சென்னையில் பெண் பதிவாளர்கள் சந்திப்பு…

வலைப்பூவில் சிக்கி கிடக்கும் பூவைகளே நாமும் ஒரு மாநாடு கண்டால் என்ன?

நான் சென்னைக்கு வரும் 18ந் தேதி வருகிறேன், பத்து நாட்கள் விடுமுறையில். பெண் எழுத்தாளர்கள் மற்றும் பெண் வலைப்பதிவர்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன், நட்பு ரீதியாக மட்டுமே. சென்னையில் பெண் வலைப்பதிவர்கள் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியாததாலேயே இந்த பொது அறிவிப்பு. இல்லையெனில் தனி மடல் அனுப்பியிருப்பேன். விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கவும் எங்கள் இல்லத்திலேயே சந்திக்கலாம், வெள்ளி அல்லது சனிக்கிழமையில் (26, 27).

வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள்.

குறிப்பு: ஆண்களை இந்த ஆட்டத்திற்கு சேர்த்துக்க போவதில்லை.

By | 2007-01-11T11:41:00+00:00 January 11th, 2007|பதிவர் வட்டம்|31 Comments

31 Comments

  1. ஜி January 11, 2007 at 1:19 pm - Reply

    பெண் பதிவாளர் சந்திப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    [ஆண்களை சேத்துக்க மாட்டீங்களா? இப்படி ஒரு அறிவிப்பை விட்டதற்க்காக தமிழ்மணத்தில் போராட்டம் பிறக்கும் 🙂 (ஸ்மைலி போட்டிருக்குறேங்க.)]

  2. பொன்ஸ்~~Poorna January 11, 2007 at 1:19 pm - Reply

    //சென்னையில் பெண் வலைப்பதிவர்கள் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியாததாலேயே//
    சென்னைக்கு ஒரு உள்ளேன் அம்மா வச்சிக்கிறேன் 🙂

    //(26, 27).//
    பார்க்கலாம் நீள் விடுமுறை வாரமாச்சே.. வெளியூர் பயணம் இல்லையென்றால் பார்க்க வருகிறேன்..

    என் மெயில் ஐடி தான் உங்களுக்கே தெரியுமே…

  3. வரவனையான் January 11, 2007 at 1:19 pm - Reply

    இதெல்லாம் நியாயமே இல்லீங்க…..

    என்ன நாஞ்சொல்லுறது பொன்ஸக்கா

    :))))))))

  4. ஜெஸிலா January 11, 2007 at 1:34 pm - Reply

    வாங்க பொன்ஸ். ஆமா என்ன நீள விடுமுறை? பொங்கல் விடுமுறையா அவ்வளவு நீளமா போகுது? சரி, சென்னை வந்ததும் மடலிட முடியுமா, வீட்டில் நிலவரம் எப்படின்னு தெரியலை. அதனால் அதற்கு முன்பே கண்டிப்பா வருவேன் என்று தனி மடல் அனுப்பிடுங்கள்.

    வாழ்த்துக்கு நன்றி ஜி.

    ஏங்க நியாயமில்லை? அடுத்த வருடம்ன்னு ஒன்னு இருந்தா 30 நாள் விடுமுறையில் வரும் போது ஒரு பெரிய மாநாடா நீங்களே ஏற்பாடு பண்ணுங்க வந்து கலந்துக்கிறோம்.

  5. திரு January 11, 2007 at 1:52 pm - Reply

    ஜெஸிலா,

    முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!

  6. நீங்க யாழ் இணைய தமிழினியா அல்லது கறுப்பியா….

  7. ஏ.எம்.ரஹ்மான் January 12, 2007 at 7:45 am - Reply

    தங்கச்சிய துபாய்லையே பார்கலாம்னு நினைச்சா இவங்க நம்ம ஊருக்கு போராங்கலாம் , அங்க போய் பார்க்கலாம்னா , அண்ணன் அக்காவா மாறி தான் போகனும் போலிருக்கு.அப்படி ஒரு ஆர்டர் போட்டு இருக்காங்க. முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

  8. naanga aaangalukku yaru sonna(vadivelu stylil padikavum)

  9. ramachandranusha January 12, 2007 at 7:50 am - Reply

    ஜெஸிலா, ஒவ்வொருமுறையும் இப்படி ஒரு சந்திப்பு கட்டாயம் உண்டு. அருணா, மதுமிதா, நிர்மலான்னு பள்ளி, கல்லூரி வயசுக்கு
    போயிடுவோம். உங்க வயசு தெரியாது. ஆனா பொன்ஸ் மாதிரி சின்ன பிள்ளைங்களை சேர்த்துக்க மாட்டோம் 🙂
    எங்க கூடுவது என்று முடிவெடுத்தவுடன், அந்த பக்கமே வரக்கூடாது என்று பசங்கக்கிட்ட கட்டளை போட்டுவிடுவோம்.
    பக்கத்து டேபிள் ஆளுங்க திரும்பி பார்க்கிற அளவுக்கு வயதை மறந்து பிள்ளைகள் ஆவோம் 🙂

  10. ஜெஸிலா January 12, 2007 at 8:20 am - Reply

    நன்றி திரு மற்றும் ரஹ்மான் காகா.

