பொய்மையில்லா வாய்மை – About Elly | Darbareye Elly

'அபவ்ட் எல்லி' விமர்சனம் மூலமாக மற்றவர்களை பார்க்கத் தூண்ட வைக்கும் எண்ணத்தில் எழுதியதல்ல. திரைப்பட விமர்சனங்களை முன் வைக்கும் போது எழுதுபவர்கள் தான் இரசித்ததை பிறருடன் பகிர்ந்துக் கொள்ள அல்லது தனக்கு புரிந்ததைச் சொல்லி மற்றவர்களை பார்க்கச் செய்து சரி பார்த்துக் கொள்ளவென்று எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் என்னுடைய காரணங்களாவது மறக்க முடியாத காட்சிகளை பத்திரப்படுத்துவதற்கான தளம். வாழ்க்கையில் யாரையாவது தொலைத்துவிட்டு தேடியது உண்டா? என் நெருங்கிய தோழி தன் பெற்றோரை பத்து வருடத்திற்கு [...]

By | 2016-12-20T18:18:22+00:00 January 6th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

கடந்து போன காலம்.. The Past – Le Passé

ஆரம்பக் காட்சியைப் புரிந்து கொள்ள கடைசிக் காட்சி வரை நம்மைப் பார்க்க வைக்கும் படம் 'தி பாஸ்ட்' (The Past - Le Passé). தலைப்பை 'தி பாஸ்ட்' என்று வைத்துவிட்டு ஒரு 'பிளாஷ் பேக்' கூட இல்லாமலும், இதுவரை நடந்தது என்ன என்று ஒரு கதை சொல்லி மூலமோ குட்டிக் கதை மூலமோ சொல்ல முற்படாமல் கதையில் வரும் காட்சிகளின் நகர்வை வைத்தும், வசனங்களை வைத்தும் நம்மைப் புரிந்து கொள்ள வைக்கிறார் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதி. [...]

By | 2016-12-20T18:18:22+00:00 December 11th, 2013|திரைவிமர்சனம்|1 Comment

எங்கிருந்தோ வந்தான் – The Man from Nowhere

நாளை என்பதை மறந்து இந்த நிமிடத்திற்காக மட்டும் வாழ்பவராக நாமிருந்தால் நம்மைப் பற்றி யோசிப்போமா அல்லது சுற்றி இருப்பவர்கள் சந்தோஷத்திற்காகப் பாடுபடுவோமா? நம் சகோதரர்கள் உலகில் பல இடங்களில் இன்னல்களில் இருந்தாலும் அவர்களுக்காக நம் பங்கு என்னவாக இருந்துவிட முடியும்? பிற நாடு வேண்டாம் அண்டை மாநிலம்,, அதுவும் வேண்டாம் சொந்த ஊர் இல்லை, அடுத்த தெரு ம்ஹும் பக்கத்து வீட்டில் பிரச்சனை அல்லது வன்கொடுமை என்றாலும் கூட தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பவர்கள்தான் நம்மிடையே ஏராளம். [...]

By | 2012-12-04T08:32:00+00:00 December 4th, 2012|திரைவிமர்சனம்|5 Comments

உறவும் பிரிவும் – A Separation

உறவுகள் பலவிதம், நாம் தேர்ந்தெடுக்காமலே பிறப்பினால் ஏற்படும் உறவுகள், நாம் தேர்ந்தெடுப்பதின் மூலம் ஏற்படும் உறவுகள் இப்படி எந்த வகையான உறவாக இருந்தாலும் சரி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், பிளவு என்பது சகஜம். ஆனால் அது கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டுமே திருமணமுறிவுகள் - ஏன் இப்படி? விவாகரத்தின் காரணங்கள், ஒருவரால் ஒருவருடன் வாழவே முடியாது, சகித்துக் கொள்ளவே முடியாது என்ற பட்சத்தில் விவாகரத்தை எதிர்பார்ப்பார்கள் அல்லது வேறு ஒருவருடன் வாழ துடிப்பதாலும் விவாகரத்து [...]

By | 2012-11-27T06:14:00+00:00 November 27th, 2012|திரைவிமர்சனம்|2 Comments

அறம் செய விரும்பு – ‘The Blind Side’

பெரும்பாலான படங்களில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடுவே நாம் உட்கார்ந்து கொண்டு அவர்கள் வாழ்வு முறைகளைக் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படியான உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது ‘தி பிளைண்ட் சைட்’. 2009 வெளிவந்த ஒரு அமெரிக்க கால்பந்து விளையாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மைக்கெல் ஓஹெர் என்பவரின் வாழ்வியல் தான் ’தி பிளைண்ட் சைட்’. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு கிடைத்த [...]

