இறைவனைத் தேடி

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நெறிப்படுத்துவதற்காக இறைவன் அவனுடைய தூதர்களை அனுப்பி வைத்தான். மனித சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து ஒருவரை தூதராக்கினானே தவிர, அவர்கள் பிறக்கும் போதே இறைத்தூதர்களாகப் பிறக்கவில்லை ஈசா நபியை தவிர.

யூதர், கிறிஸ்தவர், முஸ்லிம் என்று எல்லா மதத்தவர்களுக்கும் பரிச்சயமானவர் நபி இப்ராஹிம் (அலை).

இப்ராஹிம் (அலை) அவர்கள், பூஜை புனஸ்காரம் என்று இருக்கும் மதகுரு குடும்பத்தில் பிறந்தவர். அவர்களின் மூதாதையர்களும் பெற்றோரும் சமுதாயத்தின் பண்டிதர்களாகப் பூசாரிகளாக இருந்தனர். மக்களும் தேவ தேவதைகளின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். பூசாரிகளுக்கு தேவ தேவதைகளிடம் மிகுந்த செல்வாக்கு இருப்பதாக நம்பி மக்கள் மதகுருக்களின் விருப்பங்களுக்கேற்ப அடிபணிந்து கிடந்தார்கள்.

இப்படியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இப்ராஹிம் (அலை) யார் இறைவன் என்ற ஆராய்ச்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

இரவு நேரத்தில் ஒளிரும் நட்சத்திரத்தை பார்த்து வியந்தார்கள். மற்ற எல்லா நட்சத்திரங்களையும் விட அந்த ஒற்றை நட்சத்திரம் பெரியதாகவும், மற்றவைவிட அதிகமாக ஒளிர்வதாகவும் இருப்பதைக் கண்டு இதுதான் கடவுள் என்று நினைத்தார்கள். காலையில் நட்சத்திரம் தென்படவில்லை. “நட்சத்திரம் கடவுளாக இருக்க முடியாது” என்று தமக்குதாமே சொல்லி கொண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தர்கள். “நிலவுதான் தெய்வமோ?” என்று நினைத்தார்கள். அதுவும் நிலையானதாக இல்லை என்பதைக் கண்டு வியந்தார்கள். “கண்களைக் கூச செய்யும் எல்லாவற்றிலும் பெரியதான சூரியனோ என் கடவுள்?” என்று நின்று யோசிப்பதற்குள் அதுவும் அஸ்தனமாகியது. இப்படி ஒவ்வொரு பொருள் மீதும் ஆராய்ச்சியைச் செலுத்தி ‘மனிதர்களால் படைக்கப்பட்ட சிலைகள் கடவுளாக இருக்க முடியாது’ என்பதை விளங்கி கொண்டார்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், இயற்கை வளங்கள் அத்தனையும் ஒருவருடைய கட்டுபாட்டில் உள்ளதாக உணர்ந்தார்கள்.

தன்னுடைய வாழ்வும் மரணமும் ஒரு மனிதரிடமோ, சிலைகளிடமோ, சூரியன், சந்திரன், நெருப்பு, நட்சத்திரம் என்று எதன் கைகளிலும் இல்லாத போது தான் ஏன் இதற்கு முன்பு நின்று சிரம் தாழ்த்த வேண்டும், அடிபணிய வேண்டுமென்று என்று சிந்திக்கத் தொடங்கி இப்ராஹிம் (அலை) “இறைவனுக்கு இணை வைக்கும் ஒவ்வொன்றையும் விட்டு நான் விலகி விட்டேன்” என்று உறுதியுடன் கூறி இறைவனிடம் தன்னை வழிநடத்த வேண்டுமென்று பிரார்த்திக்களானார்கள். இறைவன் இப்ராஹிமை இறைத்தூதராக்கினான்.

(திருக்குர்ஆன் 6:76-83)

https://goo.gl/gOSXl8

By | 2017-03-25T14:22:31+00:00 April 4th, 2016|0 Comments

Leave A Comment