    அப்படியா கார்த்திக் சொல்லவேயில்ல?

    உற்சாகமாக இருக்க வயசு எதுக்கு உஷா. சிரிப்பதற்கு பல் எதற்கு? (உங்களுக்கு பல் இருக்குன்னு தெரியும் 😉 ). //அருணா, மதுமிதா, நிர்மலான்னு பள்ளி, கல்லூரி வயசுக்கு
    போயிடுவோம். உங்க வயசு தெரியாது. ஆனா பொன்ஸ் மாதிரி சின்ன பிள்ளைங்களை சேர்த்துக்க மாட்டோம் 🙂 // இவர்களெல்லாம் பதிவை படித்தார்களா வருவார்களாவென்று தெரியாது. ஆனால் வந்தால் நன்றாக இருக்கும். ஆண்களை போல் வெட்டி அரட்டையில்லாமல் உருப்படியாக நாம் என்ன செய்ய முடியும், சாதிக்க முடியும் என்று பேசலாம். எனக்கு தெரிந்த சில சமூக சேவகிகளையும், எழுத்தாளர்களையும் அழைக்கயிருக்கிறேன். திட்டமெல்லாம் இருக்கு நிறைவேற இறைவன் துணையிருக்க வேண்டும். உஷா அப்படியே சென்னை வரைக்கும் வந்துவிட்டு போறது, சந்தோஷப்படுவோமில்ல.

  11. Anonymous January 12, 2007 at 9:56 am - Reply

    யாருப்பா அங்க..

    போண்டாதோசைக்கு மெயில்தட்டுங்கப்பா. கூட்டத்த லைவ் டெலிகாஸ்ட் பண்ண ஏற்பாடு பண்ணுங்கப்பா.

    :))))))

  12. Anonymous January 12, 2007 at 1:16 pm - Reply

    i am aasath

    what is the purpose for this meeting? or, is it purposeless … ?

    Do you need any feudal system to discuss throughg like the partition by gender

  13. ஜெஸிலா,

    சந்திப்பு நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்!

    //உருப்படியாக நாம் என்ன செய்ய முடியும், சாதிக்க முடியும் என்று பேசலாம். எனக்கு தெரிந்த சில சமூக சேவகிகளையும், எழுத்தாளர்களையும் அழைக்கயிருக்கிறேன். திட்டமெல்லாம் இருக்கு நிறைவேற இறைவன் துணையிருக்க வேண்டும்.//

    சந்தோஷமாகவிருக்கிறது. சந்திப்பு முடிந்ததும் விதயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    -மதி

  14. கானா பிரபா January 12, 2007 at 1:19 pm - Reply

    ஆண்கள விடமாட்டீங்க சரி,
    அவ்வை ஷண்முகி மாமி வந்தால்?

  15. ஆசிப் மீரான் January 12, 2007 at 1:19 pm - Reply

    ///ஆண்களை போல் வெட்டி அரட்டையில்லாமல் உருப்படியாக நாம் என்ன செய்ய முடியும், சாதிக்க முடியும் என்று பேசலாம்//

    ஆனாலும் அபார நகைச்சுவை உணர்வுங்க உங்களுக்கு. நல்லா இருங்க!

    சாத்தான்குளத்தான்

  16. Anonymous January 12, 2007 at 1:19 pm - Reply

    கொஞ்சம் யோஜனபண்ணி சொல்லுங்கம்மா. ஏதோ என்னமாதிரி ஆம்பளங்க ஒரு ஓரமா நின்னு நீங்க குடுக்குற டீ த்தண்ணிய ஒரு மடக்கு குடிச்சிட்டு போயிடரோம் புள்ள…

  17. வல்லிசிம்ஹன் January 12, 2007 at 1:20 pm - Reply

    ஜெசீலா,
    நானும் ஒரு பெண் எழுத்தாளர்தான்.

    சென்னையில் இல்லை இப்போது.
    அருணாவும் நானும் ஒரே பள்ளியில்
    படித்தவர்கள். 4 வயது என்னைவிட சின்னவர்.

    உற்சாகத்திற்கு குறை இருக்காது என்றே நம்புகிறேன்.
    வாழ்த்துகள்.

  18. ஜெஸிலா January 12, 2007 at 1:37 pm - Reply

    //சந்திப்பு நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்! // நன்றி.

    //சந்தோஷமாகவிருக்கிறது. சந்திப்பு முடிந்ததும் விதயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    -மதி// கண்டிப்பாக.

