நட்சத்திரப் போட்டி

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்கிறது சிறகை விரித்து பறக்க முயற்சி செய்கிறேன். உங்களையெல்லாம் வானமென்று வானளவில் உயர்த்தியவுடன் உச்சி குளிர்ந்திருக்குமே? ஆனால் என் வலைப்பூவை வந்து எட்டிப் பார்ப்பவர்கள் மட்டும்தான் வானம் 🙂

கிறுக்கல் என்று பெயர் வைத்திருந்தும், என்னையும் ஒரு வலையாளியாக மதித்து நட்சத்திரமாக்கி, தமிழ்மண வானத்தில் மேகங்கள் நகர்ந்து சென்றாலும் இந்த நட்சத்திரம் மட்டும் முதல் பக்கத்திலிருந்து மறைந்து விடாமல் மின்னி அப்படியே நிற்கச் செய்து, எல்லோர் கண்களிலும் பட வைத்து, (பட வைத்தாலும் எல்லோரும் ‘சொடுக்கி’ படித்திடவாப் போகிறார்கள்?) எல்லா பதிவர்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு தந்து உற்சாகம் தரும் தமிழ்மணத்தின் முயற்சிக்கு வாழ்த்துகள், நன்றிகள்.

வலைப்பூவுக்கு வந்தவுடனோ அல்லது நட்சத்திரமானவுடனோ ஏன் வலைப்பூவில் பதிக்க வந்தேன், எப்படி வந்தேன், யார் அறிமுகம் தந்தார்கள் என்றெல்லாம் எல்லோரும் எழுதுவார்கள். நான் ஏன் வந்தேன் என்ற கதையெல்லாம் சொல்லி உங்களை அழ வைக்க விரும்பவில்லை. அப்படி ஒரு சுவாரஸ்யமில்லாத கதை. குழுமங்களில் கூத்தடித்துக் கொண்டிருந்த என்னை நேர விரயம் செய்யாமல் ஒரு வலைப்பூ ஆரம்பிக்க கட்டளையிட்டு, வலை உலகில் உள்ள நல்லவை கெட்டவை சொல்லித் தந்து வழி நடத்தி ஒரு வலைப்பூவும் தந்து எழுத ஆரம்பி என்று சொல்லியும், எனக்கேயுரிய நேரமின்மை காரணமாக பல நாட்கள் தள்ளிப்போட்டு, மன அழுத்தத்தின் போது ஒரு மனமாற்றப் பாதை தேவைப்படவே இந்த வலை உலகை தேர்ந்தெடுத்தேன். ஏதோ வந்துவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்ப நட்சித்திரம். எனக்கே நகைப்பாகவும் ஆச்சர்யமாகவும்தான் இருக்கிறது. சரி இந்த ஒரு வாரக் காலத்தை என்னால் முடிந்தவரையில் நல்லமுறையில் உபயோகித்துக் கொள்ள முயற்சிக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரஸ்யம் காத்திருக்குமென்று உறுதிகொள்கிறேன். எனக்கு சுவாரஸ்யம் உங்களுக்கு எப்படின்னு தெரியவில்லை 😉

சரி முதல் சுவாரஸ்யத்தை இந்த பதிவிலிருந்தே ஆரம்பிப்போமா?

கீழே உள்ள படங்களை உற்றுப் பாருங்கள். இதோ உங்களுக்கான கேள்வி – படத்தில் உள்ளது ஆறா அல்லது ஏரியா குளமா என்றெல்லாம் கேட்க மாட்டேன் மாறாக எந்த ஆறு, ஆற்றின் பெயர் என்ன? எந்த ஊரின் வானம்? சரியாக விடை சொல்லும் நபருக்கு 1000 இந்திய ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு. பலர் சரியான விடை எழுதினால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வலைப்பூவாளிகள் மட்டும் கலந்து கொள்ள வேண்டிய போட்டி. ஒருவர் ஒரு பதிலை மட்டும் அளிக்க வேண்டும். (ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை எழுதும் பட்சத்தில் விடை நிராகரிக்கப்படும்.) மறுமொழியை உபயோகித்து பதில் அளிக்கவும். போட்டியின் முடிவும் வெற்றியாளரின் பெயரும் நட்சத்திரத்தின் கடைசி நாளில் (08 ஏப்ரல் 2007) அறிவிக்கப்படும்.


