட்டிக்குள் அடங்காதது

ஆண்கள் இயல்பு கொண்டஆண் வண்டுகள்மலர் விட்டு மலர் தாவிமூங்கில்களுக்கு அருகே வளர்ந்திருக்கும்காட்டு பூக்களின்தேனை மட்டும் உண்ணாமல்துளைக்கவும் துடங்கியதுமூங்கிலை.தூது போன தென்றல்புல்லாங்குழலென எண்ணிமூங்கில் துளையில் நுழைந்துராகம் எழுப்பியது.மரங்கொத்தி ராகத்திற்கேற்பமரத்தை தட்டி தாளம் துவங்கியது.குயில் சூழலுக்கேற்பபாடி மகிழ்ந்ததுமர பொந்துக்கள் ஒலிப்பெறுக்கியாக மாறபுல்வெளி மேடையாக இருக்கநேற்று பெய்த மழையின் சாரல் துளிகள்புல்நுனியின் ஓரம் நாட்டியம் ஆடவண்ண வண்ண விளக்காகவானவில் வந்து நிற்கஎழிலகத்தை காணஇரண்டு கண்கள் போதாதேஎன் புகைப்பட பெட்டி கூடஇவ்வழகிய காட்சியை அதனுள்பூட்ட நினைத்ததை எண்ணிஏலனமாக புன்னகையித்தது.

By | 2006-05-21T10:55:00+00:00 May 21st, 2006|கவிதை|2 Comments

புல்வெளியில் பனிதுளி

விடியல் விடியல்எனக்கோ குளிரின் நடுக்கம்.உன் மேல் ஏந்தான்வேர்வையோ?பாவம் நீ என்று நான் விசுறவேர்வைகள் உன்னுடன்உறவாடி ஒட்டிக்கொள்ளவிரல்களால் உன் வேர்வைதுடைக்க அச்சம்உன் துயில் கலைந்து விட்டால்?உற்று நோக்கி கொண்டிருக்கையில்சூரியன் எழுந்தான்உன் வேர்வைகளும் மறைந்தனவேர்வைகள் என்னை பற்றிக் கொண்டன

By | 2006-05-13T11:13:00+00:00 May 13th, 2006|கவிதை|0 Comments

குமுறல்

பிறந்த உனைதிறந்த மேனியாய் விடாசிறந்த துணியால் பொதித்தோம்வளரும் பருவத்தில்எமக்கு பிடித்ததெல்லாம்உடுத்தி பார்த்தோம்நிமிர்ந்த நடையும்நேர் கொண்ட பார்வையும்அஞ்சா மடமும் பயிற்றுவித்தோம்வளர்ந்த பின்னேமறைக்க வேண்டியதை மூடவில்லைஅறிவுரைகளை கேட்கவில்லைபாராட்டும் பத்திரமும்புகழும் பெயரும்பொருளோடு சேர்த்துக் கொண்டாய்அழகிப் போட்டியில் அலங்கரித்தாய்விளம்பரங்களில் வெளிக்காட்டினாய்வெட்கத்தை வாடகைக்கு விட்டாய்எனக்கு பெருமையும் இல்லைஉன் மீது வெறுப்பும் இல்லைஉன்னை பெற்றவளாய் மகிழ்ச்சியும் இல்லைமன குமுறல்கள் பல இருந்தாலும்உன் மகிழ்ச்சிக்காகஎன் வாய் வளைந்தது புன்னகையாக

By | 2006-04-12T12:36:00+00:00 April 12th, 2006|கவிதை|0 Comments

வேலை பளு

வயிற்றில் கருச்சுமை சுமந்துமனதில் பாரத்துடன்அரை வயிற்றுடன்கண்களில் மகிழ்ச்சியுடன்தலையில் கற்களை சுமக்கும்சித்தாளை கண்ட போதுவெட்கப்பட்டேன் எனக்குள்,அலுவலகத்தில் வேலை பளு எனக்குஎன்று சொல்லிக் கொள்ள.மார்ச் 2005 'திசைகள்' மகளிர் சிறப்பு இதழில் வெளிவந்த கிறுக்கல்

By | 2006-04-10T09:43:00+00:00 April 10th, 2006|கவிதை|3 Comments

சுனாமி அழிவு

கடலோரம் கடக்கும் போதுகிடைத்த சங்கை காதில் வைத்தால்ஓ என்று எழும் சத்தம்ஓராயிரம் குடும்பத்தின் மரண ஓலம்என்று அறியாது இருந்து விட்டோம்.வான நிறத்தை எடுத்துக் கொண்டுநீலமாக தெரிகிறாய் என்று எண்ணி இருந்தோம்கொடிய எண்ணத்தை கொண்டதனால்அது உனக்கு கிடைத்த நிறம்என்று அறியாது இருந்து விட்டோம்உன்னிடம் உள்ள கடலினங்களைநாங்கள் கொன்று தின்றோமென்றால்உன் பாரம் குறையும் என்று நினைத்திருந்தோம்அது பொறுக்க முடியாமல் பொங்கி எழுவாய்என்று அறியாது இருந்து விட்டோம்உணர்வுகள் நாங்கள் அறியஉப்பை தந்தாயென நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம்நீ விழுங்கிய சந்ததியின் கண்ணீரினால்தான்நீ உப்பாக [...]

By | 2006-04-09T07:01:00+00:00 April 9th, 2006|கவிதை|2 Comments