    //அவ்வை ஷண்முகி மாமி வந்தால்?// வந்தால் டின் தான். 😉 புலிய விரட்டிய பரம்பரையாக்கும் 😉

    //ஆனாலும் அபார நகைச்சுவை உணர்வுங்க உங்களுக்கு. //
    எல்லாம் உங்ககிட்டயிருந்து கத்துக்கிட்டதுதான், இருக்காதா பின்ன?

    நன்றி வல்லி. //நானும் ஒரு பெண் எழுத்தாளர்தான்.

    சென்னையில் இல்லை இப்போது.// அச்சச்சோ பெண் என்றதும் சந்தோஷமாக இருந்தது. சென்னையில் இல்லை என்றதும் புஸுனு சுருங்கிப் போச்சு.

  19. ஏ.எம்.ரஹ்மான் January 13, 2007 at 7:29 pm - Reply

    //ஆண்களை போல் வெட்டி அரட்டையில்லாமல்//

    ஜெஸிலா என்னம்மா இப்படி சொல்லி புட்டிங்க ஆண்கள்னா எல்லாரும் அரட்டை அடிக்கிரவங்கலா சிந்தனைவாதி கிடையாத ஒரு சிந்தனைவாதியே இப்படி சொன்னால் எப்படி?

  20. சேதுக்கரசி January 14, 2007 at 6:20 am - Reply

    //ஆண்கள்னா எல்லாரும் அரட்டை அடிக்கிரவங்கலா//

    கவிதா என்னமோ எழுதிப்போட்டதோட எதிர்வினைகளே இன்னும் முடியல.. இனி இது வேற பட்டையைக் கிளப்புமோ 😉

  21. நியாயஸ்தன் January 14, 2007 at 6:20 am - Reply

    //புலியை விரட்டிய பரம்பரையாக்கும்//

    ஆஹா
    மறத்தமிழச்சிகளே
    ஆளுக்கொரு
    முறத்துடன்
    கூடுங்கள்…

  22. நானும் வருவேன், இல்லை ஆட்டையக் கலைப்பேன்

  23. ஜெஸிலா January 14, 2007 at 8:35 am - Reply

    //நானும் வருவேன், இல்லை ஆட்டையக் கலைப்பேன் // கண்டிப்பாக வாங்க. நீங்க சென்னையில் இருப்பது எனக்கு தெரியாது. உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தாருங்கள்.

  24. sumathi January 14, 2007 at 11:04 am - Reply

    ஹாய் ஜெஸில,

    உங்கள் முயற்சிக்கு என்னோட வாழ்த்துக்கள். ஏன் ஆண்கள் மட்டும் தான் போண்டா சாப்பிடனுமா? சென்னையிலும் உள்ள பெண் பதிவர்கள் எல்லலாரும் ஒன்று சேர்ந்து இதை ஒரு பெரிய விழாவாக கொண்டாட வாழ்த்துக்கள்.ஆனாலும் என்னால் தான் வர முடியாது.உங்கள் முயர்ச்சி பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

  25. வரவனையான் January 14, 2007 at 11:05 am - Reply

    இது என்னங்க ஓரவஞ்சனை !

    சுகுணாக்கு மட்டும் சிறப்பு அனுமதி

    :((

  26. ஜெஸிலா January 14, 2007 at 11:26 am - Reply

    இது என்னங்க ஓரவஞ்சனை !

    சுகுணாக்கு மட்டும் சிறப்பு அனுமதி//

    என்ன செந்தில் பெரிய குண்டை தூக்கிப் போடுறீங்க, சுகுணா பெண் இல்லையா?

  27. வரவனையான் January 14, 2007 at 12:42 pm - Reply

    சத்தியமா இல்லைங்க…

    எனக்கு நல்லா தெரியும் 10 வருசத்துக்கு மேலாகவே

  28. ஜெஸிலா January 14, 2007 at 12:51 pm - Reply

    சுகுணா திவாகர் பெண் என்று நினைத்துக் கொண்டு அழைப்பு விடுத்துவிட்டேன், மன்னிக்கவும். தனி மடல் வேறு எழுதி விட்டேனே. மன்னிச்சிக்கோங்க வாபஸ் வாங்கிக்கிறேன் அழைப்பை.

  29. வரவனையான் January 14, 2007 at 1:13 pm - Reply

    அப்பாடா……..

    இப்பத்தான் நிம்மதி. இன்னைக்கு ராத்திரி சந்தோசமா தூங்குவேன்.

    ஒரு நாளைக்கு ஒரு நல்ல காரியமாவாது செய்யலைனா எனக்கு தூக்கம் வாராது

    :))))))))))))))))

  30. மங்கை January 14, 2007 at 1:13 pm - Reply

    சந்திப்பு கலகலப்புடன் அமைய வாழ்த்துக்கள்

  31. ஜெஸிலா January 14, 2007 at 1:15 pm - Reply

    நன்றி சுமதி & மங்கை. இரண்டு பேரும் சென்னையில் இல்லாததால் தப்பித்தீர்கள் 😉

    மிக்க நன்றி செந்தில் உங்க உதவிக்கு.

Leave A Comment