By | 2007-04-02T05:30:00+00:00 April 2nd, 2007|நட்சத்திரம்|48 Comments

48 Comments

  1. லொடுக்கு April 2, 2007 at 5:43 am - Reply

    நட்சத்திர வாழ்த்துக்கள்

  2. அபி அப்பா April 2, 2007 at 5:48 am - Reply

    நட்சத்திர வாழ்த்துக்கள்!:-)) சந்தோஷம் மிக்க சந்தோஷம், இருக்காதா பின்ன, எங்க துபாய் சகோதரி நட்சத்திரமானா நாங்களே ஆனது மாதிரி தானெ! தூள் பண்ணுங்க :-))

  3. அழகு April 2, 2007 at 5:49 am - Reply

    எங்கே போனாலும் பரிசு கொடுப்பதை விடமாட்டீர்கள் போலும்.

    படத்தில் உள்ளது அஜ்மான் (அமீரகக்) கடற்கரை.

    பரிசனுப்புவதைச் சுணக்கி விடவேண்டாம்.

    அப்புறம் … த.ம. தாரகை ஆனதற்கு வாழ்த்துகள்! தினம் ஒரு பரிசு கொடுத்தா நல்லாயிருக்கும்; ஆவன செய்யவும்.

  4. ஜெஸிலா April 2, 2007 at 6:29 am - Reply

    வாழ்த்திய லொடுக்கு, ‘அழகு’ ஜமீல், அபி அப்பா எல்லோருக்கு நன்றி. ஒரு விஷயம் கவனிச்சீங்களா வாழ்த்திய உள்ளங்கள் எல்லாமே துபாயிலிருந்துதான்.

    ஜமீல் போட்டியில் பங்குப்பெற்றது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன விடை சரியா தவறா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  5. பொன்ஸ்~~Poorna April 2, 2007 at 6:48 am - Reply

    வாழ்த்துக்கள் ஜெஸிலா.. 🙂

  6. வாழ்த்து(க்)கள்.

  7. முபாரக் April 2, 2007 at 7:37 am - Reply

    நட்சத்திர வாழ்த்துக்கள். இவ்வாரத்தை சிறப்பான வாசிப்பனுபவமாக மாற்றுங்கள்

  8. அபி அப்பா April 2, 2007 at 7:40 am - Reply

    இந்த இடம் “அல் யமாமா டெசர்ட்”ன்னு நெனைக்கிறேன், சரியா என தெரியலை:-))சரியா?

  9. ஜெஸிலா April 2, 2007 at 7:47 am - Reply

    பொன்ஸ், துளசி, முபாரக் – மிக்க நன்றி. //இவ்வாரத்தை சிறப்பான வாசிப்பனுபவமாக மாற்றுங்கள் // முயற்சிக்கிறேன் முபாரக்.

    //அல் யமாமா டெசர்ட்”ன்னு // அது எங்கன இருக்குப்பா?

    என்னது ஆளாளுக்கு வாழ்த்து மட்டும் சொல்லிட்டு ஜகா வாங்குறீங்க? போட்டில கலந்துக்க மாட்டீங்களா? ;-( ரொம்ப கஷ்டமானப் போட்டியாப் போச்சோ!?

  10. அபி அப்பா April 2, 2007 at 8:13 am - Reply

    தப்பு தப்பு ஜெஸீலாக்கா, நான் சொல்ல வந்தது “Al Maha Desert”. “அல் யமாமா” இல்லை. “அல் மகா டெசர்ட்” அவீர் to அல்அய்ன் போகும் வழியில் இருக்குது. அங்கே காரில், ஒட்டகத்தில், குதிரையில் டெசர்ட் சபாரி உட்பட ஏகப்பட்ட பொழுது போக்கு விளையாட்டுகள் உண்டு. சில இரவு பொழுதுகளில் அந்த இடம் இந்த போட்டோவில் இருப்பது போல இருக்கும்.

  11. Fast Bowler April 2, 2007 at 8:15 am - Reply

    நான் சொல்றேன் பதிலு. இது, இந்தியா-இலங்கை மேட்சுக்கு பின் போர்ட்-ஆஃப்-ஸ்பெயின் மைதானம் (ரசிகர்களின் கண்ணீரால்). என்ன கரெக்டா?

