துபாய் நல்ல துபாய்

துபாய்க்கு வந்து இந்த அக்டோபரோட பத்து வருஷமாகுது. பத்து வருஷத்துல என்ன கிழிச்ச என்ன சாதிச்சன்னு கேட்டிடாதீங்க அப்புறம் நிறைய சாதிச்சேன்னு பொய் சொல்ல வேண்டி வரும். என்ன நம்ப முடியலையா? என்னாலயே நம்ப முடியல அப்புறம் நீங்க நம்பனும்னு எதிர்பார்ப்பேனா? ஆனா மறக்க முடியாத சில நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யுது. அக்கா துபாய்ல இருந்த தைரியத்துல நான் ஒரு தப்பித்தலுக்காக போறேன்னு அடம்பிடிச்சதும் வீட்டுல அனுப்பி வச்சாங்க. ஒரு பெண்ணை, அதுவும் எங்க சமூகத்துல- தனியா [...]

ப்ளூ கிராஸுக்கு ஒரு கேள்வி

ஈத் பெருநாளுக்கு வழக்கமாக 3-4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அந்த நாட்களில் பெரும்பாலும் நாங்கள் எல்லோரும் தொலைதூரப் பிரயாணம் செய்ய பிரியப்படுவோம். பத்து பதினைந்து பேர் சேர்ந்து இந்த முறை ஹத்தாவுக்கு போனோம். எத்தனை முறை போனாலும் மீண்டும் போக தூண்டும் ஹத்தா! அந்த நெடுபயணமே எனக்கு பிரியமானது. ஆறு வருடங்களுக்கு முன்பு செல்லும் போது அரட்டத்தில் ஓடும் பைக்கில் 1/2 மணி நேரத்திற்கு 25 திர்ஹம்தான். அரை மணிக்கு என்று எடுத்து விட்டு கைமாற்றி [...]

காதல் வாகனம்

காதலுக்கு ஏற்ற வண்டி, உலகில எந்த வண்டி, இப்போதே சொல்லுங்க வலைஞர்களே எவ்வண்டி நல்ல வண்டி?1. ரெக்கை கட்டி பறக்கும் சைக்கிள் பிடிக்குமா?2. மோட்டார் பைக் பிடிக்குமா?3. மோட்டார் கார் பிடிக்குமா?4. பேருந்து பிடிக்குமா?வண்டில்லாம் எதுக்குங்க? என்னவளு(னு)டைய கையக்கோர்த்துக்கிட்டு பொடி நடையா நடக்கத்தான் பிடிக்கும்ன்னும் சொல்றவங்களும் இருப்பாங்க. எது யாருக்கு பிடிக்குதோ தெரியாது, எனக்கு பைக்குன்னா ரொம்ப பிடிக்கும். இங்க பைக்ல சுத்த முடியாததாலயோ, கைக்கெட்டாததாலயோ ரொம்பப் பிடிச்சுப் போச்சோ என்னவோ??ஆனா பைக்ல போகும் போதெல்லாம் நெனைப்பேன் [...]

வெள்ளைக்காரருங்க முட்டாளா? சாமர்த்தியமா?

சிலருக்கு புது புது உணவை சாப்பிட்டு பார்ப்பதில் அலாதி பிரியம். அதனால்தானோ இந்த 'சாப்பாடு திருவிழா' (Food Festival) வருஷம் தோறும் இங்க அமீரகத்தில தவறாம நடக்குது. பதிவு அதப்பத்தி இல்ல பயந்துடாதீங்க.'துர்கிஷ் சாண்விட்ச்' வேணுமான்னு சாப்பாடு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே ரொம்ப பாசமா வலம் வந்தா 'ரோஸிலின்' என் சக ஊழியரில் ஒருத்தி. அவ எங்க நிறுவனருடைய மகள்தான் ஆனாலும் எங்களில் ஒருவராக சாதாரண சக ஊழியராகவே பணி செய்யுறா. நான் 'வேண்டாம்ப்பா! [...]

ஆறாவது அறிவு

செந்தில் குமரனின் அழைப்பிற்கிணங்க ஆறு சேர வந்தேன்.ஆறு அறிவு கொண்ட மனிதன் வலைப்பூவில் ஆறு பதிப்பதால் அவன் காயங்கள் ஆறிவிடபோவதுமில்லை, வடுக்களையும் ஆற்றிவிட போவதுமில்லை.என்ன ரொம்ப சீரியஸா போகுதேனு பயந்திடுடாதீங்க..எப்பவுமே இப்படிதான் நாம் ஒரு புத்தகம் படிக்கும் போது அந்த புத்தகத்திகிணங்க நம் மனநிலையும் மாறிவிடும். அதே போல் ஒரு படம் பார்க்கும் போதும். என்ன ஒப்புக் கொள்ள முடியவில்லையா? ஒரு அறையில் இருவர் சண்டைப்போட்டுக் கொண்டு காரசாரமாக விவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். [...]