விளையாட்டாக விவசாயம்

முகப்புத்தகத்தில் ஹாஜா மன்சூர் என்பவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என் நண்பர் அவருக்கும் நண்பரென்பதால் சேர்த்துக் கொண்டேன். தினம் தினம் ஒரு ஆப்பிள் மரம், ஒரு ஆரஞ்சு மரம் என்று பரிசு வந்த வண்ணமிருந்தது. நானும் பரிசை வாங்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தேன் அது என்ன ஏது என்று தெரியாமலேயே. அதன் பிறகு தோழி சுவாதியும் பரிசு அனுப்பினார்கள். கோ மாதாவை அனுப்பியிருக்கிறேன் மங்களகரமா தொடங்குங்க என்றார்கள். என்னடா இதுன்னு ஒரே குழப்பமா இருந்தது. வரும் பரிசுகளையெல்லாம் கல்லாவில் [...]

வரப்போகும் வசந்தத்தின் நாட்கள்!

அமீரகத்தில் மற்றும் வளைகுடா நாடுகளில் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொது இடங்களில் சாப்பிடவோ பருகவோ கூடாது, அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் சாப்பிட பருகக் கூடாது. எட்டு மணி நேர வேலைக்குப் பதிலாக ஆறு மணி நேர வேலை மட்டுமே. இதையெல்லாம் பார்க்கும் போது உலகின் இந்தப் பகுதியில் நோன்பு நோற்பது அவ்வளவு பெரிய விஷயமாகப் படவில்லை. நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ரமலான் நோன்பு நாட்களில் நான் நோன்பு நோற்பதை சக நண்பர்கள் [...]

கேள்விகளால் ஒரு வேள்வி

துபாயில் ஆயிரத்தெட்டு சங்கமும் அமைப்பும் இருந்தாலும் அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை தான் இன்னும் இலக்கிய விழாக்களை நடத்தி வருகிறார்கள். இந்த வெள்ளிக்கிழமை மாலை ’கவிதை கூடல்’ தலைமை கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்றதும் அவர்கள் உரையை கேட்டே ஆகவேண்டுமென்று வீட்டில் உத்தரவு வாங்கிவிட்டு குழந்தைகளுடன் கிளம்பிவிட்டேன்.இஷாவிற்கு பிறகு கிளம்பி சென்றதால் விழா ஆரம்பித்துவிடும் என்று தெரிந்திருந்தாலும் பலர் பேசிய பிறகு கடைசியில் தான் கவிக்கோ பேசுவார் என்ற எண்ணத்தில் சற்று தாமதமாகச் சென்று விட்டேன். உள்நுழைந்ததும்தான் [...]

அதிரடிக்காரன் ஏ.ஆர்.ஆர்.

மயங்க வைத்த மாலை பொழுதென்று ஒரு வாக்கியத்தில் அடக்கிவிட முடியாத அளவிற்கு இசை விருந்து படைத்தனர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் குழுவினர். 'ஷார்ஜா வரை போக வேண்டும்', 'பார்க்கிங் கிடைக்காது', 'உன்னை நடக்க வைக்க வேண்டும்', 'இரவு நேரமாகிவிடும்' என்றெல்லாம் அடுக்கடுக்கான காரணம் சொல்லி என்னை அழைத்து செல்லாமல் கழட்டிவிட நினைத்தவருடன் தொற்றிக் கொண்டு சென்றுவிட்டேன் - தொற்றிக் கொண்டது கணவருடன் தாங்க. என்னவென்றாலும் இந்த மாதிரியான நிகழ்ச்சியை ஒரு நண்பர்கள் கூட்டத்துடன் சென்று விசிலடித்து பார்த்த [...]

நாடகமே உலகம்

செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் [...]

யாஸ்மினுக்கு ஒரு கடிதம்

நீ இருக்கும் போதுக்கூட உனக்காக இப்படி ஒரு கடிதம் எழுத என்றுமே தோன்றியதில்லை எனக்கு. எல்லாமே 'ஃபார்வர்ட்' மடலாகத்தானே அனுப்பிவைத்தேன்?! ஆனால் அந்த மடல்களை அனுப்பும் போது உன்னை நான் நினைத்துக் கொள்கிறேன் என்பதை உணர்ந்தாயா? உன் மீது நான் வைத்திருக்கும் அடர்த்தியான அன்பை என்றுமே வாய்விட்டு சொன்னதில்லை இல்லை சொல்லியிருக்கிறேன் ஆனாலும் அதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்று நினைத்துவிட்டதால் எங்களை விட்டு சீக்கிரம் சென்றுவிட்டாயோ? பக்கத்திலேயே இருப்பவர்களுக்கு என்றுமே நாம் கடிதங்கள் எழுதுவதில்லையே யாஸ்மின். [...]