  12. ஜெஸிலா April 2, 2007 at 8:25 am - Reply

    Al Maha Desert Resort கேள்விப்பட்டிருக்கிறேன் போனதில்லை. இது எமிரெட்ஸ் நிறுவனத்தினருடையது. பார்த்தவர்கள், போனவர்கள் ஆஹா ஓஹோன்னு சொல்லிருக்காங்க. விலை/ கட்டணமும் ஆஹா ஓஹோதாம்ப்பா.

    //நான் சொல்றேன் பதிலு. இது, இந்தியா-இலங்கை மேட்சுக்கு பின் போர்ட்-ஆஃப்-ஸ்பெயின் மைதானம் (ரசிகர்களின் கண்ணீரால்). என்ன கரெக்டா? // என்ன ஒரு சிந்தனை! மிகவும் ரசித்தேன்.

  13. Anonymous April 2, 2007 at 8:29 am - Reply

    Rasshidiya paravaigal Saranalayam

  14. Fast Bowler April 2, 2007 at 8:41 am - Reply

    //மிகவும் ரசித்தேன்//

    எதை? இந்தியா வெளியேறியதையா?

  15. ஜெஸிலா April 2, 2007 at 8:44 am - Reply

    //எதை? இந்தியா வெளியேறியதையா? // இதைப் படிச்சுவிட்டு என்னை அறியாமல் சத்தமாக சிரிச்சு தொலைத்துவிட்டேன். மேலாளர் ‘R u alright’ என்று கேட்கிறார். 😉

    இரசித்தது நீங்கள் எழுதிய விடையை, உங்கள் சிந்தனையை.

  16. Fast Bowler April 2, 2007 at 8:46 am - Reply

    கூவம்?

  17. தேவ் | Dev April 2, 2007 at 9:03 am - Reply

    வாழ்த்துக்கள் 🙂

  18. Fast Bowler April 2, 2007 at 9:03 am - Reply

    //இரசித்தது நீங்கள் எழுதிய விடையை, உங்கள் சிந்தனையை. //
    நன்றி. 🙂

  19. அய்யனார் April 2, 2007 at 9:04 am - Reply

    வாழ்த்துக்கள் ஜெஸிலா!

    விடை தெரியாததால் ஜகா ..:)

  20. அபி அப்பா April 2, 2007 at 9:05 am - Reply

    //எதை? இந்தியா வெளியேறியதையா?//

    பாஸ்ட், நம்ம துபாய் சகோதரி ஸ்டார் போட்டிக்கு பதில சொல்லுப்பா, அதை விட்டுட்டு இன்னும் அந்த சோகத்தையே ஞாபகபடுத்த கூடாது:-))

    சரி, கோபி ஆன்லைன்ல இருக்கியே, இந்த பக்கம் வாப்பா:-))

  21. ஜெஸிலா April 2, 2007 at 9:18 am - Reply

    //கூவம்? // பாஸ்ட், இது பதிலா அல்லது எனக்கு கேள்வியா?

    தேவ் & அய்யனார் – நன்றிங்கோ!

    //ஸ்டார் போட்டிக்கு பதில சொல்லுப்பா// அப்பா நீங்க சொல்றது..

  22. அபி அப்பா April 2, 2007 at 9:47 am - Reply

    ////ஸ்டார் போட்டிக்கு பதில சொல்லுப்பா// அப்பா நீங்க சொல்றது.. //

    நான் தான் சொன்னேனே ஜஸீலாக்கா! “அல் மாகா டெசர்டு”ன்னு, ஆஹா என் ரிசல்ட் இப்பவே தெரிஞ்சுடுத்து – முட்டை:-))

  23. Fast Bowler April 2, 2007 at 9:47 am - Reply

    //கூவம்? // பாஸ்ட், இது பதிலா அல்லது எனக்கு கேள்வியா?

    கேள்விபதில்.

    ‘கூவம் என்பது சரியா’ என்பதின் சுருக்கம்தான் ‘கூவம்?’

  24. Fast Bowler April 2, 2007 at 10:03 am - Reply

    //நான் தான் சொன்னேனே ஜஸீலாக்கா! “அல் மாகா டெசர்டு”ன்னு, ஆஹா என் ரிசல்ட் இப்பவே தெரிஞ்சுடுத்து – முட்டை:-)) //

    வழக்கமா நடக்குறது தானே. கவலைப்படாதீங்க அபிஅப்பா.

