மறைவின் நிஜங்கள்


ஆசையோடு
நீ வாங்கி வந்த
பென்ஸ் கார்
கொளுத்தும் வெயிலில்
காத்திருக்கிறது
நீ வந்தமர்ந்து
குளிர வைப்பாயென.
அதனிடம் நான்
சொல்லவில்லை
நீ விமான விபத்தில் மறைந்து
என் எண்ணங்களை
வியாபித்திருக்கிறாயென
நீ இல்லாமலிருப்பது
தெரிந்தால்
சுட்டெரிக்கும் வெப்பத்தை
சாதகமாக்கிக் கொண்டு
அது பொசுங்கிவிட்டாலும்
ஆச்சர்யப்படுவதற்கில்லை

11 Comments

  1. soundar May 25, 2010 at 9:54 am - Reply

    நல்ல கவிதை…
    வருத்ததுடன்… அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.

  2. வருத்தத்தை கவிதையாக்கியிருக்கிறீர்கள்.

    🙁

    கொளுத்தும் வெயிலை கொழுத்தும் வெயில் என்பது ஏன்?

  3. ஜெஸிலா May 26, 2010 at 6:10 am - Reply

    நன்றி சவுந்தர்.

    இன்பத்தையும் துன்பத்தையும் சேர்ந்து பகிர்வதே நட்பு. நன்றி செந்தில்.

    திமிர்பிடித்த வெயில் என்று சொன்னாலும் பொருள் புரள்வதால் திருத்திவிட்டேன். நன்றி இப்னு.

  4. வருத்தம் கவிதையாக உருமாறி வார்த்தைகளை அருமையாக கோர்த்து உள்ளீர்கள்.. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்…

  5. madscribbler May 26, 2010 at 2:03 pm - Reply

    மிகவும் வருந்துகிறேன். நண்பர்களின் குடும்பத்திற்கு இறைவன் நல்ல தைரியத்தை கொடுப்பாறாக.

  6. saba May 27, 2010 at 10:21 am - Reply

    இப்படி செய்துவிட்டீரே இறைவா…….
    மிகவும் வருந்துகிறேன்…….. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்………

  7. crown September 13, 2010 at 8:54 am - Reply

    உயிரற்ற பொருளுக்கும் தெரிந்திருக்கிறதே அன்பின் ஆழம்.பிரிவின் துயரம்.மறைவின் கொடூரம் ஏனோ சில உறவுகளுகு மட்டும் தெரிவதில்லை உன்மை காதல்(அன்பு…)

  8. saba September 16, 2010 at 1:47 pm - Reply

    இப்படி செய்துவிட்டீரே இறைவா…….
    மிகவும் வருந்துகிறேன்…….. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்………

  9. Rathnavel July 24, 2011 at 9:20 am - Reply

    ஆழ்ந்த அனுதாபங்கள்.

  10. tamilraja July 24, 2011 at 6:15 pm - Reply

    சிலவார்த்தைகள் கோர்வையாகும் போது அதன் பொருள் நம்மை வீரியமாக தாக்கி விடும்
    உங்கள் எழுத்தின் வீச்சும் அப்படிதான் ….

    எனது அனுதாபங்கள்

Leave A Comment Cancel reply