தவிக்க வைத்த ‘நூறு நாற்காலிகள்’

'அறம்' என்ற மையப் புள்ளியைச் சுற்றிச் சுழலும் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கதையைப் படித்து முடிப்பதற்குள் பலநூறு பரிமாணங்களை நானே எடுத்துவிட்டிருக்கிறேன். சொல்லிப் புரிய வைக்க முடியாத அளவுக்குச் சிந்தனைகள் வெவ்வேறு திசைகளில் பிரயாணித்தது. எல்லாச் சிந்தனைகளை அலசிப் பார்த்ததிலிருந்தும் என்னுடைய வாழ்வியல் அனுபவங்களின் நினைவுகளிலிருந்து தேடிப் பார்த்ததிலிருந்தும் தெரிந்து கொண்ட விஷயம், நான் இப்படியான மனிதர்களைச் சந்தித்ததேயில்லையென்று. யோசித்துப் பார்த்தால் நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள், மிகவும் ஆடம்பரமாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருக்கிறேன், [...]

By | 2016-12-20T18:18:21+00:00 February 26th, 2014|விமர்சனம்|0 Comments

விடைகாகக் காத்திருக்கும் கேள்விகள் | 101 சோதியங்கள்

அறிவியல், விஞ்ஞான, தொழிற்நுட்பமென்று எல்லாம் வளர்ந்திருந்தாலும் விடையில்லாத கேள்விகள் நம்முன் நிறைந்தே நிற்கின்றன. அப்படியான கேள்விகளில் ஒன்றுதான் '101 சோதியங்களின்' 101-வது கேள்வி. ஒருவரி கதையை மிக நுட்பமான கவிதையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த்த சிவா. குழப்பங்களோ, திருப்பங்களோ, அதிர்வுகளோ இல்லாத மிக சாதாரணப்படம் கதை சொல்லலில் சிறந்து நிற்கிறது. தனித்தன்மை என்ற பாசாங்கேதுமில்லாமல் தனது வலுவான கதாபாத்திரத்தை வைத்து படத்தைத் திறமையாக ஈர்ப்புடன் நகர்த்தியுள்ளார்.குழந்தையை கதாநாயகனாக்கி அழகு பார்த்த படம். குழந்தைகள் நமக்குத் தெரியாத விஷயத்தை [...]

By | 2016-12-20T18:18:22+00:00 February 17th, 2014|திரைவிமர்சனம்|0 Comments

யானை டாக்டர்

நீங்கள் யானையை எப்போதாவது பார்த்ததுண்டா? பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? நான் சமீபத்தில் பார்த்ததில்லை, சென்ற ஆகஸ்ட் தாய்லாந்திற்கு செல்லும் போது சாகசம் செய்துகொண்டிருந்த யானைகளைப் பார்த்தேன். மிகப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொண்ட யானையின் கண்களைப் பார்த்தால் மிக எளிமையாக என்னிடம் சம்பாஷனை செய்வதாக 'நான் ரொம்ப நல்லவன்' என்று சொல்வதாகத் தோன்றியது. பாசத்தில் செல்லமாக ஒரு அடி அடித்து வைத்தால் என்ன செய்வது என்று பயந்து, அருகே செல்லவில்லையே தவிர யானை மீது அன்பு [...]

By | 2016-12-20T18:18:22+00:00 February 6th, 2014|விமர்சனம்|0 Comments