About Jazeela Banu

This author has not yet filled in any details.
So far Jazeela Banu has created 164 blog entries.

‘நம் நாயகம்’ நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி, சிறுகுழந்தைகள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்வில் நிகழ்ந்த 63 சம்பவங்களின் அடிப்படையில் “நம் நாயகம்” என்ற நூலை, - ஆங்கிலத்தில் Bed time stories இருப்பது போல, தத்தமது குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் இரவு நேரத்தில் கதை சொல்வது போல -  நாயகத்தின் வாழ்க்கையிலிருந்து நல்ல விசயங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தோடு, வழக்கு மொழியிலேயே எழுதியிருக்கிறேன். ஜனவரி மாதம் 23ஆம் [...]

By | 2017-02-04T19:57:07+00:00 January 15th, 2016|விழா அழைப்பிதழ்|0 Comments

அறிவின் ஆரம்ப எழுத்து – அலிஃப்

நான்கு தலைமுறை பெண்களின் இன்னல்களை ஃபாத்திமாவாக வரும் லேனாவின் மூச்சு திணறலோடு ஆரம்பிக்கிறது 'அலீஃப்' திரைப்படம். நம் வாழ்வில் முதலில் மிகவும் மதிக்கப்படவேண்டிய ஒருவர் யாரென்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது "உன் தாய்" என்றார்கள். ஒரு முறையல்ல மூன்று முறை கேட்கப்பட்ட போதும் முதல் மூன்று ஸ்தானங்களும் தாய்க்கே என்றார்கள், நான்காவதாகத் தந்தை என்றார்கள். அப்படியான தாய்மார்களை இஸ்லாத்தின் பெயரில் வதைப்பதைச் சித்தரிக்கும் படம். கண்டிப்பாக இது மூச்சுத் திணறல்தான். நியாயமான கேள்விகளைப் பெண்கள் எழுப்பும் [...]

கற்கால மனிதர்கள்

இவ்வுலகில் கொத்துக்கொத்தான கொலைகளுக்குப் பிரதான காரணம் மதங்கள், பிரிவுகள், சாதிகள் என்று சொல்வதை விட ஒரே வார்த்தையில் 'இறைவன்' என்ற நம்பிக்கை எனலாம். நாம் பார்த்திராத, அறியாத, உணரும் அந்த இறைவனுக்காக மதவெறிகளும் பிரிவினைவாதங்களும் கொலைகளும் தண்டனைகளும் பல்வேறு இடங்களில் தலைவெறித்தாடுகிறது. அதுவும் இதற்கு முதல் பலியாள் பெண்தான். இதில் மட்டும் பாரபட்சமில்லாமல் எல்லா மதங்களும் பெண்களின் அடுக்குமுறைகளை வரைந்த பிறகுதான் அதன் மீது ஒரு மதத்தின் நாமத்தைத் தீட்டுவார்கள் போல. உண்மை சம்பவம், மிகவும் வலி [...]

மெஹர்

இஸ்லாமியக் கதைக்களமென்றாலும், இஸ்லாமியக் கதாபாத்திரங்களை வைத்தாலும் (தீவிரவாதி/ வில்லன் என்பதைத் தவிர்த்து) ஏதாவது சர்ச்சைகள் அல்லது ஆட்சேபனைகள் எழுந்துவிடுமென்று பயந்தே தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சூழலை எனக்குத் தெரிந்து இதுவரை மிக இயல்பாக யாருமே பதிவு செய்ததில்லை. அதை முறியடித்தது விஜய் தொலைக்காட்சி திரைச்சித்திரம் 'மெஹர்'. எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதையை இயக்குனர் தாமிரா இயக்கி திரைக்கதை வசனத்துடன் 'மெஹராக' சல்மா நடிப்பில் வருகிறது என்றதும் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் துபாய் ஒளிபரப்பில் சல்மா சொன்ன நேரத்தில் [...]

‘நம் நாயகம்’

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த அறுபத்தி மூன்று சம்பவங்கள் பற்றி நான் எழுதிய நூல். வெளியீடு:      ரஹ்மத் பதிப்பகம் 9, இரண்டாவது பிரதான சாலை, சிஐடி காலனி, மைலாப்பூர், சென்னை 600 004 தொலைபேசி: 044 2499 7373/ 94440 25000 For online ordering: http://rahmath.net/children/817-nam-naaygam.html  

By | 2017-02-05T07:29:59+00:00 August 15th, 2015|நம் நாயகம்|0 Comments

நான் ஒரு இனப் பாகுபாடாளர் அல்ல…

அலுவலக வாசலில் உள்நுழையுமிடத்தில் ஏதோ கொட்டிக்கிடந்தது, அது வெள்ளை பளிங்குத் தரையில் பளிச்சென்று தெரிந்தது. நான் வரவேற்பாளினியிடம் "என்னது இது?" என்றேன். அவள் அலட்சியமாக "யாரோ கொஞ்சம் காபிக் கொட்டிட்டாங்க" என்றாள். "துடைத்துவிடலாம், இல்லாவிட்டால் அதை மிதித்து மற்ற இடமும் அழுக்காகிவிடும்" என்றேன். அவள் வேலையைப் பார்த்தப்படியே "இன்னும் ஒரு மணி நேரத்தில் பணியாளர் வந்துவிடுவார், அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்" என்றாள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை கடந்த எங்கள் பொது மேலாளர் ஒரு [...]

தாய்மைக்குப் பின் திருமணம்

உலகத்தில் இந்தப் பகுதியில் வாழ்வதால் நிறையவே கலாச்சார அதிர்வுகளைச் சந்தித்துள்ளேன். நேற்றும் இப்படித்தான், என் பிலிப்பினோ தோழி ஷேன் தாயாகவிருப்பதைச் சொன்னாள். என்னையும் மீறிய கலவரம் முகத்தில் தொற்றிக் கொண்டதை அவள் கவனித்திருக்கக்கூடும் அதனால் அவளாகவே "ஷேனுக்கு அடுத்த வாரம் திருமணம். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களெல்லாம் சரியாகிவிட்டது, அதனால் பிரச்சனையில்லை" என்றாள். அவளே மறுபடியும் "ஷர்மாவின் திருமணப் புகைப்படங்களைப் பார்த்தாயா? மணப்பெண் அழகாக இருந்தாளல்லவா?" என்று தொடர்ந்தாள்.எங்களுடன் வேலை பார்த்த ஷர்மாவுக்கு மூன்று வாரத்திற்கு முன்பு [...]