  25. நட்சத்திர வாழ்த்துக்கள்

  26. Anonymous April 2, 2007 at 11:05 am - Reply

    சிஸ்டர், நட்சத்திர வாழ்த்துக்கள்…

    சரியான விடை வந்தாக்கா அந்த பின்னூட்டத்தை வெளியே விடாதிங்கோ..!!!

    செந்தழல் ரவி

  27. ஜெஸிலா April 2, 2007 at 11:11 am - Reply

    நன்றி சின்னக்குட்டி & செந்தழல் ரவி.

    //சரியான விடை வந்தாக்கா அந்த பின்னூட்டத்தை வெளியே விடாதிங்கோ..!!!// ரவி அதெப்படி முடியும்? அப்ப சரியான விடையை எழுதிவிட்டோம் என்று தெரிந்துக் கொள்வார்களே அவர்களே அந்த விடையை பரப்பவும் வாய்ப்புள்ளது. அதனால் பதில்கள் வந்து குவியட்டும் விடை மட்டும் வார இறுதியில். ஆனால் இதுவா பதில் என்று ‘?’கேள்விக்குறியோடு பதில் எழுதாதீர்கள். இதுதான் பதில் என்பதில் உறுதியாக இருங்கள். ஒரு அனானி பதில் எழுதியிருக்கிறார். பெயருடன் எழுதியிருந்தால் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கலாம்.

  28. சுல்தான் April 2, 2007 at 11:46 am - Reply

    நட்சத்திர பதிவாளர் ஆனதற்கு வாழ்த்துக்கள்

  29. கோபிநாத் April 2, 2007 at 11:58 am - Reply

    வணக்கம் ஜெஸிலா அக்கா

    முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள் 😉

  30. ஜெஸிலா April 2, 2007 at 12:24 pm - Reply

    சுல்தான் மற்றும் கோபிநாத்துக்கு நன்றி. வாங்க கோபிநாத் முதல்முறையாக என் வலைப்பூவை எட்டிப்பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் அமீரகத்தைச் சேர்ந்தவர் என்று உங்க வலைப்பூவைப் பார்த்து தெரிந்துக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

  31. சிவபாலன் April 2, 2007 at 12:59 pm - Reply

    வாழ்த்துக்கள்!

    நட்சத்திர வாரம் நல்லதொரு வாரமாக அமையட்டும்!

  32. பொன்ஸ்~~Poorna April 2, 2007 at 1:04 pm - Reply

    ஜெஸிலா, இந்த நிமிடம் உங்கள் பதிவு மகளிர் சக்தியில் வந்துவிட்டது! கூகிள் வாசிப்பக RSS பிரச்சனை என்று நினைக்கிறேன். இனி தொடர்ந்து வரும் என்று நம்புவோம் 🙂

    போட்டியில் கலந்துக்க நிஜமாவே விடைதெரியலை.. fast bowler, அபி அப்பா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்லியே கண்டுபிடிச்சிருவாங்கன்னு நம்புறேன் 🙂

  33. ஜெஸிலா April 2, 2007 at 1:08 pm - Reply

    நன்றி சிவபாலன்.

    பொன்ஸ் நானும் கவனிச்சேன் திடீர்னு வந்திடுச்சு. அதுக்கு பிடிச்சா எடுத்துக்கும் இல்லாட்டி விட்டிடும் போல இருக்கு. நன்றி பொன்ஸ்.
    //போட்டியில் கலந்துக்க நிஜமாவே விடைதெரியலை.. fast bowler, அபி அப்பா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்லியே கண்டுபிடிச்சிருவாங்கன்னு நம்புறேன் 🙂
    // மாற்றி மாற்றி எல்லாம் ஒரே ஆள் பதில் சொல்லிக்கிட்டிருக்கக் கூடாது என்பது போட்டி விதிமுறை. ஒரு ஆள் ஒரு விடை மட்டும்தான் சொல்ல வேண்டும். அதனால் இனி அவர்கள் நினைக்கும் பதிலை உங்களுக்கு எழுதுவார்கள். சரியாக இருக்கும் பட்சத்தில் பரிசை பிரிச்சுப்பீங்களாம்;=)

  34. தம்பி April 2, 2007 at 1:36 pm - Reply

    ஆஹா நீங்கதானா இந்த வாரம்.