By | 2012-11-21T11:09:00+00:00 November 21st, 2012|திரைவிமர்சனம்|4 Comments

நம்மைப் போல் ஒருவன்

இந்தியாவில் பல வகையான தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தே உள்ளன ஆனால் நம்மில் பலர் அதனை அந்தக் காலகட்டத்தின் சூடான செய்தியாக மட்டுமே பார்க்கின்றோம். அதன் பிறகு யாரும் அந்தச் செய்தியைப் பின் தொடர்ந்து செல்வதில்லை. அவ்வகையான குற்றங்களைப் பல வருடங்களாக சல்லடைப் போட்டு அலசி வடிகட்டி தீர்ப்பு வரும் போது செத்தவர்களைப் புதைத்த இடத்தில் புல்லும் முளைத்து அதனை மாடும் தின்று சாணியும் போட்டு அள்ளியிருப்பார்கள்.1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தகாருக்குக் கடத்தப்பட்ட நிகழ்வு, நம் [...]

By | 2009-09-23T14:05:00+00:00 September 23rd, 2009|திரைவிமர்சனம்|43 Comments

உயரே பறக்கும் காற்றாடி….

"இந்த உலகத்தில் பாவம் என்பது ஒன்றே ஒன்றுதான் அது ’திருட்டு’ மட்டும்தான். திருட்டே வெவ்வேறு உருப்பெரும் போது அதுவும் பாவமாகிறது. எப்படியென்றால், ஒருவரைக் கொலை செய்யும் போது ஒரு உயிரை, ஒருவரின் வாழ்வைத் திருடுகிறோம், அதுவே கணவனிடம் மனைவிக்கான உரிமையை திருடுவதாகிறது, அதுவே தந்தையிடம் குழந்தைக்குண்டான உரிமையை திருடுவதாகிறது. நீ ஒரு பொய் சொல்லும் போது நீ ஒருவருக்கு சேரவேண்டிய உண்மையைத் திருடுகிறாய். அதனால் திருட்டை விட வேறு பெரிய பாவம் இருந்துவிட முடியாது" என்று வாழ்வியல் [...]

By | 2009-08-03T06:15:00+00:00 August 3rd, 2009|திரைவிமர்சனம்|17 Comments

தொலைபேசியில் வந்த ஆபத்து: ‘Phone Booth’

நம்முடைய செயல்களில் மலிந்து கிடக்கும் பொய்களும் குற்றங்களும் யார் கண்களுக்கும் தெரியப் போவதில்லை என்ற அலட்சியப் போக்கினாலேயே தவறுகள் தொடர்கின்றன. ஆனால் திடீரென ஒருவர் நம்மை நிறுத்தி நீ செய்யும் தவறுகளும் திருட்டுத்தனங்களும் எனக்குத் தெரியும், ஒரு வாய்ப்பு தருகிறேன் அதனை நீயே ஒப்புக்கொள் என்று துப்பாக்கி முனையில் மிரட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எதையாவது எதிர்பார்த்து மிரட்டுபவர்க்கு தேவையானதைத் தந்து வாயடைத்துவிடலாம், எதிர்பார்ப்பேயில்லாத ஒருவருக்கு? நம் இரகசியத்தைத் தெரிந்தவர், கண்ணுக்குத் தெரியாதவர், தண்டிக்க நினைப்பவர் இந்த [...]

By | 2009-07-27T07:28:00+00:00 July 27th, 2009|திரைவிமர்சனம்|21 Comments

அழகான ‘கையெழுத்து’

They are providing us with the last mealThey would kill when the night is about to endWe shouldn't be there to die with pain when the sun risesMy dear love let's kill each other in this darkஅவசரமாக கடைசி உணவை பரிமாறினார்கள்அந்த இரவு முடியும் முன் நம் உயிரை பறிக்கவலியால் துடித்து சாக நாம் இருக்க கூடாது சூரியன் எழும்பும் முன்என் பிரியமானவளே [...]

By | 2009-07-13T09:40:00+00:00 July 13th, 2009|திரைவிமர்சனம்|20 Comments

Slumdog Millionaire – என் பார்வையில்

இறைவனின் மிகச் சிறந்த படைப்பில் ஒன்றுதான் நம்முடைய மூளை. எந்த ஒரு நிகழ்வையும் பார்க்கும் போது, கேட்கும் போது, இரசிக்கும் போது, உணரும் போது அது தொடர்புடைய எல்லா விஷயங்களும் பதிந்துவிடுகிறது - மனித மூளையில். அந்தப் பதிவின் பிரதிபலிப்பே நம் நினைவுகள். அப்படிப்பட்ட நினைவுகளில் தங்கிவிட்ட விஷயங்களிலிருந்து தனக்குத் தேவைப்படும் பதில்களை தேடியெடுத்து கேட்ட கேள்விகளுக்கு, படிக்காத கீழ்மட்டத்திலிருக்கும் இளைஞன் சரியான பதில்களைத் தந்து அசத்தியதை ஒப்புக் கொள்ள முடியாத 'மில்லியனர்' நிகழ்ச்சி நடத்துனர்அந்த இளைஞனை [...]

By | 2009-02-02T12:49:00+00:00 February 2nd, 2009|திரைவிமர்சனம்|21 Comments