நாலிரெண்டு எட்டு

எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் தற்பெருமை அடிச்சிக்கிறது, என்னைப் பத்தி நானே அளந்துக்கிறது (பின்ன தனியா அதற்கு ஆளா வைக்க முடியும்னு முணுமுணுக்கிறது புரியுது). அதனாலேயே இந்த எட்டு சமாச்சாரம் வேண்டாமென்று எட்டு பட்டிக்கும் முன் கூட்டியே அறிவிச்சிருக்கணும். ஆனா யார் நம்மளைக் கூப்பிட போறாங்கன்னு அலட்சியமா இருந்துட்டேன். துபாயோரமிருக்கும் அய்யனார் அரிவாளோடு நிற்கிறார் எழுத சொல்லி. நம்ம ப்ரசன்னா அன்போடு அழைச்சிட்டார். அதெல்லாம் போதாதுன்னு நம்ம நிலவு நண்பன் மாட்டிவிட்டுடேன்னு சந்தோஷப்படுகிறார். அதற்காகவேதான் இந்த பதிவு. [...]

By | 2007-06-28T08:41:00+00:00 June 28th, 2007|பதிவர் வட்டம்|18 Comments

ஊர் சுற்றலாம் வாங்க!

ஊருல விடுமுறை விட்டாலும் விட்டாங்க எங்க வீட்டுக்கு சின்ன கூட்டமே விடுமுறைக்கு வந்திட்டாங்க. எல்லாம் நம்ம நெருங்கிய பந்தங்கள்தான் அவங்களை வாரா வாரம் ஒவ்வொரு இடத்திற்கு அழைச்சிக்கிட்டு சுத்திச் சுத்தி, போன வாரம் அவங்கெல்லாம் ஊருக்கு திரும்பியதும் வீடே 'வெறிச்'சுன்னு போயிடுச்சு, நானும் சுகவீனமாகிட்டேன். சுகவீனமாப் போனதற்கு காரணம் பிரிவா இல்ல வாரா வாரம் சுத்தித் திரிஞ்ச அலைச்சலான்னு தெரியலை. சரி அது முக்கியமில்ல இப்போ. நாங்க போன இடங்களையெல்லாம் பத்தி பதியலாம்னு நெனைக்கிறேன் ஆனா பார்த்தத, [...]

சக பயணிகள்

எப்பா இதெல்லாம் கவிதையான்னு கேட்டுடாதீங்க. மேடைக்கு வாசிக்கப்படும் கவிதைகள் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமென்பதற்காக உரைநடையாக எழுதப்பட்டது. பகிர்ந்துக் கொள்ள பதிக்கிறேன். [** கவியரங்கில் பாடிய கவிதைக்காக ஜெஸிலாவுக்கு 10,000 ரூபாய் பணமுடிப்பும், மேத்தா விருதும் வழங்கப்படும் என சென்னை குளத்தூரில் பெண்கள் கல்லூரி நடத்தும் சேது குமணன் அறிவித்தார். 'விருதிற்காக மகிழ்வதாகவும் பணத்தை கவிஞர்கள் பேரவைக்கே அன்பளிப்பாக வழங்குவதாகவும்' மேடையில் ஜெஸிலா அறிவித்தார். - அப்படின்னு ஆசிப் வலைப்பதிவில் படித்திருப்பீர்கள்] இதுதான் அந்த பரிசுப் பெற்ற கவிதை. [...]

By | 2007-06-19T10:25:00+00:00 June 19th, 2007|கவிதை|26 Comments

உண்மையான சூப்பர் ஸ்டார்

எல்லா துறையிலும், எல்லா விஷயங்களுக்காக பாராட்டி விருதுக் கொடுத்துக்கிட்டேதான் இருப்பாங்க. அப்படி கொடுத்து ஊக்கவிச்சாத்தான் அவங்க அங்கீகரிக்கப்படுறாங்கன்னு இன்னும் சிறப்பா செய்ய சொல்லும். நம்மள, நம்ம வேலைய யாருமே கவனிக்கல சம்பளம்பாட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கே உழச்சாத்தானான்னு இருந்துட்டா நிர்வாகம் திடீர்னு முழிச்சி 'நீ ஒன்னும் கிழிக்கிறா மாதிரி தெரியல உன்ன வேலைய விட்டு தூக்கிறோம்'னு சொல்லுவாங்க. அதுக்கு பயந்துக்கிட்டாவது ஓரளவுக்கு நியாயமா வேலையெல்லாம் முடிச்சிட்டு இல்லன்னா வேலையோட வேலையா வலைப்பதிவு பக்கம் கொஞ்சம் எட்டிப்பார்த்துக்கிட்டு நாமல்லாம் வேலப் [...]

படம் காட்டுறோம் படம்!

சிக்குபுக்கு இரயிலு 1895நோயாளிய நோயாளியாக்கும் வாகனம், அதாங்க ஆம்புலன்ஸ் - சென்னை 1940 சீருந்து காட்சியகம் - சென்னை 1913ஃபோர்ட் நிறுவனம் 1917கொல்கத்தா 1915அந்தமான் 1917மத்ராஸ் வங்கி 1935கராச்சி பல்சுவை அங்காடி 1917கராச்சி திரையரங்கம் 1917நம்மூரு கொத்தவாச்சாவடி 1939லாஹூர் 1864சென்னை நூலகம் 1913 - கல்லூரி கதாநாயகர்களை கவனியுங்க!சென்னை மெரினா கடற்கரை 1913 - கடலப் போட ஆளில்லாமயிருக்குபரப்பரப்பில்லாத மும்பாய் 1894விக்டோரியா டெர்மினஸ், பம்பாய் 1894மாமிகள் இல்லாத மைலாப்பூர், சென்னை 1939உறவில்லாத உதகை 1905மின்சார உற்பத்தி தொழிற்சாலை [...]

By | 2007-06-07T08:50:00+00:00 June 7th, 2007|நிழற்படம்|10 Comments

வேற்று திசை – சிறுகதை

நான் முன்பு எழுதி 'திசைகளில்' வெளிவந்த சிறுகதையை இங்கே இடுகிறேன். அப்போ படிக்காம தப்பிச்சிருந்தாலும் இப்போ மாட்டிக்கிட்டீங்க.இரண்டு ஆட்கள் கூட சேர்ந்து நடந்து போக முடியாத அந்த ஒடுக்கமான சந்தில் இரண்டு இருசக்கர மிதி வண்டி சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தன. அதன் சக்கரங்களை நிறைய ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடி பம்ப்பில் காற்றுக்கு பதில் அன்று அதிசயமாக ஒழுங்காக தண்ணீர் வந்து கொண்டிருந்தது, ஆகையால் அடி அடியென்று ஆளுக்காள் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தனர், வாயிருந்தாலும் அழுதுவிடும். ஒருவேளை [...]

By | 2007-06-05T09:05:00+00:00 June 5th, 2007|சிறுகதை|6 Comments