பெண்கள் போகப் பொருளா?

இந்த விஷயத்தைப் பற்றி பல தடவை எழுதணும்னு நினைச்சு சரி வேண்டாம் திருந்தாத ஜென்மங்கள் சொல்லி என்ன ஆகப் போகுதுன்னே தள்ளிப் போட்டிருக்கேன். நேற்று உள்ளுக்குள் புதைந்து கிடந்த எரிச்சல் கை வரைக்கும் வந்ததாலும், எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதாலும் எழுதியே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு ஒரே மூச்சா கொட்டித் தீர்த்திருக்கேன். நான் ரொம்ப காலமா தொலைக்காட்சியே பார்க்காம இருந்தேன். தொலைக்காட்சியில் எது பார்க்கிறேனோ இல்லையோ சின்ன வயசிலிருந்தே விளம்பரம்னா ரொம்பப் பிடிக்கும். [...]

By | 2007-09-18T07:09:00+00:00 September 18th, 2007|பெண்ணியம்|59 Comments

ஆவியில் வந்த கிறுக்கல்கள்

ஆனந்த விகடன் வரவேற்பறையல நம்ம வலைப்பூ பத்தி வந்தாலும் வந்துச்சு ஆளாளுக்கு 'யாரப் புடிச்ச? எவ்வளவு கொடுத்த? இந்த இலவச விளம்பரத்துக்கு'ன்னு ரொம்பவே கொச்சப்படுத்துறாங்கப்பா. சில வலைப்பதிவர்களை கடந்து போனாலே கரிஞ்ச வாட வருது, 'நான் வருஷக் கணக்கா எழுதுறேன் என்னுது வரலை உன்னுது எப்படி வந்துச்சு?'ன்னு வயித்தெரிச்சப்படுறாங்க. காதுல புகைக் கூட கவனிச்சேன். எங்க வீட்டுல கூட 'எப்படி ஜெஸி?'ன்னு கேட்டாங்க, 'என் கடன் பணி செய்துக்கிடப்பதே'ன்னு சொன்னேன். 'பார்த்து, யாராவது பொறாமைல அடிச்சி ரோட்டுல [...]

By | 2007-09-13T07:44:00+00:00 September 13th, 2007|பதிவர் வட்டம்|33 Comments

விட்டு விலகி நின்று…

உன்னை முதல் முறை பார்த்த தருணத்தை நினைத்து பார்க்கையில் இன்றும் உறைந்துதான் போகிறேன். எனக்கு அப்போது பதினொன்றோ பன்னிரெண்டோ வயது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் குடியிருப்பே பரபரப்பாகத் தென்பட்டது. அரசல்பரசலாக யாரோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்று மட்டும் விளங்கியது. பள்ளிச் சீருடையை மாற்றிவிட்டு ஓடினேன் சம்பவ இடத்தை நோக்கி, எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அந்த இடமே சலனமில்லாமல் இருந்தது. அங்கேதான் நீ குவித்து வைத்திருந்த புது மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாய். உன் [...]

By | 2007-09-06T14:32:00+00:00 September 6th, 2007|சிறுகதை|36 Comments

ஆசிரியர் தின வாழ்த்து

தமிழ் எழுத்தைகற்றுத் தந்த நீங்கள்இன்று எங்கு இருக்கிறீர்கள்?தினமும் ஒரு திருக்குறளெனஇரு வரியை மனனம் செய்துஉரையை விவரித்த நீங்கள்இன்று எங்கே இருக்கிறீர்கள்?விதையை விதைத்துவிட்டுவிருட்சத்தின் வளர்ச்சியைகாணாமல்எங்கு சென்றுவிட்டீர்கள்?எங்களின்முதல் சொல்முதல் வாக்கியம்முதல் சிந்தனைமுதல் கற்பனைமுதல் உளறல்முதல் கவிதைமுதல் சந்தேகம்என்று எல்லாமேமுதலில் பிறந்தது உங்களிடம்தானே?முயற்சி, தன்னம்பிக்கைபோராட்டம், கடமை,ஒழுக்கம், திறமைஎன்று இல்லாதவற்றையும்தோண்டி ஊற்றைஎங்களுக்குள் எடுத்த நீங்கள்எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாகஇருந்த நீங்கள்இன்று எங்கு சென்றுவிட்டீர்கள்?உங்களுக்காக எழுதுகிறேன்என்றதும் சின்னபிள்ளையாகவேமாறிவிட்டேன்.இந்த எளியவளைஏணியாக நின்று உயர்த்திவிட்டுநீங்கள் மட்டும் அதே இடத்தில்இருப்பதுதான்ஆசிரிய தர்மமா?எங்கிருந்தாலும் என்ஆசிரியர் தின வாழ்த்தைபெற்றுக் கொள்ளுங்கள்

By | 2007-09-05T11:41:00+00:00 September 5th, 2007|கவிதை|7 Comments

உன் நினைவுகளோடு….

மெளனம் பேச்சாகும்தனிமையில்தூக்கம் எழுப்பும்இரவுகளில்வேட்கை நிரம்பிய வெறுமையில்கதகதப்பாய் அரவணைப்பதுஉன் நினைவுகள்மட்டும்தான்

By | 2007-09-05T05:49:00+00:00 September 5th, 2007|கவிதை|13 Comments