Pink & Parched – இரண்டு படங்களும் சுட்டெரிக்கும் நிஜங்களும்

இரண்டு படங்களுமே இச்சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தைரியமாக முன்னிறுத்துகின்றன. படம் பார்த்த பிறகு மனதில் திரும்பத் திரும்ப எழும் காட்சிகளும், நடைமுறையில் இன்னும் இப்படியான நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே என்ற அவலமும் நம்மைத் தின்று தீர்க்கிறது. ‘பிங்க்’ - நமது சமூகத்தில் நிலவும் ‘கறுப்பு’ எண்ணத்தையும், பெண்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்ட எழுதப்படாத சட்டங்களைப் பற்றியும் பேசும் அற்புதமான படம். இயக்குநர் அனிருத் ராய் சவுத்ரிக்கு இது முதல் ஹிந்திப் படமாம். ஆனால் அவர் இப்படத்திற்காக [...]

ஆனந்த யாழை மீட்டிய சாதனா

சாதனை படைத்த சாதனாவைப் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். 'தங்க மீன்கள்' திரைப்படத்திற்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற குழந்தை சாதனாவின் வசிப்பிடம் துபாய். இந்தத் திரைப்படம் திரையில் வருவதற்கு முன்பே அதன் முன்னோட்டத்தை 'அமீரகத் தமிழ் மன்றத்தின்' ஆண்டு விழாவில் அரங்கேற்றியிருந்தோம். 'தங்க மீன்களை'த் திரையில் காண ஆவலாக இருந்த துபாய் மக்களுக்குப் பெரிய ஏமாற்றம். காரணம் இப்படம் துபாய் திரையரங்கிற்கு வரவேயில்லை. தேசிய விருது அதுவும் மூன்று விருதுகள் என்றதும் அவளுடைய பெற்றோரைப் [...]

By | 2017-01-08T12:58:37+00:00 May 13th, 2014|திரைவிமர்சனம்|0 Comments