    ஜெஸிலாக்கா நட்சத்திர வாழ்த்துக்கள்.

    அந்த போட்டோ எங்க எடுத்ததுன்னு சத்தியமா தெரியல.

  35. ஜி April 3, 2007 at 5:13 am - Reply

    நட்சத்திர வாழ்த்துக்கள்…

    எங்க ஊரு தாமிரபரணிய தவிர எனக்கு எதுவும் தெரியாதுங்க :)))

  36. mohamed April 3, 2007 at 5:14 am - Reply

    நட்சத்திர வாழ்த்துக்கள் !!!

  37. ஆழியூரான். April 3, 2007 at 5:14 am - Reply

    வாழ்த்துக்கள்..கலக்குங்க..கலக்குங்க..

  38. அவந்திகா April 3, 2007 at 5:15 am - Reply

    congradulations akka

  39. காட்டாறு April 3, 2007 at 5:15 am - Reply

    வாழ்த்துக்கள் ஜெஸிலா!

    படம் நல்லா இருக்கு. எங்கன்னு தெரியலங்க! போட்டி முடிவுக்கு காத்திருப்பேன்.

  40. நண்பன் April 3, 2007 at 5:15 am - Reply

    வாழ்த்துகள், ஜெஸிலா.

    உங்கள் வலைப்பூவின் பின்னணி வண்ணமும், எழுத்துருவின் வண்ணமும் ஒன்றுக்கொன்று ஏற்புடையதாக இல்லை என்றே நினைக்கிறேன் –

    வாசிப்பதற்கு – மிக மிக சிரமமாக இருக்கிறது.

    கொஞ்சம் கவனிக்கிறீர்களா?

    நன்றி,

    அன்புடன்
    நண்பன்

  41. வாழ்த்துக்கள்.ஜெஸிலா.

  42. ஜெஸிலா April 3, 2007 at 5:40 am - Reply

    கதிர், ஜி, முகம்மது, ஆழியுரான், அவந்தி, நண்பன், காட்டாறு, முத்துலெட்சுமி எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    வலைப்பூவின் புதிய வடிவமைப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவிலேயே விடியும். நன்றி நண்பன்.

    காட்டாறுக்கே தெரியலையா எந்த ஆறுன்னு? சரி காத்திருங்க. தாமிரபரணியா இல்லையான்னு முடிவில்தான் தெரியும் ஜி.

  43. இந்த வார நட்சத்திரம் ஜெசிலாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    ஆரம்பமே போட்டியுடன்….

    இந்த புகைப்படங்கள் சென்னையில் எடுக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில்,அல்லது படகு துறையில் என நினைக்கிறேன்.

  44. ஜெஸிலா April 6, 2007 at 6:48 am - Reply

    நன்றி மஞ்சூர். //இந்த புகைப்படங்கள் சென்னையில் எடுக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில்,அல்லது படகு துறையில் என நினைக்கிறேன்.// பரிசு யாருகென்று இன்னும் இரண்டு நாளில் விடை தெரிந்துவிடும் காத்திருங்கள்.

  45. MSV Muthu April 9, 2007 at 7:46 am - Reply

    வாழ்த்துக்கள் ஜெஸிலா.கலக்குங்க. பதில் தெரியல, so escape!

  46. அமுதன் April 26, 2007 at 9:06 am - Reply

    வாழ்த்துக்கள் ஜெஸிலா. கேள்வி கஷ்டமா இருக்கிறதால clue தரலாமே

  47. நானானி May 1, 2007 at 5:52 am - Reply

    நட்சத்திர வாழ்த்துக்கள்!!!பொத்தாம்பொதுவாக இப்படி கேட்டால் எப்படி? ஒரு க்ளு கூட இல்லாமல்..
    நல்லவேளை ‘இது எந்த ஊர் சூரியன்?’ என்று கேட்காமல் விட்டீர்களே!!

  48. ஜெஸிலா May 1, 2007 at 5:53 am - Reply

    அமுதன் & நானானி போட்டிக்கான முடிவுகள் வந்தாச்சே அதையும் பார்த்திடுங்கள். 😉

    பதில்: சிங்கார சென்னையில் உள்ள கூவம் ஆறு.

Leave A Comment