ரஜினி ‘ஸ்கீ துபாய்’ வந்தால்?

துபாய்க்கு வந்த புதுசுல எந்த பொருளைப் பார்த்தாலும் எனக்காக வாங்கிக்கணும்னு தோணவே தோணாது. தம்பிக்கு வாங்கலாம், அக்காவிற்கு, அப்பாவிற்கு அம்மாவிற்குன்னுதான் தோணுமே தவிர, ரொம்ப அத்தியாவசியப்பட்டால் தான் எனக்குன்னு ஏதாவது வாங்க தோணும். ஆனா இப்பல்லாம் அப்படியில்ல. அதுக்கு இரண்டு காரணம், ஒரு பொருள வாங்கி ஆசையா ஊருக்கு அனுப்பி வைச்சா ஒண்ணு 'ஏற்கெனவே என்கிட்டே இதே இருக்கு'ன்னு பதில் வரும் இல்லாட்டி 'இங்கதான் இது கெடைக்குதே, இத அங்கிருந்து அனுப்பினியாக்கும்?'ன்னு கேள்வி வரும். அதனால ஊரிலிருந்து [...]

ஊர் சுற்றலாம் வாங்க!

ஊருல விடுமுறை விட்டாலும் விட்டாங்க எங்க வீட்டுக்கு சின்ன கூட்டமே விடுமுறைக்கு வந்திட்டாங்க. எல்லாம் நம்ம நெருங்கிய பந்தங்கள்தான் அவங்களை வாரா வாரம் ஒவ்வொரு இடத்திற்கு அழைச்சிக்கிட்டு சுத்திச் சுத்தி, போன வாரம் அவங்கெல்லாம் ஊருக்கு திரும்பியதும் வீடே 'வெறிச்'சுன்னு போயிடுச்சு, நானும் சுகவீனமாகிட்டேன். சுகவீனமாப் போனதற்கு காரணம் பிரிவா இல்ல வாரா வாரம் சுத்தித் திரிஞ்ச அலைச்சலான்னு தெரியலை. சரி அது முக்கியமில்ல இப்போ. நாங்க போன இடங்களையெல்லாம் பத்தி பதியலாம்னு நெனைக்கிறேன் ஆனா பார்த்தத, [...]

உண்மையான சூப்பர் ஸ்டார்

எல்லா துறையிலும், எல்லா விஷயங்களுக்காக பாராட்டி விருதுக் கொடுத்துக்கிட்டேதான் இருப்பாங்க. அப்படி கொடுத்து ஊக்கவிச்சாத்தான் அவங்க அங்கீகரிக்கப்படுறாங்கன்னு இன்னும் சிறப்பா செய்ய சொல்லும். நம்மள, நம்ம வேலைய யாருமே கவனிக்கல சம்பளம்பாட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கே உழச்சாத்தானான்னு இருந்துட்டா நிர்வாகம் திடீர்னு முழிச்சி 'நீ ஒன்னும் கிழிக்கிறா மாதிரி தெரியல உன்ன வேலைய விட்டு தூக்கிறோம்'னு சொல்லுவாங்க. அதுக்கு பயந்துக்கிட்டாவது ஓரளவுக்கு நியாயமா வேலையெல்லாம் முடிச்சிட்டு இல்லன்னா வேலையோட வேலையா வலைப்பதிவு பக்கம் கொஞ்சம் எட்டிப்பார்த்துக்கிட்டு நாமல்லாம் வேலப் [...]

உங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்?

இல்லற வாழ்க்கையைப் பற்றிப் பெரியவர்கள் அறிவுறுத்தும்போது அன்பும், அறனும் சேர்ந்தால்தான் வாழ்க்கை பண்பும் பயனுமாக இருக்குமென்று சொல்வார்கள். பண்பும் பயனுமான இல்வாழ்க்கையில் இன்றைய காலத்தில் பொருளாதாரமும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவனோடு சேர்ந்து மனைவியும் பொருளீட்டுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட அளவுக்கு இன்றைக்கு வாழ்க்கைச் சூழல்கள் சிக்கலாக மாறி வருவதை கண்கூடாகக் காண்கிறோம். இந்தச் சூழலில் அன்றாட வாழ்வில் அவசியமாகிவிட்ட பொருளாதாரச் சுமையை ஒருவராகவே சமாளிப்பதென்பதும் சிரமமானதாகி வருகிறது. - எப்படி ஒரு கை ஓசை எழுப்பி [...]